Saturday, January 16, 2010

பொங்கலுக்கு நான் பார்த்த படம்- விமரிசனம்



ஒவ்வொருவரும் பொங்கல் வெளியீடு படங்களைப் பார்த்து...தங்கள் விமரிசனங்களை பதிவில் ஏற்றிக் கொண்டிருக்க..ஊரோடு என்றும் சேர்ந்து வாழும் நான் அப்படி செய்யாதது மன வருத்தத்தைக் கொடுக்க..நான் காணும் பொங்கலன்று கண்ட படத்தை விமரிசிக்கிறேன்..

விஜய் டி.வி.யில் சனிக்கிழமை 10 மணிக்கு பிரகாஷ் ராஜிற்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்த .'காஞ்சிவரம்' படம் ஒலி/ஒளி பரப்பானது.அப்படத்தை முன்னர் நான் பார்க்காததால்..இப்போது பார்க்க தீர்மானித்தேன்.இது என்ன தீர்மானிப்பது என்கிறீர்களா..பின்னே இல்லையா..இரண்டு மணி நேர படம்..நான்கு மணி நேரம் ஓடியது என்றால்...அதைப் பார்த்த நான் பொறுமைத் திலகம் அல்லவா?

நடுநடுவே ஐந்து நிமிடத்திற்கு ஒரு விளம்பர இடைவேளை..அடுத்து ஐந்து நிமிடத்திற்கு பிரகாஷ் ராஜ் பேச்சு..இப்படி நான்கு மணி நேரம் இடை இடையே படம் ஓடியது.

ஏழை நெசவாளிகள்..கம்யூனிசம் வருவதற்குமுன்..முதலாளித்துவத்தால் பட்ட துன்பங்களைப் படம் சொல்கிறது.பட்டு சேலை நெய்யும் ஒரு நெசவாளி..தன் திருமணத்திற்கு மனைவிக்கு பட்டு சேலை எடுக்க நினைக்க..அது முடியாது..தன் மகள் திருமணத்திற்குள் மகளுக்கு பட்டு சேலை எடுத்துவிடுவேன் என்கிறார்.அதற்காக தினசரி பட்டு நூலை சிறிது சிறிதாகத் திருடி..வீட்டில் மறைவான இடத்தில் தறி போட்டு நெய்கிறார்.இந்நிலையில் மனைவியின் மரணம் நேருகிறது.இதற்கிடையே..கம்யூனிச எழுத்தாளரை சந்திக்க..இவர் மனமும் அதை நாட..நெசவாளிகள் கோரிக்கைகளை எழுப்பச் சொல்லி தலைமை தாங்குகிறார்.ஒரு நாம் இவர் நூலைத் திருடிப் போகையில் மாட்டிக் கொண்டு சிறை செல்கிறார். அதனால் மகளுக்கு நடக்க இருந்த மணம் நின்று போகிறது.மகள் நோய் வாய்ப்பட ..பரோலில் வரும் அவர்..தன் கையால் மகளுக்கு விஷச் சோறு ஊட்டி..அவள் பிணத்தின் மீது..அதுவரை அரைகுறையாய் நெய்த பட்டை போர்த்துகிறார்.

பின்னர் நெசவாளிகளுக்கென Co op. society 1950ல் உருவானது என்ற கேப்ஷனுடன் முடிகிறது.

இப்படத்தில் பிரகாஷ்ராஜ் நடித்ததை விட அற்புதமாக பல படங்களில் நடித்துள்ளார்.சமயங்களில் முன்னர் கொடுக்க முடியாது விடுபட்டால்..பின்னர் ஒரு நாள் வேறு எதற்காவது கொடுப்பது வழக்கம்.அப்படித்தான் இதற்கும் என்றே தோன்றுகிறது.

Starring: Prakash Raj, Shreya reddy

Direction: Priyadarshan

Music: M. G. Sreekumar

Production: Shailendra Singh

20 comments:

vasu balaji said...

:))

முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said...

லேட்டா பார்த்தாலும் பொறுமையா நல்ல படம்தான் பார்த்து இருகீங்க. கொஞ்சம் செயற்கையா இருந்தாலும் - படம் நல்லாதான் இருந்தது. அவார்டுக்கு குறிப்பிட்ட திரைப்படத்தின் நல்ல நடிப்பெல்லாம் இரண்டாம்பட்சம்தான் - அதுக்கு பின்னாடி பெரிய அரசியல் இருக்கு - அதுநால் அவார்ட் பத்தி யோசிச்சு நடிப்ப குழப்பிகாதீங்க.

goma said...

விமரிசனவாசித்த பிறகு படத்தைப் பார்க்கும் ஆவல் ஜாஸ்தியாகிவிட்டது.

S.A. நவாஸுதீன் said...

படம் அவ்ளோ நல்லாவா இருக்கு. சி.டி. வாங்கி ரொம்ப நாள் ஆச்சு. ஆனா பார்க்கலை. சரி நீங்க சொன்னதுக்காக ஒரு தடவை பார்த்துடுறேன்.

Paleo God said...

நீங்களுமா...::))

சிநேகிதன் அக்பர் said...

படத்தை பார்க்க தூண்டுது உங்கள் பகிர்வு.

சங்கர் said...

நானும் முதல்முறையாகப் பார்த்தேன், நல்ல படம்,
என்னைப் பொறுத்தவரை, அந்த ஐந்து நிமிட இடைவேளைகள் மிக மிகத் தேவையாய் இருந்தது, இல்லாத பட்சத்தில் முழுதாய் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே

பா.ராஜாராம் said...

:-)))

//சமயங்களில் முன்னர் கொடுக்க முடியாது விடுபட்டால்..பின்னர் ஒரு நாள் வேறு எதற்காவது கொடுப்பது வழக்கம்.அப்படித்தான் இதற்கும் என்றே தோன்றுகிறது.//

நச்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

// வானம்பாடிகள் said...
:))//

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் said
அதுக்கு பின்னாடி பெரிய அரசியல் இருக்கு - அதுநால் அவார்ட் பத்தி யோசிச்சு நடிப்ப குழப்பிகாதீங்க///

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//goma said...
விமரிசனவாசித்த பிறகு படத்தைப் பார்க்கும் ஆவல் ஜாஸ்தியாகிவிட்டது.//

கண்டிப்பாக பாருங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//S.A. நவாஸுதீன் said...
படம் அவ்ளோ நல்லாவா இருக்கு. சி.டி. வாங்கி ரொம்ப நாள் ஆச்சு. ஆனா பார்க்கலை. சரி நீங்க சொன்னதுக்காக ஒரு தடவை பார்த்துடுறேன்.//

கண்டிப்பாக பாருங்கள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பலா பட்டறை said...
நீங்களுமா...::))//

இதில ஆச்சரியப் பட என்ன இருக்கிறது..எப்ப ஜோதில கலந்துட்டோமோ அப்புறம் என்ன

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்பர் said...
படத்தை பார்க்க தூண்டுது உங்கள் பகிர்வு.//
வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//சங்கர் said...
நானும் முதல்முறையாகப் பார்த்தேன், நல்ல படம்,
என்னைப் பொறுத்தவரை, அந்த ஐந்து நிமிட இடைவேளைகள் மிக மிகத் தேவையாய் இருந்தது, இல்லாத பட்சத்தில் முழுதாய் பார்த்திருப்பேனா என்பது சந்தேகமே//

:-)))))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பா.ரா.

Think Why Not said...

2 மணிநேர படத்த 4 மணி நேரம் பார்த்தால் அப்படி தோன்றியிருக்கலாமோ என்னமோ...

என்னைப் பொருத்தவரை ஒரு அற்புதமான மிக யதார்த்தமான கதை...

பிரகாஷ் ராஜ் வாழ்ந்திருப்பதாகவே தோன்றியது... இப்படி ஒரு கதைகளத்தை தேர்வு செய்து வாழ்வை அற்புதமாய் பதிவு செய்த படக்குழுக்கு ஒரு சல்யூட்...

இந்த மாதிரி படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெறாமை (நம்ம ஏரியாவுல எந்த தியேட்டர்லயும் போட கூடி இல்லை), தமிழ் சினிமாவில் உருப்படியான முயற்சிகளுக்கு இடமில்லை என்பதை எடுத்து காட்டுகிறது...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..தங்கள் கருத்திற்கும் நன்றி thinks why not

butterfly Surya said...

நல்ல படம். வழக்கம் போல தமிழில் ஓடவில்லை.

சந்தித்தில் மகிழ்ச்சி.

வலைச்சரத்துக்கு வாழ்த்துகள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி Surya