அப்பாவோ,அம்மாவோ கட்டுப்பாடு என்ற பெயரில் குழந்தைகளை அடித்து நொறுக்கக்கூடாது.பெற்றோரை எதிர்த்து பதில் தாக்குதல் நடத்த முடியாத குழந்தைகளின் மனதில் ஆற்றாமை இருந்துக் கொண்டிருக்கும்.அதனாலேயே பெற்றோரை பழிவாங்குவதாக எண்ணிக்கொண்டு..அக்குழந்தைகள் பெற்றோர் விரும்பாத செயல்களை செய்துக் கொண்டிருப்பார்கள்.
2)சமையல் என்பது விறகு அடுப்பிலும் சமைக்கலாம்.கெரசின் அடுப்பிலும் சமைக்கலாம்.ஆனால் அடுப்பும்,அரிசி,பருப்பு,காய்கறிகள்,சமையல் பாத்திரம் மட்டும் இருந்தால் சமையல் தயாராகாது.அதற்கு நெருப்பு வேண்டும்.அதாவது நெருப்பு என்னும் ஈர்ப்பு இருந்தால் மட்டுமே சமைக்க முடியும்.அதுபோல ஆன்மீகத்தை அடைய பக்தர்களுக்கு ஒரு ஈர்ப்பு தேவைப்படுகிரது.அதுவே கோவில்கள்.
3)உன்னிடம் என்ன திறமை இருக்கிறது என்பதை நீ அறிவாயா? ஒன்றுமே இல்லை என்று சொல்லாதே..ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும்.அதைக் கண்டுபிடித்து அதில் உன் அறிவை,உழைப்பை செலுத்து.வாழ்வில் நீ ஜொலிக்கலாம்.புதைந்து கிடக்கும் கரித்துண்டுக்கு ..வருங்காலத்தில் வைரமாக ஜொலிப்போம் எனத் தெரிவதில்லை.
4)A son is a son until he gets married but a daughter is a daughter till you die
5)அரசு அதிகாரிகளும்,அமைச்சர்களும் அரசின் பொருளாதார நிலை, சிக்கன நடவடிக்கை ஆகியவற்றை முன்னிட்டு ஸ்டார் ஓட்டல்களில் தங்குவதும்..பிளேனில் எக்ஸிக்யூடிவ் வகுப்பில் வரவும் மையஅரசு தடை சொன்னது சில மாதங்களுக்கு முன்..இப்போது எம்.பி.க்கள் தங்கள் உறவினர்,நண்பர்கள் ஆகியோரை பிளேனில் அழைத்து வரலாம் என்று அறிவித்துள்ளது.ஏனோ துக்ளக் ஞாபகம் வருகிறது.
6)பூமியில் எவ்வளவு பெரியவனாய் இருந்தாலும்..கடலுக்குள் விழுந்து விட்டால்..அதில் உள்ள மீனுக்கு சிறியவனாகி விடுவான்.
7)வீட்டில் மருமகள் சரியாக சாப்பாடு போடுவதில்லை என அவள் மீது குற்றம் சொல்லி முதியோர் இல்லத்திற்கு வரும் மாமியார்கள்..வரிசையில் நின்று..தட்டை ஏந்தித்தான் சாப்பாடு வாங்கி உண்ணமுடிகிறது.
8)ஒரு ஜோக்
அதி புத்திசாலி அண்ணாசாமி B.Ed., படித்தார்.அதில் பாசானதும் தன் வீட்டிற்கு ஒரு தந்தி அனுப்பினார்.தந்தி குமாஸ்தா B.Ed., என்பதில் Bக்கு அடுத்து புள்ளி இருந்தால் அதிகமாக ஒரு வரிக்கான செலவு ஆகும் என்றார்.உடன் அண்ணாசாமி வீண் செலவு வேண்டாம் என இப்படி தந்தி கொடுத்தார்.
successful in BED
18 comments:
அன்பின் டிவிஆர்
அண்ணாசாமியின் கஞ்சத்தனம் - புத்திசாலித்தனம் - வாழ்க
மற்றவைகளும் ஓக்கே
நல்வாழ்த்துகள்
பெட் முதியோர் இல்லம் சிந்தனைகள் அருமை...
புத்தாண்டு வாழ்த்துக்கள் சார்...!
//a daughter is a daughter till you die//
//வீட்டில் மருமகள் சரியாக சாப்பாடு போடுவதில்லை என அவள் மீது குற்றம் சொல்லி முதியோர் இல்லத்திற்கு வரும் மாமியார்கள்..வரிசையில் நின்று..தட்டை ஏந்தித்தான் சாப்பாடு வாங்கி உண்ணமுடிகிறது.//
அருமையான உள்குத்து..,
வருகைக்கு நன்றி heena
வருகைக்கு நன்றி பிரியமுடன்...வசந்த்
// SUREஷ் (பழனியிலிருந்து) said...
அருமையான உள்குத்து..,//
:-)))
nice:-)
நல்ல சிந்தனைகள் உள்ள இடுகை...
வருகைக்கு நன்றி இயற்கை
//க.பாலாசி said...
நல்ல சிந்தனைகள் உள்ள இடுகை...//
நன்றி பாலாசி
//ஒவ்வொருவரிடமும் ஒரு திறமை இருக்கும்.அதைக் கண்டுபிடித்து அதில் உன் அறிவை,உழைப்பை செலுத்து//
அய்யா, புத்தாண்டு வாழ்த்துக்கள். அருமையான எல்லோரும் பின்பற்றவேண்டிய ஒன்று.
பிரபாகர்.
நல்ல சிந்தனைகள். வழக்கம் போல அருமை.
வருகைக்கு நன்றி பிரபாகர்
வருகைக்கு நன்றி அக்பர்
நல்லா இருக்கு சுண்டல் !!!
வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி
அண்ணாசாமி=))
வருகைக்கு நன்றி வானம்பாடிகள்
Post a Comment