Monday, January 18, 2010

நான் அகங்காரம் கொண்டவனா?

நான் அகங்காரம் கொண்டவனா? என்பதைச் சொல்லுமுன்..அகங்காரம் என்றால் என்ன..என்று பார்ப்போம்..

அகங்காரம் நல்லதல்ல..அகங்காரம் இயற்கைத் தன்மையிலிருந்து மாறு பட்டது.எல்லோரிடமும் சகஜமாகப் பழகாமல்..நெருக்கமாக உணராமல்..மற்றவர்களிடமிருந்து நான் வித்தியாசமானவன் என்று எண்ணுவதே அகங்காரம்.

நான் மற்றவர்களைவிட உயர்ந்தவன்..அடுத்தவரும் நம்மில் ஒருவர் என்று உணராததே அகங்காரம்.

அகங்காரம் பிடித்தவன்..அன்பு,நட்பு எல்லாம் விரைவில் காணாமல் போய்விடும்.உயர்ந்தவர்..தாழ்ந்தவர் என எண்ணாது அனைவரையும் நம்மைப் போல எண்ணினாலே அகங்காரம் நம்மை விட்டு அகன்று விடும்..

நான் இந்த இடுகைக்கு இப்படிப்பட்ட தலைப்பு கொடுத்ததற்குக் காரணம்..

'கவிதை என்றால் இது கவிதை' என்ற என் இடுகைக்கு மணிகண்டனிடமிருந்து வந்த பின்னூட்டமே..அந்த பின்னூட்டம் வருமாறு

''மணிகண்டன் said

//என்ன இப்படி ஒரு தலைப்பு..கவிஞருக்கே உரிய அகங்காரமா...//"

கண்ணதாசனின் பாடல் வரிகள் ஒன்று..'தெய்வம் என்றால் அது தெய்வம்..வெறும் சிலை என்றால் அது சிலை தான்'

அதை நினைத்தே..'கவிதை என்றால் இது கவிதை..இல்லை என்றால் இது (கவிதை) இல்லை" என்று இத் தலைப்பைக் கொடுத்தேன்.

நான் எண்ணியபடியே பிறரும் எண்ணுவர் என்று எண்ணியது என் தவறே!!

19 comments:

ஈரோடு கதிர் said...

உங்கள் விளக்கம் அருமை...

ஆனாலும் கவிதையின் தலைப்பு அகங்காரமாக தெரியவில்லை

vasu balaji said...

உங்கள் எழுத்தைப் படிப்பவர்களுக்கு தெரியுமே டி.வி.ஆர். எதற்கு விளக்கம்? எப்படியோ நீங்கள் விளக்கினாற் போலத்தான் நான் புரிந்துக் கொண்டேன்.:)

பின்னோக்கி said...

தவறான புரிதல்கள் எழுத்தில் சகஜம். அதனால் தான் மின்னஞ்சல் மற்றும் பல இடங்களில் :-) குறியீடுகளை உபயோகிக்கிறோம்.

goma said...

அகங்காரமாகத் தெரியவில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
கதிர்
வானம்பாடிகள்
பின்னோக்கி
goma

சிநேகிதன் அக்பர் said...

சார் உங்கள் விளக்கம் சரிதான்.

இதுவரை உங்கள் எழுத்தில் நான் அதை பார்த்ததில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி அக்பர்

kandathai sollugiren said...

அஹங்காரம் என்பது சில நேரங்களில் அவசியமானதாக இருக்கிறது. இல்லாவிட்டால் இப்படிதான் சில பேர் தப்பாக புரிந்து கொண்டு நம்மை கேள்வி கேட்பார்கள். புரிதல் என்பது மணிகண்டனுக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல. ஆனால் உங்கள் விளக்கம் மிகவும் நன்றாக இருந்தது. தொடரட்டும் உங்கள் பணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//kandathai sollugiren said...
புரிதல் என்பது மணிகண்டனுக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல.//

மணிகண்டன் எனது நீண்ட நாள் ம்ம்ம்..நண்பர் என்பதைவிட என் மீது அன்பு கொண்டவர்..ஆகவே அவர் விளையாட்டாகத்தான் சொன்னார்.அகங்காரம் பற்றி நான் பதிவிட அவர் பின்னூட்டத்தை உபயோகித்துக் கொண்டேன்.அவ்வளவே

மணிகண்டன் said...

:)-

**
புரிதல் என்பது மணிகண்டனுக்கு கொஞ்சம் லேட் ஆகும் போல
**

ரொம்ப லேட் ஆகும் :)-

//உங்க கவிதையை படிச்ச தமிழ்மணம் கூட நிலைகுலைஞ்சி ஒரே இடத்துல நிக்குது. அது என்ன இப்படி ஒரு தலைப்பு ! கவிஞருக்கே உரிய அகங்காரமா:)- எனக்கு எரி-கல்லறை ரொம்ப பிடிச்சிருந்தது//

இந்த கமெண்ட் உங்களை கடுப்பு ஏத்தி இருந்தா மன்னிச்சுடுங்க.

அடுத்தது அகங்காரம் குறித்தான உங்கள் விளக்கமும் முழுவதும் நெகடிவ் ஆக இருக்கு.
ஒரு ஆளுமையிடம் காணப்படும் அகங்காரம் பலவேளைகளில் ரசிக்கக்கூடியதாக எனக்கு படுகிறது.
அகம்பாவம் வேறு / அகங்காரம் வேறு :)

அந்த கமெண்ட் just like that எழுதியது. அதுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் எழுத வச்சிட்டீங்களே :)- இருங்க. அடுத்த கவிதை எழுதுங்க. வச்சிக்கறேன்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
அடுத்த கவிதை எழுதுங்க. வச்சிக்கறேன்.//

அடுத்த பதிவிற்கு மேட்டர் கிடைச்சாச்சு :-))

மணிகண்டன் said...

நல்லா மேட்டர் தேடறாங்கைய்யா :)-

நசரேயன் said...

என்னய்யா நடக்குது

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
என்னய்யா நடக்குது//

என்னவோ நடக்குது
மர்மமாய் இருக்குது
ஒன்னுமே புரியல
உலகத்துலே

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
நல்லா மேட்டர் தேடறாங்கைய்யா :)-//

:-)))

ஜோ/Joe said...

//நல்லா மேட்டர் தேடறாங்கைய்யா :)-
//

:)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி joe

Radhakrishnan said...

அகங்காரமா? வார்த்தை அலங்காரம் அல்லவா அது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வெ.இராதாகிருஷ்ணன் said...
அகங்காரமா? வார்த்தை அலங்காரம் அல்லவா அது.//

நன்றி வெ.இராதாகிருஷ்ணன்