சரத்குமார் நடிக்கும் ஜக்குபாய் படத்திற்கான சி.டி., படம் வெளியாகும் முன்னரே வந்தது..திரைப்படத்துறையையே ஒரு கலக்கு கலக்கிவிட்டது.கமல்,ரஜினி என ஆளாளுக்கு மனதில் தோன்றியதை பேசிவிட்டார்கள்.முதல்வரையும் சந்தித்தனர் திரையுலகத்தினர்.முதல்வரிடம் பெட்டிசன் கொடுக்கப்பட்டது.இது சம்பந்தமாக சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.
படம் வெளியாகப் போகிறது.15 கோடி முதலீடு என ராதிகா கண்ணீர்..எல்லாம் சரி..ஆனால் படத்தை இவ்வளவு நாள் டிஸ்ட்ரிபியூட்டருக்கு விற்றிருப்பார்களே..அவர்கள் தரப்பிலிருந்து ஏன் ஏதும் எதிர்க்குரல் எழும்பவில்லை.
தமிழகத்தில் 32 மாவட்டங்கள்..ஓவர்சீஸ் வெளியிடு,டிவி.டி.ரைட்ஸ்,ஆடியோ வெளியீடு, சேனல் ரைட்ஸ் இப்படி வியாபரம் இருக்கும் போது 15 கோடியை எளிதில் திரட்டிவிடலாமே! மேலும் இப்போதெல்லாம்..பட வெளிவந்து தோல்வியடைந்தால் என்ன செய்வது..என..அதிகத் தியேட்டர்களில்,அதிகக் காட்சிகள் என சில நாளிலேயே தோல்வி அடைய வேண்டிய படத்தையும்..வசூல் சாதனை என ஏற்படுத்தி விடுகிறார்களே..அப்படியெல்லாம் இருக்கும் போது 15 கோடி ஜுஜுபி ஆயிற்றே.
நம் சந்தேகம்..சொல்லப்பட்டுள்ள தொகை கணக்கில் காட்டும் தொகையாக மட்டுமே இருக்கக்கூடும்..மேலும் கறுப்புபணம் கணக்கில் சொல்லப்பட்டிருக்காது.
படத்தயாரிப்பு ராடன் ..மேலும் ராடன் ராதிகாவிற்கு மட்டுமே சொந்தமானதில்லை..பொதுத்துறை நிறுவனம் அது..ஆகவே அது மக்கள் பணம்.
படம் வெளிவரும் நேரம்..பிரச்னை பூதாகாரமாக்கப்பட்டு காட்டப்பட்டுள்ளது.
இதன் உள்நோக்கம் அறிந்துதான் ரஜினியும்..படத்தை உடன் வெளியிடுங்கள்..நல்ல பப்ளிசிட்டி கிடைத்திருக்கிறது என்றாரோ!
20 comments:
பொங்கலுக்கு வருவதாக இருந்த இப்படம்..ஆயிரத்தில் ஒருவன்,குட்டி ஆகிய படங்கள் வருவதால்..அநேகமாக 22ஆம் தெதி வரும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது
ஆயிரத்தில் ஒருவனும் கேஸ்னு பேப்பர்ல இருந்ததே:)
நம்மள எல்லாம் முட்டாளாக்கப் பாக்குறாங்கன்னு தெரியுது அய்யா. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் விளம்பரத்துக்குத்தான்...
பிரபாகர்.
ஸார் எல்லாஞ் சரிதான்..
இத்தனை ரைட்ஸ் இருந்தாலும், சரத்குமாருக்கு இப்போ என்ன மார்க்கெட் இருக்குன்னு விநியோகஸ்தர்கள் வந்து வாங்குவாங்கன்னு நினைச்சீங்க..?
ஒவ்வொரு ஏரியாவும் சில லட்சங்களே விலை போயிருக்கின்றன. இதனால்தான் உண்மையான தயாரிப்பாளரான ஜீ டிவியும், பர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளரான ராடனும் முட்டிக் கொண்டு நின்றார்கள்.
எப்படியும் இந்த மாதம் படம் வந்துவிடுமாம்.. ஒரு வழியாக பஞ்சாயத்து பேசி முடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..!
என்ன செய்றது சார். எல்லாமே விளம்பரம்தான்.
//வானம்பாடிகள் said...
ஆயிரத்தில் ஒருவனும் கேஸ்னு பேப்பர்ல இருந்ததே:)//
ஆனால் இப்போதைய பிரச்னை அது ஆயிரத்தில் ஒன்றாய் இருக்குமா அல்லது ஆயிரத்தோட ஆயிரத்தொன்னா இருக்குமா என்பதுதான் :))
//பிரபாகர் said...
நம்மள எல்லாம் முட்டாளாக்கப் பாக்குறாங்கன்னு தெரியுது அய்யா. நீங்க சொல்ற மாதிரி எல்லாம் விளம்பரத்துக்குத்தான்...
பிரபாகர்.//
வருகைக்கு நன்றி பிரபாகர்
//உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
ஸார் எல்லாஞ் சரிதான்..
இத்தனை ரைட்ஸ் இருந்தாலும், சரத்குமாருக்கு இப்போ என்ன மார்க்கெட் இருக்குன்னு விநியோகஸ்தர்கள் வந்து வாங்குவாங்கன்னு நினைச்சீங்க..?
ஒவ்வொரு ஏரியாவும் சில லட்சங்களே விலை போயிருக்கின்றன. இதனால்தான் உண்மையான தயாரிப்பாளரான ஜீ டிவியும், பர்ஸ்ட் காப்பி தயாரிப்பாளரான ராடனும் முட்டிக் கொண்டு நின்றார்கள்.
எப்படியும் இந்த மாதம் படம் வந்துவிடுமாம்.. ஒரு வழியாக பஞ்சாயத்து பேசி முடித்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது..!//
நீங்கள் சொல்வதும் சரி உ.த.,..ஆனால் படம் சரத்குமாரை மட்டுமே நம்பி இல்ல...அதற்கான பிளஸ் பாயிண்டுகள்..படம் ஏற்கனவே பிரபலமான டைடில்..(உபயம் -ரஜினி).இரண்டாவது பிரபல இயக்குநர்..இவர் படங்கள் சோடை போணதில்லை..மூன்றாவதுதான் சரத்.மேலும் ஜீ டீவி., விவகாரம் நமக்குத் தெரியும்..சுப்பிரமணியபுரம் ஞாபகத்தில் இருக்கிறதா? பிறகு நான் சொன்ன கம்பெனி விவகாரம்..படம் நஷ்டமே அடைந்தாலும் இது ராதிகாவிற்கு தனிப்பட்ட நஷ்டத்தை ஏற்படுத்தாது
//அக்பர் said...
என்ன செய்றது சார். எல்லாமே விளம்பரம்தான்.//
படம் கண்டிப்பாக 15 கோடியை ஈட்டிவிடும்..தற்சமயம் எதிர்ப்பார்த்தபடி பொங்கலுக்கு திரையரங்குகளில் அதிகக்காட்சிகள் ஓட்டமுடியாததால் பட வெளியீடு தள்ளிப் போடப்படுகிறது
மேலும் உ.த., சரத்குமார்..சின்னத்திரையிலும்..வெள்ளித்திரையிலும் ராதிகா உழைத்து சிறிது சிறிதாக சேர்த்த பணம் என்றெல்லாம் நீலிக்கண்ணீர் வடிப்பது ஓவராகத் தெரியவில்லையா?
RK.. நீங்க ரொம்ப சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.
-Toto
www.pixmonk.com
ஆயிரம் சொன்னாலும் பல சாதாரண உழைப்பாளிகளின் வாழ்வாதாரம் சினிமா.. யாரோ சிலரின் உள் குத்து அரசியலில் அவர்கள் பாடு திண்டாட்டம் ஆகாமலிருன்தால் சரி..
மாற்று பார்வை பாத்து நீங்க சொன்ன கோணம் கூட கரெக்டா தான் இருக்கும் போலிருக்கு.
//Toto said...
RK.. நீங்க ரொம்ப சரியாத்தான் சொல்லி இருக்கீங்க.
-Toto
www.pixmonk.com//
வருகைக்கு நன்றி Toto
//பலா பட்டறை said...
ஆயிரம் சொன்னாலும் பல சாதாரண உழைப்பாளிகளின் வாழ்வாதாரம் சினிமா.. யாரோ சிலரின் உள் குத்து அரசியலில் அவர்கள் பாடு திண்டாட்டம் ஆகாமலிருன்தால் சரி..//
நீங்க சொல்வதும் சரிதான்..ஆனால் சின்னத்திரை நடிகர்களுக்கே சம்பளம் சரியாகப் போவதில்லை என்று கேள்வி
//kailash,hyderabad said...
மாற்று பார்வை பாத்து நீங்க சொன்ன கோணம் கூட கரெக்டா தான் இருக்கும் போலிருக்கு.//
வருகைக்கு நன்றி kailash
நடிகர் சங்கத் தலைவரின் படம்..,
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
நடிகர் சங்கத் தலைவரின் படம்..,//
ஆமாம்..அது வேற
பார்த்து விட்டேன்,படம் ஓடாது.தியெட்டரை விட்டு வெளியில் ஓடும்.:)))
வருகைக்கு நன்றி gulf-tamilan
Post a Comment