
அன்பு உடன்பிறப்பே
தமிழன் இளையராஜாவிற்கு பத்மபூஷண் விருது கிடைத்துள்ள செய்தியை நீ அறிந்திருப்பாய்.ஆனால் அதன் பிண்ணனி என்ன வென்று உனக்கு சொல்ல வேண்டியது என் கடமை என்பதால் இந்த மடலை எழுதிகின்றேன்.
என் உடல்நிலை இதற்கு இடம் கொடுக்கவில்லை..உண்மையைச் சொல்வதானால்..இன்று படுக்கையைவிட்டுக் கூட என்னால் எழுந்துக் கொள்ளமுடியவில்லை.அளவிற்கு அதிகமாக ஐந்து மணி நேரம் அதிகமாகவே உறங்கிவிட்டேன்.ஆனாலும்..இளையராஜா விருது விஷயத்தில் வரலாற்றுப் பிழை ஏற்பட்டுவிடக் கூடாதே என்றே..அதுவும் ஒரு தமிழனுக்கு விருது என்ற போது உடல்நிலையையும் பாராது இம்மடல் வரைந்தேன்.
என் கண்மணியே...அவருக்கு விருது வழங்கக்கோரி..32 கடிதங்கள் குடியரசுத் தலைவர்க்கு எழுதியுள்ளேன்..ஏன் பிரதமருக்குக் கூட 40 தந்திகள் அனுப்பியுள்ளேன்.என் வேண்டுகோளை..அன்னக்கிளி வந்த நாள் முதல் விடாது கேட்டு வருகிறேன்.என் மௌன அழுகையை புரிந்துக்கொண்டு..என் வேண்டுகோளைகுடியரசுத் தலைவர் ஏற்று..தம்பி இசைஞானி இளையராஜாவிற்கு இவ்வாண்டு பத்மபூஷண் விருதை வழங்கியுள்ளார்.
எதிர்க்கட்சியினர் அவர்களால் தான் இது நடந்தது என்று சொல்லக்கூடும்..ஆனால் உண்மையை நீயும்..நானும் மட்டுமே அறிவோம்.
எதிர்க்கட்சியினருக்கு ஒன்று சொல்லிக் கொள்ள ஆசைப்படுகிறேன்..என் தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 22-1-10 அன்றைய இடுகையைப் பாருங்கள்..அதில்;இளையாராஜாவிற்கு விருது வழங்கப்படவில்லை என்ற என் ஆதங்கத்தைத் தெரிவித்திருந்தேன்..அது குடியரசுத் தலைவர் காதிற்கு எட்டியிருக்கிறது.
அதில் இப்படி நான் சொல்லியதை அறிந்த குடியரசுத் தலைவர் உடனே இளையராஜாவிற்கு இவ்வாண்டு விருதை வழங்கியுள்ளார்.
இத்துடன் சேர்த்து தம்பி ரஹ்மானிற்கும் இவ்விருது கிடைத்ததற்கு என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.ஆஸ்கார் தம்பிக்கு கிடைத்த போதுக் கூட நான் இவ்வளவு மகிழ்ச்சி அடையவில்லை.இது நமது சமத்துவ கொள்கையை உணர்த்துவதை உண்மை அறிந்தவர் உணர்வர்.
டிஸ்கி- நான் அரசியலில் இருந்தால் இப்படியெல்லாம் சொல்லியிருப்பேன்..அதற்கு வழியில்லாமல் போய் விட்டது.
32 comments:
ஆமாம் ஆமாம் நீங்கள் அரசியலில் இருந்திருந்தால் ,எனக்குக் கூட ஹாஸ்ய விருதுக்கு பரிந்துரை செய்திருப்பீர்கள்..
திறமை உள்ளவர்களுக்கு பரிந்துறை செய்து உள்ளீர்கள்...
உங்கள் பரிந்துறை சரியானதே...
arasiyal gnani neengal
என் அப்பா எனக்கு 1971ல் கொடுத்த 'பத்ம' விருதைப் பாருங்களேன்
உங்க வீட்டுப்பக்கம் ஆட்டோ ஸ்டாண்டு இல்லையா ?
:)
நீங்க அரசியலில் இல்லேன்னாலும் உங்க இடத்தில் “அவரை” வச்சு பார்த்துக்கிறோம் (படிச்சிக்கிறோம்) சார்.
உண்மையான கடிதம்னு நினைத்துவிட்டேன், ரசித்தேன். :)
முக்கியமான ஒரு வரி மிஸ்ஸிங் :)
ஐயா நீங்க பேசாம அரசியல்ல சேர்ந்திருக்கலாம். குறைந்தபட்சம் ரெண்டாவது இடம் கண்டிப்பா கிடைத்திருக்கும்
ஓட்டுக்கு எவ்ளோன்னு முடிவு பண்ணி வைங்க, பதிவுலகத்துல ஒரு தேர்தல் ஏற்பாடு பண்ணிடுவோம்..::)))))))
வருகைக்கு நன்றி
goma
வருகைக்கு நன்றி Sangkavi
//SUREஷ் (பழனியிலிருந்து) said...
arasiyal gnani neengal//
நன்றி SUREஷ்
//சகாதேவன் said...
என் அப்பா எனக்கு 1971ல் கொடுத்த 'பத்ம' விருதைப் பாருங்களேன்//
:-)))
//கோவி.கண்ணன் said...
உங்க வீட்டுப்பக்கம் ஆட்டோ ஸ்டாண்டு இல்லையா ?//
உங்களுக்குத் தெரியாததா..
//S.A. நவாஸுதீன் said...
நீங்க அரசியலில் இல்லேன்னாலும் உங்க இடத்தில் “அவரை” வச்சு பார்த்துக்கிறோம் (படிச்சிக்கிறோம்) சார்.//
:-)))
//வெ.இராதாகிருஷ்ணன் said...
உண்மையான கடிதம்னு நினைத்துவிட்டேன், ரசித்தேன். :)//
நன்றி வெ.இராதாகிருஷ்ணன்
//பின்னோக்கி said...
முக்கியமான ஒரு வரி மிஸ்ஸிங் :)//
அந்த வரியை அளவிற்கு அதிகமாக உபயோகித்து வெறுப்பு வந்துவிட்டது.
//அத்திரி said...
ஐயா நீங்க பேசாம அரசியல்ல சேர்ந்திருக்கலாம். குறைந்தபட்சம் ரெண்டாவது இடம் கண்டிப்பா கிடைத்திருக்கும்//
நன்றி அத்திரி
//பலா பட்டறை said...
ஓட்டுக்கு எவ்ளோன்னு முடிவு பண்ணி வைங்க, பதிவுலகத்துல ஒரு தேர்தல் ஏற்பாடு பண்ணிடுவோம்..::)))))))//
:-)))
சிரித்து ரசித்தேன்.
நன்றி Doctor
இத்துடன் சேர்த்து தம்பி ரஹ்மானிற்கும்//
"sirupanmai inathai serntha" missing.
நானும் இப்படித்தான் சொல்லி இருப்பேன்
// குடுகுடுப்பை said...
இத்துடன் சேர்த்து தம்பி ரஹ்மானிற்கும்//
"sirupanmai inathai serntha" missing.//
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை
//நசரேயன் said...
நானும் இப்படித்தான் சொல்லி இருப்பேன்//
வருகைக்கு நன்றி நசரேயன்
எங்க ரூம் போட்டிருக்கீங்கன்னு சொன்னா நாங்களும் கூட வந்திருந்து யோசிப்பம்ல!
//மாயாவி said...
எங்க ரூம் போட்டிருக்கீங்கன்னு சொன்னா நாங்களும் கூட வந்திருந்து யோசிப்பம்ல!//
வருகைக்கு நன்றி மாயாவி
கலக்கல்
நன்றி மோகன் குமார்
:-))
வருகைக்கு நன்றி இயற்கை
Post a Comment