Wednesday, March 4, 2009

காதலாவது ...கத்திரிக்காயாவது...(சிறுகதை)

தன் காதலை தியாகம் செய்துவிட வேண்டியதுதான்...என்ன செய்வது...இப்ப எல்லாருக்கும் சுயநலம்தான் முக்கியம்.அவரவர்களின் குறி அவரவர்கள் எதிர்காலம்தான்.

இரவு முழுதும்...தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது..ஒரு எண்ணம் பளீச்சிட்டது.

இதுவரைக்கும்...நேரிடையாக 'ஐ லவ் யூ' என்று சொல்லியிருந்தால் தானே பிரச்னை.

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?

திடீரென நேற்று அப்பா..ஒரு குண்டை..தூக்கிப் போட்டுட்டார்..தனது தூரத்து உறவில் ஒரு வரன் இருப்பதாகவும்...அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இஞ்சினீயராய் இருப்பதாகவும்..ஆண்டுக்கு ஒரு லட்சம் டாலர் சம்பளம் என்றும்.

அதைக்கேட்டதும்தான்...எனக்குள் குழப்பம்.அப்பா மேலும் சொன்னார் ..வசதியான இடம்...மாமியார் பிடுங்கல் இல்லை..திருமணம் முடிந்ததும் ஸ்பௌஸ் விசாவில் நானும் அமேரிக்கா போய் விடலாமாம்.
அவர்கள் கல்யாணத்தை உடனே முடிக்க வேண்டும் என்கிறார்களாம்.அப்பாவும் சரி என்று சொல்லிவிட்டாராம்.

என் விருப்பத்தைக் கேட்டால்தானே...கேட்டிருந்தாலும்...வேண்டாம் என்றா..சொல்லப்போகிறேன்.

ஆனால் என்காதல்...

விஷயத்தை ஒளிக்காமல் சொல்லிவிட்டால் போகிறது.புனிதா ..உண்மையில் என்னைக் காதலிப்பதாக இருந்தால்..புரிந்துக் கொள்வாள்.ஒரு வங்கியில் வேலை செய்யும் அவளைவிட..அமெரிக்காவில் வேலை செய்யும் கீதா உயர்ந்த வரன் என்று.தன் காதலன் வாழ்வில் கண் கலங்காமல் இருந்தால் போதும் என நினைப்பவள் அவள்.

22 comments:

*இயற்கை ராஜி* said...

:-) nice twist

அன்புடன் அருணா said...

I was expecting this....
anbudan aruna

கோவி.கண்ணன் said...

:)

அப்படியே இருவரையும் திருமண அழைப்பிதழும் கொடுத்துக்கச் சொல்லுங்க. முடிஞ்சா நாமும் போய் வாழ்த்திட்டு விருந்து சாப்பிட்டுவிட்டு வருவோம்.

ஆனால் மறக்காமல் குழந்தைகளுக்கு இவர்களுடைய பெயர்கள் தான் சூட்டப்பட வேண்டும், அதாவது காதலனின் குழந்தைக்கு காதலி பெயரும், காதலியின் குழந்தைக்கு காதலன் பெயரும் சூட்ட வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்து வருவோம்.

சரி சரி எப்ப திருமணம் என்று கேட்டுச் சொல்லுங்க. டிக்கெட் எடுக்கனும்

goma said...

இந்த கதையை நீங்கள் காதலர் தினத்தன்று வெளியிட்டிருந்தால் பொறுத்தமாக இருந்திருக்கும் .

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இயற்கை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அன்புடன் அருணா

T.V.ராதாகிருஷ்ணன் said...

நாம இரண்டுபேரும் சேர்ந்தே போயிடுவோம் கோவி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி goma

Cable சங்கர் said...

நிதர்சன கதை சார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Cable Sankar

narsim said...

//அன்புடன் அருணா said...
I was expecting this....
anbudan aruna
//

பசங்க மேல அவ்வளவு நம்பிக்கையாக்க்கா??

narsim said...

நல்ல கதை சார்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

///narsim said...
//அன்புடன் அருணா said...
I was expecting this....
anbudan aruna
//

பசங்க மேல அவ்வளவு நம்பிக்கையாக்க்கா??///

:-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//narsim said...
நல்ல கதை சார்..//

நன்றி narsim

தமிழ் மதுரம் said...

என்னைப்பொறுத்தவரை லைஃப் பார்ட்னர்..அழகாக இருக்க வேண்டும்.கை நிறைய சம்பாதிக்க வேண்டும்.நல்ல குணம் வேண்டும்.இதையெல்லாம் எண்ணிப் பார்த்துத்தான் காதலிக்க ஆரம்பித்தேன்.பின்ன இப்ப என்ன பிரச்னை என்கிறீர்களா?//


இது யதார்த்தம்..பெண்களின் மன நிலையை அழகாகச் சுட்டியுள்ளீர்கள்.?? பாவம் ஆண்கள்???

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கமல்

சின்னப் பையன் said...

:-))))))))))))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி sathya

நசரேயன் said...

உள்ளேன் ஐயா, முடிவை எதிபார்க்க வில்லை, நல்லா இருக்கு

குடுகுடுப்பை said...

சாப்பாடு போடுற எடத்த மட்டும் சொல்லுங்க.

நல்ல கதை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
குடுகுடுப்பை