Sunday, March 22, 2009

விஜய்காந்த் செய்வது சரியா....

விஜய்காந்த்..மக்களுடன்தான் கூட்டணி..என்று சொன்னதன் மூலம்...அவர்..தி.மு.க.,கூட்டணியிலோ..அ.தி.மு.க., கூட்டணியிலோ சேரப்போவதில்லை என்பதைக் கூறிவிட்டார்.மேலும்..நான் சொல்லும் நபருக்கு வாக்களியுங்கள் என்றும் கூறுகிறார்.

அப்படியெனில்...வரும் நாடாளுமன்ற தேர்தலில் அவர் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிடாது என பொருள் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட முடிவை அவர் எடுத்ததால்..யாருக்குப் பயன்?

கண்டிப்பாக..தி.மு.க.,கூட்டணிக்குத்தான்.ஏனெனில்..சாதாரணமாக விஜய்காந்த்திற்கு விழும் வாக்குகள்..அ.தி.மு.க.விற்கு விழவேண்டிய வாக்குகள்...என அரசியல் வட்டத்தில் கூறுவதுண்டு.மேலும்..பா.ம.க.விற்கும்..விஜய்காந்திற்கும் என்றும் ஒத்துப்போகாது..ஆகவே விஜய்காந்த் வாங்கும் வாக்குகளில் கணிசமானவை பா.ம.க.வாக்குகளாகவும் இருக்கக்கூடும்.

இநிலையில் பா.ம.க.எடுக்கும் முடிவு முக்கியமானது.இச் சந்தர்ப்பத்தில்..பா.ம.க., தி.மு.க.கூட்டணியில் இருந்தால் தான்..சில தொகுதிகளில் ஆவது வெற்றி பெறலாம். இல்லையேல் அதன் கணக்கு பூஜ்யமாகத்தான் இருக்கும்.

ஒரு சட்டசபை தொகுதிக்கு..10000 முதல் 15000 வாக்குகள் வரை விஜய்காந்த் வாங்குவார் எனில்...ஒரு பாராளுமன்ற தொகுதியில் அவரால் கிட்டத்தட்ட 90000 வாக்குகள் வரை வாங்கமுடியும்.இது பல தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி வாய்ப்பை பாதிக்கலாம்.முக்கியமாக பா.ம.க., போட்டியிடும் இடங்களில் அதன் வேட்பாளர்களை இது பாதிக்கும்.

விஜய்காந்தின்..இந்த முடிவு..அவருக்கும் பயன் தராது..அவர் சுட்டிக்காட்டி வாக்களிக்க சொல்லப் போகும் வேட்பாளருக்கும் பயன் தராது. அவரது கட்சிக்கு இருக்கும் உண்மையான ஆதரவை இது தெரிவிக்கும்.

இது ஒரு மாநிலக் கட்சிக்கு நல்லதல்ல என்றே தோன்றுகிறது. சட்டசபை தேர்தல் எனில் இம்முடிவை வரவேற்கலாம்.

இது நாடாளுமன்ற தேர்தல்...விஜய்காந்த் தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

14 comments:

வடுவூர் குமார் said...

எப்ப நாட்டில் இரண்டு கட்சிக்கு மேல் போய்விட்டதோ அப்போதே தேர்தல் மற்றும் கூட்டணி எல்லாமே இடியாப்ப சிக்கலாகிவிட்டது.
நாடாளுமன்ற தேர்தலுக்காக கூட்டு வைத்துக்கொண்டால் சட்டசபை தேர்தலின் போது இவர் கட்சியின் மீது மக்களுக்கு நம்பிக்கை போய்விடும்,ஒருவேளை இந்த எண்ணம் தான் திரு விஜயகாந்திடமும் ஓடிக்கொண்டிருக்கிறதோ என்னவோ?

Raju said...

நம்பாதீங்க! விஜயகாந்த் உட்பட எந்த அரசியல் வாதிகளையும் நம்பாதீங்க...
முதல்ல " நாளை நமதே.. நாற்பதும் நமதே"ன்னாப்ல...
அப்பறம் "தேர்தல புறக்கணிப்போம்" அப்டின்னாப்ல...
இப்ப "மக்களோடதான் கூட்டணி, நான் சொல்ற ஆளுக்கு ஓட்டு போடுங்க" அப்டின்றாப்ல...
வடிவேல் (?) சொல்றா மாதிரி சின்னப்புள்ளத்தனமா இல்ல...

ttpian said...

சம்பாதிக்க முடிவு செய்த பிறகு,என்ன தயக்கம்>
இளிச்சவாயர்கள், நாங்கள்(தமிழர்) இருக்கும்போது,பூந்து விளயாடுங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

ஓட்டுகள் சிதறி மத்தியில் நிலையான அரசு அமையாவிட்டால்...நாட்டுக்கு 10000 கோடி நஷ்டம்வடுவூர் குமார்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

வடுவூர் குமார்
டக்ளஸ்.
ttpian

மணிகண்டன் said...

sari thaan.

T.V.ராதாகிருஷ்ணன் said...

// மணிகண்டன் said...
sari thaan.//

sari மணி

கோவி.கண்ணன் said...

//விஜய்காந்த்..மக்களுடன்தான் கூட்டணி..என்று சொன்னதன் மூலம்...//

ம(க்)களுடன் ஐ மூன் குடும்பக் கூட்டணி, மனைவியுடன் கூட்டணி, மச்சானுடன் கூட்டணி என்று சொல்லாமல் இருந்தால் சரி

கோவி.கண்ணன் said...

//இது நாடாளுமன்ற தேர்தல்...விஜய்காந்த் தன் முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும்.//

விஜயகாந்த் அரசியலையும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும்

கோவி.கண்ணன் said...

//கண்டிப்பாக..தி.மு.க.,கூட்டணிக்குத்தான்.ஏனெனில்..சாதாரணமாக விஜய்காந்த்திற்கு விழும் வாக்குகள்..அ.தி.மு.க.விற்கு விழவேண்டிய வாக்குகள்...என அரசியல் வட்டத்தில் கூறுவதுண்டு.மேலும்..பா.ம.க.விற்கும்..விஜய்காந்திற்கும் என்றும் ஒத்துப்போகாது..ஆகவே விஜய்காந்த் வாங்கும் வாக்குகளில் கணிசமானவை பா.ம.க.வாக்குகளாகவும் இருக்கக்கூடும்.
//

நாங்கள் நின்ற இடங்களில் எங்களுக்கு இவ்வளவு வாக்கு கிடைத்தது, எனவே ஒட்டு மொத்த தமிழகத்தில் இவ்வளவு கிடைத்திருக்கும் என கணக்கு காட்டவே விஜயகாந்த் செல்வாக்கு உள்ள தொகுதிகளில் களம் இறக்குகிறார். தனித்து நின்றால் டெபாசிட் கிடைக்காது என்று கூட தெரியாமல அவர் ஒரு கட்சியின் தலைவராக இருக்கிறார். எல்லாம் ஒரு கணக்கு(க்கு) தான்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி கோவி.

ttpian said...

தெரியாமல்தான் கேட்கிறேன்,வேரு எந்த மானிலத்தில் நடிகர்கள் குப்பை கொட்டமுடியும்?
பம்பரம் விட தொப்புள் கேட்கிற ஆசாமி.....
k.pathi
karaikal

நசரேயன் said...

எனக்கும் தெரியலை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
ttpian
நசரேயன்