Friday, January 15, 2010

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (15-1-10)

இலக்கியத்தில் மிகப் பெரிய விருதான சாகித்திய அகாடமி விருது பெற்றவர்களில் திருநெல்வேலியைச் சேர்ந்தவர்கள் அதிகம்.தோப்பில் முகமது மீரான்,தி.க.சி.,கி.ரா.,ரா.பி.சேதுப்பிள்ளை,வல்லிக்கண்ணன் ஆகியோர்.தாமிரபரணி தண்ணீர்...

2)தமிழின் சிறப்பு ஒன்று..பூ, மலர் இரண்டு தமிழ் வார்த்தைகளில் எதைச் சொல்லிப் பார்த்தாலும் சொல்வதற்காக வாய் திறக்கும் போது நம் உதடுகள் பூ மலர்வது போல மலர்ந்து விரியும். ப.,ம., இரு எழுத்துகளையும் உதடு மலராமல் சொல்ல முடியாது.

3)எங்கேயோ படித்தது...பெண்கள் சமுதாயத்தில் விதை நெல்லைப் போன்றவர்கள்.வரும் தலைமுறைகளை நன்றாக பயிர் செய்ய வேண்டியவர்கள்.

4)துபாயில் கலீபா டவர் என்ற கட்டிடம் சமீபத்தில் திறந்து வைக்கப்பட்டது.இதுதான் உயரமானக் கட்டிடமாக சொல்லப் படுகிறது.828 மீட்டர் (2717 அடிகள்) உயரமுள்ள இதை 21-9-04 கட்ட ஆரம்பித்து..1-10-09 அன்று முடித்தனராம்.12000 ஊழியர்கள் 22 மில்லியன் மணிநேரங்கள் வேலை செய்து கட்டி முடித்துள்ள இக்கட்டிடத்திற்காக 31400 மெட்ரிக் டன் இரும்பு தேவைப்பட்டதாம்.

5)மின்விசிறி ஒடத் தொடங்கிவிட்டால் அதிலுள்ள பிளவுகள் மறைந்து ஒரே சுழற்சி வட்டம் தான் தெரிகிறது.ஒரு செயலும் இன்றி உழைப்பு முடங்கிக் கிடக்கும் போது தான் உலகம் பெரிய துன்பங்களும்,மிகுந்த கவலைகளும் உள்ள இடமாகப் பிளவுப் பட்டுத் தெரிகிறது.உழைப்பு ஒரு நல்ல மருந்து.அதில் மனப்புண்களும்,கவலைகளும் ஆறுகின்றன.சோர்வும்,தளர்வும் ஒடுங்கி விடுகின்றன.

6)பண்டைத் தமிழர்களின் காலக் கணிப்பீட்டு முறை மிகவும் நுட்பமானது.வைகறை,காலை,நண்பகல்,எற்பாடு,மாலை,யாமம் என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக்கி..ஒரு நாளுக்கு அறுபது நாழிகைகள் எனப் பகுத்துக் கொண்டனர்.அதாவது அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிய அறுபது நாழிகைகள் எடுக்கின்றன.ஒரு நாழிகை 24 நிமிடங்கள்..60 நாழிகைகள் 1440 நிமிடங்கள் அதாவது 24 மணி நேரம் ..ஒரு நாள்.

7)சமீபத்தில் முடிவடைந்த 33ஆம் புத்தகக் காட்சியில் வாசகர்களின் அதிகக் கவனத்தைக் கவர்ந்த புத்தகங்களில் முதலிடத்தை..ரகோத்தமன் எழுதிய 'ராஜீவ் காந்தி கொலை வழக்கு' பெற்றுள்ளதாக..ஒரு பத்திரிகைக் குறிப்பு சொல்கிறது.

8)ஒரு ஜோக்

உதவி இயக்குநர்-(இயக்குநரிடம்) நம்ம பட பூஜை அன்னிக்கே..நம்ம கதை டிவிடி வேற லேங்குவேஜ்ல வெளிவந்து விட்டது
இயக்குநர்- இரைந்து பேசாதே..அதைத்தான் இப்ப நாம் காபி யடிச்சு தமிழ்ல எடுக்கிறோம்

18 comments:

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான சுண்டல் டிவிஆர் சார்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஹைய்யா நாந்தான் முதல்ல்லயா ...

முனைவர்.இரா.குணசீலன் said...

6)பண்டைத் தமிழர்களின் காலக் கணிப்பீட்டு முறை மிகவும் நுட்பமானது.வைகறை,காலை,நண்பகல்,எற்பாடு,மாலை,யாமம் என்று ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாக்கி..ஒரு நாளுக்கு அறுபது நாழிகைகள் எனப் பகுத்துக் கொண்டனர்.அதாவது அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிய அறுபது நாழிகைகள் எடுக்கின்றன.ஒரு நாழிகை 24 நிமிடங்கள்..60 நாழிகைகள் 1440 நிமிடங்கள் அதாவது 24 மணி நேரம் ..ஒரு நாள்.


பயனுள்ள பகிர்வு நண்பரே..
அன்று அரசனுக்கு நேரத்தைக் கணக்கிட்டுச் சொல்லும் “காலக்கணக்கர்“ இருந்தனர்..
பழந்தமிழர் காலத்தைக் கணக்கிட்ட பாங்கு, காலப்பாகுபாடு ஆகியன எண்ணிப்பெருமிதம் கொள்ளத்தக்கன..

goma said...

எங்கேயோ படித்தது...பெண்கள் சமுதாயத்தில் விதை நெல்லைப் போன்றவர்கள்.வரும் தலைமுறைகளை நன்றாக பயிர் செய்ய வேண்டியவர்கள்.

இப்படியே பெண்களைப் புகழ்வது போல் புகழ்ந்து அவள் தலையில் எல்லா பாரத்தையும் ஏற்றி வைப்பார்கள்...பழியிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள யாரோ சொல்லியிருக்கிறார்கள்

வானம்பாடிகள் said...

கரம் சுண்டல்.ஜோக் :))

பிரபாகர் said...

அய்யா வணக்கம்.

வழக்கம் போல் சூடாக சுவையாக இருக்கிறது. எல்லாரும் DVD பார்த்து சுட்டுத்தான் எடுக்கிறாங்க... ஜோக் அருமை.

பிரபாகர்.

கோவி.கண்ணன் said...

வாய்விட்டு சிரிக்கலாம்னு வந்தால் தலைப்பு மாறி இருக்கிறது !
:)

T.V.Radhakrishnan said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அருமையான சுண்டல் டிவிஆர் சார்//

நன்றி ஸ்டார்ஜன்

T.V.Radhakrishnan said...

தங்கள் முதல் பின்னூட்டத்திற்கு நன்றி
Starjan

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி குணசீலன்

T.V.Radhakrishnan said...

//goma said...
எங்கேயோ படித்தது...பெண்கள் சமுதாயத்தில் விதை நெல்லைப் போன்றவர்கள்.வரும் தலைமுறைகளை நன்றாக பயிர் செய்ய வேண்டியவர்கள்.

இப்படியே பெண்களைப் புகழ்வது போல் புகழ்ந்து அவள் தலையில் எல்லா பாரத்தையும் ஏற்றி வைப்பார்கள்...பழியிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள யாரோ சொல்லியிருக்கிறார்கள்//

இது என்னடா வம்பாப் போச்சு..எதைச் சொன்னாலும் இப்படி போர்க்கொடி தூக்கினா எப்படி

T.V.Radhakrishnan said...

//வானம்பாடிகள் said...
கரம் சுண்டல்.ஜோக் :))//

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.Radhakrishnan said...

//பிரபாகர் said...
அய்யா வணக்கம்.

வழக்கம் போல் சூடாக சுவையாக இருக்கிறது. எல்லாரும் DVD பார்த்து சுட்டுத்தான் எடுக்கிறாங்க... ஜோக் அருமை.

பிரபாகர்.//

நன்றி பிரபாகர்

T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
வாய்விட்டு சிரிக்கலாம்னு வந்தால் தலைப்பு மாறி இருக்கிறது !
:)//

பதிவை டிராஃப்டிலிருந்து அனுப்புகையில் தவறு ஏற்பட்டுவிட்டது
வருகைக்கு நன்றி

அக்பர் said...

பார்த்தேன் படித்தேன் ரசித்தேன் ருசித்தேன்.

சுவை அருமை.

T.V.Radhakrishnan said...

நன்றி அக்பர்

கலகலப்ரியா said...

:) ரொம்ப நல்லாருக்கு... கோவி கண்ணன் சொன்ன மாதிரி.. தலைப்பு மாறிடிச்சு..

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி கலகலப்ரியா