திருப்பதி வெங்கடாசலபதிக்கு விலை மதிப்பற்ற 36 வகை தங்க, வைடூரிய,வைர ஆபரணங்கள் சொந்தமாக இருக்கிறதாம்..
2)வறியவர்,இயலாதவர்,முற்றிலும் ஆதரவு நாடுவோர் வடிவங்களில் நான் இறைவனைக் காண்கிறேன்.அவர்களுக்கு உதவுவதுதான், இறைவனால் படைக்கப் பட்ட ஒவ்வொரு உயிரிடத்திலும் அன்பு செலுத்துவது தான் நான் கடைபிடிக்கும் உண்மையான கடவுள் வழிபாடு ..என்கிறார் நடிகர் சிவகுமார்
3)கலைஞர் அரசியலில் இருந்து ஓய்வு பெறப்போவதாகக் கூறியது பற்றிக் கேட்டபோது..அழகிரி ஒரு பேட்டியில் கூறியது 'கலைஞரின் பணிக்கு என்றைக்குமே ஓய்வு கொடுக்க முடியாது.எல்லாவற்றையும்
விட்டு அவர் விலக நினைத்தாலும் கூட காத்திருக்கும் கடமைகள் அவரை விலக விடாது' என்றுள்ளார்.(காத்திருக்கும் கடமைகள் என்று எதைச் சொல்கிறார்)
4)இசை வரலாற்றில் புரட்சி செய்து..சிம்பொனி,கீர்த்தனைகள் எழுதி..இசையமைப்பாளர்களின் இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு இதுவரை மத்திய அரசு எந்த விருதும் அளித்து கௌரவிக்கவில்லை.
5)முரண்பாடு..வேறுபாடு இரண்டிற்கும் ஒரே அர்த்தமா? என்றால் இல்லை என்று தெரிகிறது.
முரண்பாடு என்பது தண்ணீரும்..எண்ணெய்யும் கலந்தது மாதிரி சேராது..வேறுபாடு என்பது தண்ணீரும்..பாலும் போல..சேர்ந்து விடும்...இப்படி விளக்கம் சொன்னவர் கலைஞர்
6)நண்பன் எனப்படுபவன் யார்? நம்மிடம் எந்தவித எதிர்ப்பார்ப்பும் இன்றி பழகக்கூடியன் தான் நண்பன்
7)ஒரு ஜோக்
நடிகர்-தலைவரே! இன்று என்னோட படம் நூறாவது நாள் கொண்டாட்டம்..நீங்க அவசியம் விழாவிலே கலந்துக் கொள்ளணும்
தலைவர்- எந்த தியேட்டர்ல 100 நாள் ஓடியிருக்கு
நடிகர்-என் 'ஹோம்' தியேட்டர்ல
28 comments:
முரண்பாடு..வேறுபாடு இரண்டிற்கும் ஒரே அர்த்தமா? என்றால் இல்லை என்று தெரிகிறது.
முரண்பாடு என்பது தண்ணீரும்..எண்ணெய்யும் கலந்தது மாதிரி சேராது..வேறுபாடு என்பது தண்ணீரும்..பாலும் போல..சேர்ந்து விடும்...இப்படி விளக்கம் சொன்னவர் கலைஞர் //
:))
நல்ல பகிர்வு
:))
\\நடிகர்-என் 'ஹோம்' தியேட்டர்ல \\
:-)))))
காத்திருக்கும் கடமை - தமிழ்நாட்டை 3 பிரிக்குறதான்னு தெரியலையே.
ஜோக் சூப்பர் - இன்னைக்கு காலைல தான் பேராண்மை பட 100 வது நாள் போஸ்டர் பார்த்தேன். சிட்டியில் 2 தியேட்டர்களில் காலை காட்சி ஓடுகிறது.
ஒரே நேரத்துல வலைச்சரத்திலும் எழுதுறிங்க....இங்கேயும் எழுதுறிங்க....
எப்புடி ?
//5)முரண்பாடு..வேறுபாடு இரண்டிற்கும் ஒரே அர்த்தமா? என்றால் இல்லை என்று தெரிகிறது.
முரண்பாடு என்பது தண்ணீரும்..எண்ணெய்யும் கலந்தது மாதிரி சேராது..வேறுபாடு என்பது தண்ணீரும்..பாலும் போல..சேர்ந்து விடும்...இப்படி விளக்கம் சொன்னவர் கலைஞர்//
:) கட்சிகள் ஒரு கூட்டணியில் இருக்கும் போதான பேச்சுக்கும், இல்லாத போது இருக்கும் பேச்சுக்கும் உள்ள இடைவெளிகள்னு சொல்லி இருக்கலாம்
//
நடிகர்-தலைவரே! இன்று என்னோட படம் நூறாவது நாள் கொண்டாட்டம்..நீங்க அவசியம் விழாவிலே கலந்துக் கொள்ளணும்
தலைவர்- எந்த தியேட்டர்ல 100 நாள் ஓடியிருக்கு
நடிகர்-என் 'ஹோம்' தியேட்டர்ல
//
nachunu iruku
காத்திருக்கும் கடமை - நிச்சயம் ஈழதமிழ்ர் பிரச்சனை, விலைவாசி உயர்வு போன்ற சப்ப விஷயங்கள் கிடையாது.
ஜோக் - நெஜமாவே சூப்பர்
100 ஹிட்ஸ்
தலைவரே இந்த வகைல என்கிட்டே ஒரு ஜோக் இருக்கு. படிங்க
நாடக சேவா ரத்னா பட்டம் வாங்கிய நடிகர் சொன்னார் " டைட்டில்ல என் பேரை நாடக சேவா ரத்னான்னு போடக்கூடாதா?"
டைரக்டர் ஆயிரம் அர்த்தங்களுடன் சொன்னார் " நீங்கல்லாம் நாடக சேவா பண்றீங்களா?
//காத்திருக்கும் கடமைகள் என்று எதைச் சொல்கிறார்//
உங்களுக்கு தெரியாதா ஐயா
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் - சுவைங்க :)
வருகைக்கு நன்றி பலா பட்டறை
//ஆரூரன் விசுவநாதன் said...
நல்ல பகிர்வு//
நன்றி ஆரூரன் விசுவநாதன்
// வானம்பாடிகள் said...
:))//
வருகைக்கு நன்றி வானம்பாடிகள்
//முரளிகண்ணன் said...
\\நடிகர்-என் 'ஹோம்' தியேட்டர்ல \\
:-)))))//
நன்றி முரளி
//பின்னோக்கி said...
காத்திருக்கும் கடமை - தமிழ்நாட்டை 3 பிரிக்குறதான்னு தெரியலையே.
ஜோக் சூப்பர் - இன்னைக்கு காலைல தான் பேராண்மை பட 100 வது நாள் போஸ்டர் பார்த்தேன். சிட்டியில் 2 தியேட்டர்களில் காலை காட்சி ஓடுகிறது.//
நன்றி பின்னோக்கி
//கோவி.கண்ணன் said...
:) கட்சிகள் ஒரு கூட்டணியில் இருக்கும் போதான பேச்சுக்கும், இல்லாத போது இருக்கும் பேச்சுக்கும் உள்ள இடைவெளிகள்னு சொல்லி இருக்கலாம்//
வருகைக்கு நன்றி கோவி.
//கோவி.கண்ணன் said...
ஒரே நேரத்துல வலைச்சரத்திலும் எழுதுறிங்க....இங்கேயும் எழுதுறிங்க....
எப்புடி ?//
குருவே இப்படிக் கேட்டா எப்படி :))
வருகைக்கு நன்றி ரமேஷ் கார்த்திகேயன்
//வரதராஜலு .பூ said...
ஜோக் - நெஜமாவே சூப்பர்//
நன்றி வரதராஜலு
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
100 ஹிட்ஸ்//
:-))))
வருகைக்கு நன்றி kandathai sollugiren
//அத்திரி said...
//காத்திருக்கும் கடமைகள் என்று எதைச் சொல்கிறார்//
உங்களுக்கு தெரியாதா ஐயா//
:-)))
//D.R.Ashok said...
தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் - சுவைங்க :)//
நன்றி Ashok
சுண்டல் சூப்பரா இருக்கு. முரண்பாடு டேஸ்ட்ட இன்னும் கூட்டிடுச்சு.
வருகைக்கு நன்றி
S.A. நவாஸுதீன்
Post a Comment