Monday, January 4, 2010

புத்தகக் கண்காட்சியில் நான்

நேற்று கண்காட்சிக்கு சென்றேன். சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றுள் மணிவாசகர் பதிப்பகத்தில் நான் வாங்கிய ஒரு புத்தகம் பற்றி பதிவர்களுக்கு உடனே சொல்ல வேண்டும் என எண்ணியதால் இப்பதிவு.

புத்தகத்தின் பெயர்..உவமை உலா

இதன் ஆசிரியர் முனைவர் பட்டத்திற்காக தேர்ந்தெடுத்த தலைப்பு 'புதுக்கவிதையில் உவமைகள்'..புதுக்கவிதை பற்றி மட்டுமல்ல..பல கவிஞர்கள்/புலவர்கள் கையாண்ட உவமைகள் பற்றி படிக்கப் படிக்க திகட்டாத அளவு கொடுத்திருக்கிறார்.

பாவேந்தர் தன் படைப்புகளில் 900 உவமைகளுக்கு மேல் கையாண்டுள்ளாராம்.புத்தகத்தில் பாரதி முதல் மேத்தா வரை கையாண்டுள்ள பல உவமைகளை எழுதியுள்ளார் ஆசிரியர்.

நா.காமராசனின் உவமை நம்மை வியக்க வைக்கிறது.

கலை அம்சமுள்ள
பிரச்சாரம் போல
காதில் விழும் அருவி ஓசை

என்கிறார்..'பொருளாழத்தோடு, இயற்கையாக நல்லமுறையில் நடத்தப்படும் பிரச்சாரம் அருவு விழும் ஓசை போன்றதாம்.

கவிக்கோ அப்துல் ரகுமான் கவிதைகளிலிருந்து ஒரு உவமை..

வெளியே செல்லும் போதும்
நத்தையைப் போல
வீட்டையும்
சுமந்து கொண்டு தான்
செல்லுகிறீர்கள்

என வீடு என்ற கவிதையில் இப்படி மாறுபட்ட உவமையைக் கையாண்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து உவமை ஒன்றை பாருங்கள்

காவிரி பாய்ந்து
அன்னம் விளையுமா?
இல்லை
காவிரி அன்னம் போல்
காணாமல் போகுமா?

இதில் முதல் அன்னம் நெல்லையும்..இரண்டாம் அன்னம் அன்னப் பறவையையும் குறிக்கும்.

புதுக்கவிதை உலகின் 'உவமைக் கவிஞர்' என அறியப்பட்டவர் ஆர்.எஸ்.மூர்த்தி..அவரின் உவமை ஒன்று..

'இருட்டைப் பிழிந்து
எடுத்து வைத்தது போல
படுத்திருந்தது ஆட்டுக்குட்டி
பாதையோரம்
காலைநேரம்'

இப்படி..இந்நூலாசிரியர் ..பல கவிஞர்கள் கையாண்டுள்ள உவமைகள் பற்றி(நூற்றுக்கும் மேல் இருக்கும்) கூறியுள்ளார்.இலக்கிய ஆர்வலர்களும்..தமிழின் பால் ஆர்வம் கொண்டோர் அனைவரும்..இந்நூலைக் கண்டிப்பாக படிக்க வேண்டும் ..அதனாலேயே..பாரதி,பாரதிதாசன் பற்றி எல்லாம் நான் எழுதவில்லை.

'உவமைப்போல ஆச்சரியம் உலகின் மிசை இல்லையடா' என்கிறார்..புத்தகத்திற்கு அணிந்துரை வழங்கியுள்ல இரா.மோகன்.

புத்தக விவரம்-
பெயர் - உவமை உலா
ஆசிரியர்-செ.ரவிசங்கர்
கிடைக்குமிடம்-மணிவாசகர் பதிப்பக ஸ்டால்
புத்தகக் கண்காட்சி
192 பக்கங்கள் விலை ரூபாய் அறுபது மட்டுமே..(கண்காட்சியில் தள்ளுபடி போக 54 மட்டுமே

14 comments:

சங்கர் said...

நல்லதொரு பரிந்துரை, நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சங்கர்

Ashok D said...

நல்ல பதிவு... புத்தகம் வாங்கும் அனைவரும் நல்ல புத்தகங்களை பற்றி பதிவில் போடுங்கள்.. நன்றி

பா.ராஜாராம் said...

நல்ல பகிர்வு டிவிஆர்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி D.R.Ashok

T.V.ராதாகிருஷ்ணன் said...

// பா.ராஜாராம் said...
நல்ல பகிர்வு டிவிஆர்!//

நன்றி பா.ரா.

சிநேகிதன் அக்பர் said...

நல்ல பகிர்வு சார்.

வாங்கிய மற்ற புத்தகங்கள் பற்றியும் எழுதலாமே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி அக்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி henry J

பூங்குன்றன்.வே said...

இந்த வருஷ புத்தக கண்காட்சியை மிஸ் பண்ணிட்டேன்னு நினைச்சேன். ஆனா உங்க இடுகையை படித்ததும் மனசு நிறைந்து விட்டது பாஸ்.

கடைக்குட்டி said...

எவ்வளவோ பரிந்திரைகள் படிச்சு இருந்தாலும்.. இந்த புத்தகம் உண்மையிலேயே படிக்கணும் போல இருக்கு..

நம்ம மொழியோட அழக பாருங்களேன்..

சூப்பர்...

(அய்யோ ஸாரி!! அருமை..:-)

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூங்குன்றன்.வே said...
இந்த வருஷ புத்தக கண்காட்சியை மிஸ் பண்ணிட்டேன்னு நினைச்சேன். ஆனா உங்க இடுகையை படித்ததும் மனசு நிறைந்து விட்டது பாஸ்.//

வருகைக்கு நன்றி பூங்குன்றன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//குப்பன்.யாஹூ said...
Thanks for sharing//

வருகைக்கு நன்றி குப்பன்.யாஹூ

T.V.ராதாகிருஷ்ணன் said...

//கடைக்குட்டி said...
எவ்வளவோ பரிந்திரைகள் படிச்சு இருந்தாலும்.. இந்த புத்தகம் உண்மையிலேயே படிக்கணும் போல இருக்கு..

நம்ம மொழியோட அழக பாருங்களேன்..

சூப்பர்...

(அய்யோ ஸாரி!! அருமை..:-)//

வருகைக்கு நன்றி கடைக்குட்டி