Tuesday, January 12, 2010

பதிவர்களை வாங்கப் பார்க்கும் தயாரிப்பாளர்கள்

எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ளது போல தெரிகிறது ..சமீபத்தில் அதிகம் ஊடகங்களில் அடிப்பட்ட அந்த நிறுவனம்.

ஏற்கனவே..அது தயாரித்து..வெளியிடும் நிலையில் உள்ள படத்திற்கு பிரச்னை ஏற்பட்டது.

இந்நிலையில்..இணையத்தில்...வெளிவரும் விமரிசனங்களைக் கண்டு...திரை உலகினரிடையே சிறிது பயம் இருக்கிறது.இதை சில மாதங்களுக்கு முன் தமிழ் சினிமா என்ற இணைய இதழ் தன் தலையங்கம் மூலம் தெரிவித்திருந்தது.அகநாழிகை புத்தக வெளியீட்டு விழாவில் அஜயன் பாலா வும் இது குறித்து பேசினார்.

எங்கே..தன் படத்தையும்..இணையம் விமரிசனத்தில் கிழித்துவிடப் போகிறதே..என்ற பயம் வந்து விட்டது போல இருக்கிறது போலும்..அல்லது நம்மிடமிருந்து எதையோ எதிர்ப்பார்க்கின்றனர்.

திடீரென நேற்று பலர் பதிவுகளில் அந்நிறுவனத்தின் பின்னூட்டம் ஒன்றை பார்க்க நேர்ந்தது..அதில் பிளாக் எழுதுபவர்களுக்கு நிறுவனம் பல வேறு வாய்ப்புகள் அளிக்கப் போவதாகவும்..பதிவுகளை அவர்கள் வலைப்பதிவில் பதிவு செய்துக் கொள்ளுமாறும் கோரப்பட்டிருந்தது.

உள்ளே சென்று பார்த்தால் ..இன்றைய டாப் 10 பிளாக்குகள்,மிகச் சிறந்த பதிவுக்கு அந்நிறுவன விருது,கலக்கல் கவிதைகள்,சினிமா, சிந்தனை என பல பிரிவுகள் இருந்தன.

உண்மையாக அந்நிறுவனம் பதிவர்களை ஊக்குவிக்க இம் முடிவை எடுத்திருந்தால் நம் பாராட்டுகள்..

ஆனால்..தனக்கென ஒரு நோக்கம் வைத்துக் கொண்டு..அதற்காக தற்காலிகமாக..இம் முடிவை எடுத்திருந்தால்...அவர்களுக்கு ஏமாற்றமே ஏற்படும்.

எது எப்படியோ..இணையத்தில் பதிவுகளின் வலிமை அறிந்து மகிழ்ச்சியும்..பதிவர்கள் இது கண்டு மேலும் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

38 comments:

Paleo God said...

அப்ப நாம மொக்க போடல உறுப்படியா ஏதோ பண்றோம்னு தெரியுது..::))

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அவங்க பார்வைக்கு சுலபமா வந்துவிடும் என்று நினைக்கிறார்களோ..,

goma said...

அதானா சங்கதி!!!!!நான் ரெடி நீங்க ரெடியா கதையா?

பிரபாகர் said...

அய்யா இதுவும் ஒர் விளம்பரம் தான். பார்த்து பெரும்பான்மையானோர் மனதில் எழுந்த எண்ணத்தை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.

எச்சரிக்கையாய் இருக்க வேண்டிய தருணம் பொறுப்பாய் செயல்பட.

பிரபாகர்.

Karthick Chidambaram said...

பதிவர்கள் பவர் உள்ளவர்கள் ஆய்டாங்கயா!

Karthick Chidambaram said...

பதிவர்கள் பவர் உள்ளவர்கள் ஆய்டாங்கயா!

http://eluthuvathukarthick.wordpress.com/

ரவி said...

மனதில் நினைச்சதை பிட்டு பிட்டு வெச்சிட்டீங்க.

ஓட்டுகளை போட்டாச்சு...

எம்.எம்.அப்துல்லா said...

உள் நோக்கத்தோடு செய்திருந்தால் விடை விரைவில் தெரியும் :)

sathishsangkavi.blogspot.com said...
This comment has been removed by the author.
sathishsangkavi.blogspot.com said...

//உள் நோக்கத்தோடு செய்திருந்தால் விடை விரைவில்//

நிச்சயமாக ஆதாயம் இல்லாமல் இறங்கமாட்டார்கள்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

Cable சங்கர் said...

sir,, avanga nilamayee vera.. :((

vasu balaji said...

சரியான எச்சரிக்கை.

Venkatesh said...
This comment has been removed by the author.
பாலா said...

பயம் இருக்கிறது.

மகா said...

சரியாக சொன்னீர்கள் ......

Jackiesekar said...

நானும் அப்படித்தான் நினைச்சேன்..

Vidhya Chandrasekaran said...

சேம் பிளட்..

S.A. நவாஸுதீன் said...

நீங்க சொல்றது சரிதான்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சரியா சொன்னீங்க டிவிஆர் சார்

சிநேகிதன் அக்பர் said...

என்னமோ நடக்குது மர்மமா இருக்குது.

Unknown said...

//அப்ப நாம மொக்க போடல உறுப்படியா ஏதோ பண்றோம்னு தெரியுது..::))// ரிப்பீட்டுங்க

அகல்விளக்கு said...

ஹி ஹி ஹி

இன்னும் கொஞ்ச நேரத்துல இங்கயும் கமெண்ட் போட்டுடுவாங்க....

அக்னி பார்வை said...

நான் அதுல மெம்பரே ஆயிட்டேன் சார்.. ஒரு எழவையும் காணோம்...

தமிழர் திருநாள் நலவாழ்த்துக்கள்

கண்ணா.. said...

//அப்ப நாம மொக்க போடல உறுப்படியா ஏதோ பண்றோம்னு தெரியுது//

சீரியல்ல அவங்க போடுற மொக்கைய விட நம்ம ஜாஸ்தியா போடுறோம்னு நினைச்சுட்டாங்க போல

:))

மணிஜி said...

நிச்சயமாக ஆதாயம் இல்லாமல் இறங்கமாட்டார்கள்...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

Radhakrishnan said...

பதிவர்களின் பலம் பல மாற்றங்களை உருவாக்கட்டும்.

வால்பையன் said...

இதற்காகவே நாமளும் விமர்சனம் எழுதலாம் போலயே!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
பலா பட்டறை
SUREஷ்
Goma
பிரபாகர்
Imayavaramban

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
ரவி
எம்.எம்.அப்துல்லா
Sangkavi
cable sankar
வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
negamam
மகா
வித்யா
ஜாக்கி சேகர்
S.A. நவாஸுதீன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
அக்பர்
starjan
D R Ashok
அகல்விளக்கு
அக்னி பார்வை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
கண்ணா..
தண்டோரா .....
வெ.இராதாகிருஷ்ணன்
வால்பையன்

kailash,hyderabad said...

புதிய முயற்சிக்கு வாழ்த்துவோம்.
பதிவர்களையும் அழ வைக்க மாட்டங்கன்னு நம்புவோம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி kailash

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி butterfly Surya

கண்ணகி said...

இதிலிருந்து தெரிவது என்னவென்றால் ...நம்ம்ளப்ப்பார்த்து பயப்படறாய்ங்க்....இது நமக்கெல்லாம் பெருமதானே...எதுக்கும் கொஞ்சம் பதிவு எழுதும்போது ஹெல்மட் மாட்டிக்கிட்டு எழுதலாமோ...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி kannaki