Monday, March 23, 2009

தைரியமான கட்சி தே.தி.மு.க., வா..இல்லை பா.ஜ.க.வா?

அவனவன் எந்த கூட்டணியிலே சேர்ந்தா..சில தொகுதிகள் கிடைக்கும்...நம்ம கட்சியும் நாடாளுமன்றத்துக்கு போகும்னு நினைச்சுக்கிட்டிருக்கிற தமிழகத்தில் ..தைரியம் உள்ள கட்சிகளும் உண்டு.

இக்கட்சிகளுக்கு...தங்கள் பலம் தெரியுமா? என்று தெரியாது என்றே எண்ணத் தோன்றுகிறது.

கார்த்திக்..என்ற ஒரு நடிகர் இருந்தாரே..ஞாபகம் இருக்கிறதா...அவர் 3 தொகுதிகளில் போட்டி இடப் போகிறாராம்.

சரத்குமார் கட்சி..சமீபத்திய திருமங்கலம் சட்டசபை இடைத்தேர்தலில்..படு தோல்வி அடைந்தது.ஆனால்..அக்கட்சி..பா.ஜ.க.வுடன் கூட்டாம்..(பாவம் பா.ஜ.க.)

தே,மு.தி.க., இவர் கட்சி தனித்தே 40 தொகுதிகளிலும் போட்டியாம்..அதற்கு..ஒருநாள்..அந்த தலைவர் பேசிய கூட்டத்தில்..(ஆயிரம் பேர் வந்திருப்பார்களா? அந்த கூட்டத்திற்கு) மக்கள் ஆதரவு கொடுத்துள்ளார்களாம்.

பீகார்..உ.பி., போன்ற மாநிலங்களில் அவமானப்பட்டாலும்...காங்கிரஸ் என்னும் தேசிய கட்சிக்கு..தமிழகத்தில்..தி.மு.க., கூட்டணியில்...கணிசமான அளவு தொகுதிகள் கிடைக்கலாம்.ஏனெனில்...இங்குள்ள பெரிய திராவிடக் கட்சிகளில்..ஏதேனும் ஒன்றுடன் சேர்ந்தால்தான்..அத் திராவிட கட்சிக்கும் சரி, காங்கிரஸிற்கும் சரி வெற்றி பெறலாம்.(லாலு போலோ பாஸ்வான் போலோ..தைரியமானவர்கள் இல்லை..இங்குள்ள திராவிட கட்சியினர்)

தமிழகத்தில் ஜெ தான் இரண்டாவது அணி..இரண்டு கம்யூனிஸ்ட் களுடனும்..வைகோ என்ற தனி நபர் கட்சியுடன் கூட்டு.

பா.ஜ.க., இங்கே மூன்றாவது அணி.பாவம்...இக்கட்சி இங்கு ஒரு தீண்டத் தகா கட்சி போலவே இருக்கிறது.

டெபாசிட் பறிபோகும் நிலையில்...தே.மு.தி.க., பா.ஜ.க.,..இதை இக் கட்சியினர் உணர்வார்களா தெரியாது.

திருமாவளவனை பொறுத்தவரை...தி.மு.க., கூட்டணியில்..ஒன்றோ, இரண்டோ தொகுதி வாங்கி விடுவார்.

பா.ம.க., ???? இப்போதைக்கு இரண்டு பக்கமும் தலையுள்ள மண்புழு...இன்னும் ஆதாய கணக்கு முடியவில்லை என்றே தெரிகிறது.

நாளை பார்ப்போம்.

9 comments:

ttpian said...

தெரியுமா?
சுமார் 30 வருடன்கலுக்கு முன்பு,ஒரு பென் வெறும் உடம்பில் ஒரு டவல் சுட்றி இருப்பார்:அதில் 40% தள்ளுபடி என்று விளம்பரம் எழுதி இருக்கும்:அது வேறு யாறுமில்லை....வருன் காந்தியின் ஆத்தா-

கோவி.கண்ணன் said...

//பா.ம.க., ???? இப்போதைக்கு இரண்டு பக்கமும் தலையுள்ள மண்புழு...இன்னும் ஆதாய கணக்கு முடியவில்லை என்றே தெரிகிறது.//


பாமக அதிமுவுடன் ஐய்க்கியம் எப்போதோ முடிவாகிவிட்டது, மத்திய ஆட்சி முடியும் வரை அன்பு மணி மக்கள் பணி ஆற்ற வேண்டி இருக்கிறது என்று சொல்லி பெரிய ஐயா அம்மாவிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு, கூட்டணி பற்றி பொதுவில் பிறகு அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார். வெவரம் தெரியாதவராக இருக்கிங்களே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி ttpian

T.V.ராதாகிருஷ்ணன் said...

உங்கள் பின்னூட்டத்திற்கான பதில் வியாழனன்று சொல்லப்படும் கோவி

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...

//பா.ம.க., ???? இப்போதைக்கு இரண்டு பக்கமும் தலையுள்ள மண்புழு...இன்னும் ஆதாய கணக்கு முடியவில்லை என்றே தெரிகிறது.//


பாமக அதிமுவுடன் ஐய்க்கியம் எப்போதோ முடிவாகிவிட்டது, மத்திய ஆட்சி முடியும் வரை அன்பு மணி மக்கள் பணி ஆற்ற வேண்டி இருக்கிறது என்று சொல்லி பெரிய ஐயா அம்மாவிடம் பர்மிசன் வாங்கிக் கொண்டு, கூட்டணி பற்றி பொதுவில் பிறகு அறிவிப்பதாக சொல்லி இருக்கிறார். வெவரம் தெரியாதவராக இருக்கிங்களே.//

அன்புமணி, வேலு, இன்று ராசினாமா கடிதம் கொடுக்கிறார்கள், கோவி.கண்ணன் அவர்கள் சொன்னது சரிதான்!
இதிலிருந்து, கோவி. கண்ணன் அவர்களுக்கும் மருத்துவர் ஐயா அல்லது ஜெயலலிதா அம்மா, இல்லை அண்ணா திமுக விற்கும் உள்ள நட்பு அல்லது தொடர்பு அம்பலமாகியிருக்கிறது!! :P

T.V.ராதாகிருஷ்ணன் said...

// ஜோதிபாரதி said...
அன்புமணி, வேலு, இன்று ராசினாமா கடிதம் கொடுக்கிறார்கள், கோவி.கண்ணன் அவர்கள் சொன்னது சரிதான்!
இதிலிருந்து, கோவி. கண்ணன் அவர்களுக்கும் மருத்துவர் ஐயா அல்லது ஜெயலலிதா அம்மா, இல்லை அண்ணா திமுக விற்கும் உள்ள நட்பு அல்லது தொடர்பு அம்பலமாகியிருக்கிறது!! :P///

:-))))

நசரேயன் said...

எதோ நடக்கட்டும் நல்லது நடந்தா சரிதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// T.V.Radhakrishnan said...
உங்கள் பின்னூட்டத்திற்கான பதில் வியாழனன்று சொல்லப்படும் கோவி//

மண்குதிரை மேல் கொஞ்சம் நம்பிக்கை வைத்தது தவறுதான்.