Sunday, October 2, 2011

சாமி கண்ணைக் குத்தும் - விஜய்காந்த்




சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நேற்று தே.மு.தி.க., மற்றும் கூட்டணிகள் (!!!) சார்பில், வேட்பாளர்களை ஆதரித்து விஜய்காந்த் பிரச்சாரம் செய்தார்.
உள்ளாட்சித் தேர்தல் மூலம்தான் மக்களின் அடிப்படை பிரச்னைகளை சரி செய்ய முடியும்.குடிநீர்,சால உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்வோம்.லஞ்சம் இல்லா..ஒளிவு மறைவு இல்லா ஆட்சி அமைப்போம் என்று கூறியவர்கள் யாரும் மக்களின் அடிப்படை பிரச்னைகளைக் கூட நிறைவேற்றவில்லை.
அனைத்து வசதிகளையும் மக்கள் பெற எனக்கு ஒரு வாய்ப்புத் தாருங்கள் என அவர் பேசினார்.
அவர் மேலும் கூறுகையில்'கோவிலின் வாசலில் வைத்துக் கேட்கிறேன்..அனைவரும் தே.மு.தி.க., விற்கு வாக்களிக்க வேண்டும்' என்றார்.அதற்கு கூடியிருந்தோர்,"வாக்களிப்போம்" என குரல் கொடுத்தனர்.
உடன் அவர் 'யாராவது பொய் சொன்னால்..சாமி கண்ணை குத்தி விடும்' என்றார்.
விஜய்காந்தின் கூற்றுக்கு சாமி செவி சாய்த்தால்..தமிழகத்தில் குருடர்கள் சதவிகிதம் எவ்வளவு சதவிகிதம் அதிகரிக்கும் என புள்ளிவிவரம் வெளியிடுபவர் யாரேனும் தெரிவித்தால் நன்றாய் இருக்கும்...


7 comments:

goma said...

விஜய்காந்தின் கூற்றுக்கு சாமி செவி சாய்த்தால்..தமிழகத்தில் குருடர்கள் சதவிகிதம் எவ்வளவு சதவிகிதம் அதிகரிக்கும் என புள்ளிவிவரம் வெளியிடுபவர் யாரேனும் தெரிவித்தால் நன்றாய் இருக்கும்...

இந்திய ஜனத்தொகையில் குழந்தைகள் தவிர்த்து அனைவரும் குருடர்களே

கும்மாச்சி said...

கோமா சொல்வது போல் இந்த நாட்டில் குழந்தைகள் தவிர ஒட்டு போடும் அனைவரும் குர்டர்களை தான் நினைக்க தோன்றுகிறது.

பகிர்வுக்கு நன்றி காஞ்சனா.

கும்மாச்சி said...

பிழைக்கு வருந்துகிறேன், பகிர்வுக்கு நன்றி டி.வி.ஆர்.

KOMATHI JOBS said...

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட,

வரலாறு காணாத வகையில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 14 பேர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர். இருப்பினும் ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும். மேயர் பதவிக்குப் போட்டியிடுபவர் கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிட முடியாது.

மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்! சொல்லச் சொல்லுங்கள்! இவர்களில் எத்தனை பேர் உண்மையாகவே சமூக சேவை செய்ய வேண்டும், மக்கள் நலப் பணிகள் செய்ய போட்டியிடுகிறார்கள் என்று?

இவர்களில் நாமும் ஒருவராக இருக்கலாம்?

அல்லது நம் சித்தப்பா, மாமா, சித்தி, அக்கா என நம் உறவினர்கள் போட்டியிடுபவர்களில் ஒருவராக இருக்கலாம்?

உண்மையிலேயே ஒரு 100 ரூபாய் லஞ்சமாக கொடுக்காமல் நம்மால், இவர்களால்(Including Vijayakanth Party Candidates) இப்போதுள்ள மக்களின் வோட்டுக்கு பணம் வாங்கும் மனநிலையில் காசு கொடுக்காமல் வோட்டு வாங்கி ஜெயிக்க முடியுமா?

அப்படி காசு கொடுத்து வோட்டு வாங்கி ஜெயித்தால், செலவழித்தப் பணத்தை எப்படி சம்பாதிப்(பா)பீர்கள்?

ஆக, தமிழகத்தை கொள்ளையடிக்க துடிக்கும் 5, 27, 014 பேரில் நீங்களும் அல்லது உங்கள் உறவினரும் ஒருவர்?

இப்பொது ஊழலைப் பற்றிப் பேச நமக்கு என்ன தகுதி இருக்கிறது?
ஊழலில் திளைத்த கருணாநிதி, இப்போது திளைக்கும் ஜெயலலிதா, திளைக்க இருக்கும் ஏறத்தாழ 1 .5 லட்சம் உள்ளாட்சி மன்ற வெற்றி வேட்பாளர்கள், இவர்கள் போடும் திட்டங்கள் கோடிக்கணக்கில், அதில் 12 % கமிசன் கொள்ளையடிக்கப் போகும் BDO அலுவலக அதிகாரிகள்..,
Registrar Office Employees, Taluk Office Employees..............................,

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கும்மாச்சி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி KOMATHI JOBS