அதிபுத்திசாலி அண்ணாசாமிக்கு சின்ன வயது முதலே பட்டங்கள் என்றால் பிடிக்கும்..ஆனால் பாவம் அவருடைய அப்பா காத்தாடிக் கூட வாங்கிக் கொடுக்கவில்லை.
சரி..படித்து ஒரு பட்டம் வாங்கலாம் என்றாலோ படிப்பே ஏறவில்லை..பள்ளிக் கல்வி முடித்ததே..பெரிய காரியம்.
இப்படி பட்டங்கள் எதும்தான் வாங்க முடியவில்லை..தன்னை யாரேனும் பாராட்டி பேசட்டுமே என்ற ஆவல் ஏற்பட்டது.அதற்காகவே தனக்குத்தானே சில திட்டங்களை அறிவித்து..தனக்கு வேண்டியவர்களை அழைத்து..அந்த திட்டங்களைப் பாராட்டி..தந்தையே..தலைவனே என்றெல்லாம் அவர்கள் மூலம் பட்டங்களை வாங்கினார்.
உதாரணத்திற்கு..தனது மகனுக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்து விட்டு..ஒரு பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்து..அதில் தன் நண்பர்கள் மூலம்..'தனயனின் தந்தை' என்ற பட்டம் பெற்றார்.
பின்..தனது அடுத்த மகனுக்கு..தனது நிர்வாகத்திலேயே..தனது துணையாக நியமித்து விட்டு..'துணை துணை கொண்டான்' பட்டம் பெற்றார்.
இப்படி..தனக்கும்..தன் குடும்பத்தினருக்கும்..அவ்வப்போது செய்யும் காரியங்களுக்கு..பொதுவான பட்டங்கள் பெறுவதை வாடிக்கை ஆக்கிக் கொண்டார்.
ஆனால்..நீண்ட நாட்களாக ..எந்த பட்டமும் பெறவில்லை என்ற ஆதங்கம் ஏற்பட..என்ன செய்வது என யோசித்தார்..
உடன் ஒரு ஐடியா வர..'இனி யாரும் என்னை பாராட்ட வேண்டாம்..யாரும் எனக்கு பட்டங்கள் ஏதும் தர வேண்டாம்' என்று தன் குடும்பத்தினர்..சுற்றம் ஆகியவர்களிடம் சொல்ல..அந்த ஐடியா வொர்க் அவுட் ஆகி விட்டது..'பட்டங்களுக்கு ஆசைப்படா குடும்பத் தலைவன்' பட்டத்தை குடும்பத்தினர் தரப்போகிறார்களாம்.
பிறப்பினால் அனைவரும் சமம்..பட்டங்களே ஒருவனை முன்னுக்கு கொண்டுவருகிறது என்று அவர் வாழ்க்கை அனைவருக்கும் தெரிவிப்பதாக அண்ணாசாமியின் மகள் தெரிவித்தார்.
28 comments:
கலக்கல்..........
அருமை அய்யா! துணை துணை கொண்டானுக்கு ரொம்ப நேரம் சிரித்தேன்...
பிரபாகர்.
வருகைக்கு நன்றி அத்திரி
//பிரபாகர் said...
அருமை அய்யா! துணை துணை கொண்டானுக்கு ரொம்ப நேரம் சிரித்தேன்...
பிரபாகர்//
நன்றி பிரபாகர்
நன்றாகவுள்ளது நண்பரே..
:)
//முனைவர்.இரா.குணசீலன் said...
நன்றாகவுள்ளது நண்பரே..//
நன்றி குணசீலன்
//D.R.Ashok said...
:)//
நன்றி D.R.Ashok
ஒருத்தரை உற்சாகப்படுத்தும்போது அவர் அடைகிற சந்தோசம் இருக்கே அப்பப்பா...
சொல்ல வார்த்தையே இல்லையெனலாம் ...
இன்னும் நிறைய சாதனைகள் செய்வார் என்பதில் சந்தேகமில்லை ...
அண்ணாச்சாமியை கேட்டதாக சொல்லவும்
:-)))
உள்குத்து, வெளிக்குத்து எல்லாமே (நல்லா)இருக்கு.
///துணை துணை கொண்டான்'///
ஹா ஹா ஹா.
வருகைக்கு நன்றி starjan
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அண்ணாச்சாமியை கேட்டதாக சொல்லவும்
:-)))//
சொல்லிடறேன்
///S.A. நவாஸுதீன் said...
உள்குத்து, வெளிக்குத்து எல்லாமே (நல்லா)இருக்கு.
///துணை துணை கொண்டான்'///
ஹா ஹா ஹா.///
வருகைக்கு நன்றி நவாஸுதீன்
அட்ரஸ் ப்ளீஸ்..!
ஆட்டோ வெயிட்டிங்..!!!
hahaha
ஐயா,துணைகொண்டாரே...கதை நகைச்சுவையோட நல்லாருக்கு.
வருகைக்கு நன்றி உண்மைத் தமிழன்
// cyko said...
hahaha//
நன்றி cyko
//ஹேமா said...
ஐயா,துணைகொண்டாரே...கதை நகைச்சுவையோட நல்லாருக்கு.//
நன்றி ஹேமா
//உள்குத்து, வெளிக்குத்து எல்லாமே (நல்லா)இருக்கு.//
ரிப்பீட்டு.
சார் கலக்குறீங்க போங்க.
உங்களுக்கு அஞ்சா சிங்கம்னு பட்டம் தர ஆசையா இருக்கு.
//அக்பர் said...
//உள்குத்து, வெளிக்குத்து எல்லாமே (நல்லா)இருக்கு.//
ரிப்பீட்டு.
சார் கலக்குறீங்க போங்க.
உங்களுக்கு அஞ்சா சிங்கம்னு பட்டம் தர ஆசையா இருக்கு.//
வருகைக்கு நன்றி அக்பர்
உடன் ஒரு ஐடியா வர..'இனி யாரும் என்னை பாராட்ட வேண்டாம்..யாரும் எனக்கு பட்டங்கள் ஏதும் தர வேண்டாம்' என்று தன் குடும்பத்தினர்..சுற்றம் ஆகியவர்களிடம் சொல்ல..அந்த ஐடியா வொர்க் அவுட் ஆகி விட்டது..'பட்டங்களுக்கு ஆசைப்படா குடும்பத் தலைவன்' பட்டத்தை குடும்பத்தினர் தரப்போகிறார்களாம்.//
இது ’குத்தே’தான்...::))
வருகைக்கு நன்றி
பலா பட்டறை
i love this post!
ஐயா இதிலே உள்குத்து ஏதும் இல்லையே
வருகைக்கு நன்றி மணிப்பக்கம்
//நசரேயன் said...
ஐயா இதிலே உள்குத்து ஏதும் இல்லையே//
இல்லை
Post a Comment