Wednesday, January 6, 2010

புத்தகக் காட்சியில் நான் - 3

புத்தகக் காட்சிச் செல்வோருக்கு சில தகவல்கள்..

பச்சையப்பன் கல்லூரியை ஒட்டி..நடைபாதைக் கடைகளை தவறவிடாதீர்கள்.நீங்கள் அதிர்ஷ்டசாலியானால் சில அருமையான புத்தகங்கள் கிடைக்கக் கூடும்..அப்படி நான் வாங்கிய சில புத்தகங்கள்..

சாகித்திய அகாதமி விருது பெற்ற கு.அழகிரிசாமியின் அன்பளிப்பு என்ற சிறுகதை தொகுப்பு

மூன்றாவது கை..கிருஷ்ணாவின் மூன்று குறுநாவல்கள்..அமரர் ராஜிவ் காந்தி நினைவு பரிசுப் போட்டியில் பரிசு பெற்ற ஒரு நாவல்..அடுத்தது இலக்கியப்பீடம் பரிசு பெற்ற நாவல்..

க.நா.சுப்ரமண்யத்தின் பொய்த் தேவு என்னும் சிறுகதை தொகுப்பு

ஒவ்வொன்றும் பத்து ரூபாய்க்கு கிடைத்தது.

அடுத்து..நாட்டுடமை ஆக்கப்பட்ட பின் நா.பார்த்தசாரதி (நா.பா.,மணிவண்ணன்) யின் படைப்புகள் குறைந்த விலையில் ஸ்ரீ இந்து பப்ளிகேசன்ஸ் வெளியிட்டுள்ளது.பொன் விலங்கு..குறிஞ்சி மலர்,சமுதாய வீதி,மணிபல்லவம் போன்ற பொக்கிஷங்கள் குறைந்த விலைக்குக் கிடைக்கின்றன.உதாரணம்..குறிஞ்சி மலர் புத்தகம் தள்ளுபடி போக 72 ரூபாய்.

கண்ணதாசன் பதிப்பகம்..கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம் ..பத்து பாகங்களையும் சேர்த்து..அழகான பைண்ட் செய்யப்பட்டு ஒரே புத்தகமாக வழங்கியுள்ளனர்..800 பக்கங்கள்..விலை 250/
தள்ளுபடி போக 225..கண்டிப்பாக நம் ஒவ்வொருவர் புத்தக ஷெல்ஃபில் இருக்க வேண்டிய புத்தகம்.

கிழக்கு பதிப்பகம் பத்ரி எப்படி ஷெர்லக்ஹோம்ஸ் தமிழாக்கம் செய்துள்ளாரோ அப்படி..அகாதா கிறிஸ்டியும்.ஜேம்ஸ் ஹேட்லி சேஷும் தமிழில் தென்படுகிறார்கள் கண்ணதாசன் பதிப்பகத்தில்.

நான் வாங்கிய மேலும் சில புத்தகங்களை அடுத்த வருட காட்சிக்குள் முடித்து விடுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

10 comments:

பின்னோக்கி said...

அகதா கிறிஸ்டி - கண்ணதாசன் பதிப்பகத்தினுடையதை போன புத்தகக் காட்சியில் வாங்கியது. புதியதாக எதாவது வெளிவந்திருக்கிறதா ?. அவர்களது வெப்சைட்டில் எதுவும் தகவலில்லை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

டிசம்பர் 2008ல் பதிப்பித்த புத்தகங்கள்தான்..வேறு வரவில்லை

vasu balaji said...

தகவலுக்கு நன்றி சார்.

பூங்குன்றன்.வே said...

நல்ல பகிர்தலுக்கு நன்றி நண்பரே !

T.V.ராதாகிருஷ்ணன் said...

//வானம்பாடிகள் said...
தகவலுக்கு நன்றி சார்.//

நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பூங்குன்றன்.வே said...
நல்ல பகிர்தலுக்கு நன்றி நண்பரே !//

நன்றி பூங்குன்றன்

Ashok D said...

படிச்சிட்டு கொடுங்கன்னு சொல்லாமான்னு பார்த்தா.. ஒரு வருஷம் ஆகும்ன்னு குண்ட தூக்கி போடறீங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

//D.R.Ashok said...
படிச்சிட்டு கொடுங்கன்னு சொல்லாமான்னு பார்த்தா.. ஒரு வருஷம் ஆகும்ன்னு குண்ட தூக்கி போடறீங்க...
//
:-))

சின்னப் பையன் said...

முன்னாடி திருவல்லிக்கேணி பைக்ராப்ட்ஸ் சாலையோரக் கடைகளில் வாரம் ஒரு முறை நோட்டம் விடுவேன். பள்ளிப் புத்தகங்களை அங்கே வாங்கித்தான் படிச்சதே!!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ச்சின்னப் பையன் said...
முன்னாடி திருவல்லிக்கேணி பைக்ராப்ட்ஸ் சாலையோரக் கடைகளில் வாரம் ஒரு முறை நோட்டம் விடுவேன். பள்ளிப் புத்தகங்களை அங்கே வாங்கித்தான் படிச்சதே!!//

வருகைக்கு நன்றி ச்சின்னப்பையன்