Thursday, January 28, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(29-1-10)

நமது உடலில் ஏழு வகை சுரப்பிகள் வெளியிடும் திரவம் ரத்தத்தில் கலந்து வாதம்,பித்தம்,சிலேத்துமம் ஆகிய மூன்று நாடிகளை இயக்குகிறது.இதன் மூலம் உடலுக்குத் தேவையான புரதம்,கொழுப்பு,மாவு சத்துகளை சமப்படுத்தி..சீரான வெப்ப நிலையில் நமது உடலை ஆரோக்கியமாக பாதுகாத்து வருகிறது.

2)ஜோதி பாசுவின் மறைவிற்குப் பின் 1964ல் மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய அத்தனை பொலிட் பீரோ உறுப்பினர்களையும் அக்கட்சி இழந்து விட்டது.23 ஆண்டுகள் முதல்வராய் இருந்த பாசு அதிகாரத் தோரணையோ..மமதையோ இல்லாதவராகத் திகழ்ந்தார்

3)ஒவ்வொன்றிற்கும் ஒரு சீசன் உண்டு.மாம்பழ சீசன்,பண்டிகை சீசன்,ஆடித் தள்ளுபடி சீசன்,சங்கீத சீசன் இப்படி..ஆனால் ஆண்டவனுக்கு சீசன் என்று நாம் கேள்விப் பட்டதில்லை.அதையும் சமீபத்தில் வந்த பத்திரிகை செய்திகள் சொல்லி விட்டன.சபரிமலை சீசனில் வசூலான உண்டியல் தொகை 119 கோடி ரூபாய் என்று செய்தி வெளி வந்துள்ளது.

4)இதுவரை இவர் 28 முறை சிறை சென்றுள்ளார்..நான்காண்டு காலம் சிறையில் கழித்துள்ளார்.அதிகக் காலம் சிறையில் இருந்த திராவிட இயக்கத் தலைவர் இவர் ஒருவரே! அவர் தான் வைகோ ஆவார்

5)ஒவ்வொரு குடியரசு தினத்திற்கும் சிறந்த தொண்டாற்றியவர்களுக்கு 'பத்ம' விருதுகள் வழங்குகிறது.இப்படிப்பட்ட விருதுகள் 1954 முதல் இந்திய அரசு வழங்கி வருகிறது.முதன் முதலில் ராஜாஜி,குடியரசு துணைத் தலைவராய் இருந்த ராதாகிருஷ்ணன்,சி.வி.ராமன் ஆகியோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

6) ஒரு ஜோக்..

தலைவர்- அடடா..என்ன வெயில்....தாங்க முடியல
நிருபர்- அப்போ..உங்களுக்கு பிடித்த பருவம் எது
தலைவர்-16 வயது முதல் 24 வயது வரை

20 comments:

கோவி.கண்ணன் said...

//4)இதுவரை இவர் 28 முறை சிறை சென்றுள்ளார்..நான்காண்டு காலம் சிறையில் கழித்துள்ளார்.அதிகக் காலம் சிறையில் இருந்த திராவிட இயக்கத் தலைவர் இவர் ஒருவரே! அவர் தான் வைகோ ஆவார்//

கணக்கு தப்பு, அவரு அம்மாவிடம் சிறை பட்டு 4 ஆண்டுகள் ஆச்சு அதையும் சேர்த்தால் மொத்தமாக சிறை சென்ற ஆண்டுகள் எண்ணிக்கை மிகுதியாகும்.

Unknown said...

பயனுள்ள தகவல்கள்.
வைகோ 28 முறை சிறை சென்ற தகவல் சரியே.இத்தனை காலம் அரசியல் நடத்தியும் அரசியலில் தனகென்று ஒரு நிலையான இடத்தை அவரால் தக்க வைத்துகொள்ளமுடியவில்லையே.
காரணம் ஈகோ,மற்றும் வரட்டுகெளரவம்.
சிறந்த அரசியல்வாதி. பேச்சாளர், இருந்தும் அரசியலில் அவரது உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக இருக்கிறது.

தாராபுரத்தான் said...

தொடர்ந்து தோல்வியடைவதால் மட்டும் வைக்கோவை குறைத்து மதிப்பிடுதல் கூடாது. பகிர்வுக்கு நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

//தலைவர்- அடடா..என்ன வெயில்....தாங்க முடியல
நிருபர்- அப்போ..உங்களுக்கு பிடித்த பருவம் எது
தலைவர்-16 வயது முதல் 24 வயது வரை //

அனைவருக்கும் பிடித்த பருவம் நிச்சயம் இதுதான்..

பிரபாகர் said...

ஜோதிபாசு உண்மையில் ஒரு உன்னதமான தலைவர்... நீங்கள் சொல்வது மிகச் சரிங்கய்யா!

அதிக பல்டி அடித்த தலைவரும் அவராத்தான் இருப்பாரு.

தலைவர், பருவம் ஜோக் அருமை.

பிரபாகர்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
கோவி.கண்ணன் said
கணக்கு தப்பு, அவரு அம்மாவிடம் சிறை பட்டு 4 ஆண்டுகள் ஆச்சு அதையும் சேர்த்தால் மொத்தமாக சிறை சென்ற ஆண்டுகள் எண்ணிக்கை மிகுதியாகும்.//

:-)))

vasu balaji said...

சபரி மலை சீசனில் சபரிமலை வருமானம் மட்டும் எடுக்கிறது சரியில்லை. வழி நெடுக மற்ற கோவில்களிலும் இந்த சீசனில் வருமானம் அதிகம். ஜோக்:))

Paleo God said...

3,6 - கலக்கல்..:))
பாசுஜி.. :(

கண்ணகி said...

சுண்டல் நல்லா இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//
அபுல் பசர் said...
அவரது உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக இருக்கிறது//

உண்மை..அரசியல் தெரியா அரசியல்வாதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Sangkavi said...
அனைவருக்கும் பிடித்த பருவம் நிச்சயம் இதுதான்..//

:-))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பிரபாகர் said...
ஜோதிபாசு உண்மையில் ஒரு உன்னதமான தலைவர்... நீங்கள் சொல்வது மிகச் சரிங்கய்யா!

அதிக பல்டி அடித்த தலைவரும் அவராத்தான் இருப்பாரு.

தலைவர், பருவம் ஜோக் அருமை.

பிரபாகர்.//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பிரபாகர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//தாராபுரத்தான் said...
தொடர்ந்து தோல்வியடைவதால் மட்டும் வைக்கோவை குறைத்து மதிப்பிடுதல் கூடாது. பகிர்வுக்கு நன்றி.//

உண்மை தாராபுரத்தான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
சபரி மலை சீசனில் சபரிமலை வருமானம் மட்டும் எடுக்கிறது சரியில்லை. வழி நெடுக மற்ற கோவில்களிலும் இந்த சீசனில் வருமானம் அதிகம். ஜோக்:))//

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பலா பட்டறை said...
3,6 - கலக்கல்..:))
பாசுஜி.. :( //

நன்றி பலா பட்டறை

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கண்ணகி said...
சுண்டல் நல்லா இருக்கு.//

நன்றி கண்ணகி

சிங்கக்குட்டி said...

பகிர்வுக்கு நன்றி!.

Menaga Sathia said...

சுண்டல் நல்லா இருக்கு.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிங்கக்குட்டி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
Mrs.Menagasathia