Thursday, October 13, 2011

தமிழ் திரட்டிகளும்...பதிவர்களும்..




சமீப காலங்களில் தமிழ் திரட்டிகளை விமரிசித்து சில பதிவுகளை படிக்க நேர்ந்தது..

பதிவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்..

எந்த திரட்டியும் நம்மை இணையுமாறு கட்டாயப்படுத்துவதில்லை.மேலும் அவை இலவசமாகவே பதிவர்களுக்கு சேவை செய்து வருகிறது.

நம்மிடம் உள்ள எழுத்துத் திறமையை..எல்லா வார இதழ்களும் அங்கீகரித்து..இதழ்களில் வெளியிடுவதில்லை..ஆனால் நம் எழுத்துகள் எந்த திரட்டியில் நாம் இணைகிறோமோ அத் திரட்டியால் திரட்டப்படுகின்றன.நாம் எழுதியதை..அத் திரட்டிக்கு படிக்க வரும் நண்பர்கள் பலர் படிக்கின்றனர்.இன்னும் சொல்லப் போனால்..நமது எழுத்து வார இதழில் வெளியானால்..அதைப் பற்றி படிப்பவர் கருத்தை நாம் அறியமுடிவதில்லை.ஆனால்..இங்கோ..கமெண்ட் மூலம்..நம் எழுத்திற்கு ஆதரவை அறிய முடிகிறது.

அதனால்தான் நம் பதிவு...சூடான இடுகையில் வருகிறதா...நம் பதிவு வாசகர் பரிந்துரையில் வருகிறதா..என்ற ஆவல் ஒவ்வொரு பதிவருக்கும் உண்டாகிறது.

இப்படி இலவச சேவை செய்துவரும் திரட்டிகளில் வரும் படிப்பவர் எண்ணிக்கை..அந்த அந்த திரட்டிகளுக்கு ஏற்ப ..அதிகமாகமோ,சற்று குறைவாகவோ இருக்கக் கூடும்.உடனே நாம் இரண்டு திரட்டிகளையும் ஒப்பிட்டு ஒரு பதிவு போட்டுவிடுவதா?

'தானம் கொடுத்த மாட்டை பல்லைப் பிடித்துப் பார்த்தாற்போல்' என்று சொலவடை ஒன்று உண்டு..

அதுபோல பார்க்காது..நம் எழுத்துகளை அங்கீகரிக்கும்..அவற்றை இலவசமாக திரட்டும்..திரட்டிகளை இனியும் விமரிசிக்க வேண்டாம்.ஏனெனில் இவை நமக்கு சேவைதான் செய்கின்றன.

டீவியில் நிகழ்ச்சி பிடிக்காவிட்டால் ரிமோட் நம் கையில் தான் உள்ளது..அதுபோல ..திரட்டியைப் பிடிக்காவிட்டால்..அதில் இணைவது உங்கள் கையில்தான் உள்ளது.இதை உணர்ந்து கொள்ளுங்கள்,

தரம் நம் பதிவுகளில் இருக்கட்டும்..திரட்டிகளைப் பற்றியும்..அவற்றில் வரும் வாசகர்கள் பற்றியும் கவலை வேண்டாம்.

26 comments:

Unknown said...

சரியா சொன்னீங்க சார்

ப.கந்தசாமி said...

நல்லாச் சொன்னீங்க. பதிவர்களுக்குப் புரிஞ்சா சரி.

இராஜராஜேஸ்வரி said...

தரம் நம் பதிவுகளில் இருக்கட்டும்..திரட்டிகளைப் பற்றியும்..அவற்றில் வரும் வாசகர்கள் பற்றியும் கவலை வேண்டாம்./

அருமையான கருத்து.

Amudhavan said...

நிறையப்பேர் மனதில் உள்ளதை நீங்கள் சரியாகச் சொல்லியிருக்கிறீர்கள், பாராட்டுக்கள்.

தனிமரம் said...

உண்மைதான் நாம் தானே திரட்டியில் இணைக்கின்றோம் சரியாக சொன்னீங்கள்!

settaikkaran said...

Hats off!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ஜ.ரா.ரமேஷ் பாபு

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி DrPKandaswamyPhD

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இராஜராஜேஸ்வரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Amuthavan

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தனிமரம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சேட்டைக்காரன்

ம.தி.சுதா said...

பதிவர்களை பொறுத்த வரை திரட்டிகளே முதல் சந்தைப்படுத்தல் காரணி...

தங்கள் கருத்தை ஏற்கிறேன்...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

Robin said...

//தரம் நம் பதிவுகளில் இருக்கட்டும்..// தரம் இருந்திருந்தால்தான் இந்த பிரச்சினையே வந்திருக்காதே.

குறையொன்றுமில்லை. said...

ஆமா, ரொம்ப சரியா சொன்னீங்க.

Avargal Unmaigal said...
This comment has been removed by the author.
Avargal Unmaigal said...

//தரம் நம் பதிவுகளில் இருக்கட்டும்..திரட்டிகளைப் பற்றியும்..அவற்றில் வரும் வாசகர்கள் பற்றியும் கவலை வேண்டாம்//

மிக சரியான வார்த்தைகள்......

Avargal Unmaigal said...

//தரம் நம் பதிவுகளில் இருக்கட்டும்..திரட்டிகளைப் பற்றியும்..அவற்றில் வரும் வாசகர்கள் பற்றியும் கவலை வேண்டாம்//

மிக சரியான வார்த்தைகள்......தரம் பதிவுகளில் மட்டும் அல்லாமல் வாழ்க்கையில் நாம் செய்யும் செயலில் ஆகட்டும் அல்லது சொல்லும் சொல்லில் ஆகட்டும் தரம் இருந்தால் தரமான ஆட்கள் உங்களைத்தேடி வருவார்கள். தரம் கெட்டு இருந்தால் தரம் கெட்ட ஆட்கள் வருவார்கள். எந்த மாதிரி ஆட்கள் நமக்கு வேண்டுமென்று நினைக்கிறமோ அந்த மாதிரி ஆட்கள் நமக்கு கிடைப்பார்கள்
நான் எனது பதிவுகளில் தரமானவற்றை மட்டுமே தருகிறேன். சில சம்யங்களில் நான் தவறினாலும் சுட்டிகாட்ட நல்ல வலைத்தள நண்பர்கள் உள்ளனர். அவர்களின் ஆதரவினால் நான் தினம் தோறும் முன்னேறி செல்கிறேன். நான் ஒட்டுக்காகவும் கருத்துக்காகவும் பதிவுகள் போடவில்லை. எனக்கு சைலண்ட் ரீடர்கள் அதிகம்.நல்ல பதிவுகள் போட்டால் உலகின் எல்லா திசைகளில் இருந்தும் வாசகர்கள் நம்மை தேடி வருவார்கள் என்பது நிச்சயம்

aotspr said...

மிக சரியாய் சொன்னீங்க.........

நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ♔ம.தி.சுதா♔

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Robin

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Lakshmi

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Avargal Unmaigal

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Kannan

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! நீங்கள் எழுதிய அனைத்தும் உண்மை.வரவேற்கத்தக்க கருத்துக்கள்.சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி தி.தமிழ் இளங்கோ