Wednesday, June 30, 2010

விஜய்....ஆச்சரியம்..ஆனால் உண்மை

சமீப காலங்களாக விஜய் படங்கள் தோல்வியைத் தழுவி வருகின்றன..

..எல்லோரிடம்..'நீங்க சொல்றது சரிங்ணா..' என்று அன்புடன் பேசும் அவரையும் தோல்வி..ஒரு பேட்டியின் போது..'சைலன்ஸ்..பேசிக்கிட்டு இருக்கேன்..இல்ல..' என கோபப்பட வைத்தது..(இந்த இடத்தில் இதே பாணியைப் பின்பற்றிய நர்சிம் உங்க ஞாபகத்திற்கு வந்தால் கம்பெனி பொறுப்பல்ல)

வில்லு, அழகிய தமிழ் மகன், வேட்டைக்காரன், சுறா..என..ஹேட்ரிக் தோல்வியையும் மிஞ்சி தோல்வியத் தந்த இவரா...ஒரு காலத்தில்..மதுர,திருப்பாச்சி,சிவகாசி,கில்லி என பல வெற்றி படங்களைத் தந்தார் ..என திரை உலகினரை மட்டுமன்றி அனைவரையும் வியக்க வைத்தது..

அரசியல் ஆசை, தந்தையின் குறுக்கீடு, கதை அமைப்பு என பல காரணங்கள் சொல்லப்பட்டாலும்...

அவரது படங்கள் ஒரே மாதிரி கதை அமைப்புக் கொண்டவையாய் இருந்ததே உண்மைக் காரணம்..தவிர்த்து..எம்.ஜி.ஆர்., ரஜினி ஆகியவர்களைப் பின்பற்றி சண்டைக் காட்சிகளும்..பஞ்ச் வசனங்களும் வேறு..

ரஜினியின் வெற்றி..அவர் யார் பாணியையும் பின்பற்றாததால் சூப்பர் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்று தந்தது..

விஜய்க்கு ரஜினியைப் போல்..அனைவரும் விசிறிகள்..அவர்கள் விரும்புவதைக் கொடுக்க வேண்டியது அவரது கடமை..

இந்நிலையில் சமீபத்தில் வந்துள்ள செய்தி ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது...அந்த செய்தி..

விஜய் நடித்து வரும்..'காவல்காரன்' என்ற படம் 'பாடிகார்ட்' என்ற பெயரில்..தான் தயாரித்து சித்திக் இயக்க்த்தில் வந்து வெற்றிகரமாக ஓடிய படம் என்றும்..தனது ஒப்புதல் இல்லாமல் சித்திக் அதை தமிழில் தயாரித்து வருவதாகவும்..அதற்கு அவருக்கு உரிமை இல்லையென்றும் ஜானிதாமஸ் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.சென்னை உயர் நீதி மன்றமும்..இதை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரிக்க உத்தரவிட்டுள்ளது..

இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..

பிற மொழியில் நல்ல கதையம்சத்துடன் வெற்றிகரமாக ஓடிய படம்...விஜய்க்கு இது மற்றொரு கில்லியாக அமையும்..

இதற்குப் பிறகு ..யாரும் விஜய் படங்கள் ஒரே மாதிரியானவை என யாரும் சொல்லமாட்டார்கள் என நம்புவோம்.

Tuesday, June 29, 2010

ராவணன் போன்ற படங்கள் ஏன் தோல்வியடைகின்றன..?

சிவாஜிகணேசன் நடித்து வெற்றி பெற்ற பல படங்கள் சென்னையில் 3 அல்லது 4 திரையரங்குகளில் மட்டுமே வெளியாகும்..வெளியிட்ட நாள் முதல் தொடர்ந்து 100 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாக இருந்தால்..அப்படம் நூறு நாட்கள் ஓடும் படம் என வெற்றி பட வரிசையில் சேர்ந்து விடும்..உதாரணத்திற்கு அவர் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திருசூலம் பட விவரத்தைப் பாருங்கள்

'திரிசூலம் மாபெரும் வெற்றி படமாகும்.வெள்ளிவிழா படம்.சென்னையில் வெளியான சாந்தி ,கிரௌன்,புவனேஸ்வரி திரை அரங்குகளில் தொடர்ச்சியாக முறையே 315,313,318 காட்சிகள் அரங்கு நிறைந்த காட்சிகளாகும்(100 நாட்களுக்கு மேல் அரங்கு நிறைந்த காட்சிகள்)மதுரை சிந்தாமணியில் 401 அரங்கு நிறைந்த காட்சிகள்.மேலும் 20 அரங்குகளில் 100 நாட்கள் ஓடியது.இச்சாதனை முறியடிக்க முடியா சாதனை.இப்படம் சிவாஜியின் 200 ஆவது படம்..அதற்கு அவர் எடுத்துக் கொண்ட ஆண்டுகள் 26 மட்டுமே.8 திரை அரங்குகளில் வெள்ளிவிழா.இலங்கையிலும் இரு திரை அரங்குகளில் வெள்ளிவிழா.அந்த நாட்களிலேயே முதன் முதலாய் இரண்டு கோடிகளுக்கு மேல் வசூல் ஆகி சாதனை புரிந்த படம்.'

இரண்டு கோடிகள் வசூலே பெரும் சாதனை என்றால்..படத்திற்கான தயாரிப்பு செலவு எவ்வளவு குறைவாய் இருந்திருக்கும்...நடிகர்கள் சம்பளம் எவ்வளவு இருந்திருக்கும்..

ஆனால்..இன்று வரும் மெகா பட்ஜெட் படங்கள் எல்லாம் குறைந்தது 60 கோடிகளை தாண்டும் படங்கள்..ராவணன் மூன்று மொழிகளிலும் தயாரிப்புச் செலவு 153 கோடிகள்..

இன்றைய தயாரிப்பாளர்கள் படங்கள் நூற்றுக் கணக்கில் பிரிண்ட் போடப்படுகின்றன.சுறா 600 பிரிண்டுகள்..ராவணன் 1000 பிரிண்டுகளுக்கு மேல்..வெளியாகும் அன்று சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் மட்டுமே ஒரே நாள் 150 அல்லது 160 காட்சிகள்..

தவிர்த்து, தமிழகம் முழுவதும்..மற்ற மாநிலங்கள்..உலக மார்க்கெட் எல்லாம் சேர்த்து ஒட்டு மொத்தமாகப் பார்த்தால்..சராசரியாக 3000 முதல் 6000 காட்சிகள் வரை ஒரே நாளில் நடைபெறுகிறது.மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் குறைந்தபட்சக் கட்டணமே 120 ரூபாய்.நாள் வசூலே கோடிக்கணக்கில்.கேளிக்கை வரியும் கிடையாது இப்போது.

அப்படியும் படங்கள் வசூலில் தோல்வி என்றால்..அதற்கான ஒரே காரணம்..தயாரிப்புச் செலவு அதிகம்.கதாநாயகன் சம்பளமே கோடிக்கணக்கில்..கதைக்குத் தேவையோ இல்லையோ படபிடிப்பு வெளிநாட்டில்.

ஆனால் அதே நேரம் 40 அல்லது 50 பிரிண்டுகள் மட்டுமே போடப்பட்டு..கிடைத்த தியேட்டர்களில் வெளியாகி..குறைந்த பட்ஜெட்டில் தயாரான படங்கள் வெற்றி பெற்றுள்ளன.

பெரிய பட்ஜெட் படங்கள் தோல்வியை தவிர்க்க வேண்டுமெனில்..கதாநாயகர்கள் சம்பளம் குறைய வேண்டும்..தயாரிப்பு செலவு குறைய வேண்டும்..கதையில் கவனம் செலுத்தப் பட வேண்டும் இல்லையேல்...தோல்வி..தோல்வி..என தியேட்டர்காரர்கள் புலம்பலும்,விநியோகஸ்தர் கதறலும்..தயாரிப்பாளர் தலையில் போட்டுக் கொள்ளும் துண்டுகளும் இருந்து கொண்டுதான் இருக்கும்

Monday, June 28, 2010

கலைஞர் செய்த தவறு..


தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்து முடிந்தது..

இதற்கான பொறுப்புகளை ஏற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் நன்றி..

இம் மாநாட்டிற்கு ஆன செலவு 68.52 கோடிகள்..ஆனால் மாநாட்டிற்காக கோவை மற்றும் சுற்றுவட்டாரத்திலும் அடிப்படை கட்டமைக்கு செலவான தொகை 243 கோடி.இதை மாநாட்டிற்கான செலவில் எடுப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன..இணையக் கண்காட்சி என இணையம் பற்றி பல அரிய தகவல்கள் அறிய முடிந்தது..பல நிகழ்ச்சிகள்.சிறப்பாக அமைந்தன.நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டவர்கள்..கலைஞரே..போதும்..போதும்..என்று சொல்லியும்..அவரைப் பாராட்டிக் கொண்டே இருந்தனர்..

நிகழ்ச்சிகளில் யார்..யார்..பங்கேற்க வேண்டும் என கலைஞரே ..தேர்ந்தெடுத்ததாய் செவி வழிச் செய்தி..

இது உண்மையெனில்..கலைஞர் செய்த தவறு பட்டிமன்றத்தில் பேச எஸ்.வி.சேகரை தேர்ந்தெடுத்தது..

கலைஞர் அவருக்கு சந்தர்ப்பம் கொடுக்க நினைத்திருந்தால்..அவரது 'காதுல பூ' நாடகத்தைப் போடச்சொல்லியிருக்கலாம்..அதை விடுத்து.....

பட்டிமன்றத்தில் சேகர்....சிரிப்புத்தான் வருகிறது..

தென்கச்சி சாமிநாதன்..பல அரிய தகவல்களைக் கூறியுள்ளார்..அதை விடுத்து.. சேகர் தென்கச்சி சொன்னதாக சொன்ன சொன்ன செய்தி...குமட்டலையே ஏற்படுத்தியது..

தவிர்த்து..பழைய அமராவதி ஜோக்கைச் சொல்லி..அவரே சிரித்துக் கொண்டார்.

எப்படியெல்லாம் பேசக்கூடாது என அவர் பேச்சை அன்று கேட்டவர்கள் உணர்ந்திருப்பார்கள்.

அந்த நிகழ்ச்சியில்..உண்மையில் அர்த்தத்தோடு பேசியவர்கள் என திருப்பூர் கிருஷ்ணன் மற்றும் நக்கீரன் கோபால் மட்டுமே சொல்லலாம்

பாவம் சாலமன் பாப்பையா


லியோனி வழக்கம் போல பாடல்கள் சிலவற்றைப் பாடிக்காட்டினார்.

பாரதிராஜா...வாகை சந்திரசேகர்..கலைஞரை முடிந்த அளவிற்கு பாராட்டினர்..

பட்டி மன்றம்..என சாலமன் பாப்பையாவை ந்டுவராகப் போட்டு..பேச்சாளர்களைத் தேர்ந்தெடுத்ததில் கலைஞர் தவறிழைத்து விட்டதாகவே தோன்றியது.

Sunday, June 27, 2010

பேசும்போதும் தமிழில் பேசுங்கள் - ப.சிதம்பரம்


பேசும்போதும் தமிழில் பேசுங்கள், எழுதும்போதும் தமிழிலேயே எழுதுங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டு நிறைவு விழாவுக்கு முன்னிலை வகித்து ப.சிதம்பரம் பேசியதாவது...

வட்டார வழக்கு என்பது எல்லா நடுகளிலும் இருக்கிறது. அதில் பல நல்ல சொற்கள் உள்ளன. ஆனால் வட்டார வழக்கு என்கிற பெயரில் இல்லாத சொற்களையோ, தவறான வார்த்தைகளையோ பயன்படுத்தினால், அது மொழியை சிதைத்து விடும்.

ஒரு மொழியை சிதைக்கக்கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது. ஆனால் அப்படி நடந்துவிடுமோ என்று வேதனைப்பட வேண்டியிருக்கிறது. வழக்கு மொழி இழுக்கு மொழியாகிவிடுமோ என்கிற கவலை இருக்கிறது.

குழந்தைகள் தங்கள் பெற்றோர்களை அம்மா, அப்பா என்று தமிழிலேயே அழைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.

பேசும் போதும், எழுதும்போதும் சுடுசொற்கள், வன்சொற்கள் பயன்படுத்தாமல் இன்சொற்கள் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஒருவர் பேசினார், கவிப்பேரரசு போன்ற ஒருவர் பேசினால் எவ்வளவு இனிமையாக இருக்கிறது. இவர் இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டாரா என்று நினைக்கிறோம் அல்லவா, அதுதான் இனிய தமிழ். அப்படிப் பேசி எழுதப் பழக வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

சிதம்பரம் பற்றி இதையும் படியுங்கள்

Saturday, June 26, 2010

நண்பர் பெயரிலிக்கு ஒரு மடல்...

அன்பின் பெயரிலி

வணக்கம்,..

எனது பதிவிற்கு வருகை தந்ததற்கு நன்றி..உங்களது பின்னூட்டம் இதோ...

-///பெயரிலி. said...
நான்தான் நெகட்டீவோ மறையோ அந்த வோட்டினையோ வாக்கினையோ போட்டேன். கருணாநிதி என்றவரை விதந்தோத்தியும் எல்லாமே சாமிநாதையன்னும் ஜகத்நாதனுமே என்றுமே நிறுவவும் முயலுவதிலே இப்படியாவது எதிர்ப்பதிலே ஒரு சிறு உவகை.

தமிழ் என்றால் உங்களுக்கெல்லாமே இப்போது உங்களுக்கான தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டலாகத்தான் தெரிகின்றது. அண்டை அயலிலே பலருக்கு அப்படியில்லை - உயிராகவும் உயிர்குடிக்கும் தென் திசைக்கா(வ)லனாகவும் தெரிகின்றது.

நீங்கள் உங்கள் பாட்டுக்குப் புத்தகம் வெளியிட்டுப் படத்துக்குப் 'போசு' கொடுத்து மகிழுங்கள். நான் என் பாட்டுக்கு இப்படியாக - போட்டுக்கொ'ல்'கிறேன்//



எனது தேங்காய்..மாங்காய்..பட்டாணி சுண்டல்..(செம்மொழி சிறப்பு சுண்டல்) பதிவில்..அரசியல் கலக்கக் கூடாது என எந்த ஒரு இடத்திலும் கலைஞரையோ..அரசியலையோ எழுதவில்லை.மொழி பற்றி மட்டுமே சிறு குறிப்புகள் அ
ந்த இடுகைகள்..

இலங்கைத் தமிழர் குறித்தும்..அவர்கள் வேதனைகளையும் இந்திய/தமிழக அரசின் மெத்தனம் குறித்தும்..அவற்றைக் கண்டித்தும்..என் இடுகைகளை நீங்கள் படித்திருக்கக் கூடும்..

ஆனால் செம்மொழி மாநாடு என்ற போது அதில் அரசியல் வேண்டாம் என்பதே என் எண்ணம்..

நீங்கள் சொல்லியிருக்கும் என் புத்தகத்தில் கூட..கலைஞரின் திரைப்படங்கள் குறித்துத்தான் எழுதியுள்ளேன்.

இலங்கை பிரச்னையில்..தன் ஆட்சி பறி போகும் என்று தெரிந்தும் IPKF ஐ..வரவேற்கச் செல்லாதவர் கலைஞர்.அப்படிப் பட்டவர் ஏன் இன்று இப்படி நடந்துக்கொள்கிறார்..சற்று சிந்தித்தால்..கலைஞர் பழைய கலைஞராய் நடந்திருந்தால்..காங்கிரஸ் உடன் ஆன கூட்டு முறிந்திருக்கும்..கலைஞர் ஆட்சி கவிழ்ந்திருக்கும்..பின்னர் வரும் ஆட்சி...சற்று ..சிந்தியுங்கள்...

தவிர்த்து..போபால் விஷவாயு வழக்கில்..ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர்..இலட்சக்கணக்கானோர் பாதிக்கப் பட்டனர்..அவர்களுக்கு நியாயம் கிடைத்ததா? வல்லரசு நாட்டிற்கு பயந்து..குற்றவாளியை தப்பிக்க விட்டு..தம் மக்களுக்கு துரோகம் இழைத்த கட்சி..பிற நாட்டு மக்கள் மீது எந்த அளவு அக்கறைக் கொள்ளும்?

இந்தியா மட்டுமல்ல..எந்த நாடும் முதலில் தன் நலனில் அக்கறைக் கொண்டுதான்..பிற நாடுகளுடன் அரசியல்..பொருளாதார உறவுகளை பேணிக்காக்கும்..மேலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் மற்ற நாட்டு உள்விவகாரத்தில் தலையிட முடியாது.

இந்தியாவை பொறுத்து வேறு அந்நிய சக்திகள் ஸ்ரீலங்காவில் ஊடுருவியுள்ள நிலையில்..தன்னை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..

சமிபத்திய செய்தி ஒன்று சாலைப் பணியாளர்கள் என சீன ராணுவத்தினர் ஸ்ரீலங்காவில் ஊடுருவியுள்ளனர் என்பதாம்..

ஏற்கனவே வட எல்லையில்..பாகிஸ்தான்..சீனா..

தென் எல்லையிலும் அப்படி ஒரு நிலை வந்தால்..சற்றே ..சிந்தியுங்கள்..

கலைஞரை திட்டுவது என்பது..இவ்விஷயத்தில் ..'ஊருக்கு இளைத்தவன்....' என்று சொல்லப்படும் சொலவடையே ஞாபகம் வருகிறது.

உங்கள் மீது எனக்கு பெரும் மதிப்புண்டு..ஆதலால்..உங்களின் நெகடிவ் ஓட்டோ..போஸ் கொடுக்கிறேன்..என்றதோ எனக்கு மனவருத்தத்தைத் தரவில்லை.பின்னூட்டமே மன வருத்தம் ஏற்படுத்தியது.

இந்த இடுகைக்கும் பல நெகடிவ் வாக்குகள் வரக்கூடும்..அதை தவிர்க்க முடியாது..ஆனால்..தனி நபர் தாக்குதல் பின்னூட்டத்தை தவிர்க்கலாம் என்றே பின்னூட்டங்கள் மட்டுறுத்தப் பட்டுள்ளன.

நன்றி

அன்புடன்
T V Radhakrishnan

Friday, June 25, 2010

'அப்போ சரியா இருந்தது; இப்போ சரியா இல்லே'-அறிவொளி!

கோவை: உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் மூன்றாம் நாளான இன்று கலை இலக்கிய நிகழ்ச்சிகள் களை கட்டின.

குறிப்பாக முனைவர் சோ.சத்தியசீலன் தலைமையில்
'தமிழர் வாழ்வு பெரிதும் சார்ந்திருப்பது சங்க இலக்கியமே, இடைக்கால இலக்கியமே, நவீன இலக்கியமே' ஆகிய மூன்று தலைப்புகளில் மூன்று அணியினர் வாதாடினர்.

இவர்களில் சங்க இலக்கியமே என்ற அணிக்கு தலைமை தாங்கி இலங்கை தமிழ் அறிஞர் ஜெயராஜ் பேசினார். அவர் கூறும்போது, "நான் பேசிய பிறகு, அடுத்த அணிகள் பேச வேண்டியதே இல்லை. காரணம் சங்க இலக்கியம் இல்லாமல் தமிழே இல்லை. தமிழர் வாழ்வு பெரிதும் சார்ந்து நிற்பது சங்க இலக்கியத்தைத்தான்" என்றார்.

இடைக்கால இலக்கியமே என்று வாதாடினார் முனைவர் அறிவொளி. இவரது பேச்சைத்தான் முதல்வர் கருணாநிதி வெகுவாக ரசித்தார்.

தனது வாதத்தின் போது, "ஒரு காலத்தில் நல்லா இருந்தது, இருப்போது நல்லா இல்லை. அப்போ சரியா இருந்தது, இப்போ சரியா இல்லே..." என்றார்.

உடனே நடுவர் சத்யசீலன் குறுக்கிட்டு, "அது எப்படிங்க... நல்லா இருக்கிறது எப்பவும் நல்லாதானே இருக்கும்?" என்றார்.

அதற்கு அறிவொளி, "ஐயா.. ஒரு 15 வருஷத்துக்கு முன்ன ஒருத்தன் கல்யாணம் பண்ணான். 15 வருஷத்துக்கு அப்புறம் சொல்றான்.... 'ஏமாந்துட்டேன்... என் வாழ்க்கையே போச்சு. அவ சரியில்லே' என்று புலம்புகிறான். ஆனா இந்த உண்மை அவன் மனைவிக்கு கல்யாணமான 15 நாள்லயே தெரிஞ்சிடுச்சி. அப்படின்னா, ஒரு காலத்துல சரியா இருந்தது, இன்னொரு நேரத்துல சரியா இல்லன்னுதானே அர்த்தம்?" என்று திருப்பிக்கேட்க, முதல்வர் கருணாநிதி சிரிப்பில் குலுங்கினார்.

"ஐயா... கல்யாணம் பண்ணிக்காதவங்க (குமரி அனந்தனைப் பார்த்து) ஆயிரம் சொல்வாங்க அதை விடுங்க... நான் கல்யாணமாகி காவி உடுத்தினவன். என் வீட்டு கதவைத் திறந்தா காத்து மட்டும்தான் வரும்" என்று நித்யானந்தா கதையை நயமான நுழைத்து அடுத்த நகைச்சுவை அஸ்திரத்தை வீச, முதல்வர் பலமாகச் சிரித்தார்.

"சங்க இலக்கியங்கள் பணக்காரர்கள், கோடீஸ்வரர்கள், மன்னர்களைப் பேசியது. இடைக்கால இலக்கியமே, மக்களையும் சேர்த்துப் பேசியது" என்ற அறிவொளியின் வாதத்தை வெகுவாக ரசித்தார் முதல்வர்.

நவீன இலக்கியமே என்ற தலைப்பில் பேராசிரியை அரங்கமல்லிகா பேசினார்.

பட்டிமன்றத்தின் இரண்டாம் சுற்றில், மீண்டும் சங்க இலக்கியத்தை ஆதரித்துப் பேசினார் அந்த அணியின் சுந்தர ஆவுடையப்பன்.

அவர் பேசுகையில், "சங்க இலக்கியத்தைத்தான் தமிழர் வாழ்வு சார்ந்திருக்கிறது என்பதை இரண்டு நாட்களுக்கு முன்பே பளிச்சென்று சொல்லிவிட்டார்கள். எனவே இந்த பட்டிமன்றமே அவசியமற்றது. ஆம், இந்த செம்மொழி மாநாட்டின் துவக்க நிகழ்ச்சியில் பேசிய துணை முதல்வர், சங்க காலச் சிறப்பை தமிழகத்திலே கொண்டு வர முதல்வர் பாடுபடுகிறார் என்று கூறியது நினைவிருக்கலாம். ஆக, இந்த அரசின் நோக்கம் என்னவென்று துணை முதல்வரே கூறிவிட்டார். அவரே எங்க கட்சிதான். அவரை மீறி நீங்கள் தீர்ப்பு சொல்லிவிடுவீர்களா?" என்று கேட்க, "என்னய்யா இப்படி பயமுறுத்துறீங்க.." என்றார் சத்யசீலன்.

இப்போது துணை முதல்வரும் முதல்வர் குடும்பத்தினரும் அடக்க முடியாமல் சிரித்தனர்

(நன்றி தட்ஸ்தமிழ்)

Thursday, June 24, 2010

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (தமிழ் செம்மொழி சிறப்பு சுண்டல் 3 )

முதல் பகுதிக்கு

இரண்டாம் பகுதிக்கு

51)சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என 64 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர் தியாகி சங்கரலிங்கனார்

52)தமிழின் முதல் எழுத்து "அ" இறுதி எழுத்து 'ன்'..திருக்குறளும் 'அ' வில் தொடங்கி (அகர முதல எழுத்தெல்லாம்) 'ன்' ல் முடியும்.(ஊடுதல் காமத்திற்கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்")

53) தமிழ் சொல்லாய்வைத் தொடங்கி வைத்தவர் தேவநேயப்பாவணர்

54)தேம்பாவணி படைத்த வீரமாமுனிவர் 'பரமார்த்த குரு கதைகளையும் எழுதினார்

55)தந்தை பெரியார் தமிழ் எழுத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்தவர்

56)தமிழில் விரிவான முதல் அகராதியை உருவாக்கியவர் யாழ்ப்பாணம் சந்திரசேகர பண்டிதர் ஆவார்.58000 சொற்களைக் கொண்டது அது

57)தமிழ் வெறும் செம்மொழி அல்ல..'உயர் தனிச் செம்மொழி' என ஆய்வு செய்து கூறியவர் பரிதிமாற்கலைஞர்

58)முதல் தமிழ்ச் சங்கம் 4400 ஆண்டுகளும்..இரண்டாம் தமிழ்ச்சங்கம் 3700 ஆண்டுகளும்..மூன்றாம் தமிழ்ச் சங்கம் 1850 ஆண்டுகளும் செயல் பட்டன

59)சங்க காலங்கள் முதல்,இடை,கடை என்று வழக்கில் இருந்தன..கி.பி.முதலாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது சங்க காலம்

60)லண்டன்..பி.பி.சி.,வானொலி நிலையம் இந்திய மொழிகளில் ஹிந்தி,தமிழில் மட்டுமே ஒலி பரப்பு செய்கிறது

61)தமிழில் ஏறத்தாழ 30000 பழமொழிகள் உள்ளனவாம்

62)தமிழ் சுருக்கெழுத்து நூலை வெளியிட்டவர் என்.சுப்பிரமணியம் (1955)

63)திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே இடம் பெறவில்லை (இதனால் அக்காலத்தில் வேறு மொழிகள் வழக்கில் இல்லை எனலாமா)

64)தமிழ் பெர்னாட்ஷா என்று அழைக்கப்பட்டவர் டாக்டர் மு.வரதராசனார்.

65)தமிழின் மிகப் பழையதான தொல்காப்பியத்தில் கடவுள் வாழ்த்து இல்லை.(அந்தக் காலத்திலேயே இயற்கை தான் கடவுள் என்று உணர்ந்து இருந்தனரோ)

66)தமிழின் மூன்று ஓசைகள் வல்லினம்,மெல்லினம் இடையினம்.மூன்று ஓசைகளிலிருந்து ஒவ்வொரு எழுத்தை எடுத்து தமிழ் என்றானது. த -வல்லினம், மி -மெல்லினம், ழ்-இடையினம்.

67)மலேசியாவில் 523 தொடக்கப் பள்ளிகள், 8600 தமிழ் ஆசிரியர்கள் உள்ளனர்.ஒரு லட்சத்து எட்டாயிரம் மாணவர்கள் தமிழ் பயில்கின்றன்ர்.

68)"தமிழ்த் தாய்க்கு உருவம் உண்டா" என பாரதிதாசனிடம் ஒரு முறை கேட்டனர்". "பாரத மாதாவுக்கு உருவம் உண்டென்றால் தமிழ்த் தாய்க்கும் உருவம் உண்டு,"என்று பதிலடிக் கொடுத்தார்
பாவேந்தர்.

69)'தமிழுக்கு அமுதென்று பெயர்' என்றார் பாவேந்தர்.உண்மை..'அமிழ்து..அமிழ்து..'என்று சொல்லிக் கொண்டே இருந்தால்..தமிழ்..தமிழ்..என வரும்

70)தமிழ்நாடு அரசுப்பணித் தேர்வில் தமிழில் கேள்விகள் கேட்கப் பட வேண்டும் என்றவர் காமராஜர்

71)ம.பொ.சி. அவர்களை..தமிழக எல்லைப் போராட்ட தளபதி எனலாம்..தமிழ்நாட்டின் வட,தெற்கு எல்லைகளின் மீட்பில் இவர் பணி மகத்தானது

72)சென்னை மாநிலக் கல்லூரியில் முதல் தமிழாசிரியர் பர்சிவெல் துரை என்ற ஆங்கிலேயர்

73)'எனது தாய்மொழியை நன்மையான செய்திகளைச் சொல்வதற்கே பயன் படுத்துவேன்..தவறுகளையோ..தீமைகளையோ அதில் எடுத்துரைக்க மாட்டேன்' என காந்தியிடம் சொன்னவர் பாரதியார்

74)தமிழில் இருந்து 25க்கும் மேற்பட்ட திராவிட மொழிகள் (கன்னடம்,தெலுங்கு,மலையாளம்,துளு,குடகு போன்றவை) தோன்றி வளர்ந்துள்ளன

75)தேம்பாவணி அளித்த வீரமாமுனிவர் இத்தாலி நாட்டவர்..'கான்டன்ஸ்டைன் பெஸ்கி' என்ற அவர் பெயரை தமிழ்ப் படுத்தி வீரமாமுனிவர் என்று வைத்துக் கொண்டார்.

Wednesday, June 23, 2010

தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல் (தமிழ் செம்மொழி சிறப்பு சுண்டல்-2)

முந்தைய பதிவுக்கு..

26)நமஸ்காரத்திற்கு வணக்கம்..உபந்நியாசத்திற்கு சொற்பொழிவு,மகாஜனங்களுக்கு பொதுமக்கள்,உபாத்தியாயருக்கு ஆசிரியர்,காரியதரிசிக்கு செயலாளர்,சர்வகலாசாலைக்கு பல்கலைக் கழகம்,ராஜ்யத்திற்கு மாநிலம் என மாற்றித் தந்தவர் அறிஞர் அண்ணா

27)தொன்மை,செம்மை,இனிமை,எளிமை,வளமை,புதுமை,மென்மை,மேன்மை இவை அனைத்தையும் கொண்டது தமிழே ஆகும்

28)தமிழ்ச் சொற்களின் எண்ணிக்கை ஒரு கோடிக்கும் அதிகம் என்கின்றனர் நிபுணர்கள்

29)தமிழறிஞர் ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள்..டாக்ஸ்,அசெஸ்மென்ட்,டியூட்டி,கஸ்டம்ஸ் ஆகிய ஆங்கிலவார்த்தைகளுக்கு இணையான சொற்கள் தமிழில் உண்டு என்றும், அவை வரி,தீர்வை,கடமை,சுங்கம் என்றும் ஒரு கூட்டத்தில் முழங்கினார்.

30)தமிழில் திருவள்ளுவர் ஆண்டு பின்பற்றப்படுகிறது.தை முதல் நாள் புத்தாண்டு பிறக்கும்.ஆங்கில ஆண்டைவிட திருவள்ளுவர் ஆண்டுக்கு 31 ஆண்டுகள் அதிகம்

31)திருக்குறள் பெருமையை அறிந்த காந்தியடிகள்..'திருக்குறளைப் படிப்பதற்காக நான் தமிழனாக பிறக்க ஆசைப்படிகிறேன்' என்றார்

32)தமிழ் வேதம் என திருக்குறள் போற்றப்படுகிறது

33)தமிழ்நாடு சட்டசபைக் கூட்டம் திருக்குறள் ஒலித்தபின்னரே தொடங்கும்.இதை முதன் முதல் ஆரம்பித்து வைத்தவர் சி.பா.ஆதித்தனார் ஆவார்

34)செம்மொழிக்கு அதிகம் குரல் கொடுத்தவர் வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி ஆவார்.இவர் தமிழ் மொழி மேல் கொண்ட ஆர்வத்தால் தன் பெயரை'பரிதிமாற்கலைஞர்' என்று மாற்றிக் கொண்டார்

35)பரிதிமாற்கலைஞர் 1903ஆம் ஆண்டு'தமிழ் மொழியின் வரலாறு' என்னும் நூலை எழுதினார்

36)கோலாலம்பூர் (1966)சென்னை(1968)பாரிஸ்(1970)யாழ்ப்பாணம்(1974)மதுரை(1981)கோலாலம்பூர்(1987)மொரீசியஸ்(1989)தஞ்சாவூர்(1995) ஆகிய எட்டு உலகத் தமிழ் மாநாடுகள் இதுவரை நடந்துள்ளன..உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு இதுவே முதல் முறையாகும்

37)இறைவனுக்கு உலகத்தில் எல்லா மொழிகளிலும் இல்லாத பொருள் தமிழ் மொழியில் மட்டுமே உண்டு..கடவுள்...கட..எல்லாவற்றையும் கடந்தவர்..உள்..எல்லாவற்றினுள்ளும் உள்ளவர்..எப்பேர்பட்ட அர்த்தத்தை இந்த நான்கு எழுத்து சொல் தன்னுள்ளே வைத்துள்ளது....இப்படி சொன்னவர் மூதறிஞர் ராஜாஜி

38)அமெரிக்காவின் பெரிய நூலகம் நியூயார்க் நகரில் உள்ளது.அதன் முகப்பு வாயிலில் 'கற்க கசடற' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

39)சட்டசபையில் வரவு செலவு திட்டத்தை முதலில் தமிழில் சமர்ப்பித்தது காமராஜர் ஆட்சியில்..ஆண்டு 1957-58

40)24-2-61ல் சட்டசபையில் நிதியமைச்சராய் இருந்த சி.சுப்ரமணியம் 'சென்னை ராஜ்ஜியம்' என்பதற்கு பதிலாக 'தமிழ்நாடு' எனலாம் என்றார்

41)ஆங்கிலேயர் ஆட்சியில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் தமிழில் தீர்ப்பு கூறினார் நீதிபதியாய் இருந்த வேதநாயகம் அவர்கள்

42)சென்னை பல்கலைக்கழகத்தில் முதல் தமிழ்ப் பேராசிரியர் ரா.பி.சேதுப்பிள்ளை சாகித்ய அகாதமி விருது பெற்ற முதல் தமிழர் ஆவார்

43)நாம் இன்று பார்க்கும் திருவள்ளுவர் படம்..சிலைக்கு உருவம் தந்தவர் வேணுகோபால் சர்மா ஆவார் .

44)அண்ணா முதல்வர் ஆனதும் 18-7-1967 அன்று சென்னை மாநிலத்திற்கு 'தமிழ்நாடு' என்னும் பெயர் சூட்டும் தீர்மானத்தை சட்டசபையில் ஏக மனதாக நிறைவேற்றச் செய்தார்

45)தமிழ்த்தாத்தா உ.வே.சா., ஊர் ஊராகச் சென்று ஓலைச்சுவடுகளைச் சேகரித்துச் செம்மொழி தொண்டாற்றினார்

46)அவர் சீடரான கி.வா.ஜகன்னாதனும்..பல இடங்களுக்குச் சென்று நாடோடிப் பாடல்களையும்..பழமொழிகளையும் சேகரித்துத் தந்தார்

47)திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் ஜி.யு.போப்

48)தமிழ்த்தாய் வாழ்த்து எழுதியவர் மனோன்மணியம் பெ.சுந்தரம் பிள்ளை

49)தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆவார்

50)ஜி.யு.போப் தன் கல்லறையில் எழுதச் சொன்ன வரி..தமிழ்ப் படித்த மாணவன் இந்த கல்லறையில் உறங்குகிறான்

Tuesday, June 22, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி ..சுண்டல் (செம்மொழி மாநாடு - சிறப்பு சுண்டல்)




தமிழ்..திராவிடர்களின் முக்கிய மொழிகளில் ஒன்று.இந்தியாவில் தமிழ்நாடு, இலங்கை,சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிகம் பேசப்படுகிறது..

2)1996ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உலகம் முழுதும் எட்டு கோடியே..ஐம்பது லட்சம் மக்களால் தமிழ் பேசப்படுகிறது.

3)மக்கள் தொகை அடிப்படையில் பேசப்படும் மொழிகளில் தமிழுக்கு 18 ஆம் இடம்.

4)இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இம்மொழி தற்போது வழக்கில் உள்ள செம்மொழிகளில் ஒன்றாகும்

5)தமிழில் 'ஆத்திச்சூடி' 1000 ஆண்டுகளுக்கு முன்னரும்..திருக்குறள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும் இயற்றப்பட்டது.

6) இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ ஒரு லட்சம் தொல்லெழுத்து கல்வெட்டுகளில் 55000க்கும் மேலாக தமிழில் உள்ளன.

7)துபாய்,மலேசியா,தென்னாப்பிரிக்கா,மொரீசியஸ்,பிஜி,டிரினிடாட்,ஆகிய நாடுகளில் சிறிய அளவில் பேசப்படுகிற அரிய மொழி.

8)யாதும் ஊரே யாவரும் கேளிர் என்னும் அற்புதமான வாழ்க்கைத் தத்துவத்தை உலகுக்கு வழங்கியவன் தமிழன்.

9)தமிழ் நாட்டின் ஆட்சி மொழியான தமிழ் தேசிய மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ள 22 மொழிகளில் ஒன்றாகும்.

10)சிங்கப்பூரிலும் தேசிய மொழிகளில் ஒன்றாக தமிழ் உள்ளது.

11)தென்னாப்பிரிக்காவிலும் தமிழுக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரம் உள்ளது.

12)மலேசியாவில் தொடக்க இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் போதிக்கப்படுகிறது.

13)தமிழ் என்னும் சொல்லுக்கு த்ராவிடம் என்பதே மூலம் என்னும் கருத்தை முன் வைத்தவர்களில் கால்டுவெல்லும் முக்கியமானவர்

14)மிக நீண்ட இலக்கிய இலக்கண மரபுகளைக் கொண்டது தமிழ்

15)இன்று கிடைக்கக் கூடிய மிகப் பெரிய ஆக்கம் 'தொல்காப்பியம்' ஆகும்.இது கி.மு.இரண்டாம் நூற்றாண்டிற்கும்..கி.பி.3 ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாய் இருக்கக்கூடும் எனத் தெரிகிறது

16)'செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்று பாரதி அன்றே தமிழை செந்தமிழ் என்றிருக்கிறார்

17)தமிழுக்கும் அமுதென்று பெயர் என்ற பாரதிதாசன்..தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றுள்ளார்

18)தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றுள்ளார் நாமக்கல் ராமலிங்க பிள்ளை

19)அழிந்துக் கொண்டிருக்கும் மொழிகளில் தமிழ் 16 ஆம் இடத்தில் இருப்பதாகச் சொல்லப்பட்டாலும்..அடுத்த நூற்றாண்டுகளில் அதிகம் பேசப்படும் மொழிகளில் தமிழும் ஒன்றாயிருக்கும் என்று சொல்லப் படுகிறது.மற்ற மொழிகள் ஸ்பாநிஷ்.ஆங்கிலம்,சீன மொழி மற்றும் ஹிந்தி

20)பல உலகத் தமிழ் மாநாடுகள் நடந்தாலும்..செம்மொழி ஆனப்பிறகு நடைபெறும் முதல் மாநாடு இது

21)புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை வளாக மாய் இருந்த இடம் இனி செம்மொழி மையமாய் செயல்படும்

22)ஆகவே..நண்பர்களே..பத்தோடு பதினொன்று அல்ல நம் மொழி..ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய செம்மொழி நமது எனப் பெருமைக் கொள்வோம்.

23)தமிழை தமிழன் என்று சொல்லும் அனைவரும் படிப்போம்..தமிழ் ஆசிரியர்களையும்..தமிழ் எழுத்தாளர்களையும் மதிப்போம்..தமிழன் ஒருவனைக் கண்டால் தமிழில் மட்டுமே பேசுவோம்...என இந்நாளில் உறுதிமொழி எடுத்துக் கொள்வோம்

24)'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' பிறப்பினால் அனைவரும் சமம் என்பதைக் கடைப்பிடிப்போம்

25)வாழ்க தமிழ்...வளர்க தமிழ்..

Monday, June 21, 2010

நரசிம்மமும்..நாராயணனும்..


தன் மகன் பிரகலாதனை..'ஹிரண்யகசபுவே நம..' என்று சொல்லச் சொல்லி..அது முடியாமல்..பிரகலாதனும் 'நாராயணாய நம' என மாறி..மாறி சொன்னதால் மனம் வெறுத்து..கோபத்துடன்..'பிரகலாதா நீ சொல்லும்..அந்த நாராயணன் எங்கிருக்கிறார்' என்கிறான் ஹிரண்யகசபு..

'தந்தையே..அந்த நாராயணன்..தூணிலும் இருப்பார்..துரும்பிலும் இருப்பார்"

'அப்படியெனில் நீ சொல்லும் அந்த நாராயணன்..இந்த.. தூணில் உள்ளானா?'

ஒரு தூணைக்காட்டி ஹிரண்யன் கேட்க..'ம்''இருக்கிறார் ' என்றான் பிரகலாதன்.

ஹிரண்யன் தன் கதாயுதத்தால்..தூணை பிளக்க ..அது பிளந்து..நரசிம்மன் வெளிப்பட்டு.. ஹிரண்யனை வதம் செய்கிறார்..

ஆனால் இன்று.

ஹிரண்யன் கேட்கிறார்..'பிரகலாதா..நீ சொல்லும் நாராயணன்..இந்த தூணில் இருக்கின்றானா?'

'தந்தையே! அந்த நாராயணன்..எல்லாத் தூணிலும் இருப்பார்"

ஹிரண்யன் தன் கதாயுதத்தால்..தூணை..தாக்க..தூண் பிளக்க வில்லை..

ஹிரண்யனுக்கு ஆச்சரியம்..தான் பலம் இழந்தோமா என..

பிரகலாதன் சிரித்துக் கொண்டே சொல்கிறான்..'தந்தையே..உங்களால் தூணை உடைக்க இயலாது ஏனெனில் அதனுள் இருப்பது 'நாராயணா முறுக்கு கம்பிகள்' என்கிறான்..

@@@@@ ##### @@@@@@ ####

சந்தானத்தைப் பார்த்து..'சபாஷ்...விளம்பரம் அருமையாக எடுத்துள்ளீர்கள்..' என்றார் நாராயணா முறுக்குக் கம்பி தயாரிப்பாளர்.

தான் எடுத்த முதல் விளம்பர படம் அருமையாய் வந்ததால் அந்த வருடம் தான் விஷுவல் மீடியம் படித்து வெளிவந்த சந்தானம் மனம் மகிழ்ந்தான்.

Sunday, June 20, 2010

நன்றி..நன்றி..நன்றி..நண்பர்களே...




சென்ற சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் நான் எழுதிய 'கலைஞர் என்னும் கலைஞன்' புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.கலைஞர் கதை,வசனம் எழுதியுள்ள படங்கள் பல நமக்குத் தெரியும்..ஆனால் தெரியாத படங்கள் அதிகம்.ஆகவே எல்லா படங்களைப் பற்றிய சிறு குறிப்புகள் அடங்கிய சிறு நூல் இது.இனி வரும் நாட்களில் இது குறித்து விரிவாக எழுத ஆசை.அப்படி ஒரு புத்தகம் வருமேயாயின்..அது வரும் நாட்களில் பல இளைஞர்களுக்கு பயன் படு ம் நூலாக அமையக்கூடும்.

புத்தகத்தை கலைமகள் ஆசிரியர் 'கீழாம்பூர்' வெளியிட 'அஜயன் பாலா பெற்றுக் கொண்டார்'

பொன்.வாசுதேவன் (அகநாழிகை) வரவேற்புரை வழங்க..நான் நன்றியுரை வழங்கினேன்.நண்பர் அப்துல்லா தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதுடன் வாழ்த்துரையும் வழங்கினார்.




அஜயன்பாலா பேசுகையில் கலைஞர் அவ்வளவு சின்ன வயதில் சினிமாத்துறையில் வந்ததும் ,'என் அருமைக் கன்னுக்குட்டி' பாடல் அவர் எழுதியது என இப்புத்தகம் பார்த்துத் தான் தெரிந்துக் கொண்டேன் என்றார்.


கீழாம்பூர்..'கலைஞர் சினிமாக்கள் குறித்து வந்துள்ள டிரைலர் இந்த புத்தகம் என்றும்..விரைவில் பெரிய புத்தகமாக இது வர வேண்டும் என்றும் கூறினார்.

அப்துல்லா தன் வாழ்த்துரையில்'இணையம்..நாடகம்,புத்தகம்' என பணி ஒய்வு பெற்றும்..சுறுசுறுப்பாய் செயல்படும் கலைஞன் என்று எனைக் கூறி, இப் புத்தகம் எழுத தகுதிவாய்ந்தவன் நான்'என்றார்.(ஹி...ஹி..சுயதம்பட்டம்)

என் ஏற்புரையில் 'உண்மையில் நான் பேசுவது ஏற்புரை இல்லை நன்றியுரைதான்' என்று கூறி அனைவருக்கும் நன்றி தெரிவித்தேன்.



புத்தக விழாவிற்கு வந்திருந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி.

தவிர்த்து..அலைபேசியிலும்..மின்னஞ்சலிலும் வாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி.

அல்கா அஜீத்..வின்னர் ஆஃப் சூபர் சிங்கர் ஜூனியர் 2



ஓ....எவ்வளவு அருமையான குரல்..

..இறுதி நாள் நிகழ்ச்சியில் அல்காவின் பாடலைக் கேளுங்கள்..கேளுங்கள்..கேட்டுக் கொண்டே இருங்கள்




alka's performance

Friday, June 18, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (18-6-10)

எப்போதெல்லாம் முடிகிறதோ..அப்பொழுதெல்லாம் முருங்கைக் கீரையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.முருங்கை இலையில் பழங்களைவிட 7 மடங்கு வைட்டமின் 'சி' சத்து அதிகமாக உள்ளதாம்.பாலைவிட கால்சிய சத்து 4 மடங்கு அதிகம் உள்ளது.காரெட்டைவிட 4 மடங்கு வைட்டமின் 'ஏ' உள்ளதாம்.பொட்டாசிய சத்து வாழைப்பழத்தைவிட 3 மடங்கு அதிகம் உள்ளது.

2)சமீபத்தில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே 7 ஒப்பந்தங்களில் கையெழுத்து இட்டு பெற்றுக் கொண்டு திரும்பியுள்ளார்.அவற்றில் ஒன்று..சிங்கள ராணுவத்திற்கும்,போலீசாருக்கும் இந்தியாவில் பயிற்சி அளிப்பது.இலங்கையில் போர் முடிந்துவிட்டது..புலிகளை ஒழித்து விட்டோம் என்று கூறிய ராஜபக்க்ஷே.. சிங்கள ராணுவத்திற்கு மீண்டும் பயிற்சி பெறுவது யாருக்காக..யாரை ஒழிக்க..

3)போலி விஷ வாயு வழக்கில் 26 வருஷம்,சிபுசோரன் கொலை வழக்கில் 36 வருஷங்கள் கழித்து விசாரணை முடிந்து தீர்ப்பு வந்துள்ளது.தீர்ப்புகள் பற்றி விமரிசிக்க வேண்டாம்..ஆனால்..வழக்குகள் முடிய இத்தனை ஆண்டுகளா..என எண்ணுகையில் வருத்தம் ஏற்படத்தான் செய்கிறது..கவியரசு அன்றே சொன்னார் 'கோர்ட்டுக்குப் போனால் நடக்காது..அந்த கோட்டைக்குள் நுழைந்தால் திரும்பாது' என்று

4)சதுரங்க ஆட்டத்தை முதலில் கண்டு பிடித்த நாடு என்ற பெருமை இந்தியாவையேச் சாரும்.

5)தற்போது உலகம் முழுதும் வெப்பம் அதிகரித்து வருவதால்..புயல், சூறாவளி, பனிப்பொழிவு ஆகியவை அதிகரித்து வருகிறதாம்..1939 முதல் 1986 வரை அட்லாண்டிக் கடலில் வருஷத்திற்கு 41 புயல் காற்றுகள் உருவாகுமாம்..இப்போது அதுவே 63 ஆக அதிகரித்துள்ளதாம்.

6)கொசுறு...
அவர் போலி டாக்டர்னு எப்படி சொல்ற
வாயுத் தொந்தாவுன்னு போனா..ஆமாம்..உங்க உடம்புல 10 சதவிகிதம் நைட்ரஜன்,3 சதவிகிதம் ஹைட்ரஜன்,65 சதவிகிதம் ஆக்சிஜன் வாயுக்கள் இருக்குன்னு சொல்றார்

டிஸ்கி...அனைவரையும் மாலை புத்தக வெளியீட்டில் சந்திக்கிறேன்

'கலைஞர் என்னும் கலைஞன்' - புத்தக வெளியீட்டுவிழா




கலைஞர்...திரைப்பட வசனகர்த்தா,பாடலாசிரியர்,சினிமா தயாரிப்பாளர்,இலக்கியவாதி, பத்திரிகையாளர் என பன்முகம் கொண்டவர்.அவரது எழுத்துகள் அனைத்தும் மக்களுக்கு துடிப்பை ஏற்படுத்தக் கூடியவை.

அவர் எழுத்துக்கு எதிர் முகாமில் உள்ளவர்கள் கூட ரசிகர்கள்.

கலைஞர் 70 படங்களுக்கு மேல் கதை,வசனம் எழுதியுள்ளார்.இதுவரை அவர் எழுதிய அனைத்துப் படங்கள் பற்றிய விவரங்கள் கொண்ட குறிப்புகள் பற்றி எந்த நூலும் வந்ததாகத் தெரியவில்லை.அதற்கான சிறு குறிப்புகளே இந்த சிறு நூல்.நேரமும்..காலமும் ஒத்துழைப்பின் இது பற்றி விவரமாக ஒரு நூல் எழுத அவா.

நாளை இந்நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.தவறாமல் அனைவரும் கலந்துக் கொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்..நண்பர்கள் இயன்றால் இது குறித்து அவர்கள் பதிவில் குறிப்பிடவும்.அதனால் செய்தி பலரை சென்று அடையும்.

Wednesday, June 16, 2010

விஜய் டீவியும்..சன் டீவியும்..மற்ற பிறவும்...

விஜய் டீ.வி.ஆரம்பித்தாலும் ஆரம்பித்தது சிங்கர் போட்டியை...மற்ற சேனல் எல்லாம் அதையே தொடர ஆரம்பித்துள்ளது.ஓய்வு பெற்ற பல பாடகர்களுக்கு நீதிபதிகளாக இரண்டாம் இன்னிங்ஸ்.

ரிமோட்டை எந்த சேனலுக்கு திருப்பினாலும்..அங்கங்கே..மெகா சீரியல் நேரம் தவிர மற்ற நேரங்களில் யாரேனும் மைக்கை கையில் ஏந்தி பாடிக் கொண்டிருக்கிறார்கள்.இப்படி நடக்கும் பல நிகழ்ச்சிகள் குறைந்த பட்ச ஸ்டாண்டர்ட் கூட இருப்பதில்லை.

உதாரணம் ..ஆகா..ஓகோ..ன்னு விளம்பரத்துடன் ஆரம்பிக்கப் பட்ட 'ஹரியுடன் ...' மிகழ்ச்சி.

தவிர்த்து..மானாட ..மயிலாட, அழகிய தமிழ் மகன்..போன்ற ஆடல் நிகழ்ச்சிகள் வேறு.

சன் டீ.வி.யில் பிரைம் நேரத்தில் வார நாட்களில் இது போன்ற நிகழ்ச்சிக்கு இடமில்லை...ஆனால்..விஜய் போகும் போக்கு சன் டீ.வி.யின் டி.ஆர்.பி., ரேட்டிங்குக்கு தலைவலி கொடுக்கிறது.மெகா சீரியல் நேரங்களை மாற்றி..மாற்றி அமைத்தும் தீரவில்லை பிரச்னை.தென்றல் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மக்கள்..இப்போது அதை சிங்கரின் விளம்பர இடைவெளியில் தான் பார்க்கின்றனர்.செல்லமே க்கும் அதே கதி.மாதவி இருக்கும் இடம் தெரியவில்லை..

எதையும் பிரம்மாண்டமாக தயாரிக்க நினைக்கும் சன்..இப்போது விஜய் சிங்கருக்குப் போட்டியாக இசை நிகழ்ச்சி ஒன்றை ஒலி/ஒளி பரப்பப் போகிறது.ஜூன் 26 முதல் வரப்போகும் அந்த நிகழ்ச்சிக்கு சங்கீத மகா யுத்தம் என்று பெயர்..ஆம்..உண்மையில்..விஜய் டீ.வி.யுடன் யுத்தம்..தான்.

இதில் தஞ்சை தளபதிகள்,கோவை கில்லாடிகள்,நெல்லை சூறாவளி,சென்னை சிங்கங்கள்,மதுரை வீரர்கள்,திருச்சி திமிங்கலங்கள் (பெயர்கள் T 20 ரேஞ்சிற்கு இருக்கிறது)என ஆறு அணிகள் மோதும்.ஒவ்வொரு அணிக்கும் ஒரு முண்ணனி பாடகர் கேப்டன்.ஒவ்வொரு அணிக்கும் 3 இளம் பாடகர்கள்.ஜுகல் பந்தி,சோலோ, மேட்லி என போட்டி மூன்று சுற்றுகள் கொண்டதாய் இருக்கும் .நிகழ்ச்சிக்கு ஸ்பான்சார் அமுல் நிறுவனம்.

இந்த நிகழ்சிகள் சனி,ஞாயிறு இரவு 9-30க்கு ஒளிபரப்பாகும்..சனி,ஞாயிறு நேரங்களிலாவது ரசிகர்களை தக்கவைத்துக் கொள்ள முடியுமா? என்ற ஆவல்.

அளவிற்கு மிஞ்சினால்..அமிர்தமும் விஷம் என இவர்கள் புரிந்துக் கொள்வார்களா?

டிஸ்கி- விளம்பர நேரத்தில் ..ஒரு நிகழ்ச்சியின் விளம்பரம் பார்த்தேன்...நிகழ்ச்சி ஜோடி நம்பர் ஒண்ணாம்..இளம் சிறுவர்..சிறுமிகள்..காதல் டூயட் பாடும் நிகழ்ச்சி.. தேவையில்லா அங்க அசைவுகளுடன்..அவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்கு ஒர்க் அவுட் ஆகிறதா (!!!!) பார்ப்பார்கள் போலிருக்கிறது...எங்கே போகிறோம் நாம்..குறைந்தது இது போன்ற நிகழ்ச்சிகள் ஆரம்பிக்கும் போது..அவை பற்றி விளக்கங்களுடன்..தணிக்கை குழு ஒன்றை ஏற்படுத்தி அவர்கள் அனுமதியை பெற வேண்டும் என்று வரவேண்டும்.

Tuesday, June 15, 2010

ஒரு மணி அடித்தால் கண்ணேஉன் ஞாபகம்..




டெலிஃபோன் மணி போல் சிரிப்பவள் இவளா..? ஒரு மணி அடித்தால் உன் ஞாபகம்..என்றெல்லாம் காதலியின் சிரிப்பையும்..அவள் ஞாபகம் வரவும்..மணியை உதாரணம் காட்டியுள்ளனர் கவிஞர்கள்.

சோம்பித் திரிபவர்களையும்..உல்லாச வாழ்க்கை வாழ்பவர்களையும்..'அவனுக்கு என்னப்பா மணி அடிச்சா சாப்பாடு' என்று சொல்வதுண்டு..

சில மணித்துளிகள் தாமதத்தால் பல நஷ்டம் ஏற்பட்டதுண்டு..

ஆனால் நமது உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மணி அடித்தால் நமக்கு வேறு ஞாபகம் வரவைத்துள்ளார்.

உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டையொட்டி..சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் திருக்குறள் மணிக்கூண்டு சேவையைத் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த மணிக்கூண்டில் மணிக்கு ஒருமுறை நேரம்,குறள் மற்றும் அதன் பொருள் ஆகியவை ஒலிக்கும்.

இனி ஒவ்வொரு மணிக்கும் குறளுக்கான குரலைக் கேட்கலாம்..

மகிழ்ச்சியான செய்திதான்...

ஆனால்..சென்னை சென்ட்ரல், மாநகராட்சி ஆகிய கட்டிடங்களின் ,மணிக்கூண்டைத்தவிர சென்னையில் உள்ள மற்ற மணிக்கூண்டுகள் சில நாட்களே ஓடும்..பல நாட்கள் இருபத்தினான்கு மணி நேரமும் ஒரே நேரத்தையேக் காட்டும்..

இனி..சென்னை பல்கலைக் கழக மணிக்கூண்டு ஒழுங்காக செயல் படும் என எதிர்ப்பார்க்கலாம்.

Monday, June 14, 2010

ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர் போட்டியும்...அரசியலும்..




இன்று நம் மக்களிடையே விலைவாசி ஏற்றம் குறித்தோ, நாட்டில் பெருகி வரும் தீவிரவாதம் குறித்தோ, நாட்டு நடப்புகள் குறித்தோ கவலைகள் கிடையாது.

விஜய் டீ.வி.சூப்பர் சிங்கராக யார் வருவார்கள்..என்பதுதான்..

அப்பாவின் பணத்தில் சிம் கார்ட் போடும் பையனிலிருந்து..வயதான பெரிசுகள் வரை எஸ்.எம்.எஸ்.,ஐ மானாவாரியாக தட்டி விட்டுக் கொண்டிருக்கின்றனர்..ஏர் டெல்லுக்கு ஒரு எஸ்.எம்.எஸ்.,க்கு 3 ரூபாய் வருமானம்..கிட்டத்தட்ட இப்போட்டியின் இறுதி முடிவுக்கு மொத்தம் பத்து லட்சத்திற்கு மேல் எஸ்.எம்.எஸ். வரும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில்..நமக்கு வரும் சந்தேகங்கள்..

இப்போட்டி கிட்டத்தட்ட ஒரு வருடமாக வருகிறது..சிறுவர்களை வேலைக்கு வைத்தல், கொடுமைப் படுத்துதல், இவை குற்றங்கள்..

ஆனால் இக்குழந்தைகள்..இருபத்தைந்து பேர் வடிகட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு..அவர்களிடம் அவர்கள் வயதுக்கு மேல் வேலை வாங்கி..கடைசியில் பல குழந்தைகளை அழ விட்டு ஐந்து பேரை ..இறுதிப் போட்டியில் தேர்ந்தெடுத்துள்ளனர்.(குழந்தைகள் கண்டிப்பாக அவதிப் பட்டிருப்பார்கள்..)

இவர்கள் பாடிய பல பாடல்கள் சாதாரண மக்களைக் கவர்ந்தாலும்..நீதிபதிகள் அவர்கள் செய்த தவறை சுட்டிக் காட்டுகையில் தான்..இவ்வளவு தவறுகளா? என அறிகிறோம்..

ஆனால்..சிறந்த பாடகரை தேர்ந்தெடுக்கும் பணியை மக்களிடமே சேனல் ஒப்படைத்தது சரியில்லை என்றே தோன்றுகிறது..இதனால்..மக்களின் கண்ணோட்டத்தில்..சிறந்த பாடகர் யார் என்பதைவிட..பச்சாதாபம், வயது, பாகுபாடு ஆகியவை குறுக்கே நிற்கக்கூடும்..

மக்கள் திறமை வாய்ந்தவர்களைத் தான் தேர்ந்தெடுப்பார்கள் என்றால்..இன்று பல எம்.எல்.ஏ., க்கள், எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்க மாட்டார்கள்.எம்.எஸ்.உதயமூர்த்தி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பார்.

மறைமுகமாக சேனலுக்கும்,ஏர்டெல்லுக்கும் வருமானம்..அதற்கே முடிவெடுக்கும் பணி மக்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளது.

இதை உணர்ந்துதான்..போட்டியாளர்களும்..போஸ்டர் அடித்தும்..துண்டு பிரசுரங்களை தினசரிகளில் இணைத்தும் ஆதரவு தேடுகின்றனர்..(பரிசு..25 லட்சம் பெறுமானமுள்ள வீடு என்பதாலா?)

உண்மையில் சேனல் என்ன செய்திருக்க வேண்டும்..யாருக்கும் தெரியாமல் சில இசை அறிஞர்களிடம் இப்பணியை ஒப்படைத்திருக்க வேண்டும்..

அதை விடுத்து.....

அரசியலைவிட மட்டமாக பணம் ஈட்ட சேனலும்..முக்கிய ஸ்பான்ஸரும் கை கோர்த்தது கண்டிக்கத் தக்கது.

இது நாள் வரை நீதிபதிகளாய் இருந்த, மற்றும் அவ்வப்போது கலந்துக் கொண்ட சித்ரா,மனோ,மால்குடி சுபா, நித்யஸ்ரீ,சௌம்யா,உன்னி மேனன்,சுசீலா,ஈஸ்வரி,ஜானகி,எம்.எஸ்.வி.,ஆகியோர்களை விட மக்கள் ரசனைக்கு முக்கியத்துவம் தந்து, விஜய் டி.வி., ந்டுநிலை தவறிவிட்டது என்றே சொல்லலாம்.

Sunday, June 13, 2010

தமிழன்...அரசியல்வாதி...கவிஞன்

1. தமிழ் வாழ்க
என்றால்
அவனுக்கு புரிவதில்லை
லாங்லிவ் டமில்
என்றால்
அவனுக்கு புரிகிறது
ஏனெனில்
அவன் ஒரு தமிழன்.

2. தமிழ்
கட்டாய பயிற்சி மொழிக்காக
ஆங்கிலப் பள்ளியில்
அரசியல் வாதி
ஆர்ப்பாட்டம்
வகுப்பறையிலிருந்து
வெளியே தந்தையை
பார்த்தான் மகன்.

3. வாழும்போது
வறியவன் நீ
தனிமனிதன் உனக்கு
உணவில்லை தரணியில்
இறந்தபின் உன்
புகழ்ப் பாடப்படும்
நினைவில்லம் கட்டப்பட்டும்
உன் ஜாதகம் அப்படி
ஏனெனில்..நீ
ஒரு தமிழ்க்கவிஞன்

Friday, June 11, 2010

நிகழ்ச்சியை புறக்கணிக்கும் அண்ணாசாமி..

அண்ணாசாமிக்கு கடந்த ஒரு வருடமாக அமெரிக்க அதிபர் ஒபாமா மீது கோபம்..

பதவி ஏற்றது முதல் இந்தியாவிற்கு அவுட் சோர்ஸ் செய்யும் கம்பெனிகளுக்கு பல நிபந்தனைகளை விதித்தார் ஒபாமா.வரிகளை அவர்களுக்கு அதிகமாக்கினார்..இதனால் இந்திய கம்பெனிகளுக்கு எதிர்ப்பார்த்த அளவு வேலைகள் இல்லை.சில கம்பெனிகள் ஆள் குறைப்பும் செய்தன.

தவிர்த்து..அமெரிக்காவிலேயே குடியேறிய பல இந்தியர்கள்..குறிப்பாக தமிழர்கள் வேலை இழந்து..தாயகம் திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது..

இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஒபாமா..பொருளாதார சிக்கலிலிருந்து மீள்வது எப்படி என்று பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்தார்..

அண்ணாசாமிக்கு மனம் பொறுக்கவில்லை..

மக்கள் வேலையின்றி தவிக்கையில்..கறி விருந்தா...

ஒபாமா ஏற்பாடு செய்திருந்த அதிகாரிகள் சந்திப்பை தான் புறக்கணிப்பதாக அறிக்கை வெளியிட்டார்

Thursday, June 10, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (11-6-10)

(வாராவாரம் ஒழுங்காக வந்துக்கொண்டிருந்த 'தேங்காய்....' இடுகை கடந்த சில நாட்களாக வரவில்லை..காரணம் பதிவுலக சர்ச்சையும்..அதனால் நான் விலகி இருந்ததும்..இனி சுண்டல் வழக்கமாய்க் கிடைக்கும்)

தண்ணீர் சேமிக்க மும்பை பெண் மேயர் ஷ்ரதா யாதவ் ஒரு அருமையான (!!) யோசனையைக் கூறியிருக்கிறார்.வரும் விருந்தினர்களுக்கு ஒரு தம்ளருக்குப் பதில் அரை தம்ளர் தண்ணீர் கொடுங்க..போதும் என்கிறார்.விருந்துகள் நடத்தும் ஓட்டல்களுக்கும் இது பொருந்தும் என்கிறார்.

2)சீனாவின் மக்கள் தொகை 150 கோடிகளைத் தாண்டிவிட்டதாம்.ஒரு..வீடு..ஒரு குழந்தை சட்டத்தை மீறி தம்பதிகள் பல குழந்தைகளைப் பெற்றதே காரணமாம்.

3)புற்று நோய் தாக்கியுள்ள குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க..ஒரே மாதத்தில் சச்சின் டெண்டுல்கர் 1.30 கோடி திரட்டியுள்ளார்.குழந்தைகள் புற்று நோய்க்கு எதிராகப் போர்..என்ற பிரச்சாரத்தைத் துவக்கி தன் டுவிட்டரில் சச்சின் செய்தார்.இதைப் பார்த்தவர்கள் ஒரே மாதத்தில் 1.30 கோடி நன்கொடை அளித்துள்ளனராம்.

4)சர்வதேச நீரிழிவு நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து இந்தியா முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது(5.08கோடி) நம்மை விட அதிக மக்கள் தொகைக் கொண்ட சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது(4.32 கோடி)

5)உலகில் உள்ள 650 கோடி மக்கள் 6912 மொழிகள் பேசுகிறார்கள்

6)ஒரு பொன் மொழி..

தோல்வி உன்னைத் துரத்துகிறது என்றால்...வெற்றியை நீ நெருங்கி விட்டாய் என்று அர்த்தம்

7)கொசுறு;-

கிரிக்கெட் மேட்ச் போய் வந்ததிலே இருந்து தலைவர் இப்பவெல்லாம் தண்ணி அடிக்கும் போதுக் கூட சியர்ஸ் என்றதும் சியர் கேர்ல்ஸ் வந்து ஆடணும்னு அடம் பிடிக்கிறார்.

Wednesday, June 9, 2010

நான் உப்பு விற்கப்போனால்...

பொதுவாக எல்லோரும் இப்படி சொல்வதுண்டு..

'நான் உப்பு விற்கப் போனா மழை பெய்யுது..மாவு விற்கப் போனா காற்றடிக்குது'ன்னு..

இது யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ..எனக்கு மிகவும் பொருந்தி வருகிறது..

நான் பெசன்ட் நகரிலிருந்து..சைதாபேட்டைப் போக 23Cபேருந்திற்கு நிற்கும் போது..பெரம்பூர் செல்லும் 29C பேருந்து மூன்று நான்கு ஒரே நேரத்தில் வரும்..எனக்கு வேண்டிய வண்டியே வராது.நான் பெரம்பூர் போக வேண்டி வருகையில் 29C வராது 23 C தொடர்ந்து வரும்.

என்றேனும் வேண்டிய வண்டி உடனே கிடைத்து..அதில் உட்கார இடமும் கிடைத்தால்..அந்த வண்டி அடுத்த இரண்டொரு நிறுத்தங்கள் தள்ளி பிரேக் டவுன் ஆகும்..பின்னால் வரும் வேறு வண்டியில் தொற்றிக் கொண்டு போக வேண்டி இருக்கும்.

பேருந்தில் நடத்துநருக்கு என்னைப் பார்த்தால் தான் எட்டணா சில்லறை இல்லை என்று சொல்லிவிட்டு போகத் தோன்றும்.

தியேட்டருக்கு சினிமா பார்க்கப் போனால்..தினமும் காலியாய் இருக்கும் தியேட்டர்..நான் போகும் அன்றுதான் கூட்டத்தோடு இருக்கும்..எனக்கு முன்னால் நிற்கும் நபர் வரை டிக்கெட் கிடைக்கும்..எனக்கு பே..பே..தான்

நான் எண்பது ரூபாய் கொடுத்து ஆட்டோவில் போகும் இடத்திற்கு..என் பின்னாலேயே வேறு ஒருவர் அதே இடத்திலிருந்து அறுபது ரூபாய் கொடுத்தேன் என்பார்

அவ்வளவு ஏன்..எனது இடுகைகள் பல 6 வாக்குகள் வாங்கி தமிழ்மணத்தில் வாசகர் பரிந்துரையில் இடம் பெறாது இருந்தன..இப்போது சில நாட்களாக பத்து வாக்குகள் பெற்றும்..இடம் பெறவில்லை.வாசகர் பரிந்துரை எடுக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில்..'நான் உப்பு விற்க....' எனக்குத் தானே பொருத்தம்..

(ஏன்..மாவையும்..உப்பையும் சேர்த்து கேக்காக ஆக்கி விற்கலாமே..என புத்திசாலிகள் அறிவுரை கொடுக்கக் கூடும்..அறிவுரை மட்டும் தானே நாட்டில் மலிவாகக் கிடைக்கிறது)

Tuesday, June 8, 2010

'கலைஞர் என்னும் கலைஞன்' புத்தகமாக வருகிறது

நான் இணையத்தில் எழுதி இருந்த, கலைஞர் கதை,வசனம் எழுதியுள்ள 70க்கும் மேற்பட்ட படங்கள் வந்த ஆண்டு,நடிகர்கள்,இயக்குநர்கள் போன்ற விவரங்களின் சிறு குறிப்புகள் 32 பக்க அளவில்..நயினார் பதிப்பகம் சார்பில் புத்தகமாக வர இருக்கிறது.

கலைஞரின் 87 ஆம் அகவை மாதத்திலும்....தமிழ் செம்மொழி மாநாட்டையும் ஒட்டி வரப்போகும் இச் சிறு நூல் விலை 20 ரூபாய் மட்டுமே.





மொத்தமாக பிரதிகள் மாநாட்டை ஒட்டி கோவையில் விற்க விரும்புவோர்..என்னையோ(98402 82115)..அகநாழிகை பொன்.வாசுதேவனையோ(99945 41010) தொடர்பு கொள்ளவும்.

மேலும் புத்தகம் வெளியிட்டு தேதி விரைவில் அறிவிக்கப் படும்.

Monday, June 7, 2010

வெற்றியை அடையும் வழி..

எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.

எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும்.

ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள்.

கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்..

என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள்.

ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும்.

எடுத்த காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது.

எந்த வழியைப் பற்றியேனும் வெல்ல வேண்டும் என எண்ணினால்..அப்படிப்பட்ட வெற்றியைக் காணும் உடன் இருப்போர் மெல்ல மனம் மாறி நம்மை விட்டு விலகும் அபாயம் உள்ளது.இப்படிப்பட்ட வெற்றி உதறித் தள்ள வேண்டும்.

வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இருக்க வேண்டும்.சிறந்த வழியின் மூலம் கிடைக்கும் பலன் சிறிதானாலும்..அது ஞாலத்தின் மாணப் பெரிதாகும்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை

(புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்)

பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.

வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.அத்னால் தான் வள்ளுவனும்..

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார்.

Sunday, June 6, 2010

அவதூறு தாக்குதல் -தமிழ்மணம் அறிவிப்பு

tamilmanam: வாசகர் பரிந்துரை சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது - தமிழ்மணம் நிர்வாகம் புதிய அறிவிப்பு
tamilmanam: சக பதிவர்கள் மீது செய்த சில இடுகைகள் (இடுகைகள் மட்டும்) தமிழ்மணத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.

தமிழ்மணத்திற்கு நன்றி..

Tuesday, June 1, 2010

நான் விடை பெறுகிறேன் சந்தனமுல்லைக்கு வேண்டுகோளுடன்..

இணைய தளம்..

அவரவர்கள் எழுத்து ஆர்வத்தைத் தீர்க்கும் அற்புதமான தளம்..

நட்பு வட்டத்தைப் பெருக்கும் தளம்..

நல்லெழுத்துக்களுக்கு..நண்பர்கள் பின்னூட்டத்தை அளித்து நமக்கு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இடம்

சமீப காலமாக ஊடகங்களால் கவனிக்கப்பட்டு..தகுதியுள்ளவர்களின் படைப்பை தங்கள் பத்திரிகைகளில் பிரசுரிக்கும் சக்தி படைத்த இடம்..

திரைப்பட விமரிசனங்களைக் கண்டு..தயாரிப்பாளர்களும்..இயக்குநர்களும் நம் படத்திற்கு இணையத்தில் விமரிசனம் எப்படியுள்ளது என ஆர்வத்தை உண்டாக்கிய இடம்..

மேலே சொன்னவைதான் ஒவ்வொருவரையும் வலைப்பூ ஆரம்பித்து தங்கள் திறமையைக் காட்டச்சொன்னது..இதற்கு தமிழ்மணம்,தமிலீஷ்,திரட்டி,தமிழ்வெளி போன்ற திரட்டிகள் செயல்பட்டன.
ஆனால்..சமீப காலங்களில் அதன் போக்கு சற்று கவலையைத் தந்துள்ளது..

காரணம்..ஒருவேளை எல்லோரும் அறிவாளியாய் இருப்பதால் இருக்குமோ?

சமீபத்திய பிரச்னையில் சம்பந்தப்பட்டவர்கள் மௌனம் சாதித்த போதும் அவர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சலை அனைவராலும் உணரமுடிகிறது..போதும் விசிறியது..பதிவர்களே இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைப்போம்..

இதனால் நர்சிமிற்கு நான் சப்போர்ட் செய்வதாக எண்ண வேண்டாம்.அவரின் சர்ச்சைக்குரிய இடுகை கண்டனத்திற்கு உரியது..அதை எழுதியதற்கு கடந்த நான்கு நாட்களாக அதற்கான தண்டனையை அனுபவித்துவிட்டார்.

சந்தனமுல்லையைப் பொறுத்தவரை..அவரின் ..மொழிபெயர்ப்பு திறமையைக் கண்டும்..எழுத்துத் திறமையைக் கண்டும் வியந்தவன் நான்.நர்சிமின் மன்னிப்பை அவர் ஏற்பார் என்றே எண்ணுகிறேன்..

முல்லை..ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து கேட்கிறேன்..இந்த விஷயத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லி ஒரு பதிவிடுங்கள்..அது உங்களால் மட்டுமே முடியும்..

இனி..

ஜாதிப்பிரச்னை..தனி நபர்த் தாக்குதல் ஆகியவை மலிந்துவிட்ட இணையதளம் எனக்கு சலிப்பை ஏற்படுத்தி விட்டது..ஆகவே தமிழா..தமிழா..வலைப்பூ இனி இயங்காது என அறிவித்துக் கொள்கிறேன்..

இது நாள் வரை எனக்கு ஆதரவு அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

வாய் விட்டு சிரியுங்க..

1) ராகு காலம், எம கண்டம் இதுல எல்லாம் நம்பிக்கையில்லைன்னு எமகண்டத்தில கிளம்பி ஆஃபீஸ் போனியே என்ன ஆச்சு?
எனக்கு முன்னாலேயே அந்த மேனேஜர் எமன் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருக்கு

2)மெகாசீரியலுக்கான கதை உங்கக் கிட்ட இருக்கா..எங்கே ஒன் லைன்ல சொல்லுங்க
ஒரு பணக்கார மருமகள்..அவளைக் கொடுமைப் படுத்தற அத்தை..மௌனியாய் கணவன்...
ஆகா..அற்புதம் ..பிடியுங்க அட்வான்சை

3)அவருக்குப் பின்னாலேயே சொம்பைத் தூக்கிக்கிட்டு ஒருத்தர் போறாரே எதற்காக..
இணையதளத்தில ஏதோ சர்ச்சையாம்..நாட்டாமைப் பண்ணப் போறார் முதல்லப் போறவர்..பின்னால அவர் எச்சலைத் துப்ப சொம்போட போறார் உதவியாளர்

4)இந்த சமயத்தில நீ வந்தது என் மனைவிக்குப் பிடிக்கலைன்னு நினைக்கிறேன்
எப்படிச் சொல்ற
அவ போட்ட காஃபியை உனக்குக் குடிக்கக் கொடுக்கிறாளே

5)தொண்டர் 1- தலைவருக்கு வயிறு சரியில்லைன்னு நினைக்கிறேன்
தொண்டர்2- எப்படிச் சொல்ற
தொண்டர்1- மக்கள் கிட்ட இரண்டு விரல்களைக் காட்டும் போது திருப்பிக் காட்டறாரே!

6)பல் மருத்துவர்- உங்க மொத்தப் பல்லையும் இன்னிக்கு பிடுங்கியாகணும்
நோயாளி- ரொம்ப வலிக்குமே டாக்டர்
பல் மருத்துவர்- பல்லைக் கடிச்சுக்கிட்டுப் பொறுத்துக்கங்க

7)பதிவர் - எனக்கு இதுவரைக்கும் தலைவலின்னு வந்ததே இல்லை
நண்பர்-உங்களாலே மத்தவங்களுக்குத்தானே தலைவலி வரும்