Friday, January 8, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(8-1-10)

சிவப்பு மிளகாய் சாப்பாட்டில் சேர்க்க பலரும் பயப்படுகிறார்கள்.ஆனால் அளவோடு சிவப்பு மிளகாய் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி,தொற்று நோய் எதிர்ப்பு,வைரஸ் எதிர்ப்பு என பல வகைகளில் பயன் விளைவிப்பதாக மருத்துவ ரீதியாக நிரூபணம் ஆகியுள்ளது.

2)பெண்ணின் சினைப்பையில் காணப்படுவது X குரோமோசோம்கள்..ஆணின் விந்தில் X மற்றும் Y குரோமோசோம்கள் காணப்படுகின்றன.ஆணிடமிருந்து X குரோமோசோம்கள் பெண்ணின் சினைப்பையை அடையுமானால் மகளும் Y குரோமோசோம்கள் அடையுமானால் மகனும் பிறக்கின்றனர்.இது தெரிந்தும்..சமுதாயத்தில் பெண் பிறந்தால் பெண்ணையே குற்றம் சொல்வது நீடித்துத்தான் வருகிறது.

3) ஆதி சங்கரர்,சுபாஷ் சந்திர போஸ்,விவேகானந்தர்,பாரதியார்,கணித மேதை ராமானுஜம்,கல்கி,தேவன்,புதுமைப்பித்தன்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்,கண்ணதாசன்,ராஜிவ் காந்தி ஆகியோர் அனைவருமே முதுமையடையும் முன்னரே அமரர் ஆனவர்கள்.

4)குழந்தை அழுகின்றது என்கிறோம்.அது அழுதாலும் அதன் கண்களில் கண்ணீர் வருவதில்லை.சில மெகாசீரியல் நாயகிகளுக்கு கிளிசரின் போட்டாலே கண்ணீர் வரும்.இப்போது பிரச்னை அதுவல்ல.குழந்தை பிறந்து மூன்று மாதங்களுக்கு பின்னர்தான் கண்ணீர் உற்பத்தியாகிறது அதாவது tear ducts

5)நல்லவர்கள் வெகு சிலரே! தீயவர்களும் வெகு சிலரே!! பெரும்பாலானவர்கள் இவை இரண்டுக்கும் நடுவில்தான் இருக்கிறார்கள்.

6)ஒரு ஜோக்

என் மனைவி இன்னமும் பழசை நினைச்சே அழுதுகிட்டு இருக்கா
என்ன சொல்றீங்க
என்ன இருந்தாலும் கோலங்கள் அபிக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாதுன்னு அழறா.

34 comments:

வரதராஜலு .பூ said...

ஜோக் ஓ.கே.

புதுகைத் தென்றல் said...

படிச்சிட்டேன்

க.பாலாசி said...

ரெண்டாவதும், நாலாவதும் நல்ல மேட்டர்...

வானம்பாடிகள் said...

ஜோக் அசத்தல் எப்பவும் போல். மற்றவை சுவாரசியமான தகவல்கள். நன்றி சார்.

பாலாஜி said...

அனைத்தும் அருமை

பின்னோக்கி said...

அருமையான தகவல்கள்.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி வரதராஜலு .பூ

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி புதுகைத் தென்றல்

T.V.Radhakrishnan said...

//க.பாலாசி said...
ரெண்டாவதும், நாலாவதும் நல்ல மேட்டர்...//

நன்றி பாலாசி

T.V.Radhakrishnan said...

//வானம்பாடிகள் said...
ஜோக் அசத்தல் எப்பவும் போல். மற்றவை சுவாரசியமான தகவல்கள். நன்றி சார்.//

நன்றி வானம்பாடிகள்

T.V.Radhakrishnan said...

//பாலாஜி said...
அனைத்தும் அருமை//

நன்றி பாலாஜி

T.V.Radhakrishnan said...

//பின்னோக்கி said...
அருமையான தகவல்கள்.//

நன்றி பின்னோக்கி

அக்னி பார்வை said...

///என் மனைவி இன்னமும் பழசை நினைச்சே அழுதுகிட்டு இருக்கா
என்ன சொல்றீங்க
என்ன இருந்தாலும் கோலங்கள் அபிக்கு இந்த நிலை வந்திருக்கக்கூடாதுன்னு அழறா. ////


super thala

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

டி வி ஆர் சார் , மன்னிக்கவும் ,

// ஆணிடமிருந்து X குரோமோசோம்கள் பெண்ணின் சினைப்பையை அடையுமானால் மகனும் Y குரோமோசோம்கள் அடையுமானால் மகளும் பிறக்கின்றனர். ///

கொஞ்சம் திருத்தவும் ,

ஆணிடமிருந்து X குரோமோசோம்கள் பெண்ணின் சினைப்பையை அடையுமானால் மகளும் Y குரோமோசோம்கள் அடையுமானால் மகனும் பிறக்கின்றனர்.

நல்ல சுண்டல் ருசி .

மந்திரன் said...

சுண்டல் கொஞ்சம் பழசா இருக்கோ ..

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி அக்னி பார்வை

T.V.Radhakrishnan said...

வருகைக்கும்..பிழையை சுட்டிக்காட்டியமைக்கும் நன்றி Starjan.பிழை திருத்தப்பட்டது.

T.V.Radhakrishnan said...

//மந்திரன் said...
சுண்டல் கொஞ்சம் பழசா இருக்கோ ..//

அப்படியா...

henry J said...

Burj Dubai opening ceremony Photo Gallery
"Burj" is Arabic for "Tower" World Wonder Burj Dubai Photo Gallery

D.R.Ashok said...

என்னை கவர்ந்தது ஐந்தாவது பாயிண்ட் :)

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி henry

T.V.Radhakrishnan said...

//D.R.Ashok said...
என்னை கவர்ந்தது ஐந்தாவது பாயிண்ட் :)//


நன்றி D R Ashok

அக்பர் said...

எல்லா பாயிண்டுகளும் சூப்பர் சார்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

துளசி டீச்சர் ( துளசி கோபால் ) வலைப்பதிவோட லிங் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன் .

நசரேயன் said...

எல்லாமே நல்லா இருக்கு

T.V.Radhakrishnan said...

//அக்பர் said...
எல்லா பாயிண்டுகளும் சூப்பர் சார்.//

நன்றி அக்பர்

T.V.Radhakrishnan said...

//நசரேயன் said...
எல்லாமே நல்லா இருக்கு//

நன்றி நசரேயன்

T.V.Radhakrishnan said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
துளசி டீச்சர் ( துளசி கோபால் ) வலைப்பதிவோட லிங் இருந்தா கொஞ்சம் கொடுங்களேன் .//

http://thulasidhalam.blogspot.com/

பிரபாகர் said...

மிளகாய், குழந்தைகள் கண்ணீர் என தகவல்களும், நகைச்சுவையும் அருமை அய்யா!

பிரபாகர்.

cheena (சீனா) said...

மொளகால ஆரம்பிச்சி கோலங்க வரை எல்லா தகவல்களுமே ( ?? ) நல்லாருக்கு - x y குரொம்மோசோம் உட்பட

நல்வாழ்த்துகள் டிவிஆர்

அரசூரான் said...

//5)நல்லவர்கள் வெகு சிலரே! தீயவர்களும் வெகு சிலரே!! பெரும்பாலானவர்கள் இவை இரண்டுக்கும் நடுவில்தான் இருக்கிறார்கள்.//
அவ்வ்வ்வ்... அதான் ரொம்பபேர ரெண்டும்கெட்டான் அப்படின்னு சொல்லுறாங்களா?

T.V.Radhakrishnan said...

//பிரபாகர் said...
மிளகாய், குழந்தைகள் கண்ணீர் என தகவல்களும், நகைச்சுவையும் அருமை அய்யா!

பிரபாகர்.//

வருகைக்கு நன்றி பிரபாகர்

T.V.Radhakrishnan said...

//cheena (சீனா) said...
மொளகால ஆரம்பிச்சி கோலங்க வரை எல்லா தகவல்களுமே ( ?? ) நல்லாருக்கு - x y குரொம்மோசோம் உட்பட

நல்வாழ்த்துகள் டிவிஆர்//

நன்றி சார்.

T.V.Radhakrishnan said...

///அரசூரான் said...
//5)நல்லவர்கள் வெகு சிலரே! தீயவர்களும் வெகு சிலரே!! பெரும்பாலானவர்கள் இவை இரண்டுக்கும் நடுவில்தான் இருக்கிறார்கள்.//
அவ்வ்வ்வ்... அதான் ரொம்பபேர ரெண்டும்கெட்டான் அப்படின்னு சொல்லுறாங்களா?///

:-))))