Tuesday, January 5, 2010

விவாகரத்துகள் ஏன்?


சரிதா,ஊர்வசி,சுகன்யா,சொர்ணமால்யா,ரேவதி,பிரகாஷ்ராஜ்,பிரசாந்த்...ஒரே சினிமா நடிகர்கள் பட்டியலாய் இருக்கிறதே என்கிறீர்களா? எல்லாம் விவாகரத்து வாங்கிய..அல்லது கேட்டு வரிசையில் நிற்போர் பட்டியல்.இவர்கள் திரை நட்சத்திரங்களாய் இருப்பதால்..நமக்குத் தெரிகிறது..ஆனால் சாமான்யர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி காத்திருக்கிறார்கள் தெரியுமா?இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர் பார்த்து நடத்திய திருமணங்கள்.

விவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும் இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்.அந்த எதிர்ப்பார்ப்பில் சிறிதளவு குறைந்தாலும் ஏமாற்றமே ஏற்படுகிறது.நாளடைவில் அந்த ஏமாற்றமே ஒருவர் மீது ஒருவருக்கு வெறுப்பை ஏற்படுத்துகிறது.

சரியான புரிதலில்தான் வாழ்க்கை இன்பமயமாகிறது..அடுத்து விட்டுக்கொடுத்தல் இருக்க வேண்டும்.இது பெண்களுக்கு மட்டுமே இருக்க வேண்டும் என எண்ண வேண்டாம்..ஆண்களுக்கும் இருக்க வேண்டும்.ஆணாதிக்கம் கூடாது.நம்மை நம்பி வந்தவள் அவள்..அவளுக்கென ஒரு மனம் இருக்கிறது...அவள் உறவையெல்லாம் விட்டு..நம்முடன் ஏற்பட்ட உறவை பிரதானமாக்கி நம்முடன் வருகிறாள்..என்பதை எல்லாம் உணர்ந்து..அவளை நடத்த வேண்டும்..அவள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும்..பணம் மட்டுமே வாழ்வில் பிரதானமில்லை..பணம் சம்பாதிக்க வேண்டும்தான்..ஆனால் வாழ்வில் மகிழ்ச்சியில்லை எனில் எவ்வளவு சம்பாதித்து என்ன பயன்.ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தும் போதுதான் இல்லறம் நல்லறமாகிறது.

அதற்கு..நம் நேரத்தை குடும்பத்தைக் கவனிப்பதிலும் சற்று ஒதுக்க வேண்டும்..மனைவி,மக்களுடன் மாலை நேரத்தை சந்தோஷத்துடன் கழிக்க வேண்டும்.குடும்ப விவகாரங்களில் ஒருவரை ஒருவர் ஆலோசனைக் கேட்க வேண்டும்.எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத் தலைவர் ..எப்போது பார்த்தாலும் பணம்..பணம் ..என அலைபவர்..தனது இருபது வயது மகளுக்கு திருமணம் செய்து வீட்டை விட்டு அனுப்பிட வேண்டும் என்றார்..நான் அவரிடம்'அவளை நன்கு படிக்க வையுங்கள்.திருமணத்திற்கு அவசரம் இல்லை' என்றேன்..நண்பரோ பிடிவாதமாக இருந்தார்.அவர் மனைவியிடம் நான் பேசினேன்..அவர்'எனக்கும் என் மகள் படிக்க வேண்டும்..நல்ல வேலையில் சேர வேண்டும்..என்றெல்லாம் ஆசை இருக்கிறது..ஆனால் அவர் வார்த்தைக்கு மறு வார்த்தை நாங்கள் பேசக்கூடாது.அவர் நினைப்பதுதான் எங்க குடும்பத்தில் நடக்கும்' என்றார்.அந்த அம்மாளின் வாயிலிருந்து சாதாரணமாக அந்த வார்த்தைகள் வந்தாலும்..அதில் தோய்ந்திருந்த வேதனையை உணர்ந்தேன்.

ஆணின் துணையின்றி பெண்ணும்..பெண்ணின்றி ஆணும் வாழ்வது என்பது முடியாதது அல்ல.ஆனால் அது இயற்கைக்கு முரணானது.ஒன்று மட்டும் போதும் என்பதல்ல..இயற்கை தருவது எல்லாமே இரண்டு..இரண்டுதான்.

இன்பம்-துன்பம்,நன்மை-தீமை,பிறப்பு-இறப்பு,சிரிப்பு-அழுகை, இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

அதுபோல இயற்கையின் படைப்பு ஆண்-பெண்.இந்த இரண்டின் இணைப்பிலேயே ஒன்று உருவாகமுடியும்.கணவன் ,மனைவி என்பது வெறும் உடலின்பத்திற்கு மட்டுமல்ல..உடல் இன்பம் என்பது உடலில் தொடங்கி உடலிலேயே முடிந்து விடும்.

தூய்மையான அன்பு மட்டுமே இறுதிவரை துணை இருக்கும்.

அமைதியான குடும்ப வாழ்க்கை அற்புதமே!

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை

(நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும்.அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது)

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு

(நற்பண்பு பெற்றவனைக் கணவனாக பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்)

40 comments:

Anonymous said...

விட்டுக்கொடுத்தல் இல்லாட்டி தம்பதிகளுக்குள் இப்படித்தான்.

கோவி.கண்ணன் said...

//விவாகரத்து அதிகமாக என்ன காரணம் என்று பார்த்தோமாயின்..பெரும்பாலும் இரு பாலினரிடமுமே புரிதல் இல்லாமைதான்.ஆணாயினும்..பெண்ணாயினும்..மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுடன் மணவாழ்வை தொடங்குகிறார்கள்//

மிகுந்த எதிர்ப்பு என்று மட்டுமே சொல்லிவிட முடியாது, சாதாரண எதிர்பார்பைக் கூட நிறைவு செய்யாததாலும் மணமுறிவுகள் ஏற்படுகின்றன. காரணம் ஏமாற்றி திருமணம் செய்து கொள்ளுதல்.

ஆண் மணமுறிவுக்கு விண்ணப்பம் செய்வதைவிட பெண் சமூகம் மணமுறிவுக்கு விரும்பி விண்ணப்பம் செய்வதும் மிகுந்திருக்கிறது. இன்றைய தேதியில் ஒரு ஆண் மண முறிவு பெற்றது தெரிந்தால் 'பல்வேறு வகையில் கையாலாகதவன்' என அவனுக்குத்தான் மிகுந்த அவமானம்.

Jawahar said...

பரஸ்பரப் புரிதல் இல்லாத விவாக ரத்துகள் ரொம்பக் கம்மி.

ஆண்களின் வேற்றுப் பெண் தொடர்புதான் பெரும்பான்மைக் காரணம். பெண்களுக்கும் அது மாதிரி தொடர்புகள் இருக்கின்றன. ஆனால் அது ரொம்பக் குறைவு. ஆண்களின் வேற்றுப் பெண் தொடர்பை பல பெண்கள் தெரிந்தே பொருட்படுத்தாது இருக்கிறார்கள். ஆனால் பெண்ணுக்கு வேற்றுத் தொடர்பு இருந்து அதைப் பொருட்படுத்தாத ஆணே கிடையாது.

http://kgjawarlal.wordpress.com

பின்னோக்கி said...

மீடியாக்களும் கனவுலகையே சித்தரிப்பதால், மணமான பிறகு அந்த கனவு வாழ்க்கையிலிருந்து இயல்பு வாழ்க்கைக்கு சிலர் தங்களை தயார் செய்துகொள்ள முடிவதில்லை.

தனிக்குடித்தனமும் ஒரு காரணம். அவர்களை வழிப்படுத்த பெரியவர்கள் அருகிலிருப்பதில்லை. சில நேரங்களில் தனிக்குடித்னம் போக போடும் சண்டையும் காரணம்.

//சொர்ணமாலா
???

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி சின்ன அம்மிணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி கோவி.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி Jawahar

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
பின்னோக்கி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//பின்னோக்கி said...
//சொர்ணமாலா
???//

தட்டச்சு பிழை..திருத்திவிட்டேன்
சுட்டிக்காட்டியமைக்கு நன்றி

வல்லிசிம்ஹன் said...

பொறுமை இல்லை. கனிவு இல்லை.
அகம் அதிகம்.
பெற்றவர்களைப் பாதிக்காமல் வாழ்க்கை நடத்தும் துணிவு.
முடிவெடுக்கும் முயற்சி.
எல்லாத்துக்கும் மேல நானே என் வாழ்வின் முதலாளி என்னும் உறுதி.
நீ இரண்டடி தள்ளினால் நான் நாலடி தள்ளுவேன் எனும் போட்டி.
இதையெல்லாம் தாண்டி ஒரு திருமணம் வெற்றி பெற்றால், தம்பதிகளைப் பெற்றவர்கள் அதிர்ஷ்ட சாலிகள்.

vasu balaji said...

:).

உண்மைத்தமிழன் said...

இந்தக் காலத்து பிள்ளைகளுக்கு பொறுமையில்லை.. கனிவு இல்லை.. படித்தும் ஆறாவது அறிவைப் பயன்படுத்துவதுமில்லை.. மொத்தத்தில் அவர்களது வளர்ப்பு சரியில்லை..

இதில் அவர்களை மட்டுமே குற்றம், குறை சொல்லி என்ன புண்ணியம்..?

மணிகண்டன் said...

நல்ல அலசல்.

"பொண்ணு அவள் குடும்பத்தை விட்டு உங்களுடன் வாழவருகிறாள். " இது என்ன புது கதை ? பசங்களும் தான் :)-

ரோஸ்விக் said...

பல நல்ல கருத்துக்களை இங்கு சொல்லி இருக்கிறீர்கள். நானும் இதன் பொருள் கொண்டு ஒரு இடுகை இடுவதாக உணரந்தேன்.

தொடர்ந்து இது போல எழுத என் வாழ்த்துகள்.

இது போன்ற நல்ல இடுகைகள் குறைவான வாக்குகள் பெற்றிருப்பது வருந்தத்தக்கது.... :-(

பூங்குன்றன்.வே said...

மூன்றாம் பத்தி ரொம்ப அருமை.. சரியான புரிதலின்றி சண்டை போட்டுக்கொண்டே இருக்கும் தம்பதிகள் இதை படித்தால் திருந்த வாய்ப்புண்டு.

Ashok D said...

உ.த. அண்ணனை வழி மொழிகிறேன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
வல்லிசிம்ஹன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி உண்மைத் தமிழன்(

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ரோஸ்விக்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி பூங்குன்றன்.வே

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
D.R.Ashok

Starjan (ஸ்டார்ஜன்) said...

இருவரும் விட்டுக்கொடுத்து போனால் வாழ்க்கை இன்ப மயம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
இருவரும் விட்டுக்கொடுத்து போனால் வாழ்க்கை இன்ப மயம்//
வருகைக்கு நன்றி starjan

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

மணமுறிவு பெரும்பாலும் ஒருவர் ம்ற்றொருவரை தம் ஆளுமைக்குள் கொண்டு வர நினைப்பதலே ஏற்படுகிறது......

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
தமிழ் வெங்கட்

ஹேமா said...

அருமையான அலசல்.பாதிக்கப்பட்டவர்கள் இதை வாசித்தால் மிகவும் நல்லது.

எங்கு விட்டுக்கொடுத்தலும் புரிந்துணர்வும் இல்லையோ அங்கு பிளவுதான்.

கபிலன் said...

ஓவர் எதிர்பார்ப்பு என்பது சரியான மேட்டர் தான்.

இருந்தாலும் ஒரு விஷயம்.

எந்த ஒரு ஆணுக்கும், பெண்ணின் முதல் முன்னுதாரணம் அவன் தாய் தான். அவனுடைய அம்மா, அவனுடைய அப்பா கிட்ட எப்படி நடந்துகிட்டாங்களோ....கிட்ட தட்ட அதே மாதிரி தனக்கு வருகிற பெண்ணும் நடந்து கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் இருக்கு. முழுமையாக கூட வேண்டாம்...ஒரு 20-30 சதவிகிதமாவது இருக்க வேண்டும் என எதிர்ப்பார்ப்புக்கள் இருக்கு.

ஆனா, இப்ப இருக்க நிலைமை தலைகீழ். அவங்க காலம் வேற, இவங்க காலம் வேற. அது காலத்தின் மாற்றம்.

அப்புறம் இன்னொரு மேட்டர். யார் என்ன சொன்னாலும், ஒரு சமயத்தில்,ஒரு தலைவர் தான் நாட்டை ஆள முடியும், ஒரு லீடர் தான் ஒரு வகுப்பறைக்கு என்கிற கணக்கில், ஒரு குடும்பத்துக்கு ஒருவர் தான் தலைவரா இருக்கணும். அது சிதம்பரம் நடராஜரா இருந்தாலும் சரி. மதுரை மீனாட்சியா இருந்தாலும் சரி. இரண்டு பேருமே தலைவர்கள் தான் என்ற எண்ணத்தின் வெளிப்பாடு தான் ஈகோ.

அட என்னெவெல்லாம் நினைச்சோம்....இவனா (அ) இவளா இப்படி என்ற நினைப்பு தான் விவகாரத்து வரை கொண்டு போகுது.


"இதில் ஆச்சரியம் என்னவெனில் இவற்றுள் பெரும்பாலானவை பெற்றோர் பார்த்து நடத்திய திருமணங்கள்"
இது தாங்க கொஞ்சம் இடிக்குது. காதல் திருமணங்கள் என்பது என் கருத்து.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஹேமா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
கபிலன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நான் குறிப்பிட்டுள்ள நடிகர்கள் பட்டியலில் சொர்ணமால்யா, பிரசாந்த் இவை பெற்றோர் பார்த்து செய்து வைத்த மணம்

தமிழ். சரவணன் said...

//ஆனால் சாமான்யர்கள் எவ்வளவு பேர் குடும்ப வழக்கு மன்றங்களில் விவாகரத்து வேண்டி காத்திருக்கிறார்கள் தெரியுமா?//

ஒரு நாளைக்கு சென்னையில் மட்டும் சுமார் 25ந்திலிருந்து 35ந்து விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. மற்றம் அதிகபட்சமாக 75 விவாகரத்து வழக்குகள் பதிவான நாட்களும் உண்டு.
மற்றும் இதுபோல் மணமுறிவுகளால் ஆண்டொன்றுக்கு சுமார் 20,000 ஆயிரம் குழந்தைகள் தந்தையில்லாலும் தந்தை யார் என்று தெரியாமலும் வளர்கின்றது (எனது குழந்தையை பிறந்த பொழுது பாரத்தது அதன் பிறகு தொடர்பே இல்லை - ஆம் என்னைப்போல் நிறைய நபர்கள் உண்டு நாங்கள் எல்லாம் வரதட்சணை கொடுமை சட்டத்தை தவறாகப்பயன்படுத்தி குடிஅழிக்கும் கெடுமதிபெண்களிடம் மாட்டிக்கொண்டவர்கள்)

(நற்பண்பு பெற்றவனைக் கணவனாக பெற்றால், பெண்களுக்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ்சிறப்பாக அமையும்)

கெடுமதிப்பெண்களை மனைவியாகப்பெற்றால்??

வரதட்சணை கொடுமை, குடும்பவண்முறை சட்டம், காவல் நிலையம், கோர்ட்டு மற்றம் புழல் ஜெயில் போன்றவற்றை தெரிந்துகொள்ளலாம்

தங்கள் மின்அஞ்சலுக்கு ஆபாசமும் வக்கிரமும் நிறைந்த ஒரு வரதட்சணை கொடுமை "முதல் தகவல் அறிக்கையை" அனுப்பியுள்ளேன் படித்துப்பார்கவும்... இந்த மஞ்சல் தகவல் அறிக்கை வாயிலாக எனது தாயர், தம்பி மற்றும் எனது திருமணத்திற்க வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயரும் விசாரனை கைதியாக கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்

நீங்களி இன்னும் சிறிது நாட்கள் கழித்து "கள்ளக்காதல் படுகொலைகள் ஏன்?" என்று பதிவும் போடலாம் அந்த அளவிற்கு முறையற்ற உறவுகளால் படுகொலைகளும் பெருகுகின்றன...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சரவணன்..பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்

ரவி said...

superrr

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி ரவி

நசரேயன் said...

உள்ளேன் ஐயா

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி நசரேயன்

"உழவன்" "Uzhavan" said...

குறள்கள் இவ்விடுகையைச் சிறப்பித்துவிட்டன.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி Uzhavan