Saturday, January 2, 2010

இடைத்தேர்தலும் தமிழ்மண வாக்கெடுப்பும்


தமிழ்மணத்தில் சிறந்த 2009 பதிவுகளுக்கான தேர்வு நடந்துக் கொண்டிருக்கிறது.மொத்தம் 16 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் பதிவர்களால் தெர்ந்தெடுக்கப்பட்ட முதல் பத்து பதிவுகள் இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் தற்போது உள்ளது.

செய்திகள் பிரிவில் எனது இந்த இடுகையும் உள்ளது.முதலில் பத்திற்குள் ஒன்றாக இதைத் தேர்ந்தமைக்கு பதிவர்களுக்கு நன்றி.

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பில் அனைவரும்..அதாவது பதிவர்..பதிவர் அல்லாதார் அனைவரும் வாக்களிக்கலாம்.ஆனால் அதற்குமுன் பயனர் பெயரை தமிழ்மணத்தில் ரிஜிஸ்டர் செய்துக் கொள்ள வேண்டும்.

எப்படி செய்தாலும்..எல்லாவற்றிலும் லூப்ஹோல் உண்டு.அதை நன்கு அறிந்து..அதை முறைகேடாக பயன்படுத்துவதில் வல்லவர் நாம்.இப்போதும்..நமக்கு நண்பர் வட்டம் பெரிதென்றால் அவர்களை தமிழ்மணத்தில் பயனர் என இணைத்து அவர்கள் வாக்குகளை நமக்குப் போடச் செய்யலாம்.அதனால் சிறந்த இடுகைகள் சிறந்தவையாக தேர்வு ஆகாமல் போகலாம்.இந்த கோணத்தில் ஆராய்ந்து தமிழ்மண நிர்வாகம் வேறு முறையில் தேர்வு நடத்தலாம்.

அதாவது..ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பதிவர்கள் தேர்ந்தெடுத்த சிறந்த இடுகைகள் எது..என தமிழ்மண நிர்வாகமே ஒரு குழு அமைத்து தேர்ந்தெடுக்கலாம்.அந்த நீதிபதிகள் தீர்ப்பே இறுதியானது.அதை விடுத்து..இப்போது அறிவித்துள்ள முறையில் தேர்ந்தெடுக்க வேண்டுமெனில்..இடைத்தேர்தல்களில் எப்படி பணபலம் வெற்றி பெறுகிறதோ..அப்படி..இத்தேர்விலும் நண்பர் பலமே வெற்றிபெறும்.

தமிழ்மணம் இந்தக் கோணத்தில் யோசிக்குமா?

24 comments:

cheena (சீனா) said...

அன்பின் டிவிஆர்

உண்மை நிலைஉஐ எடுத்துரைத்தமை நன்று

நல்வாழ்த்துகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி சீனா

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இத்தேர்விலும் நண்பர் பலமே வெற்றிபெறும்.//

அதுவும் தனித்தனிக் கண்ணி உள்ள நண்பர்கள் பலமே வெல்ல வாய்ப்பு இருக்கிறது. ஒரெ கணிணியில் பல நண்பர்கள் வாக்களித்தால் ஒரே ஐ.பி. முகவரி காரணமாக கள்ள ஓட்டாக கருதப்படும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி
SUREஷ் (பழனியிலிருந்து)

கடைக்குட்டி said...

இண்டர்நெட் யுகத்துல இந்த மாதிரி வாக்கெடுப்பில் 100% உண்மை தேடமுடியாது...

:-)

பாப்போம்...

Ashok D said...

சரிதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கடைக்குட்டி said...
இண்டர்நெட் யுகத்துல இந்த மாதிரி வாக்கெடுப்பில் 100% உண்மை தேடமுடியாது...

:-)

பாப்போம்...//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

// D.R.Ashok said...
சரிதான்//

நன்றி D.R.Ashok

உண்மைத்தமிழன் said...

வழி மொழிகிறேன் ஐயா..!

பின்னோக்கி said...

உங்கள் பதிவு அடுத்த கட்டத்துக்கு முன்னேறியதற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

கார்க்கிபவா said...

வாழ்த்துகள் அழகிரியண்ணே :))))

Jerry Eshananda said...

எனக்கும் யாராவது ஓட்டு போடுங்கப்பா,"அண்ணன் அழகிரி கிட்ட சொல்லி துட்டு வாங்கி தாரேன்."

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பின்னோக்கி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கார்க்கி said...
வாழ்த்துகள் அழகிரியண்ணே :))))//

தம்பிக்கு முன்கூட்டியே வாழ்த்துகள்
:))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஜெரி ஈசானந்தா. said...
எனக்கும் யாராவது ஓட்டு போடுங்கப்பா,"அண்ணன் அழகிரி கிட்ட சொல்லி துட்டு வாங்கி தாரேன்."//
எவ்வளவு தருவீங்க? நான் ஓட்டு போட்டுடறேன்

நசரேயன் said...

வழி மொழிகிறேன்

Paleo God said...

//ஜெரி ஈசானந்தா. said...
எனக்கும் யாராவது ஓட்டு போடுங்கப்பா,"அண்ணன் அழகிரி கிட்ட சொல்லி துட்டு வாங்கி தாரேன்."//
எவ்வளவு தருவீங்க? நான் ஓட்டு போட்டுடறேன்//

இது டாப்பு..:))

TVR சார்,, சிறந்தது எது என்று எல்லாருக்கும் தெரியும்... எல்லாமும் வெல்வதும் கடினம்... (அரசியலில் இதெல்லாம் ....))

Starjan (ஸ்டார்ஜன்) said...

இதுல இவ்வளவு இருக்கா ...

இராகவன் நைஜிரியா said...

ஐயா மிக அழகாகச் சொல்லியிருக்கின்றீர்கள்.

ஆனால் என் ஐயம் எது எனில், எத்தனைப் பேர் நீங்கள் கூறியது மாதிரிச் செய்ய இயலும் என எனக்குப் புரியவில்லை.

இப்போது தேர்ந்தெடுக்கப் பட்டவர்களைப் பாருங்களேன்.. புதுப் பதிவர்களை நிறைய காண முடிகின்றது.

என்னோட அபிப்ராயம் எனக் கேட்டால், இப்போது தமிழ் மணம் பின்பற்றும் வழி சரியானதாகத்தான் தோன்றுகின்றது

உங்கள் கருத்தை மறுத்து பேசுவதற்காக தவறாக நினைக்க வேண்டாம்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
வழி மொழிகிறேன்//

வருகைக்கு நன்றி நசரேயன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பலா பட்டறை said...
TVR சார்,, சிறந்தது எது என்று எல்லாருக்கும் தெரியும்... எல்லாமும் வெல்வதும் கடினம்... (அரசியலில் இதெல்லாம் ....))//

வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இதுல இவ்வளவு இருக்கா ...//

வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
உங்கள் கருத்தை மறுத்து பேசுவதற்காக தவறாக நினைக்க வேண்டாம்.//
ஒருவருக்கு தங்கள் கருத்தைக் கூறுவதற்கும்..மற்றவர் கருத்தை மறுப்பதற்கும் உரிமை உண்டு.என்ன ஒன்று..நம்மை பாராட்டும் போது அதை ஏற்கும் அதே மனம்தான் கன்ஸ்ட்ரக்டிவ் கிரிடிசிசத்தைக் கூட ஏற்க மறுக்கிறது சில பிரபலங்களுக்கு

T.V.ராதாகிருஷ்ணன் said...

//இராகவன் நைஜிரியா said...
ஆனால் என் ஐயம் எது எனில், எத்தனைப் பேர் நீங்கள் கூறியது மாதிரிச் செய்ய இயலும் என எனக்குப் புரியவில்லை.//
சுரேஷ் அவர்களின் பின்னூட்டப் பார்க்கவும்..தனித் தனி கணினி இருந்தால் போதும்.நம் நண்பர்களை தமிழ்மணத்தில் பயனர் பெயரை ரிஜிஸ்டர் செய்து ஓட்டிட முடியும்..இதற்குமேல் இதைப் பற்றி மேலும் எழுதினால் சிலரின் நட்பை இழக்க வேண்டிவரும்.