Thursday, March 5, 2009

கலைஞர் சாத்தான் என யாரை சொல்கிறார்....

கலைஞர் ஓய்வு பெற வேண்டும் என்று ஜெ..சொன்னாலும் சொன்னார்..கலைஞர் அதற்கான பதிலில்..

13 வயதிலிருந்து...இன்று 85 வயது வரையில் தினமும் களைப்பென்பதே இல்லாமல் அரசியல் களப்பணி புரிந்து, சட்டமன்றப் பொன்விழா கொண்டாடியுள்ளேன்.70 ஆண்டுகளுக்கு மேலாக பொது வாழ்வில்..பெரியாரின் தொண்டனாக...அண்ணாவின் தம்பியாய்..இந்திய திருநாட்டின் மூத்த தலைவர்களுக்கும் முன்னோடிகளுக்கும் உடன் பிறப்பாய் விளங்கி வருகிறேன்.

பட்டியலிடமுடியாத அளவிற்கு சாதனைகள் நிறைவேற்றி வருகிறேன்.இவைகளையெல்லாம் என் சாதனைகளுக்கு சான்றுகளாக தமிழ்நாட்டில் விட்டுச் செல்வதென்றால்..அந்த ஓய்வு கிடைத்தால் எனக்கு உற்சாகம்தான்.

எனெனும் இத்தனை சாதனைகளையும் சாத்தானாம் ஒரு பெண்மணியை தமிழகத்தை மேயவிட்டு நான் நிரந்தர ஓய்வு பெறுவதா என்றுதான் ஏங்குகிறேன்.ஆனாலும்...ஆயிரம், லட்சம், கோடியென உடன்பிறப்புகள் இருக்கும்வரை நான் நிரந்தர ஓய்வு பெற நினைப்பதும்..அதன் காரணமாக இந்த நீலி மேய்ச்சலுக்கு வரலாம் என்று கனவு காண்பதும் நடக்கவே நடக்காது, என்றும் கூறியுள்ளார்.

இதில் எனக்குள்ள சந்தேகம்

எதையும் நேரிடையாக சொல்லும் கலைஞர்..சாத்தான் என்றும்..நீலி என்றும் யாரைக் கூறுகிறார்.

பகுத்தறிவுவாதிகள் சாத்தான் இருப்பதை நம்புகிறார்களா?

28 comments:

Unknown said...

Vaazhga Kalaignarin 85 vayathu anubavathil kudi kondirukkum panBaadu matrum pengalin mael avarukku irukkum mariyathai.

Avarathu magalai yaarenum ippadi vimarisithaal poruthukkolvaara, paguthariv (a)singam?

நசரேயன் said...

//பகுத்தறிவுவாதிகள் சாத்தான் இருப்பதை நம்புகிறார்களா?//

இருக்கலாம்

அப்பாவி முரு said...

//எதையும் நேரிடையாக சொல்லும் கலைஞர்..சாத்தான் என்றும்..நீலி என்றும் யாரைக் கூறுகிறார்.//

அண்ணே, கலைஞர் எப்பயுமே நேரடியாக சொல்வது கிடையாது, மறைமுகத்தாக்குதல் தான்.

சமீபத்துல கூட நாய் கவிதை எழுதி கூட்டணியை உடைச்சது மறந்திடுச்சா?

அப்பாவி முரு said...

//பகுத்தறிவுவாதிகள் சாத்தான் இருப்பதை நம்புகிறார்களா?//

பகுத்தறிவாளர்கள் நம்புவதில்லை.,

ஆனால் கலைஞர் நம்ப ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு மேலாச்சு.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//எனெனும் இத்தனை சாதனைகளையும் சாத்தானாம் ஒரு பெண்மணியை தமிழகத்தை மேயவிட்டு நான் நிரந்தர ஓய்வு பெறுவதா என்றுதான் ஏங்குகிறேன்.ஆனாலும்...ஆயிரம், லட்சம், கோடியென உடன்பிறப்புகள் இருக்கும்வரை நான் நிரந்தர ஓய்வு பெற நினைப்பதும்..அதன் காரணமாக இந்த நீலி மேய்ச்சலுக்கு வரலாம் என்று கனவு காண்பதும் நடக்கவே நடக்காது, என்றும் கூறியுள்ளார்.//

சோக்கு நல்லா வருது கலைஞருக்கு வழக்கம் போல்!
இந்துக்களை நம்பமாட்டார், இந்து என்றால் திருடன் என பொருள் சொன்னார். அது இருந்தாலும் இருக்கலாம். அந்த விவாதத்திற்கு நான் வரவில்லை. அண்மையில், கனிமொழியும் ஓர் இந்துப் பெண் தானே என்று சொன்னவர். எப்படி வேண்டுமென்றாலும் பேசுவார். நாம தான் பகுத்தறிவு வாதியா இருந்து கொள்ள வேண்டும். அவர் பகுத்தறிவு வாதி அல்ல!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சாம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//muru said...
சமீபத்துல கூட நாய் கவிதை எழுதி கூட்டணியை உடைச்சது மறந்திடுச்சா?//

;-))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//muru said...

பகுத்தறிவாளர்கள் நம்புவதில்லை.,

ஆனால் கலைஞர் நம்ப ஆரம்பித்து பத்தாண்டுகளுக்கு மேலாச்சு.//

என் ஜாதகம் அப்படி..என அவர் அடிக்கடி கூற ஆரம்பிச்சுட்டாரே

வருகைக்கு நன்றி muru

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜோதிபாரதி said...
நாம தான் பகுத்தறிவு வாதியா இருந்து கொள்ள வேண்டும். அவர் பகுத்தறிவு வாதி அல்ல!//

:-))))

மணிகண்டன் said...

புலிகேசி சார், நீங்க ஏன் இன்னும் வரல ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
புலிகேசி சார், நீங்க ஏன் இன்னும் வரல ?//


மணி...ஏன் இப்படி வம்புக்கு அலையறீங்க?

:-))))

குடுகுடுப்பை said...

எதையும் நேரிடையாக சொல்லும் கலைஞர்//

:-)))))))))))

அன்பு said...

// மணிகண்டன் said...

புலிகேசி சார், நீங்க ஏன் இன்னும் வரல ?//

நான் வர்றேனோ இல்லையோ கலைஞர் என்றால் உடனே இரா.கி.அய்யா எங்கிருந்தாலும் ஓடோடி வந்துவிடுவார். இதே இரா.கி. அய்யா அம்மையாரின் உண்ணாவிரதத்தை பற்றி மூடிக் கொண்டு தானே இருக்கிறார்

மணிகண்டன் said...

********
மணி...ஏன் இப்படி வம்புக்கு அலையறீங்க?

:-))))
********

ஹா ஹா ஹா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி குடுகுடுப்பை

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// புலிகேசி said...
// மணிகண்டன் said...

புலிகேசி சார், நீங்க ஏன் இன்னும் வரல ?//

நான் வர்றேனோ இல்லையோ கலைஞர் என்றால் உடனே இரா.கி.அய்யா எங்கிருந்தாலும் ஓடோடி வந்துவிடுவார். இதே இரா.கி. அய்யா அம்மையாரின் உண்ணாவிரதத்தை பற்றி மூடிக் கொண்டு தானே இருக்கிறார்///

உங்களுக்காகவே நாளைக்கு ஒரு பதிவு போட்டுடறேன்..புலிகேசி சார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...
********
மணி...ஏன் இப்படி வம்புக்கு அலையறீங்க?

:-))))
********

ஹா ஹா ஹா///

இப்போ சந்தோசம் தானே..மணி

வருண் said...

***புலிகேசி said...
இதே இரா.கி. அய்யா அம்மையாரின் உண்ணாவிரதத்தை பற்றி மூடிக் கொண்டு தானே இருக்கிறார்

March 6, 2009 6:25:00 AM PST***

WOW! You need to come up with more of this kind of critisms without attacking him personally. NOw it certainly shows that TVR's prejudice!

To convince you, now TVR has to through away his "own conscience" and try to become a "neutral person" by whole-heartedly criticizing JJ's ugly politics.

I wish he criticized JJ's latest stunt before you are asking him to do so!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருண்...ஏற்கனவே நான் பல பதிவுகள் ஜெ பற்றி எழுதியுள்ளேன்...

அன்பு said...

// T.V.Radhakrishnan said...

வருண்...ஏற்கனவே நான் பல பதிவுகள் ஜெ பற்றி எழுதியுள்ளேன்...//

ஆம், இராம.கி. அய்யா 10 பதிவுகள் கலைஞரை காட்டமாக பற்றி எழுதிவிட்டு கண்டிப்பாக ஒரு பதிவு ஜெயலலிதாவை பற்றி பட்டும் படாமலும் எழுதுவார், அவர் உண்மையான நடுநிலைவா(யா)தி!!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி புலிகேசி...ஒரு நாள் நாம் சந்திக்க வேண்டுமே...உங்களிடம் நிறைய பேச வேண்டும்.

அன்பு said...

//T.V.Radhakrishnan said...

நன்றி புலிகேசி...ஒரு நாள் நாம் சந்திக்க வேண்டுமே...உங்களிடம் நிறைய பேச வேண்டும்.//

அய்யா என் பேரு தான் புலிகேசி நிஜத்துல எலிகேசி, சந்திக்கலாம் ஆனா எதுவா இருந்தாலும் பேச்சு பேச்சா இருக்கனும், ஆட்டோ கீட்டோவெல்லாம் வரக்கூடாது. நான் கிழிச்ச கோட்டை நான் தாண்ட மாட்டேன் நீங்களும் தாண்டக் கூடாது

T.V.ராதாகிருஷ்ணன் said...

நானும் அப்படித்தான்...நீங்கள் என்னை சந்தித்தால் என்னைப்பற்றி புரிந்துக் கொள்வீர்கள்..அதனால்தான்

அன்பு said...

கண்டிப்பாக சந்திக்கலாம். கலைஞரை பற்றிய உங்கள் விமர்சனங்களை தவிர உங்களின் பதிவுகளில் எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது. என் வயதைவிட உங்கள் அனுபவம் மிகவும் அதிகமாக இருக்கும் அதில் கொஞ்சமேனும் பகிர்ந்து கொண்டாலே அதுவே எனக்கு மிகவும் பயனுள்ளதாகவே இருக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி புலிகேசி

மணிகண்டன் said...

பாருங்க சார், நான் எடுத்துக்கொடுக்காட்டி இந்த சமரசம் வந்து இருக்காது !


****
கண்டிப்பாக சந்திக்கலாம். கலைஞரை பற்றிய உங்கள் விமர்சனங்களை தவிர உங்களின் பதிவுகளில் எனக்கு எந்த வேறுபாடும் கிடையாது
****

நீங்க அத தவிர இவரோட ப்ளாக்ல வேற எதுக்கும் கமெண்ட் போட்டது கிடையாது ! அதுனால தான் நான் கூட ஈகரா நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மணி