Wednesday, January 6, 2010

புத்தகக் காட்சியில் நான் - 2

நான் தி.ஜானகிராமன் எழுத்தை விரும்பி படிப்பவன்.இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் என்னிடமிருந்து 'அம்மா வந்தாள்' புத்தகம் இரவல் வாங்கிச் சென்றார்.இரவல் கொடுத்துவிட்டால் நம்ம ஆட்களிடம் திரும்பி வருமா? மேலும் தமிழனைப் பொறுத்தவரை..இரவல் என்பதிலும் 'இ' இருப்பதால் இலவசம் என்று எண்ணிவிடுகிறார்கள் போலும்.

அந்த புத்தகம் போனதிலிருந்து..மீண்டும் அதை வாங்கிவிட வேண்டும் என எண்ணியிருந்தேன்.இந்த கண்காட்சியில் வாங்கியும் விட்டேன்.

வீட்டிற்கு வந்தது..அந்த புது புத்தக வாசனையுடன்..அந்த பழைய நாவலை ஒரே மூச்சில் படித்து முடித்தேன்..அடடா...என்ன ஒரு எழுத்து..என்ன ஒரு வர்ணனை..இப்படி என்ன..என்ன..என சொல்லிக் கொண்டே போகலாம்.

ஒரு சில இடங்கள்..

பூணூல் போடுவது குறித்து..

'எந்த பிராமணன் சந்தி பண்றான் இப்ப?ஆவணி அவிட்டமாம்..காட்டில வாசம் பண்றபோது வச்ச வழக்கம்..எல்லாம் இன்னும் ஒட்டிண்டு இருக்கு.பூணுலுக்கு அர்த்தம் ஏது?டவாலி போட்டிக்கறவனாவது அர்த்தத்தோட போட்டுக்கறான்- தான் பியூன்னு காமிச்சுக்கிறதுக்கு.நம்ம டவாலிக்கு ஏது அர்த்தம்.சந்தி கிடையாது, ஜபம் கிடையாது,வேதம் கிடையாது,சாஸ்திரம் கிடையாது.பூணுலையே அறுத்தெறியணும்.இதுக்கு என்ன ஆவணி அவிட்டம்? அப்புறம் தலை ஆவணி, கால் ஆவணி' என்று கல்லூரி ஆசிரியர் படபடக்கிறார்.

இன்னொரு இடம்

பெட்ரூம் விளக்கின் ஒளி அவள் இடக்கன்னத்தில் மஞ்சள் பூசினாற் போல் விழுந்து வலக் கன்னத்தைக் கரியாக்கியிருந்தது.காதில் பூரித்த வைரத்தோடு இடக்கன்னத்தின் மஞ்சளுக்கும் இறங்கித்தழைந்த கரு மயிருக்கும் மேல் லேசாக நீலத்தைத் தெளித்தது.

பொழுது நன்றாக இறங்கிவிட்டது.கடற்கரை மணல் முழுதும் நட்சத்திரங்களைப் போல மனிதர்கள் முளைத்துக் கிடந்தார்கள்.அப்பு எழுந்து அலையண்டை போனான்,ஈர மணல்..நண்டுகள் அவனைக் கண்டதும் அப்படி அப்படியே மணலுக்குள் புதைந்து ஒழிந்தன.முன்னும் பின்னும் நகர்ந்தது போதாதென்று பக்கவாட்டிலும் நகரும் அவற்றைப் பார்த்துத் தலையில் மிதிக்க வேண்டும் போல இருந்தது.வெளிச்சம் நரைத்துக் கொண்டே வருகிறது.

அந்த வெள்ளைப் பாதங்கள், மார்பை விம்மிக்கொண்டு நீர்த் தொட்டியைச் சுற்றி சுற்றி வரும் வெள்ளைப் புறாபோல் இருந்தன.பாதத்திற்கு மேல் குதிரை முகம்,பின் சதையெல்லாம் பிலுபிலுவென்று
மின்னுகிற மயிர்.பெண்களுக்கு பெரும்பாலும் இப்படி இருப்பதில்லை.

இப்படி பல இடங்கள்.இன்றும் படிக்க புதிதாய்..

இப்புத்தகத்தை படிக்காதவர்கள் கண்டிப்பாக படிக்கவும்.

கிடைக்குமிடம்

ஐந்திணைப் பதிப்பகம்
172 பக்கங்கள்..விலை ரூ.90/-(தள்ளுபடி போக 81)

14 comments:

பா.ராஜாராம் said...

ஐயோ டிவிஆர்..

மிக அருமையான பகிர்வு...பதினைந்து வருடங்களுக்கு பிறகு பழைய வாசனை.தி.ஜா.வின் எழுத்துக்களில் பித்து பிடித்து அலைந்த காலம் அது.மரப்பசு வாசித்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.இல்லாவிட்டால் வாசித்து பாருங்கள்..

T.V.Radhakrishnan said...

அன்பின் பா.ரா.,

மரப்பசு, மோகமுள், நளபாகம்,உயிர்த்தேன் இவை அனைத்துமே படித்துள்ளேன்.தவிர தி.ஜா.ரா.,வின் சிறுகதைகள் தொகுப்பும் என்னிடம் இருக்கிறது

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான பதிவு டிவிஆர் சார் ..

வாசிப்பில் நல்ல தீனி இவர்கள் புத்தகங்கள் ..

சுஜாதா , ஜானகி ராமன் , எஸ் ராமகிருஷ்ணன் , ஜெயமோகன்

இராகவன் நைஜிரியா said...

மிக பிரமாதம்.

திஜா அவர்கள் புத்தம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அண்ணே அவரின் செம்பருத்தி நாவலைப் படிச்சு இருக்கீங்களா?

வருண் said...

***நான் தி.ஜானகிராமன் எழுத்தை விரும்பி படிப்பவன்.இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவர் என்னிடமிருந்து 'அம்மா வந்தாள்' புத்தகம் இரவல் வாங்கிச் சென்றார்.இரவல் கொடுத்துவிட்டால் நம்ம ஆட்களிடம் திரும்பி வருமா? மேலும் தமிழனைப் பொறுத்தவரை..இரவல் என்பதிலும் 'இ' இருப்பதால் இலவசம் என்று எண்ணிவிடுகிறார்கள் போலும்.***

TVR:

எனக்கு இதுபோல் நண்பர்களை சுத்தமாகப் பிடிக்காது! இரவல் வாங்கியதை திருப்பிக்கொடுக்கத்தெரியாதவன்லாம் என்ன மனுஷன்? புத்தகத்துடன் அவர்களையும் நட்புவட்டத்தில் இருந்து தூக்கி எறிவதுதான் என் வழக்கம்!

I am a big fan of TJR too :)

கே.ரவிஷங்கர் said...

தி.ஜானகிராமன் சுற்றி நடக்கும் கணங்களின் 1/100 துகள்களையும் ஸ்கான் செய்து எழுதும் திறமை உள்ளவர்.

வர்ணிப்பில் ரிப்பிட்டீஷன் இருக்கவே இருக்காது.

The Great writer.

அக்பர் said...

நல்ல பகிர்வு சார்.

நல்ல வாசகர் நீங்கள்.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஸ்டார்ஜன்

T.V.Radhakrishnan said...

//இராகவன் நைஜிரியா
அண்ணே அவரின் செம்பருத்தி நாவலைப் படிச்சு இருக்கீங்களா?//

அவர் கலெக்சனே என்னிடம் உள்ளது ராகவன்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வருண்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ரவிஷங்கர்

T.V.Radhakrishnan said...

//அக்பர் said...
நல்ல பகிர்வு சார்.

நல்ல வாசகர் நீங்கள்.//

நன்றி அக்பர்

வானம்பாடிகள் said...

சாம் ப்ளட்:))

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்