Sunday, October 30, 2011

கலைஞர் இளைத்து வரும் பூனையா?




திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலகிய பரிதி இளம்வழுதி..பத்திரிகை பேட்டி ஒன்றில் கூறியுள்ளது..

"கட்சிக்கு துரோகம் செய்பவர்கள் பற்றி கருணாநிதியிடம் கூறினேன்.உண்மையைப் புரிந்து நடவடிக்கை எடுத்தார்.அதற்கு முன்பாக ஸ்டாலினிடம் புகார் தந்தேன் நடவடிக்கை எடுக்கவில்லை.இன்னமும் கருணாநிதியை நான் நம்புகிறேன்.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் உள்ளதா இல்லையா என்பதை நீங்களே அறிவீர்கள்.மாநிலம் முழுதும் தொண்டர்களிடம் மனக்குமுறல் உள்ளது.என் மீதான வழக்குகளுக்கு பயந்து நான் இந்த முடிவை எடுக்கவில்லை.நான் பார்க்காத வழக்கு இல்லை.தனி ஆளாக சட்டசபையில் போராடினேன்" என்றுள்ளார்.

கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்..

"துரோகச் சிந்தனையினர் தம் சுகவாழ்வு ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு, பெற்ற தாயின் வயிற்றை கூர்வாள் கொண்டு குத்திக் கிழிப்பதைப் போல செயலாற்ற முனைகின்றனர்.கையிலே காசில்லாத போது, திமுக விற்கு நேர்ந்த கொடுமைகளைச் சந்திக்க முன் நின்றவர்கள் கையிலே காசு சேர்ந்த பிறகு, அதைக் காத்திடுவதற்காக கட்சியையே காட்டிக் கொடுக்க முயலுகின்றனர்." என்றுள்ளார்.

நம் சந்தேகம்...

'பரிதி...இடைப்பட்ட காலத்தில் காசு அதிகம் சேர்த்துவிட்டாரா..கலைஞர் மறைமுகமாக பரிதி முறைகேடான வழியில் பணம் சேர்த்துவிட்டார் என்று சொல்கிறாரா?(முறையான சேர்ப்பு என்றால் கட்டிக் காக்க போரிடவேண்டாமே!)

இதற்கிடையே..திமுகவின் முன்னாள் எம் எல் ஏ வும்..திருநெல்வேலி மாநில செயலாளருமான என்.மாலைராஜா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

டிஸ்கி- வைகோ..கலைஞரையும்,ஜெ யையும் பற்றி ஒரு அறிக்கையில் இருவரும் நாணயத்தின் இரு பக்கங்கள் என்றுள்ளார்..

அதற்கு கலைஞர்..'திமுக விற்கு ஆற்றிய பணிக்காக மூன்று முறை மாநிலங்களவை உறுப்பினராக்கி அருகிலேயே வைத்திருந்து பாராட்டிய நானும், கடைசி நிமிடம் வரை காத்திருக்க வைத்து கைவிட்ட ஜெயலலிதாவும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களாகத் தெரிகிறார்கள் என்றால் அவர் இன்னமும் திருந்தவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.

பூனை இளைத்தால் எலி கூட மச்சான் முறை கொண்டாடும் என்பது பழமொழி அல்லவா " என்று சாடியுள்ளார்.

கலைஞர் தன்னை பூனை என்றும்..தான் தற்போது இளைத்துவிட்டதாகக் கூறுகிறாரா.

அப்படியானால்..இளைத்தது..இவரது கட்டுப்பாட்டை திமுகவில் இழந்து வருவதாகப் பொருளா?

7 comments:

சி.பி.செந்தில்குமார் said...

ஹா ஹா தலைவர் பூனை அல்ல, புலி, சந்தர்ப்பத்துக்கு காத்திருக்கும் புலி

சி.பி.செந்தில்குமார் said...

குட் ஒன்

SURYAJEEVA said...

சிந்திக்க வையுங்கள்,

rajamelaiyur said...

நல்ல அலசல்

பூங்குழலி said...

பரிதி பேசுறத பார்த்தா கட்சி மாறப் போறார் போல தெரியுது ..

nerkuppai thumbi said...

தி மு க காரர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை தான்.
அவர்கள் இரண்டு வகைகள்:
ஒன்று, பதவிகள் வகித்து காசு சம்பாதித்தவர்கள்; பொழுது போக்க , டைம் பாசுக்கு அரசியல் செய்ய வேண்டும்.
இரண்டு, தொண்டராகவே தொடர்பவர்கள்; கட்சியில் கலைஞர் குடும்பத்தின் ஆதிக்கம் இல்லாமல் இருந்தால் மகிழ்வர்; ஆனால் தலைவரிடம் இதைச் சொல்ல முடியாது; வேறு புதிய தலைவர் உருவானால் வரவேற்பர்.
அப்படி ஏதும் நடப்பதாகத் தெரியவில்லை. என்ன செய்வது என்று புரியாமல் கட்சியை விட்டு ஓடவும் முடியாமல் (அ தி மு க வைத் தவிர வேறு கட்சி தென்படாததால்) தவிக்கின்றனர்.
ஐம்பதுகளில் , அறுபதுகளில் கழகத்தைப் பார்த்தவர்களுக்கு கட்சியின் இந்த நிலையை ஜீரணிக்க முடியவில்லை. பதிவரும் இந்த வகையைச் சேர்ந்தவர் என்று எண்ணுகிறேன்.
இதுவும் கடந்து போகும்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகை தந்து கருத்துகளை பகிர்ந்துகொண்டமைக்கு அனைவருக்கும் நன்றி