வாழ்த்துச் சொல்லி
பூங்கொத்து கொடுக்கையில்
விரல்கள் தீண்டின
பூவினும் மெல்லிய
மலர் ஒன்றை
2) உனக்கு என்ன வேண்டும்
என்றேன்
கூலிங் கிளாஸ் என்றாய்
ஏறிட்ட என்னிடம்
என்னை நீ பார்க்கையில்
நீ அறியாது
உன்னை நான் பார்க்கலாமே
என்றன உன் கண்கள்
3)பிரியும் நாள்
கண்களின் நீர் துடைத்த
கைக்குட்டையை யாசித்தேன்
வரும் நாட்களில்
என் கண்ணீர் துடைக்க
4)தினமும் ஒருமுறை
உன்னை தழுவிட
அனுமதித்தாய்
அப்போது உணரவில்லை
சாவையும் ஒருநாள்
தழுவிட வேண்டுமென
16 comments:
அனைத்தும் அருமை.
//... மலர் ஒன்றை.//
இதழ் அன்றோ?
வருகைக்கு நன்றி நன்மனம்
//
வாழ்த்துச் சொல்லி
பூங்கொத்து கொடுக்கையில்
விரல்கள் தீண்டின
பூவினும் மெல்லிய
மலர் ஒன்றை
//
அருமையான கற்பனை. எல்லாம் மிக அருமையாக இருக்கிறது அய்யா...
பிரபாகர்.
வருகைக்கு நன்றி பிரபாகர்
அனைத்தும் அருமை. மூன்றாவது மிக அருமை.
//வானம்பாடிகள் said...
அனைத்தும் அருமை. மூன்றாவது மிக அருமை.//
நன்றி வானம்பாடிகள்
அருமையான கவிதைகள்
அனைத்தும் மிக அருமை
அப்போது உணரவில்லை
சாவையும் ஒருநாள்
தழுவிட வேண்டுமென//
அருமையான கவிதை நண்பரே..
சாகும் நொடி வரை உணராமல் இருந்தால் தானே வாழ்க்கை இனிக்கும்..
சாகும் நினைவு வந்துவிட்டாலேயே வாழ்வு கசக்க ஆரம்பித்துவிடும் இல்லையா!
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான கவிதைகள்
அனைத்தும் மிக அருமை//
நன்றி Starjan
////முனைவர் இரா.குணசீலன் said....அப்போது உணரவில்லை
சாவையும் ஒருநாள்
தழுவிட வேண்டுமென//
//அருமையான கவிதை நண்பரே..
சாகும் நொடி வரை உணராமல் இருந்தால் தானே வாழ்க்கை இனிக்கும்..
சாகும் நினைவு வந்துவிட்டாலேயே வாழ்வு கசக்க ஆரம்பித்துவிடும் இல்லையா!////
வருகைக்கு நன்றி குணசீலன்
சார்.. நன்றாக இருக்கிறது.. சின்ன விண்ணப்பம்.. ஒரு கவிதைக்கும் இன்னொன்றுக்கும் ஒரு வரி இடைவெளி விடலாமே...::))
நல்லாருக்கு...
//பலா பட்டறை said...
சார்.. நன்றாக இருக்கிறது.. சின்ன விண்ணப்பம்.. ஒரு கவிதைக்கும் இன்னொன்றுக்கும் ஒரு வரி இடைவெளி விடலாமே...::))//
வருகைக்கு நன்றி பலா பட்டறை
ippa OK vaa
//வித்யா said...
நல்லாருக்கு...//
நன்றி வித்யா
முதலாவதும் கடைசியும் நல்லாயிருக்கு.
//ஹேமா said...
முதலாவதும் கடைசியும் நல்லாயிருக்கு.//
நன்றி ஹேமா
Post a Comment