Saturday, December 31, 2011

2011 ம்..2012ம்..




இருட்டு

கும்மிருட்டு

இருளுக்கு முடிவில்லையா?

உண்டென்று நம்புவோம்

விரைவில்

ஒளி பிறந்திடும்.



டிஸ்கி - அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துகள்

Friday, December 30, 2011

ஈரோடு விழா--சவால் போட்டி பரிசளிப்பு விழா..மற்றும் நான்



2011....ல்

பதிவுலகிலும்..சில பதிவர்கள் மீதும் ஏற்பட்ட மனக்கசப்பால்..அதிகமாக பதிவுகள் இடாது இருந்தேன்..

பின்னர் நான் பதிவுகள் இட்டாலும்...முன்னைப் போல் இல்லாமல் பதிவர்களிடமிருந்து சற்று விலகியே இருந்தேன்..

இந் நிலையில்...மீண்டும் தேவையில்லா சர்ச்சைகள் ஏற்படுமோ என்ற நிலையில்..அவசியம் உணர்ந்தே இப் பதிவு.

முதலில் ஈரோடு சங்கமம்..நிகழ்ச்சிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாகவே செல்ல வேண்டும் என்று ஆசை இருந்தும்..சில காரணங்களால் செல்ல இயலவில்லை.ஆனால் அது நடைபெறும் விதம் கண்டு மகிழ்ந்து முன்னர் பதிவுகள் இட்டுள்ளேன்.இந்த ஆண்டும் என்னால் செல்ல இயலவில்லை.

ஆனால்..மிகவும் விமரிசையாக நடந்தது குறித்து மகிழ்ச்சி.சாதாரணமாக...'வீட்டைக் கட்டிப்பாரு..கல்யாணம் பண்ணிப்பாரு' என்று சொல்வார்கள்.ஏனெனில்..வீடு கட்ட ஆரம்பித்தால் பல செலவுகள், தொல்லைகள் என கட்டி முடிப்பதற்குள் தாவு தீர்ந்து விடும்.அதே போன்றதுதான் ஒரு கல்யாணத்தை நடத்துவதும்..சத்திரம் பார்ப்பது,நகை வாங்குவது, சாப்பாடு அரேஞ்ச் செய்வது என செலவு கட்டுக்கு அடங்காமல் இழுத்துக் கொண்டிருக்கும்.

கிரகப்பிரவேசத்திற்கு வருபவர்கள்..இந்த அறையை இங்கே வைத்திருக்கலாம், சமையலறை இருட்டாக இருக்கிறது..என்று தன்னால் வீடு கட்ட முடியா இயலாமையாலோ அல்லது சற்று பொறாமையாலோ.. ஏதேனும் சொல்லிவிட்டு செல்வார்கள்.ஆனால் பட்ட கஷ்டம் வீட்டைக் கட்டியவனுக்கேத் தெரியும்.

அதே போல் கல்யாணத்திற்கு வந்துவிட்டு..மாப்பிள்ளை கருப்பு, பொண்ணு குள்ளம், சாப்பாடு சரியில்லை என குறை சொல்வார்கள்.

இதை எல்லாம் பெரிதாய் எடுத்துக் கொண்டால் வீடும் கட்ட முடியாது..வீட்டில் கல்யாணத்தையும் நடத்த முடியாது.

ஈரோடு சங்கமமும் அப்படித்தான்.ஆனால் என்ன..அவர்கள் மூன்று கல்யாணத்தை நடத்திவிட்டார்கள்..அதற்கு அவர்களிடம் இருந்த ஒற்றுமை,கட்டுப்பாடு,பொருள் உதவி எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டால்..அடேங்கப்பா...என ஆச்சரியப்படவே செய்யும்.

அப்படியே ஏதேனும் சிறு குறையிருந்தாலும்..நடப்பது நம்ம வீட்டு விழா..என்ற நினைப்பு இருந்தால் ஏதும் பெரிதாக தோன்றாது..

ஆகவே குறை சொல்வதை நிறுத்தி,நிறைகளை பாராட்டுங்கள்...

கதிர் குழுவினருக்கு பாராட்டுகள்..

அன்றே..சென்னையில் சவால் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா..

வேண்டுமென்றே அந்த நாளை வைத்தார்கள்...என ஒரு வதந்தையைக் கிளப்பியுள்ளனர்.

இது என்ன நான் பெரியவனா..நீ பெரியவனா..என்று அண்ணன்..தம்பிகளிடையே நடக்கும் வாய்க்கால்..வரப்பு தகராறா..இவர்களுக்குள்...

இரண்டு விழாக்களுமே ..ஒருவர்..ஒருவருக்குத் தெரியாமல் ஒரே நாள் குறித்து விட்ட விழா...ஆகவே கடைசி நேரத்தில் எதையும் கேன்சல் பண்ண முடியாது...என்ற உண்மையை
ப் புரிந்துக் கொண்டு பேசுங்கள்.

ஏதோ சொல்ல வேண்டும் என்று தோன்றியது..சொல்லி விட்டேன்..அவ்வளவுதான்..

அனைவருக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துகள்

மழை.....






கடல் அரக்கனால்

மேகப் பெண்

சூல் கொண்டு

பிறந்தது மழை


Thursday, December 29, 2011

கடைசித் தமிழனும்..விஜய்காந்தும்..




சமீபத்தில் ஒரு பொதுக் கூட்டத்தில் சுப.வீரபாண்டியன் பேசுகையில்..

'நான் ஆட்சிக்கு வந்த ஆறு வார காலத்திலேயே, தமிழகத்தை மின்வெட்டு இல்லாத மாநிலமாக்குவேன்’ என்றாரே அம்மையார்.

ஆறு மாத காலம் ஆகிவிட்டதே...! சென்னையில் இருப்பவர்கள் ஒருமணி நேர மின்வெட்டோடு தப்பித்தீர்கள். மற்ற நகரங்களில்
 தினமும் ஐந்து மணி நேரம். எந்தப் பத்திரிகையாவது இதைக் கேட்டதா?

'இந்த ஆட்சி மோசமான ஆட்சி’ என்று விஜயகாந்தே சொல்கிறார்.

இதிலிருந்து நமக்குப் புரிகிற ஒரே உண்மை.... விஜயகாந்துக்கே புரிந்து விட்டது என்றால், கடைசித் தமிழனுக்கும் புரிந்து விட்டது’
என்றல்லவா பொருள்!

என்று பேசியுள்ளார்.

நம் கேள்வி...விஜய்காந்தை கடைசித் தமிழன் என்கிறாரா?..அல்லது...கடைசித் தமிழனுக்கு அடுத்து நிற்பவர் விஜய்காந்த் என்கிறாரா?


Wednesday, December 28, 2011

விஜய் க்கு அதிர்ஷ்ட ஆண்டு 2012..??!!




விஜய்யின் படங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வந்த நிலையில் 'வேலாயுதம்" படம் வந்து வெற்றி பெற்று நல்ல கலக்க்ஷனுடன் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் வரும் 2012 ஆம் ஆண்டு..பொங்கல் அன்று வரவிருக்கிறது அவர் நடித்து ஷங்கர் இயக்கத்தில் 'நண்பன்' திரைப்படம்.

சாதாரணமாக பண்டிகை காலங்களில், அதுவும் குறிப்பாக பொங்கல் சமயத்தில் நிறைய படங்கள் வந்து..ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் ..ஆனால் இந்த பொங்கலுக்கு இரண்டு படங்களே வருகின்றன.கிட்டத்தட்ட ஒரு வார காலம் இந்த சமயம் வெளிவரும் படங்கள் எதுவாயிமும் அரங்கு நிறைந்த காட்சிகளாய் இருக்கும்...ஆனால் இச் சமயம் போட்டியில்லாததால் அநேக திரையரங்குகளில் அதிகக் காட்சிகள் இப்படம் திரையிடப்படலாம்..வசூலில் சாதனையும் புரியும் வாய்ப்பு உண்டு.

அடுத்து லிங்குசாமி இயக்கத்தில் வெளிவருகிறது 'வேட்டை' படம்.இதில் மாதவன், ஆர்யா நடித்துள்ளனர்.இப்படமும் வசூலில் வெற்றி படமாய் அமைய வாய்ப்புண்டு.

இது இப்படியிருக்க 2011ஆம் ஆண்டின் கடைசி வெள்ளியான நாளை 13 படங்கள் திரைக்கு வருகின்றன.இவை அனைத்தும் கிட்டத்தட்ட அரசு மானியம் கிடைக்கும் என எதிர்பார்த்து வெளிவருகின்றன.

அவை...

1) மதுவும் மைதிலியும்

2)பாவி

3)கருத்த கண்ணன் ரேக்ளா ரேஸ்

4)பதினெட்டான் குடி

5)வினாயகா

6)மகான் கணக்கு

7)வழிவிடு கண்ணே வழிவிடு

8)அபாயம்

9)வேட்டையாடு

10)மகாராஜா

இவை அனைத்தும் நேரடித் தமிழ் படங்கள்.இவை தயாரிப்பில் இருந்த போது கேள்விப்பட்டிருக்கிறோமா..?

தவிர்த்து...'வேட்டை நாயகன்", "புயல் வீரன்" ஸ்பீட் 2 ஆகிய மூன்று மொழி மாற்று படங்களும் வருகின்றன.

அடுத்த ஆண்டு வெளிவரும் எதிர்பார்ப்பு படங்கள்...

கமலின், "விஸ்வரூபம்", ரஜினி, "கோச்சுடையான்".. அஜீத்தின், "பில்லா 2"., சூர்யாவின், "மாற்றான்'

Tuesday, December 27, 2011

அன்னா ஹசாரேவுக்கு ரஜினிகாந்த் ஆதரவு





வலுவான லோக்பால் மசோதா கோரி மும்பையில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள சமூக ஆர்வலர் அன்னாஹசாரேவுக்கு
 நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்தார்.

இது குறித்து அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்துக்கு ரஜினி அனுப்பியுள்ள மெயிலில் கூறப்பட்டுள்ளதாவது,

ஊழல் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய். அதை இந்தியாவில் இருந்து வேருடன் அகற்ற வேண்டியது அவசியம்.
 ஊழலுக்கு எதிராக போராட அன்னா ஹசாரேயை நாம் பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
அவர் அர்ப்பணிப்பும் திறமையும் கொண்ட தலைவர்.

நாடாளுமன்றத்தில் வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற போராடி வரும் ஊழலுக்கு எதிரான அமைப்புக்கு
முழு மனதுடன் நான் ஆதரவு தெரிவிக்கிறேன்.

சத்தியாகிரகத்தின் பிறப்பிடம் இந்தியா. இங்கு மட்டுமே இதுபோன்ற அமைதியான போராட்டங்கள் சாத்தியமானது.
ரத்தம் சிந்தாத அமைதியான போராட்டத்தை அன்னா ஹசாரே தேர்ந்தெடுத்து இருக்கிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும்
 இந்தியர்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன் இவ்வாறு தனது இமெயில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

(தகவல்-தட்ஸ்தமிழ்)

தனுஷுக்கு பிரதமர் இல்லத்தில் விருந்து!




 தனுஷின் கொலவெறி பாட்டு, பிரதமருடன் விருந்து சாப்பிடும் அளவுக்கு 'உயர்த்தியுள்ளது'.

மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள '3' படத்தில் 'ஒய் திஸ் கொலைவெறி டி..' என்ற தமிங்கிலீஷ் பாட்டை
 எழுதிப் பாடியுள்ளார் தனுஷ். இந்தப் பாடல் ஏக பிரபலம் ஆகிவிட்டது. யு ட்யூபின் கோல்ட் விருது இந்தப் பாடலுக்கு
 தரப்பட்டது. டைம் இதழில் தனுஷின் பெயர் இடம்பெறும் அளவுக்கு பாப்புலராகிவிட்டது.

இன்னொரு பக்கம் தமிழ்ப் பாடலாசிரியர்கள், இசை விமர்சகர்கள் கடுமையாக இந்தப் பாட்டை விமர்சித்து வருகின்றனர்
. 'நேரடியான தமிழ்க் கொலை' இது என அவர்கள் சாடியுள்ளனர். ஏற்கெனவே தமிழ் சினிமா பாடல்களில்
தமிழ் வார்த்தைகளின் உபயோகம் குறைந்துவிட்ட நிலையில், தனுஷின் இந்த 'தமிழ்க் கொலை' புதிய ட்ரெண்டை
 சினிமாவில் உருவாக்கியிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில், தனுஷை தன்னோடு விருந்துண்ண அழைத்துள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
ஜப்பான் பிரதமர் யோசி கியோ நோடாவுக்கு டெல்லி ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள தனது வீட்டில் மன்மோகன் சிங்
நாளை (டிசம்பர் 28) விருந்து அளிக்கிறார். இந்த விருந்தில் பங்கேற்கத்தான் தனுஷுக்கு பிரதமர் அலவலகதத்திலிருந்து
 அழைப்பு வந்துள்ளது.

ஏற்கெனவே கொலவெறி ஹிட்டால் மிதப்பிலிருந்த தனுஷ், இந்த புதிய கவுரவத்தால் தலைகால் புரியாத மகிழ்ச்சியில்
 திளைக்கிறார்.

அவர் கூறுகையில், "கொலை வெறி பாடல் எனக்கு நிறைய கதவுகளை திறந்து விட்டுள்ளது.
இந்த பாடல் மிகுந்த அர்த்தம் உள்ளது. பாடலில் உள்ள ஆங்கில வரிகள் ஒவ்வொருவரையும் டச் பண்ணிவிட்டன.
இந்த வரிகளில் உள்ள நகைச்சுவை மற்றும் ஆழமான கருத்துக்கள் சாதாரண மக்களையும், இளைஞர்களையும்
கவர்ந்து விட்டன. அதுதான் எனக்கு இத்தனை பெரிய கவுரவத்தைக் கொடுத்துள்ளது," என்றார்.

(தகவல்-தட்ஸ் தமிழ்)


Monday, December 26, 2011

ரஜினி மண்டபத்தில் ஊழல் ஒழிப்பு உண்ணாவிரதம்





 அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக ஊழலுக்கு எதிராக இந்தியா என்ற அமைப்பு நடத்தவுள்ள உண்ணாவிரதப் போராட்டத்திற்கு
 தனது ராகவேந்திரா மண்டபத்தைக் கொடுத்துள்ளார் ரஜினிகாந்த். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா
மண்டபத்தில்தான் 3 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை இந்த அமைப்பினர் நடத்தவுள்ளனர்.

அன்னா ஹசாரே தனது போராட்டத்தை தீவிரப்படுத்தியபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து குரல் கொடுத்தவர் ரஜினிகாந்த்.
 டெல்லியில் அவர் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது அவருடன் தானும் உண்ணாவிரதம் இருக்க விரும்பியதாகவும்,
ஆனால் உடல் நலன் காரணமாக இருக்க முடியாமல் போய்விட்டதாகவும் வருத்தம் தெரிவித்திருந்தார் ரஜினி.

இந்த நிலையில் அன்னா ஹசாரே மும்பையில் இன்று மீண்டும் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்குகிறார்.
அதேசமயம் நாட்டின் அனைத்து நகரங்களிலும் இந்திய ஊழல் ஒழிப்பு அமைப்பினரும் உணணாவிரதம் தொடங்குகின்றனர்.

அந்த வகையில் சென்னையில் தொடங்கும் உண்ணாவிரதப் போராட்டம் ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான ராகவேந்திரா
கல்யாண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இந்த தகவலை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினி உறுதிப்படுத்தியுள்ளார்.

இலவசமாகவே இந்த மண்டபத்தை ரஜினி கொடுத்துள்ளார்.  தற்போது நாட்டில் விவாதிக்கப்பட்டு வரும்
ஊழலுக்கு எதிரான எந்த சட்ட மசோதாவுக்கும் தான் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

டிசம்பர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்காக தனது மண்டபத்தை இலவசமாக கொடுத்துள்ளார் ரஜினி

கடந்த ஆகஸ்ட் மாதம் அன்னா ஹசாரே 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தபோது தனது ஆதரவை ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.

இரு நாடுகள் மோதுவதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்தி விட்டது- கருணாநிதி




 ஏதோ இரண்டு நாடுகள் மோதிக் கொள்வதைப் போன்ற நிலையை கேரளா ஏற்படுத்தி விட்டது. முல்லைப் பெரியாறு
அணை விவகாரத்தில் பிரதமர் தலையிட்டு சுமூகத் தீர்வு காண உதவ வேண்டும் என்று பிரதமரிடம் திமுக தலைவர்
 கருணாநிதி மனு கொடுத்துள்ளார்.

சென்னை வந்திருந்த பிரதமர் மன்மோகன் சிங்கை  இன்று காலை பிரதமரை, திமுக தலைவர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.
அப்போது ஒரு மனு ஒன்றை அவர் அளித்தார்.

அதில் அவர் கூறியிருந்ததாவது:

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஏதோ இரு நாடுகளுக்கு இடையிலான மோதலைப் போல தமிழகத்திலும்,
 கேரளாவிலும் சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. இதற்கு முக்கியக் காரணம் கேரள அரசுதான்.

இரு மாநில மக்களும் இரு நாட்டு மக்களைப் போல மோதிக் கொண்டுள்ளனர். இந்த நிலை நிறுத்தப்பட வேண்டும்.

கேரள அரசு தொடர்ந்து அணை குறித்தும், இரு மாநில மக்களுக்கிடையே பகைமையை அதிகரிக்கும் வகையில்
 பேசி வருகிறது, செயல்பட்டு வருகிறது. கேரளாவில் காலம் காலமாக வசித்து வரும் தமிழர்களை அங்கிருந்து
வெளியேறச் செய்யும் நிலையை அது உருவாக்கி விட்டது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உணர்ச்சிப்பூர்வமான
கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது. அதுதான் தற்போது போராட்டங்களாக அங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலை உடனடியாக மாறாவிட்டால், குறைக்கப்படாவிட்டால் நிரந்தர காயமாக அது இரு மாநில உறவிலும்
 படிந்து விடும் அபாயம் உள்ளது. இரு மாநில மக்களுக்கிடையே ஏற்பட்டுள்ள பிளவு பெரிதாகி விடும் வாய்ப்பு உள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தற்போது உச்சநீதிமன்றத்தின் முன்பு உள்ளது. எனவே அணையின்
நீர்மட்ட அளவைக் குறைக்க கேரள அரசு எந்த நடவடிககை எடுத்தாலும் அது கோர்ட் அவமதிப்பாக அமையும்,
நீதித்துறைக்கு விடப்படும் மாபெரும் சவாலாக அமையும். தமிழக மக்களுக்கு அநீதி இழைப்பதாக அமையும்.

தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணையை பலவிதங்களிலும் பலப்படுத்திய பின்னரும், அணையின்
நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தாமல் தொடர்ந்து 136 அடியாகவே வைத்திருக்கிறது கேரள அரசு.
தற்போது அதை மேலும் குறைத்து 120 அடியாக குறைக்க முயற்சிக்கிறார்கள்.
உச்சநீதிமன்ற உத்தரவுகளை கேரள அரசு சற்றும் சட்டை செய்யாமல் உள்ளது.

கேரள அரசு தனது நிலையில் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், தமிழகத்தில் உள்ள ஐந்து மாவட்டங்கள்
வறட்சிப் பிரதேசமாக மாறும் அபாயம் உள்ளது. பாலைவனங்களாக அவை மாறி விடும்.

எனவே இந்த விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட்டு, 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் கூறியபடி 142 அடியாக
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்துமாறு கேரள அரசை வலியுறுத்த வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை
கேரளம் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் கருணாநிதி.

(தகவல்-தட்ஸ்தமிழ்)

Sunday, December 25, 2011

கீப் யுவர் மொபைல்ஸ் இன்---------- -- மோட்...





கவர்னர் மாளிகையில் பிரதமரை சந்தித்து 16 பக்கங்கள் அடங்கிய கோரிக்கை மனுவை அளித்தார்..அவை..

1) உச்ச நீதி மன்ற ஆணைப்படி முல்லைப் பெரியாறு நீர்மட்டத்தை 142 அடி உயர்த்துதல்

2)அணையின் பாதுகாப்பு கருதி மத்திய தொழில் பாதுகாப்பு படையை அங்கு நிறுத்த வேண்டும்

3)தேசிய பேரிடர் ஆணைய நிபுணர் குழுவை திரும்பிப் பெற வேண்டும்

4)தேசிய உணவு பாதுகாப்பு சட்ட மசோதாவிலிருந்து தமிழக அரசுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.

5) தமிழகத்திற்கு வழங்கப் படும் உணவு தானியங்கள் அதே போன்று வழங்க உறுதி செய்ய வேண்டும்,மண்ணெண்ணெய் அதே அளவு வழங்க வேண்டும்

6)தமிழக மீனவர் மீது நடத்தப் படும் தாக்குதலை தேசிய பிரச்னையாக எடுத்துக் கொள்ள வேண்டும்

7) தமிழக அரசின் கடன் சுமை லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.மேற்கு வங்க அரசுக்கு மத்திய அரசு உதவி செய்துள்ளது போல நிதி உதவியை தமிழக அரசுக்கும் வழங்க வேண்டும்

8)மத்திய தொகுப்பில் இருந்து 1000 மெகா வாட் மின்சாரம் வழங்க வேண்டும்

ஆமாம்...இதற்கு மன் மோஹன் சிங்கின் பதில் என்ன...

பிளீஸ்..கீப் யுவர் மொபைல் இன் மன் மோகன் சிங் மோட்.....  இதற்கு உங்களுக்கு அர்த்தம் தெரிந்தால்... பிரதமரின் பதில் என்ன என்பதும் தெரிந்திருக்கும்..

டிஸ்கி-..பிரதமர் அலுவலகத்தில் மனுக்களாக வரும் காகிதங்கள் எடைக்கு எடை பழைய பேப்பர் வாங்குபவர் யாருக்கெனும் போடப்படுகிறதா..அதன் வருமானம் என்ன...இதைத் தெரிந்து கொள்ள யாரேனும் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் முயல்வார்களா?

Saturday, December 24, 2011

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்




யூதர்கள் தங்களை மிகவும் உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களைச் சாத்தானின் மக்கள் என்றும் எண்ணி இருந்தார்கள்.யூத மதத்திலிருந்து பிரிந்த சமாரியர்களையும் அவர்கள் வெறுத்தார்கள்.

ஆனால் இயேசுநாதர் அவர்களோ எல்லா மக்களையும் இறைவனின் குழந்தைகளாக எண்ணி அன்பு காட்ட வேண்டும் என்று அறிவுரை கூறி வந்தார்.

அவரின் இந்த அறிவுரை யூத மத குருக்களுக்குப் பிடிக்கவில்லை

வேத நூலை நன்கு அறிந்த மதகுரு ஒருவர் இயேசுநாதர் அவர்களிடம் குற்றம் காண வேண்டும் என்ற நோக்கில், 'சொர்க்கம் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்' என்று கேட்டார்.

'இது குறித்து வேத நூலில் என்ன சொல்லி இருக்கிறது' என்று அவரிடம் பதில் கேள்வி கேட்டார் இயேசுநாதர்.

'உன் இறைவனாகிய கடவுளை உன் உள்ளத்தாலும், உடலாலும் முழுமையாக நேசிப்பாயாக.உன்னை நேசிப்பதைப் போலவே உன் அண்டை அயலானையும் நேசிப்பாயாக என்று எழுதியுள்ளது..என்றார் அவர்.

'நன்கு சொன்னீர்.இவற்றையே தொடர்ந்து செய்து வாரும்.உமக்கு சொர்க்கம் கிடைக்கும்' என்றார் இயேசுநாதர்.

'யூதனுக்கு யூதனே அண்டை அயலான்.மற்றவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்லர்' என்ற எண்ணம் கொண்டிருந்த வர், 'என் அண்டை அயலான் யார்?' என்று கேட்டார்.

இதற்கு விளக்கம் தர நினைத்த இயேசு, ஒரு கதை சொல்லத் தொடங்கினார்."யூதன் ஒருவன் எருசலேமிலிருந்து எரிக்கோவிற்குச் சென்றுக் கொண்டிருந்தான்.வழியில் திருடர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டார்கள்.அவனிடமிருந்த பொருளைக் கொள்ளை அடித்ததுடன் அவனையும் படுகாயப்படுத்தி விட்டுச் சென்றார்கள்.உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான் அவன்.

அந்த வழியாக யூதகுரு ஒருவர் வந்தார்.அவனைப் பார்த்த அவர் எந்த உதவியும் செய்யாமல் சென்று விட்டார்.

அடுத்ததாக யூதர் கோவில் பணியாள் ஒருவன் அங்கு வந்தான்.அவன் துடித்துக் கொண்டிருப்பதைக் கண்டும் காணாதவன் போல அங்கிருந்து சென்று விட்டான்.

கழுதையின் மேல் சமாரிய வணிகன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த யூதன் அருகே சென்றான்.காயங்களை எல்லா, கழுவிக் கட்டுப் போட்டான்.பிறகு அவனைத் தன் கழுதையின் மீது ஏற்றிக் கோண்டு ஒரு சத்திரத்தை அடைந்தான்.ஒருநாள் முழுதும் அங்கேயே தங்கி இருந்து கவனித்தான்.அவனுக்கு இன்னமும் உணர்வு திரும்பவில்லை.

தனக்கு அவசர வேலை இருப்பதை உணர்ந்த சமாரியன், 'சத்தரத்துக்காரரே..இவரை நன்கு கவனித்துக் கொள்ளுங்கள்.செலவைப் பற்றிக் கவலைப் பட வேண்டாம்.இந்த இரண்டு பொற்காசுகளை வைத்துக் கோள்ளுங்கள்.அதிகம் செலவானால் நான் திரும்பி வந்து தருகிறேன்' என்று சொல்லி விட்டு சென்றான்.என்ற இயேசுநாதர் அவர்கள்,'இப்போது சொல்லுங்கள்..திருடர்களிடம் சிக்கிய அந்த யூதனுக்கு அயலானாய் நடந்து கொண்டவன் யார்?' என்று கேட்டார்.

'அவனுக்கு இரங்கி உதவி செய்த சமாரியனே நல்ல அயலான்' என்றார் மத குரு.

நீரும் சென்று அப்படியே நடந்து கொள்ளும் என்றார் இயேசுநாதர் அவர்கள்..

டிஸ்கி -  அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல் வாழ்த்துகள்.



அஜீத்... சத்தமில்லாமல் ஒரு சாதனை!



 





ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அ
டுத்தசூப்பர் ஸ்டார்
நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை
 செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத். 


அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக
 பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும்

 இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து
அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.

இந்த வெற்றி மற்றும் வசூல் காரணமாக, அஜீத்தின் அடுத்த படத்துக்கான
வர்த்தகம் எகிறிவிட்டது. சன் பிக்சர்ஸ் ஒரு பக்கம், வேறு போட்டி
 நிறுவனங்கள் மறுபக்கம் என அந்தப் படத்தை வாங்கப் போட்டி போடுகின்றன!

Friday, December 23, 2011

மத்திய அரசைக் குறை கூறக்கூடாதாம்...




முல்லைப் பெரியாறு பிரச்னையில் மத்திய அரசை குறை கூறுவது சரியல்ல என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் கூறினார்.

செய்தியாளர்களிடம் ஞானதேசிகன் கூறியது:÷முல்லைப் பெரியாறு பிரச்னையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்பதுதான் தமிழக அரசு மற்றும் அரசியல் கட்சிகளின் நிலை.

எனவே, மத்திய அரசு தலையிட்டுத் தீர்வு காணவில்லை என்று குறை கூறுவது சரியல்ல. இரு மாநிலங்களும் கேட்டுக் கொண்டால் மட்டுமே மத்திய அரசு தலையிட முடியும்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்று 2006-ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனை ஏற்காத கேரள மாநில அரசு, சட்டப் பேரவையில் தீர்மானம் கொண்டு வந்தது. இதனால், இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆனந்த் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் அணையை ஆய்வு செய்ய உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை.

அணையின் நீர்மட்டத்தை கேரள அரசால் குறைக்க முடியாது. அணையை உடைக்க எந்தவிதமான ஆயத்தப் பணிகளையும் கேரளம் மேற்கொள்ளவில்லை. அதனால் அணையை உடைக்கவும் வாய்ப்பில்லை.

இந்த உண்மைகள் எல்லாம் தெரிந்திருந்தும் தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசை குறைகூறி அரசியல் செய்து வருவது கண்டிக்கத்தக்கது. இப்பிரச்னையில் இரு மாநிலங்களுக்கு இடையேயான நல்லுறவைக் கெடுக்கும் வகையில் சிலர் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது இரு மாநில அரசுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிஸ்கி- இந்நிலையில் டிசம்பர் 25ஆம் நாள் மெரினாவில் ஒன்று கூடுவோம்


Thursday, December 22, 2011

பொய் சொல்வது யார், மத்திய காங்கிரஸ் அமைச்சரா? கேரள முதல்வரா?




முல்லைப் பெரியாறு தொடர்பாக மைய அரசு போடும் இரட்டை வேடத்தை மீண்டும் தினமணி தன் தலையங்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.

அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..

இனி தலையங்கம்...

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு (சர்வே) செய்வதற்காக எந்தக் கோரிக்கையையும் கேரள அரசு இதுவரை அனுப்பவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை.
ஏனென்றால், கேரள அரசு சர்வே நடத்தி, எந்த இடத்தில் அணை கட்ட வேண்டும்; எவ்வளவு உயரம் கட்ட வேண்டும் என்பதையெல்லாம் கணித்து விட்டது என்கிற தகவலை கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இப்படியொரு பதிலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர் இவ்வாறு கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் அளித்த பேட்டியில், புதிய அணைக்கான கருத்துரு உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள சிறப்புக் குழுவிடம் செப்டம்பர் 29-ம் தேதி அளிக்கப்படும் என்று (செப்.20-ம் தேதி ) முன்பு அளித்த பேட்டியிலேயே தெரிவித்திருக்கிறார்.
தற்போது அமைச்சரின் பேட்டி குறித்து கேரள பத்திரிகைகள், கேரள நீர்ப்பாசனத் துறை தலைமைப் பொறியாளரிடம் விளக்கம் கேட்டபோது அவரும், "ஆய்வு குறித்து ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெற்று ஆய்வு நடத்திய பிறகுதானே, புதிய அணைக்கான கருத்துருவே தயாரிக்க முடிந்தது' என்று கூறியுள்ளார். புதிய அணை அமையவுள்ள பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி. இங்கே எந்தவொரு பணியை மேற்கொள்வதாக இருந்தாலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் நடத்த முடியாது.
"வனத்துறையின் அனுமதி பெறாமல் எப்படி ஆய்வு நடத்த முடியும்? ஆய்வு நடத்தாமல் எப்படி டிபிஆர் (டீடெய்ல்டு பிராஜக்ட் ரிபோர்ட்) தயாரிக்க முடியும்? 2010-ம் ஆண்டிலேயே புதிய அணை கட்டுவதற்காக சுற்றுச்சூழல் துறையின் அனுமதிக்கு விண்ணப்பித்தோம். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு (ஈ.ஐ.ஏ) செய்யாமல் அனுமதி அளிக்க இயலாது என்று மத்திய அரசு சொன்னது. அதன் பிறகு இந்த மதிப்பீட்டைச் செய்யும் பணியை கேரள வனஆராய்ச்சிக் கழகத்திடம் அளித்தோம். அவர்களால் செய்ய இயலவில்லை. அதனால் இதைச் செய்யக்கூடிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதுபற்றி மத்திய அரசுக்கும் தகவல் கொடுத்துள்ளோம்' என்று கேரள நீர்ப்பாசனத் துறையின் தலைமைப் பொறியாளர் வெளிப்படையாகப் பேட்டியளிக்கிறார்.
என்ன நடந்து கொண்டிருக்கிறது? மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ஜெய்ராம் ரமேஷ் பொறுப்பு வகித்த காலத்தில் இதற்கான அனுமதி கிடைத்ததாக கேரள எம்.பி.க்கள் சொல்கின்றனர்.
ஜனவரி 2010-ல் வெளியான செய்திகளில், கேரள நீர்ப்பாசனத் துறை புதிய அணைக்கான சர்வே நடத்தி, தற்போதுள்ள அணைக்குக் கீழே 426 மீ, 627 மீ, 650 மீ அணைகள் கட்டும் ஆய்வுகளை நடத்தியுள்ளதாகவும், இந்த இடங்களில் உள்ள மண், பாறையின் தன்மை குறித்து அறிய இதன் மாதிரிகளை ஆய்வுக்காக லால்பகதூர் சாஸ்திரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும்கூட செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது இரண்டு கேள்விகளைத்தான் நாம் மத்திய அரசிடம் கேட்க வேண்டியிருக்கிறது.
புதிய அணையைக் கட்டுவதற்கான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளிக்காமல் இத்தனை பணிகளும் நடந்திருக்க முடியுமா? அனுமதியின்றி நடந்திருக்குமேயானால், அதற்காக மத்திய வனத்துறை என்ன நடவடிக்கையை இந்த மாநில அரசின் மீது மேற்கொள்ளப் போகிறது?
இதைவிட முக்கியமாக இன்னொரு கேள்வி இருக்கிறது.
மத்திய வனத்துறையின் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் அமைந்திருக்கும் முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில், புதிய அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க முடியுமா? பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இத்தகைய புதிய அணையைக் கட்டுவதால் பல்லுயிர் பெருக்கத்துக்குப் பாதிப்புகள் ஏற்பட்டுவிடாதா?
அணையின் நீரை 142 அடிக்கு உயர்த்தினால் அதனால் தேங்கும் அணை நீர்ப் பரப்பு பல ஆயிரம் ஏக்கர் அதிகரிக்கும். அப்போது பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படும். அதைக் கருத்தில்கொண்டாகிலும் அணை நீரை 136 அடிக்கு மேலாக உயர்த்த அனுமதிக்கக்கூடாது என்று நீதிமன்றத்தில் கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி முறையிட்டிருக்கும்போது, புதிய அணை கட்டுவதால் மட்டும் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படாதா? இதற்குக் கேரள முதல்வர் உம்மன் சாண்டி பதிலளிக்கட்டும்.
புவிவெப்ப மாநாட்டு ஒப்பந்தத்தில், வெப்ப மண்டலக் காடுகளைக் காப்பதாக ஒப்புக்கொள்ளும்பட்சத்தில், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் புதிய அணை கட்டுவது சாத்தியமா? அதற்கு மத்திய அரசு அனுமதிக்குமா? என்கிற கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவர் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன்.
அந்த இடத்தில் புதிதாக அணை கட்டும் விவகாரத்தை கைவிடும் கோரிக்கையைத் தவிர, வேறு எதை வேண்டுமானாலும் தமிழக முதல்வருடன் பேசத் தயார் என்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி. புதிய அணையை ரூ.650 கோடிசெலவில் கட்டுவதற்கும் அவர்கள் திட்டம் தீட்டிவிட்டார்கள். புதிய அணையைக் கட்டும்போது, முல்லைப் பெரியாறு அணையை எவ்வாறு, எந்தெந்த நிலைகளில் உடைப்பது என்பதை பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியாக அளிக்கிறார்கள். உடைக்கப்படும் அணையிலிருந்து எந்தெந்தப் பகுதியை புது அணைக் கட்டுமானத்துக்குப் பயன்படுத்தலாம் என்றும் பேசுகிறார்கள்.
இவ்வளவு நடக்கிறதே, மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜனின் பதில் என்ன? அணை கட்ட அனுமதி தருவாரா, மாட்டாரா என்பதை அவர் தெளிவுபடுத்தியாக வேண்டும்!
பொய் சொல்வது யார், ஜெயந்தி நடராஜனா, உம்மன் சாண்டியா?

Wednesday, December 21, 2011

முல்லை பெரியாறு....கேரளாவிற்கு ஆதரவா மைய அரசு..




இரண்டு மாநிலங்களிடையே மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டும், பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தும் வரும் நிலையிலும் மைய அரசு அளவிற்கு அதிகமாக மௌனம் சாதித்து வருகிறது.

தமிழக விவகாரங்கள் விஷயத்தில்..இலங்கை தமிழர் பிரச்னையில் மைய அரசு மௌனமாய் இருந்தது போலவே இப்போதும் இருந்து வருகிறது.ஒருவேளை தமிழகம் இந்திய மாநிலங்களில் ஒன்று என்பதை மறந்துவிட்டார்களா..எனத் தெரியவில்லை..

அதே சமயம் நடந்துவரும் நிகழ்வுகளைப் பார்த்தால்..மத்திய அரசு கேரளா வைக்கும் கோரிக்கைகளை ஒவ்வொன்றாய் நிறைவேற்றி வருவதாகவேத் தெரிகிறது.

2006ல் உச்ச நீதி மன்றம் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்திக் கொள்ளலாம்..என தீர்ப்பு வழங்கிய போதும்...அதை சுட்டிக்காட்டாத மைய அரசு..சுற்றுச் சூழல் அமைச்சர் கேரளாவில் புது அணைக்கட்ட இடம் ஆய்வு செய்ய அனுமதி வழங்கியுள்ளதை அறிந்தும் மௌனம் சாதித்தது.தமிழர்களால் வெறும் வறட்டுத் தவளைகளாய் கத்தத்தான் முடிந்தது.

இந்நிலையில், அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உச்ச நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு..பல சோதனைகளை நடத்தி வருகிறது.இவர்களின் அறிக்கை ஃபெப்ருவரி மாதம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்த சட்ட நடைமுறைகளை மீறும் வகையில்..பேரழிவு ஏற்படும் என, அவசரக் கால திட்டம் ஒன்றைத் தயாரிக்க பிரதமரைஅணுகியுள்ளது கேரளா .பிரதமர் தேசிய இயற்கை பேரழிவு நிர்வாகம் என்ற அமைப்பிற்குத் தலைவர்.அந்த பொறுப்பில் நிபுணர் குழுவை பிரதமர் நியமித்துள்ளார்.இது பிரதமரின் ஒரு கண்ணில் வெண்ணெய்..மறு கண்ணில் சுண்ணாம்பு என்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது ..ஒவ்வொரு தமிழனையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

காவிரி பிரச்னையிலும் உச்ச நீதி மன்ற ஆணையை கர்நாடகம் மதிக்கவில்லை..மைய அரசு கண்டுக் கொள்ளவில்லை.
அதே நிலைதான் இப்போதும்.

கேரளா ..புது அணை கட்டும் விவகாரத்தில் பிடிவாதமாக உள்ள நிலையில்..இரு மாநில முதல்வர்களும் சேர்ந்து பேச வேண்டும்..என்ற கோரிக்கை வீண்தான்..

தமிழக முதல்வர் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்..ஒருமித்த முடிவை எடுக்க வேண்டும்..தமிழர்கள்..கட்சி வித்தியாசத்தை மறந்து ஒன்று பட்டு நிற்க வேண்டிய நேரம் இது.

மாநிலத்திற்கு பங்கம் ஏற்படாத வகையில்..தமிழக அரசியல் கட்சிகள் ஒன்று பட வேண்டும்..இல்லையேல் வரலாறு அவர்களை மன்னிக்காது.

முடிந்தால்..அனைத்து தமிழக எம்.பி.க்களும் ராஜினாமா என்ற முடிவை எடுக்கலாம்.

பல்வேறு காரணங்களுக்காக தமிழக நலனை மையமாகக் கருதி ராஜினாமா செய்த சி.எஸ்., அழகேசன், வாழப்பாடி அவர்களை இத் தருணத்தில் நினைவில் கொள்வோம்.



Tuesday, December 20, 2011

சச்சினுக்கு பாரதரத்னா கொடுக்க எதிர்ப்பு...





கிரிக்கெட் வீரர்களுக்கும் திரைப்படத் துறையினருக்கும் பாரத் ரத்னா பட்டம் வழங்குவது, அந்த விருதினை அவமதிக்கும் செயல் என்று பிரஸ் கவுன்சில் தலைவரும் நீதியரசருமான மார்கண்டேய கட்ஜு கூறியுள்ளார். அவர்கள் ஒன்றும் சமூக சேவகர்கள் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், ஹாக்கி வீரர் தயான் சந்த் ஆகியோருக்கு பாரதரத்னா விருது வழங்கவேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் பாரத ரத்னா விருது பற்றி முன்னாள் நீதியரசரும் பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

நாடு சிக்கலான தருணத்தில் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், நாட்டை சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்லும் நபர்கள் நமக்குத் தேவை என்று தெரிவித்தார். அதுபோன்ற நபர்கள் மறைந்து விட்டிருந்தாலும், அவர்களுக்குத் தான் பாரத் ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். உண்மையான கதாநாயகர்களை மறந்துவிட்டு, மற்றவர்களை போற்றுவதாகவும் மார்கண்டேய கட்ஜு குறிப்பிட்டார்.

கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா நடிகர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்குவது அந்த விருதினை அவமதிக்கும் செயல் என்று கூறிய அவர், அவர்களுக்கு எந்த வித சமூகத் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளார்.

டாக்டர் அம்பேத்கார், சர்தார் வல்லபாய் படேல் போன்ற சமூக போராளிகளுக்கு வழங்கப்பட்ட விருதினை பலருக்கும் வழங்க வலியுறுத்துவது சமூக சீர்கேடு என்றும் மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.

டிஸ்கி- நேர்மையான பின்னூட்டங்கள் வரவேற்கப்படுகின்றன..

காவல் தெய்வம்...




ஊரைக் காக்கும்

எல்லை அம்மன் கோயிலின்

உண்டியலைக் காணோமாம்..

திருடனைப் பிடிக்க

சிறப்பு பூஜையாம்....



Monday, December 19, 2011

படிக்க வேண்டிய தலையங்கம்..




தினமணியில் வெளியாகும் பல செய்திகளில் எனக்கு உடன்பாடில்லை என்றாலும்..'விரயம்' என்ற தலைப்பில் வந்துள்ள இந்த தலையங்கம்..நேர்மையாகவே எழுதப்பட்டதாகத் தோன்றுவதாலும்..அனைவரும் இதை படிக்க வேண்டும் என நான் நினைப்பதாலும்..அதை அப்படியே கீழே தந்துள்ளேன்.

"உழலை அகற்ற வலுவான லோக்பால் மசோதா தேவை என்று கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
 இந்த மசோதா விரைவில் ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள தேர்தலை மனதில்கொண்டு அறிவிக்கப்படுகிறது என்று அரசியல் வட்டாரங்களில் பேச்சு இருந்தாலும், இதுகுறித்து யாரும் எந்தக் கருத்தையும் முன்வைக்கவில்லை.
 உணவு என்பது எல்லாருக்கும் இன்றியமையாத் தேவை. குறிப்பாக, ஏழைகளுக்கும் நடுத்தர மக்களுக்கும் மிகமிக அவசியம். சுமார் 75 விழுக்காடு குடும்பங்கள் பயனுறும் என்று எதிர்பார்க்கப்படுகிற உணவுப் பாதுகாப்பு மசோதா குறித்து எதிர்ப்புத் தெரிவித்தால் அந்தக் கட்சி மக்கள் வெறுப்பைச் சம்பாதித்துக்கொள்ளும். வாக்குகள் கிடைக்காது. ஆதரித்தால், அது காங்கிரஸ் கட்சிக்கு வாக்குகளைப் பலப்படுத்துவதாக அமைந்துவிடும்.
 ஆகவே, அரசியல் கட்சிகள் இதுகுறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருக்கின்றன. இந்த மெüனத்துக்கும் காரணம் இருக்கிறது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவின் விவாதத்துக்கு அனுப்பப்பட்டு மீண்டும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் முன்வைக்கப்படும்போது பார்த்துக்கொள்ளலாம் என்ற கருத்தாகவும் இருக்கலாம். எதிர்க்கட்சிகளின் இப்போதைய ஆயுதம் லோக்பால் மசோதா என்பதால் உணவுப் பாதுகாப்பு மசோதா அடக்கி வாசிக்கப்படுகிறது.
 அரசியல் கட்சிகள் ஏதும் வாய் திறக்காவிட்டாலும், தற்போது மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ள உணவுப் பாதுகாப்பு சட்டத்தால் இந்தியாவுக்கு மேலும் நிதிச் சுமைதான் அதிகரிக்கும் என்கின்றனர் பொருளாதார வல்லுநர்கள்.
 முதற்கட்டமாக உணவு மானியத் தொகை தற்போதுள்ள ரூ. 63,000 கோடியிலிருந்து ரூ. 95,000 கோடியாக உயரும். மேலும், உணவு தானிய உற்பத்தியை 5.5 கோடி டன்னிலிருந்து 6.1 கோடி டன்னாக உயர்த்தவும் வேண்டும். இதை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி செலவிட அரசு திட்டமிடுகிறது.
 ஏற்கெனவே, பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் குறைவாக இருக்கிறது என்பதும், இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்துகொண்டே போகிறது என்பதும் பொருளாதாரம் தெரியாதவர்களும்கூட புரிந்துகொள்ளக்கூடிய அளவுக்கு வெளிப்படையாக இருக்கிறது. இந்த நிலையில் இத்தகைய பெரும் நிதிச் சுமையை மத்திய அரசு தாங்குமா என்பது ஒருபுறம் இருக்க, இவர்கள் எதிர்பார்க்கும் உணவு உற்பத்தி நிகழுமா என்ற அச்சமும் சேர்ந்தே எழுகிறது.
 மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி சென்ற ஆண்டில் 337 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது என்றால், இந்த ஆண்டு 369 லட்சம் ஏக்கராக அது அதிகரித்துள்ளது. அதிலும்கூட அண்மையில் பெய்த மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாகுபடி பரப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், இந்த சிறிய சாகுபடிப் பரப்பு அதிகரித்ததால் ஏற்படக்கூடிய பலனை, வெள்ளத்திற்காக கொடுத்தாக வேண்டியதாகிவிடும். இதேபோன்ற நிலைமைதான் பருப்பு தானிய வகைகளிலும். இன்னும் சொல்லப்போனால், பருப்பு தானிய வகைகளில் சாகுபடி பரப்பு சென்ற ஆண்டைக் காட்டிலும் குறைந்திருக்கிறது.
 கோதுமை சாகுபடி பரப்பிலும் பெரிய சாதனை அளவை எட்டிவிடவில்லை. புவிவெப்பம் தொடர்பான ஒரு கருத்தரங்கில் பேசிய வேளாண் விஞ்ஞானி எம். எஸ். சுவாமிநாதன் குறிப்பிடுகையில், இந்தியாவின் வெப்பம் ஒரு டிகிரி அதிகரித்தாலும் 6 மில்லியன் டன் கோதுமை உற்பத்தி குறைந்துவிடும் என்கிறார். புவிவெப்பத்தைக் குறைக்க எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாத நிலையில், இத்தகைய ஆபத்து இந்தியாவுக்கு காத்திருக்கிறது என்றே கருத வேண்டியிருக்கிறது.
 இவ்வாறாக வேளாண் பாதுகாப்பு இல்லாத சூழலில் உணவுப் பாதுகாப்பு என்பது எவ்வாறு சாத்தியம்? மத்திய அமைச்சகத்தின் கணக்குப்படி உணவு உற்பத்தியில், எல்லாப் பயிர்களையும் சேர்த்து 3 மில்லியன் டன் அதிகரிக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.
 வேளாண் துறையில் 100 விழுக்காடு அன்னிய முதலீட்டை அனுமதித்துவிட்டு, மரபீனி காய்கறி, பயிர்களுக்கும் அனுமதி அளித்துவிட்டு, உற்பத்தியைப் பெருக்குங்கள் என்று விவசாயியிடம் சொன்னால் அவர் என்னதான் செய்வார்? மத்திய அரசு வேளாண்துறையில் உற்பத்தியை முடுக்க முதலீடு செய்யும் ரூ.1 லட்சம் கோடி ரூபாய் விவசாயிக்குப் போய்ச் சேரப் போவதில்லை. இந்தத் தொகை பல வகைகளில் பெரும் நிறுவனங்களுக்கே நேரடியாகப் போய்விடும். சில இனங்களில் வங்கிக் கடனுதவி, கடனுக்குத் தள்ளுபடி என்று இந்தத் தொகையை முழுவதும், உண்மையான விவசாயியைத் தவிர, ஏனைய எல்லாரும் அனுபவித்துப் பயனடைவர்.
 வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் குடும்ப அட்டைக்கு ஒரு நபருக்கு 7 கிலோ உணவு தானியமும் மற்ற குடும்ப அட்டைகளுக்கு ஒரு நபருக்கு 3 கிலோ உணவு தானியம் வீதமும் வழங்கப்படும் என்று இந்த மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் இவை ரூ.3 அல்லது ரூ.2 விலையில் விற்பனை செய்யப்படவும் உள்ளது.
 மிகக் குறைந்த விலையில், அல்லது இலவசமாக உணவுப் பொருளை வழங்கினால் எல்லா மக்களும் பயன்பெறுவார்கள் என்பது தவறான கருத்து. இதற்கு தமிழ்நாட்டை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். 20 கிலோ இலவச அரிசி திட்டத்தால் உண்மையான ஏழைகள் பயன்படுகிறார்கள். அதில் சந்தேகம் இல்லை. ஆனால் எல்லாருக்கும் இலவசமாகக் கொடுப்பதால், அது கடத்தப்படுகிறது. இலவசமாக வழங்கப்படும் 20 கிலோ அரிசியை தமிழக மக்கள் தங்கள் வீடுகளில் பயன்படுத்தியிருந்தால் கடத்தலுக்கு அரிசி கிடைத்திருக்காதே? பெரும்பாலான அரிசிக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் அல்லது அரிசி விலை குறைந்திருக்கும். ஆனால் அவ்வாறாக நடக்கவில்லையே, ஏன்?
 மக்களைக் கவர வேண்டும் என்பதற்காகவும், தேர்தலில் வாக்குகளைப் பெறவும் முறையான பயனளிப்பு இல்லாத திட்டங்களை நடைமுறைப்படுத்துவதால் நிதிச் சுமை ஏறிக்கொண்டே போகுமே தவிர, பொருளாதாரம் வளர்ச்சி அடையாது!"


அ.இ.அ.தி.மு.க., விலிருந்து உடன் பிறவா சகோதரி திடீர் நீக்கம்




அ.இ.அ.தி.மு.க., விலிருந்து ஜெ யின் உடன் பிறவா சகோதரி, சசிகலா,அவர் கணவர் எம்.நடராஜன்,திவாகர்,தினகரன்,பாஸ்கரன்,வளர்ப்பு மகனாய் இருந்த சுதாகர்,டாக்டர் வெங்கடேஷ்,மோகன்,குலோத்துங்கன்,ராஜ ராஜன்,ராமசந்திரன்,ராவணன் ஆகியோர் கூண்டோடு கட்சியிலிருந்து அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.

சசிகலா தலைமைச் செயற்குழு உறுப்பினராய் இருந்தவர்.

இவர்களுடன் அ.இ.அ.தி.மு.க.வினர் இனி எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்றும் கழக பொதுச் செயலாளரும்..முதல்வருமான  'ஜெ' திடீரென அறிவித்துள்ளார்.
For more   details
http://tamil.oneindia.in/news/2011/12/19/tamilnadu-why-jayalalitha-sacked-sasikala-aid0091.html

Sunday, December 18, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ் - 27




உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர்.

உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், 'தெரிவிக்க விரும்பும் பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு 'போல' போன்ற இணைப்புச் சொற்களால் ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர்.

ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்...

பாரதிதாசன் 'குடும்ப விளக்கில்' குழந்தையின் புருவத்தை இப்படிச் சொல்கிறார்..

"எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்'

எறும்புகளின் வரிசையை அரும்பிவிட்ட புருவத்திற்கு உவமைப்படுத்தியுள்ளார்.

புலவர் நா.காமராசன் முதுமை பற்றி கூறுகையில்.

"தண்ணீரில் இருக்கும் மீனைத்தேடி
தூண்டில் வந்தது போல்..
என்னைத் தேடி
முதுமை வந்தது"   என்கிறார்.

அதே போன்று அவர்...

'ரோஜாவையும், மல்லிகையையும்
ஒரே நேரத்தில்
கூந்தலில் வைத்துக் கொள்ளும்
பெண் சிறுமி போல
சூரியனையும் சந்திரனையும்
விடியலின் மெல்லிய வெளிச்சத்தில்
சூடிக் கொண்டிருக்கும் வானம்'     என்கிறார்.

ரோஜாவையும்,மல்லிகையையும், சிறுமியையும் முறையே சூரியன், சந்திரன்,வானத்திற்கு ஒப்பிடுகிறார்.

மு.மேத்தா...'சரியாடி பராசக்தி' என்னும் கவிதையில்..

"தண்ணீர்க் குடம்போல்
தனித்துக் காட்சி தரும்
சின்னஞ்சிறிய சிங்களத்தில் தமிழர்களின்
கண்ணீர்க் குடமன்றோ
கவிழ்க்கப்பட்டு விட்டது'   என்கிறார்

தண்ணீர்க்குடம் தனியாகக் கிடப்பது போல சிங்களம் தனியாக நாற்புறமும் நீரினில் அமைந்துள்ளது என்றும் தமிழர்கள் கண்ணீரில் வாடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

வைரமுத்து..ஏ.இரண்டாயிரமே என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...

காவிரி பாய்ந்து
அன்னம் விளையுமா?
இல்லை
காவிரி அன்னம் போல்
காணாமல் போகுமா?

இதில் அன்னம் என்ற சொல் நெல்லிற்கும்..பழங்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் அன்னப் பறவையையும் குறிக்கிறது.அன்னப் பறவை காணாமல் போனதுபோல் காவிரி ஆறும் காணாமல் போகிவிடுமா? என்கிறார்.இக்கவிதை உவமையால் பொருளை வெளிக் கொணர்கிறது எனலாம்.

Saturday, December 17, 2011

அலுமினியப் பறவை





சிறகுவிரித்து விண்ணில்

பறவைக் கூட்டம்...

 ஆயின்

விரியா சிறகுடன்

சப்தத்துடன் சென்ற

அலுமினியப் பறவையே

கவர்கிறது என்னை..

Friday, December 16, 2011

கமல்ஹாசனும்..கல்யாண மண்டபமும்..




கமல் பற்றிய தகவல்கள் நிரம்பிய புத்தகத்தை தொகுத்துள்ளார் மணா.புத்தகத்தின் பெயர் கமல் நம் காலத்து நாயகன்.கமலின் வெளிவராத புகைப்படங்கள்.அவருக்கு நெருக்கமானவர்களின் பேட்டிகள் நிறைந்துள்ளன.

கமலின் அண்ணன் சந்திரஹாசன் பல அரிய தகவல்களை இதில் தந்துள்ளார்.

கமல் மீது அவரின் தந்தைக்கு மிகவும் நம்பிக்கை..ஆகவே பன்னிரெண்டாம் வயதில் அவரது படிப்பை நிறுத்திவிட்டார் தந்தை.அவன் நடிகனாக வந்து உலகத்திற்கேத் தெரியணும் என்பாராம் அவர்.மூன்றாம் பிறைக்கு தேசியவிருது கிடைச்சு இருக்குன்னு அவரோட அப்பாவிற்கு தந்தி அடித்தார்களாம்..அதற்கு அவரிடமிருந்து வந்த பதில்..'வென் ஆஸ்கார்' என்பதாம்.

நடிப்பு..நடிப்பு..இதுதான் அவருக்கு மூச்சு..அமெரிக்காவிற்கு விடுமுறைக்குப் போகிறேன் என்று போனாலும்..அங்கு போய் வந்த பிறகு..'நடிப்புக்காக ஒரு கோர்ஸ் அட்டெண்ட் பண்ணினேன், சினிமா பட்ஜெட் பண்றதுன்னு ஒரு கோர்ஸ் போனேன்..மேக்கப் ஸ்பெஷலிஸ்டைப் பார்த்தேன்..' என்பாராம் .

ரிவார்டு வருதான்னு பார்த்து அவர் எதையும் செய்யறதில்லே..ரிவார்டை எதிர்பார்த்து செய்திருந்தா, பல கல்யாண மண்டபங்கள் வந்திருக்கும்..கல்யாண மண்டபம் இல்லாத ஒரே நடிகர் கமல் தான்னு கிண்டலுக்குச் சொல்வாங்க.சினிமாதான் அவருக்கு வாழ்க்கை.

இவர் சாதனைப் பண்ணாத வருஷமே இருக்கப் போறதில்லை.ஏதாவது பண்ணிட்டே இருப்பார்.

இப்படி பல அரிய தகவல்களை சந்திரஹாசன் தந்துள்ளார்.


Thursday, December 15, 2011

கூகுள் பஸ் விலக்கிக் கொள்ளபட்டது..காரணம் 'ஜெ'




கடந்த இரு வருடங்களாக பல பதிவர்களை தன் வசம் வசீகரிக்க வைத்த கூகுள் பஸ் நேற்று முதல் நிறுத்தப்பட்டது.

இதற்கு காரணம் யார் என்று சற்று ஆராய்ந்தால்...இதற்கான காரணம் 'ஜெ' என்று உடனே சொல்லிவிடலாம்.

பாமர மக்களையும் ..சமீபத்தில் ஜெ அரசு அறிவித்த பஸ் கட்டண உயர்வு பெருமளவு பாதித்துள்ளது.பஸ்ஸில் பயணம் செய்வதைவிட ஷேர் ஆட்டொவில் பயணம் செய்வது கட்டணம் குறைவு என்பது வெள்ளிடைமலை.

பஸ் கட்டணம் ஏறிய நாள் முதல்..கூகுள் பஸ்சில் பயணம் செய்வோர்..கட்டுப்படியாகாமல்..கூகுள் பஸ்சில் பயணம் செய்வதை விட்டு விட்டனர்.தினசரி வருவாய் குறைந்ததால் கூகுள் நிறுவனமும் தான் இயக்கி வந்த பஸ்ஸை விலக்கிக் கொண்டது.

இப்போதாவது 'ஜெ' சந்தோஷம் அடைவாரா?


டிஸ்கி -

தலைவருக்கு கூகுள், பிளஸ், இணையம் இது பற்றியெல்லாம் தெரியாதுன்னு எப்படி சொல்ற
கூகுள் பஸ்ஸை ஏன் நிறுத்திக் கொண்டது என்று நிருபர் ஒருவர் கேட்ட வினாவிற்கு தலைவர் கொடுத்த அறிக்கைதான் மேலே சொன்னது..


Wednesday, December 14, 2011

முல்லைப் பெரியாறு அணையில் 152 அடி நீரை தேக்க தமிழக சட்டசபை சிறப்பு தீர்மானம்




முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 வரை உயர்த்தும் வகையில் எதிர்காலத்தில் அணையை பலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் தமிழ்நாட்டுக்கு உள்ள உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது என்றும் அந்த தீர்மானத்தில் உறுதிபட தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணை நீரை 120 அடியாக குறைக்க கேரள சட்டப்பேரவையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அணையில் 152 அடிக்கு நீரைத் தேக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

இந்த அணை விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த இன்று சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டம் கூட்டப்பட்டது. பகல் 11 மணிக்கு சபை கூடியதும் மறைந்த அமைச்சர் கருப்பசாமி, எம்.எல்.ஏக்களுக்கு அஞ்சலி செலுத்தி 15 நிமிடங்கள் சபை ஒத்திவைக்கப்பட்டது.

சபை மீண்டும் கூடியவுடன் முதல்வர் ஜெயலலிதா முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக சிறப்புத் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

அதில், முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை ஒருபோதும் விட்டுத்தர முடியாது. அணையில் 142 அடி நீரைத் தேக்க கேரள பாசன சட்டத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். நீர் மட்ட அளவை 152 அடி வரை உயர்த்தலாம் என்று உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு கூறியுள்ளது.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் முப்போகம் விளைய அணை நீரை 152 அடியாக உயர்த்த முடிவு செய்துள்ளோம். இதற்கு கேரளம் தடையாக இருக்கக் கூடாது, தமிழகத்துக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

அணைப் பகுதியில் பெரும் பீதியும் அச்சமும் நிலவுவதால், அங்கு மத்திய பாதுகாப்புப் படையை நிறுத்த வேண்டும் என்று சிறப்புத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

 இந்தத் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகம் எடுக்கும் முடிவுக்கு திமுக முழு ஆதரவு அளிக்கும் என்று திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

மௌனம் என் மொழி






என் எண்ணமெல்லாம் எழுதிட

அன்னைத் தமிழ் உள்ளது - ஆயின்

உன்னைக் கண்டால் மட்டும்

மௌனமே மொழியாகிறது.



Tuesday, December 13, 2011

சிறைக்கைதியின் மனிதநேயம்....




வெளியூரிலிருந்து ,சென்னை அடையார் கேன்சர் இன்ஸ்டிட்யூட்டிற்கு ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொள்ள வருபவர்களுக்கு தங்கி சிகிச்சைப் பெற இலவச ஹாஸ்டல் நடத்திவருபவர் திரு வி.கிருஷ்ணமூர்த்தி.இந்த டிரஸ்டிற்கு ஸ்ரீ மாதா டிரஸ்ட் என்று பெயர்.

இந்த தர்மசாலாவில் நோயாளியுடன் அவரைப் பார்த்துக் கொள்ள ஒருவரும் தங்கலாம்.மூன்று வேளையும் பாரம்பரிய சாப்பாடு,பால், காஃபி,ஸ்னாக்ஸ் ஆகியவையும் வழங்கப் படுகிறது.

இதற்காக பொதுமக்களிடம் இருந்து நிதி உதவியும், ஆதரவையும் இந்த டிரஸ்ட் எதிர்பார்க்கிறது.

பிறந்த நாள், திருமண நாள், வீட்டில் மற்ற விஷேஷங்கள் என்று வரும் போது இதற்கு நிதி உதவி செய்யலாமே நாமும்.

அவர்களின் ஒரு நாள் சாப்பாடு செலவை 10000 அளித்து ஒரு நாள் ஏற்கலாம்.

4000 அளித்து மதிய/இரவு உணவு அல்லது 2500 அளித்து காலை சிற்றுண்டி மட்டும் அளிக்கலாம்.ஒவ்வொரு நோயாளி என தேர்ந்தெடுத்து மாதம் அவர்களுக்கு 1000 அளிக்கலாம்.நம்மால் எது முடியுமோ அது செய்யலாம்.

அவர்களுக்கு சமீபத்தில் 1000 ரூபாய் நன்கொடையை ஒரு சிறை கைதி அளித்துள்ளார்.அவரின் மனிதநேயம், உயர்ந்த சிந்தனையைப் போற்ற தோன்றுகிறது.

இதோ அவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்...

தன்னை நேசிப்பது சுயநலம்...பிறரை நேசிப்பது மனிதநேயம்

அனுப்புநர்:
G.A.ரமேஷ்..ct no 12683
s/o.K.அருணாசலம்
மத்திய சிறை, திருச்சி-20

பெறுநர்
உயர்திரு செயலாளர் அவர்கள்
ஸ்ரீ மாதா டிரஸ்ட்
ராஜஸ்தானி தர்மசாலா
பழைய கேன்சர் இன்ஸ்டிட்யூட் வளாகம்
கெனால் பேங்க் ரோடு,
அடையாறு, சென்னை-20

வழி-உயர்திரு கண்காணிப்பாளர் அவர்கள்
மத்திய சிறை, திருச்சி-20

அய்யா,
ஸ்ரீ மாதா டிரஸ்ட் நிறுவனத்தாளர்களுக்கு எனது அன்பு கலந்த வணக்கம்.தாங்கள் செய்யும் சேவை மிகவும் மகத்தானவை.இச் சேவை மையத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து நல்ல உள்ளங்களுக்கு இறைவன் என்றென்றும் துணை நிற்பார்.தாங்கள் செய்யும் சேவைகள் இறை தொண்டுக்கு மேலான செயலாகும்.உங்கள் சேவைகள் இன்னும் சிறக்க அன்புடன் வாழ்த்துகிறேன்.
மேலும் தங்களது தொண்டு நிறுவனத்தில் கொடிய புற்று நோயால் உயிருக்கு போராடும் ஏழை நோயாளிகளுக்கு வயிறாற உணவு அளித்திடும் வகையில் என்னால் முடிந்த தொகையாக ரூ.1000/- ஒரே ஆயிரத்துக்கான வரைவோலை (DD)இத்துடன் இணைத்தனுப்பியுள்ளேன்.இதனை அன்புடன் ஏற்றுக்கொண்டு இனிதே விடைதர பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
                                                                                                                              இவன்
                                                                                                                               G.A.Ramesh
நாள்-01-11-211
D.D.No.887575/2-11-11 SBI Trichy


டிஸ்கி-கடைசிகட்ட ஏழை புற்று நோயாளிகளுக்கு ஒரு இலவச காப்பகம், தாம்பரத்தில் கட்டுவதற்கு தேவையான நிலத்தை தந்து உதவுமாறு கடந்த 2 வருடங்களுக்கு மேலாக தமிழக அரசிடம் தொடர்ந்து கேட்டுவரும் இந்த அறக்கட்டளைக்கு..நல்ல நாள் என்றாவது ஒருநாள் நிச்சயம் வரும் என நம்புகின்றனர்..அதன் நிர்வாகிகள் .


Monday, December 12, 2011

பாக்கியராஜ் பதில்...




பாக்யா பத்திரிகையில் பாக்கியராஜ் .வாசகர்களுக்கு அளிக்கும் கேள்வி-பதில் பகுதி எனக்குப் பிடித்த ஒன்று.அவ்வப்போது அப்படி பிடித்த பதிலை உங்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளேன்.

இந்த வாரம் ஒரு கேள்விக்கு அவர் அளித்த பதிலுக்கான கதை நமக்குத் தெரிந்தாலும்..அதைச் சொன்ன விதம் எனக்குப் பிடித்தது.

இதோ அந்த கேள்வி, பதில்..

கேள்வி- உங்கள் மனதில் பதிந்த ஏதாவது வித்தியாசமான கேரக்டர் பற்றி?

பதில்- ஒரு முனியனைப் பற்றி சொல்றேன்..உங்க மனசிலேயும் அவர் ஆழமா பதிஞ்சுடுவார் பாருங்க..நெட்ல படிச்சது.

       என்ன முனியா நான் ஊர்ல இல்லாதப்போ ஏதும் விசேஷம் உண்டா?

       பெரிசா ஒன்னுமில்லீங்க..நம்ம நாய் செத்துப் போச்சு

      அடக்கடவுளே! த்சோ..த்சோ..நல்லாத்தானேடா இருந்தது..எப்படி திடீர்னு செத்துச்சு?

     கெட்டுப்போன மாட்டுக் கறியை தின்னுடுச்சுங்க

      மாட்டுக்கறி எங்கேடா கிடைச்சுது அதுக்கு

     நம்ம வீட்லதாங்க

     நாம தான் மாட்டுக்கறி திங்கறதில்லையேடா

     நாம திங்கறதில்லைங்க..நெருப்புல அவிஞ்சு போன மாடு மூணு நாளா கிடந்து கெட்டுப் போச்சுங்க.அதத்தான் நாய் தின்னிடிச்சு

     நம்ம மாடா

     ஆமாங்க..

     ஐயய்யோ...எப்படிடா எரிஞ்சு போச்சு

     வீடு எரியும் போது நெருப்பு பறந்து வந்து கொட்டாயிலே விழிந்திடுச்சி

      வீடு எப்படிடா எரிஞ்சிச்சு

     குத்துவிளக்கு விழுந்து தீ பரவிடுச்சுங்க

     குத்துவிளக்கு ஏத்தற பழக்கமே நம்ம வீட்ல கிடையாதேடா

     அதுக்காக செத்தவங்க தலை மாட்டில விளக்கு வைக்காம இருக்க முடியுமா

     யார்ரா செத்தது

    உங்க அம்மா

    எப்படி செத்தாங்க

    தூக்கு போட்டுகிட்டு

   ஏன்

   அவமானத்தில்தான்

   என்னடா அவமானம்

   வீட்ல இருக்கிற பொண்ணு ஒருத்தன் கூட ஓடிப்போனா ஊரு காறித்துப்பாதா

   ஓடிப்போனது யாரு

   உங்க பொண்டாட்டிதான்...


டிஸ்கி- லாஜிக் ஏதுவும் பார்க்காமல் நகைச்சுவையை மட்டும் ரசியுங்கள்

 

முல்லைப் பெரியாறு பலவீனமானதா.--..கலைஞர்




 கலைஞரின் பேச்சு...
முல்லை பெரியாறு பலவீனமாக இருக்கிறது என வதந்திகள் பரப்பப்பட்ட காரணத்தால்,  1981 முதல் 94 வரை அணையை 3 முறை பலப்படுத்தியிருக்கிறோம்.

24 அடி அகலம் 3 அடி உயரத்தில் 1200 அடி நீளத்திற்கு 12,000 டன் கான்க்ரீட் போடப்பட்டு, அணை பலப்படுத்தப்பட்டுள்ளது. அணையின் பின்புறத்தில் தாங்கு அணையாக 135 அடி உயரத்தில் 1700 அடி நீளத்தில் 33 அடி அகலத்தில் கான்க்ரீட் போடப்பட்டுள்ளது.

பூகம்ப பயத்தை போக்கும் வகையில் அணையின் 1500 அடி நீளத்தில், 9 அடி இடைவெளி விட்டு 4 அங்குல விட்டத்தில் 95 துளைகள் இடப்பட்டு அதிலிருந்து கம்பிகளை எடுத்து கீழ் மட்டத்திலே 30 அடி கீழே உள்ள பாறைகளில் சொருகி, அதை கான்க்ரீட் கலவை கொண்டு உறுதிப்படுத்தி 20 டன் எடையைத் தாண்டும் அளவுக்கு இறுக்கி முடுக்கி விடப்பட்டுள்ளது. நிலநடுக்கமே ஏற்பட்டாலும் அணைக்கு எந்தப் பாதிப்பும் வராது. அணை முன்பை 3 மடங்கு பலமாக இருக்கிறது.

எனவே அணை பலவீனமாக உள்ளது என்பது பொய்யான வாதம், கேரளாவின் சூழ்ச்சி. இதை யாரும் ஏற்க வேண்டியதில்லை என்பதை செயல் மூலமாக திட்டவட்டமாக தெளிவாக்கியிருக்கிறோம்.

முல்லைப் பெரியாறு வழக்கில் அணை உறுதியாக இருக்கிறதா என்பதை ஆய்வு நடத்த உச்சநீதிமன்றமே 2001ல் பிப்ரவரி 10ம் தேதி 7 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. அதில், மிட்டல் தலைவராகவும், மத்திய தலைமைப் பொறியாளர் 2 பேர், மத்தியப் பிரதேச மாநில அணைப் பாதுகாப்புக் குழுத் தலைவர் , உ.பி. தலைமைப் பொறியாளர், தமிழக அரசின் சார்பில் ஒரு பிரதிநிதி, கேரள சார்பின் ஒரு பிரதிநிதி என 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழு ஏறத்தாழ 1 ஆண்டு காலம் முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறதா என்பதை ஆராய்ந்து, ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்தது. அதில், அணை உறுதியாக இருக்கிறது, அணையின் நீர்மட்டத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தலாம் என்று பரிந்துரை செய்தது.

அதன் பிறகு 2002ல் முல்லைப் பெரியாறு அணை குறித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை தாக்கல் செய்தது. அதில், முல்லைப் பெரியாறு உறுதி தொடர்பாக 7 பேர் கொண்ட நிபுணர் குழுவின் முடிவுகளை மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. அத்துடன் அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்று மத்திய அரசு உறுதி செய்கிறது என்று அதில் மத்திய அரசு தெரிவித்தது.

முல்லைப் பெரியாறு அணை வழக்கில் உச்சநீதமன்றம், 2006 அன்று தீர்பபின் விவரங்களைத் தெரிந்து கொண்டால், கேரளத்து அரசு சார்பாக வெளியிடப்படும் தகவல்கள், எவ்வளவு மோசமானவை, நம்பகத்தன்மை அற்றவை என்பதை புரி்து கொள்ளலாம்.

அணை பலமிழந்து விட்டது என்ற கேரளாவின் கூற்றில் எந்தவிதமான முகாந்திரமும் இல்லை. வல்லுநர் குழு பரிந்துரைத்தபடி 142 அடி வரையில் நீரைத் தேக்கி வைக்கலாம். மீதமுள்ள பலப்படுத்தும் பணிகளை மத்திய நீர்க் குழுவுக்கு திருப்தி அளிக்கும் வகையில் தமிழகம் மேற்கொண்ட பின்னர் உச்சமட்ட அளவான 152 அடி வரை தமிழ்நாடு நீரைத் தேக்கிக் கொள்ளலாம்.

கேரள அரசு மற்றும் அதன் அதிகாரிகள் தமிழ்நாடு அரசு சார்பில் பணிகளை செய்வதை தடுத்து நிறுத்தும் போக்கினைக் கைவிட வேண்டும். தமிழக அரசின் பணிகளை தடுக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இந்தத் தீர்ப்பினை அப்போதே மதிக்காமல் கேரள அரசு அடுத்த 16வது நாளில் நீர்ப்பாசன மற்றும் நீர்ப்பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு முதல் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வந்து பெரியாறு அணை நீர்மட்டத்தை 136 அடியாக வைத்துக் கொள்வோம என்று சட்டமே செய்தது.

இப்போது சட்டசபையைக் கூட்டி 120 அடியாக வைத்துக் கொள்வோம் என்று தீர்மானம் போடுகிறது. அது என்ன சட்டமன்றமா, இஷ்டத்திற்கு வளைந்து கொடுக்கக்கூடிய பஞ்சாயத்தை விட மோசமான ஒரு அமைப்பா?.

இந்தியாவிலேயே கேரளாக்காரர்கள் மிகுந்த அறிவாளிகள், திறமையானவர்கள், புத்திசாலிகள் என்றெல்லாம் பேசப்படுவதுண்டு. அப்படிப்பட்டவர்கள் இப்படிச் சொல்கிறார்கள் என்றால், அது யாரை ஏமாற்ற, இந்த நாடகம் நடத்துகிறார்கள் என்பதை தமிழ் மக்கள், மன்னிக்க வேண்டும், இந்திய திருநாட்டு மக்கள், தேசிய உணர்வு படைத்த மக்கள், இந்தியா ஒன்று என்று எண்ணுகின்ற மக்கள் அனைவரும் இதைக் கவனித்துப் பார்க்க வேண்டும.

வேண்டும் என்றே திட்டமிட்டு, தமிழகத்தினுடைய செழிப்பை, செல்வாக்கை, வளத்தை வீணாக்கி அழித்து, தமிழகத்தை சஹாரா பாலைவனமாக்க திட்டமிட்டு கேரளத்திலிருந்து ஒரு சதி ஜோடிக்கப்படுமேயானால் அதை தமிழன் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. தான் அழிவதற்கு தன்னுடைய சந்ததிகள் அழிவதற்கு தன்னுடைய மக்கள் அழிவதற்கு தன்னுடைய நாடு அழிவதற்கு தன்னுடைய எதிர்காலமே அழிவதற்கு எந்த முட்டாள் தமிழனும் ஒத்துக் கொள்ள மாட்டான்.

எனவே நாம் நடத்துகின்ற அறப்போர், தமிழ்நாட்டில் கேரள மக்கள் இன்றைக்கு சுதந்திரத்தோடு உலாவுகிறார்கள். தொடர்ந்து சுதந்திரத்தோடு இருப்பார்கள் என்பதில் நமக்கு ஆடேசபனை கிடையாது. தமிழன் கேரளத்திலே வாழ வேண்டும். அந்த ஒற்றுமையும், உணர்வும், வளர வேண்டுமென்றால், தழைக்க வேண்டுமேயானால், இடைத் தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு, நாங்கள் இடக்கு செய்வோம் என்றில்லாமல், ஒரு இடைத் தேர்தலுக்காக எவ்வளவு பேர் அடிபடுவது, கொல்லப்படுவது, உடமைகளை இழப்பது, உயிர்களைப் பலி கொடுப்பது என்ற நிலை எல்லாம் ஏற்படாமல், எங்களோடு ஒத்துழைத்து கேரளத்தில் உள்ள பெரியவர்கள், அறிவாளிகள், கேரளத்தில் உள்ள நிபுணர்கள், விஞ்ஞானிகள், வித்தகர்கள், விவசாயப் பெருங்குடி, மக்கள் தமிழ் மக்களின் கைகளைத் தூக்கி, தமிழர்களும் கேரளத்தில் உள்ளவர்களும் சகோதரர்கள்தான் என்ற எண்ணத்தை மாற்றிக் கொள்ளாமல், கேரளம், களித் தமிழ் பேசுகிற நாடும், துளு பேசுகிற நாடும், எல்லா மக்களும் இந்தியர்கள்தான்.

ஒரு காலத்திலே சேர, சோழ, பாண்டியர் மூவேந்தர்களின் கொடியின் கீழ் வாழ்ந்தவர்கள்தான். அந்தக் கொடி நிழலில் உருவாக்கிய ஒற்றுமை, உறுதி, என்றும் நிலை நிறுத்தப்பட இந்தப் பிரச்சனையில், யாரும் உணர்ச்சிவசப்படாமல் அவர்களும் நாமும் சகோதரர்கள் என்று எண்ண வேண்டும், இருவரும் வளமை பெற வேண்டும்.

Sunday, December 11, 2011

ரஜினி..62..பிறந்த நாள் வாழ்த்துகள்




சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இன்று 62வது பிறந்த நாளாகும். இதையொட்டி அவர் கர்நாடக மாநிலம் மந்த்ராலயத்தில் உள்ள ராகவேந்திரா சாமி கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார். தர்மஸ்தலாவுக்கும் அவர் செல்கிறார்.

இதை அவரது ரசிகர்கள் உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து தடபுடலாக கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் மந்த்ராலயம் சென்றுள்ளார். அங்குள்ள ராகவேந்திரா சாமி கோவிலில் அவர் பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். ரஜினிக்காக சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தர்மஸ்தலாவுக்குச் சென்று அங்கும் சாமி கும்பிடுகிறார்.

முன்னதாக ரஜினிகாந்த்துக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், பல்துறைப் பிரமுகர்கள் தொலைபேசி மூலமும், வாழ்த்துக் கடிதங்கள் மூலமும் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

டிஸ்கி - ரஜினி உடல்நிலை தேறி வந்ததும் ஆந்திராவில் உள்ள திருப்பதி சென்று வந்தார்..இப்போது கர்நாடகாவில் உள்ள மந்த்ராலயம் சென்றுள்ளார்.

பசி..




அடி வயிற்றில்

திகு திகு என நெருப்பு

பற்றி எரிய

தெருக்குழாய் நீர்

ஊற்றி அணைக்கப் படுகிறது

இறைவா..

பசியை ஏன் படைத்தாய்?


Saturday, December 10, 2011

பகதூர்...(சிறுகதை) - பாரதியார்




(அடிமைத்தனத்தை பாரதியார் எவ்வளவு வெறுத்தார் என்பதற்கு..அவர் எழுதிய 'பகதூர்' என்னும் சிறுகதையே சான்று.  )

உக்கிரசேனப் பாண்டியன் என்றொருவர் இருந்தார்.அவர் காட்டுமிருகங்களை வேட்டையாடுவதில் சமர்த்தர்..பலவகை வேட்டை நாய்கள் அவரிடம் இருந்தன.ஆனாலும், 'பகதூர்' என்ற நாயிடம் அவர் மிகவும் அன்பு பாராட்டி வந்தார்.

ஒருசமயம் அவர் காடு ஒன்றிற்கு வேட்டையாட. பகதூரையும் அழைத்துக் கொண்டுச் சென்றார்.அந்த நாய் வெகுகாலமாய் காட்டில் இருந்த படியால் காட்டைக் கண்டதும் மகிழ்ச்சியோடு கண்ட கண்ட இடத்திற்கெல்லாம் ஓடியது.

பகதூர் பார்வைக்கு அழகாய் இருந்தது.மிகுந்த சதைக் கொழுப்பு அதற்கு உண்டு.அதன் உடம்பு தினமும் கழுவப்பட்டு வந்ததால் தள தளப்பாய் இருந்தது.அக்காட்டில் ஓநாய்கள் அதிகம் இருந்தன.ஓநாய் வேட்டை தனது திறமைக்கு சரியானதல்ல என நினைத்தான் பாண்டியன்.ஆகையால் ஓநாய்கள் பயமின்றி இருந்தன.

ஒரு நாள் ஒரு ஓநாய் பகதூரைப் பார்த்து, அதிசயத்துடன் நட்புடன் பேச ஆரம்பித்தது.

ஓநாய்  - நண்பனே..உன்னை சந்தித்ததில் மகிழ்ச்சி.உன்னிடம் சில கேள்விகள் கேட்டால் பதில் சொல்வாயா?

பகதூர் - என் எஜமானரின் எண்ணப்படி ஓநாய்களோடு பேசுவது என் தகுதிக்கு ஒத்து வராது.ஆனாலும் என்னை அறியாமல் உன்னிடம் அன்பு ஏற்பட்டு விட்டதால்..நீ கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்கிறேன்.

ஓநாய் - நண்பனே! உன் அந்தஸ்து என்ன? நீ வசிக்கும் இடம் எது? இக் காட்டிற்கு ஏன் வந்தாய்? உனக்கு இவ்வளவு சுகமான வாழ்வு எப்படி ஏற்பட்டது? என்னும் விவரங்களை எல்லாம் சற்றுச் சொல்..

நாய்  - நான் உக்கிரசேன பாண்டியனிடம் இருக்கிறேன்.அவர் என்னை ராஜா மாதிரி கவனித்துக் கொள்கிறார்.எனக்கும் அவரிடத்தில் அலாதி பக்தி.

ஓநாய் - நண்பனே! நீ மிகவும் கொடுத்து வைத்தவன்..என் வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? காற்றிலும்,,மழையிலும்,, வெயிலிலும் அலைந்து திரிந்து கஷ்டப்பட்டு இரை தேட வேண்டியுள்ளது.பல சமயங்களில் சாப்பிட ஏதுமின்றி பசிக்கொடுமை வேறு மாட்டும்..

நாய்  - போன பிறவியில் நீ பாவம் செய்திருப்பாய்..அதை இப்பிறவியில் அனுபவித்தே தீர வேண்டும்.நான் செய்த புண்ணியங்களின் காரணமாகவே இப்பிறவியில் எனக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஓநாய்- நண்பனே..நானும் உன் எஜமானரின் நட்பை நாடி வரலாமா? சுக துக்கங்கள் சரி சமமாக இருந்தால் தான் இனிமையான வாழ்க்கை.ஆனால் எனக்கோ இதுவரை துன்பங்கள் தான்.

நாய்  - சரி...என்னுடன் வா..

இரண்டும் பேசிக்கொண்டே நடந்தன.திடீரென ஓநாய் நாயின் கழுத்தைச் சுற்றியுள்ள அகலமான தழும்பைப் பார்த்தது..

ஓநாய் - நண்பனே..உன் கழுத்தைச் சுற்றி என்ன தழும்பு?

நாய்- அது ஒன்றுமில்லை..என் கழுத்தைச் சுற்றி தங்கப் பட்டை போடப்பட்டிருந்தது.அதுதான்

ஓநாய்- (ஆச்சரியத்துடன்) ஓ..உன் எஜமானர் உனக்கு தங்கப் பதக்கம் எல்லாம் போட்டிருந்தாரா? ஆமாம் அதை ஏன் கழட்டி விட்டாய்?

நாய் - என்னை வெள்ளிச் சங்கிலியால் கட்டும் போதுதான் அதை என் கழுத்தில் போடுவார்.

ஓநாய் -உன்னை ஏன் கட்ட வேண்டும்? யார் கட்டுவார்கள்?

நாய் -என் எஜமானர் தான் கட்டுவார்.அவரைத் தேடி வரும் மனிதர்கள் என்னைக் கண்டு பயப்படாமல் இருக்க

ஓநாய்- தூ...உன் பிழைப்பும் ஒரு பிழைப்பா? என்னை ஏமாற்றப் பார்த்தாய்.நீ ஒரு அடிமையாய் இருந்தும்..எவ்வளவு ஜம்பமாக பேசினாய்..நான் சுதந்திரப் பிரியன்.எனக்கு எந்த எஜமானனும் இல்லை.சங்கிலியும் இல்லை.நான் எங்கும் செல்வேன்..எதையும் தின்பேன்..ஒருவன் ஆணைப்படி நடப்பது உனக்கு வேண்டுமானால் முடியும்..என்னால் முடியாது...நீ சென்ற பிறவியில் எவ்வளவு பாவம் செய்திருந்தால் இப்பிறவியில் இப்படி ஒரு அடிமையாய் வாழ்வாய்?

என்று கூறியபடியே காட்டிற்குள் ஓடி ஓநாய் மறைந்தது.பகதூரும் தன் அடிமை வாழ்வை எண்ணி வெட்கி..வேறு வழியின்றி தன் எஜமானரை தேடிப் போனது.



Friday, December 9, 2011

தமிழ்க் கவிஞன்






நான்

தமிழ்க் கவிஞன்தான்...

உணர்ந்து கொண்டேன்..

வாழும் போது

புறக்கணிக்கப் படுகிறேனே...

இறந்ததும்

தரணி முழுதும்

போற்றப்படுவேன்...



சோனியா பிறந்தநாள்...வாழ்த்து சொன்ன கலைஞர்..




சோனியாவின் பிறந்த நாள் வாழ்த்து செய்தியில் கலைஞர் சொல்லியிருப்பதாவது..

உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதோடு, இந்த நாள் மீண்டும் மிகப் பல ஆண்டுகள் தங்களுக்கு அமைந்திட வேண்டும் என்ற எனது விழைவினை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் மிகவும் முக்கியமான கட்டத்தில் செல்லும்போது தாங்கள் தலைமையில் உள்ளீர்கள்.

நமது நாடாளுமன்ற ஜனநாயகத்தை இந்தியாவின் மிகப்பெரும்பான்மையான மக்கள் தொகையின் அபிலாஷைகளுக்கு ஏற்ப ஆக்குவதற்கு உங்களது உரிய காலத்திலான தனித்துவம் மிக்க பங்களிப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது.நமது மக்களுக்கு உங்கள் மீது மிகப்பெரும் நம்பிக்கையும், உறுதியும் உள்ளது.தங்களது வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த உங்களுக்கு அனைத்துத் திறமைகளும் தகுதிகளும் உள்ளன என மக்கள் உறுதியாக நம்புகின்றனர்.

சிறிது கால உடல் நலக் குறைவிற்குப் பிறகு, மக்களின், குறிப்பாக ஏழை,எளிய மக்களீன் சேவைக்கு தங்களை மீண்டும் அர்ப்பணித்துக் கொண்டுள்ளீர்கள்.மேலும் பல்லாண்டுகளுக்கு இந்தியாவின் நன்மைக்காக நீங்கள் உங்களது மிகச் சிறப்பான செயல்பாட்டைத் தொடருவீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன்.

எனது கட்சியின் சார்பிலும், என் சார்பிலும் தங்களுக்கு மிக நீண்ட நல்ல ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்க்கை அமைய எங்களது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்றுள்ளார்..

டிஸ்கி- மார்கழி மாதம் வர இன்னும் ஒரு வாரத்திற்கு மேல் இருக்கிறது.

Thursday, December 8, 2011

தமிழனிடம் ஒற்றுமையில்லை...???




கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு....

அதுபோல..தமிழனுக்கு சுற்றுவட்டாரமெல்லாம் செருப்பு ..என்று சொல்லலாம்...

காவிரி பிரச்னையில்..உச்ச நீதிமன்ற ஆணையை அமல்படுத்தாமல்..எப்போதெல்லாம் கர்நாடகாவில் மழை அதிகமாகி அணை நிரம்புகிறதோ..அப்போது மட்டுமே நமக்குக் கிடைக்க வேண்டிய 205 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது...நீதிமன்ற ஆணையை கெசட்டில் பிரசுரிக்க தமிழக அரசு கேட்டும்..மைய அரசு செயல்படவில்லை.வழக்கு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சரி..அடுத்த மாநிலமான கேரளாவைப் பார்த்தால்..அவர்களோடும் முல்லை பெரியாறு அணை விவகாரத்தால் சர்ச்சை.இங்கும் உச்ச னீதி மன்ற ஆணை செயல்படுத்தாமல்..கேரள அரசு புது அணை கட்டுவேன்..என்கிறது..நீர் மட்டம் 120 அடிக்கு மேல் கூடாது என்கிறது.

.சர்ச்சைகள் உள்ள நிலையில்..அடுத்த மாநிலம்..திடீரென பாலாற்றில் அணை கட்டுவோம்..அதற்கு யார் அனுமதியும் தேவையில்லை என்கிறது.

எது எப்படியோ..இந்த விவகாரத்தில் அப்பாவி தமிழக விவசாயிகளும்..மக்களுக்கும் சொல்லமுடியா துயரங்கள்.

இது இப்படியெனில்...

நமது மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றால்...இலங்கை மீனவர்களாலும்..கடற்படையாலும் சிறை பிடிக்கப் படுகின்றனர்..நம் மீனவர்கள் இந்தியர்கள்..சொல்லப்படுவதோ தமிழக மீனவர்கள்.

இலங்கையில் தமிழ் பேசும்..இந்தியாவை தாய் நாடாகக் கொண்ட முன்னோர்கள் அங்கு தோட்ட வேலைகளுக்குப் போய் குடியேறினார்கள்.அவர்கள் இலங்கை அரசால் கொடுமைக்கும்..உயிரிழப்புக்கும் ஆளான போதும்...இலங்கை இந்தியர்கள் என்று சொல்ல நம்மவர்களுக்கு மனமில்லை..இலங்கை தமிழர்கள் என்கின்றனர்.

ஆக மொத்தத்தில் தமிழனை ஒரு இந்தியனாக நினைப்பதில்லையோ...இந்தியன் எனப்படுபவர்கள்?

ஒரு கவிதை...

போர் மூளும் போதும்
கிரிக்கெட் விளையாடும் போதும்
மட்டுமே
இந்தியன்..இந்தியானாய்
இருக்கிறான்.

Wednesday, December 7, 2011

நட்பு.....





இடுக்கண் களைவதாம் நட்பு

பொய்யாமொழியான் வாக்கில்

உச்சி வெயில் நிழலாய்

பிரிந்தது அது

எனக்கு



Tuesday, December 6, 2011

முல்லை பெரியாறு...நமக்குத் தெரிய வேண்டிய சில செய்திகள்..




1800ஆம் ஆண்டு தொடக்கம்.பருவ மழை பொய்த்து..தமிழகத்தில் வறட்சி.இதை ஆங்கில அரசு ஆய்வு செய்தது.நீர் ஆதாரங்களைப் பெருக்க எண்ணியது.கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் பல ஆறுகள் மேற்கு நோக்கி ஓடி கடலில் கலப்பது கண்டறியப்பட்டது.அப்பகுதியில் அணையைக் கட்டி தண்ணீரை தமிழகத்தில் திருப்புவதன் மூலம் தேனி,மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை,ராமனாதபுரம் மாவட்டங்களில் வறட்சியை விரட்டலாம் என ஆங்கில அரசு முடிவெடுத்தது.

27 ஆண்டுகள் கழித்து திட்ட அறிக்கை தயாரானது.பின்னரும் 23 ஆண்டுகள் கழித்து முல்லை பெரியாறுக்கு இடையே அணை கட்டும் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைத்தது.

பென்னிகுக் என்னும் ஆங்கில பொறியாளர் 1874ல் அணை கட்டும் பொறுப்பை ஏற்றார்.ஆண்டுக்கு 4290 மி.மீ மழை பெய்யும் அடர்ந்த வனப்பகுதியில், கடும் குளிரில் வன விலங்குகள் நிறைந்த இடத்தில்..பல இன்னல்கள்,உயிர் இழப்புகள் இடையே கட்டுமானப்பணி துவங்கியது.இந்நிலையில் 1890 ல் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அணையின் ஒரு பகுதி அடித்துச் செல்லப்பட்டது.அப்போது ஆங்கில அரசு..இதற்கு மேல் பணம் செலவிட முடியாது என அணை கட்டும் பணியை நிறுத்தச் சொன்னது.ஆனால் பல இழப்புகள் இடையே நடைபெற்ற பணியை பாதியில் நிறுத்த விரும்பவில்லை.உடன் இங்கிலாந்தில் இருந்த தனது மற்றும் மனைவியுடையதுமான சொத்துகளை விற்று பெர்ந்தொகையைத் திரட்டி அணையைக் கட்டி முடித்தார்.

சுட்ட செங்கள்,இஞ்சி,கடுக்காய்,கருப்பட்டி, தேக்கு மரப்பட்டை என்னும் பொருள்களால் அணை கட்டப்பட்டது.165 அடி உயரமுள்ள அணையின் நீளம் 1241 அடி.நீர்த்தேக்க உயரம் 155 அடியாக உயர்த்தப்பட்டு..அலைகளால் பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக 152 அடியாக உறுதி செய்யப்பட்டது.அணையில் எப்போதும் 104 அடி தண்ணீர் தேங்கியிருக்க வேண்டும்.அதற்கு மேல்..அதாவது 48 அடி தண்ணீர் தமிழகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.(தமிழகத்திற்கு 8080 மில்லியன் கன அடி. )இதன் மூலம் இரண்டு லட்சம் ஏக்கர்கள் பாசன வசதி பெற்றது.கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் பயன் பெற்றனர்..

பெரியாறு அணை 1895 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் முதல் 999 ஆண்டுகளுக்கு தமிழகம் அணையை முழுமையாய் பயன்படுத்திக் கொள்ள ஒப்பந்தம்..இந்திய கவுன்சில் செக்ரட்டரியேட்டும்..திருவாங்கூர் சமஸ்தானமிடையே கையெழுத்தானது.

ஒப்பந்தபடி தமிழகம் நீர் பாசனம்,மின் உற்பத்திக்கான செயல்பாடுகளை செய்து கொள்ளலாம்.போக்குவரத்தின் முழு உரிமையும் தமிழகத்திற்கு சொந்தம்.மேலும் நீர் பிடிப்புப் பகுதிக்கான 597.77 சதுர கிலோமீட்டருக்கு 40000 ரூபாயை ஆண்டொன்றிற்கு கேரளாவிற்கு தமிழகம் கொடுத்து வந்துள்ளது.
1960 ஆம் ஆண்டிலிருந்து இத் தொகை 2 லட்சத்து 57 ஆயிரமாக ஆகி உள்ளது.

1975 ஆம் ஆண்டு 70 டிஎம்சி கொள்ளளவு கொண்ட  இடுக்கி அணையை கேரளா கட்டியது.இடுக்கி அணைக்கு போதிய தண்ணீர் இல்லாததால் அதன் கவனம் முல்லை பெரியாறு பக்கம் திரும்ப..பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும்..நீர்க்கசிவு என்றும்..அணை உடைந்தால் மூன்று மாவட்டங்கள் அழிந்துவிடும் என்றும் பிரச்னை துவக்கப்பட்டது.

1945 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அணை பலப்படுத்தப் பட்டுள்ளது.கடந்த ஒரு நூற்றாண்டில் 30 முறை நில அதிர்வு ஏற்பட்டது.3.7 ரிக்டர் அளவே..ஆனால் அணையில் விரிசலோ, கசிவோ இல்லை.அப்படியே அவர்களின் கூற்றுபடி..அணை உடைந்தாலும்..அணையிலிருந்து 15 டிஎம்சி தண்ணீரே வெளியேறும்.அது காட்டுப்பாதை வழியாக இடுக்கிக்கு சென்றுவிடும்..70 டிஎம்சி கொள்ளளவு உள்ள இடுக்கி அணை இந் நீரை ஏற்றுக்கொள்ளும்.ஆகவே எந்த பாதிப்பும் இல்லை.

இதைவிட நகைச்சுவையான வாதம்..அணை உடைந்தால் மூன்று மாவட்டங்கள் மூழ்கிவிடும் என்பதும்..பெரியாறு அணையின் கடல்மட்ட உயரம் 2869 அடி.நீரில் மூழ்கிவிடும் என்று சொல்லப்படும் இடங்கள் கடல் மட்டத்திலிருந்து 3500 அடிகளுக்குக்கு மேல் உயரத்தில் உள்ளவை.தண்ணீர் எதிர்திசையில் அல்லது மேல் நோக்கி சென்று பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இயற்பியலுக்கும்,அறிவியலுக்கும் முரணான வாதம்.

152 அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்கலாம் என தமிழக, கேரள அதிகாரிகளும் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தும்..கேரள அரசு அதை ஏற்கவில்லை.இதனால் தமிழகத்திற்கு கடந்த 25 ஆண்டுகளில் 3000 கோடிகளுக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.    

ஆள் மாறட்ட கேஸும்...கல்யாண சுந்தரமும்..




பத்தாம் வகுப்புத் தேர்வில்..வேறு ஒருவரை தனக்கு பதில் தேர்வு எழுத வைத்தார் புதுவை அமைச்சர் கல்யாணசுந்தரம்.அது தெரிய வர அடுத்த நாள் பரிட்சைக்கு ஆள் வரவில்லை.

அவர்மீது புகார் வர..அமைச்சர் தலைமறைவானார்..

புதுவை சட்டசபையிலும் இதனால் எதிர்க்கட்சிகள் கலாட்ட செய்தனர்.

அவருக்கு பாவம்..அமைச்சர் பதவியும் பறி போனது.தன்னை கைது செய்யாமல் இருக்க நீதி மன்றங்களை நாடி..கடைசியில் ஒரு வழியாக உச்ச நீதி மன்றத்தில் ஜாமீன் பெற்றார்.

அவரை காவல்துறை விசாரித்தது..மொத்தம் 300 கேள்விகள் கேட்கப்பட..அவர் பதில் சொன்னார்.

ஆமாம்..அவர் 300 கேள்விகளுக்கு பதில் சொன்னாரே..ஒழுங்காக பரிட்சைக்குப் போயிருந்தால்..அதிக பட்சம் 30 கேள்விகளுக்கு பதில் சொன்னால் போதுமே...என்று நண்பர் ஒருவர் கேட்க..நான் சொன்னேன்..

'போலீஸ் விசாரணையில் அதிகப் பட்சக் கேள்விகளுக்கு..'தெரியாது..தெரியாது' என்று பதில் சொன்னார்..அதே பதிலை அவர் தேர்வில் சொல்லியிருக்க முடியுமா? என்றேன்.

(ஆமாம்...உங்கள் பெயர்தானே கல்யாணசுந்தரம் ..என்று கேட்டிருந்தால் அதற்கும் அவர் தெரியாது என்று பதில் சொல்லியிருப்பாரோ!)

(டிஸ்கி...இந்நிலையில் பல ரர க்கள் தங்கள் தலைவரை திருவள்ளுவர் ரேஞ்சிற்கு உயர்த்துகிறார்களாம்..கேட்டால்..வள்ளுவன் எழுதிய குறள்கள் 1330..ஆனால் எங்கள் தலையிடம் கேட்கப்பட்டது 1339 கேள்விகள் என்று..அட போங்கப்பா..எதை எத்தோடு ஒப்பிடுவது...வள்ளுவனின் கற்பனையில் உதித்தவை 1330..ஆனால் இங்கோ....)


Monday, December 5, 2011

ஐஸ்வர்யா குழந்தையின் பெயர் என்ன..? (வாய் விட்டு சிரிங்க)





தலைவர் வரிகளை உயர்த்துவது தெரியாமல் உயர்த்தறாரே..எப்படி..
அரசியல்ல வர்றதுக்கு முன்னாலே..எடுப்பது தெரியாமல் பஸ்ல பிக்பாக்கெட் செய்யற தொழில் செய்தவராச்சே!

2)பஸ்ஸை இழுத்து மூடப் போறாங்களாமே..
 ஆமாம்..கட்டண உயர்வு அதிகமாயிடுச்சாம்..அதனால..தான்னு கூகிள் சொல்லுது

3)தலைவர் கோர்ட்ல இருந்து வந்ததும் வருத்தத்தோடு பாஸ்..பாஸ் னு சொல்றார்
 பெயில் கிடைக்கலையாம்..பெயிலுக்கு எதிர்ப்பதம் பாஸ் னு நினைச்சு சொல்றார்

4)உன் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கப்போற..
 அதுவா இப்ப முக்கியம்..அதுக்கு முன்னாலே ஐஸ்வர்யா பச்சன் குழந்தைக்கு 'அ' வில ஆரம்பிக்கற பெயரைத் தேடிக்கிட்டு இருக்கேண்

5)காலம் எப்படி மாறிப்போச்சு பத்தியா..
என்ன சொல்ற
செய்யற ஊழலைக் கூட மரியாதையா சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க..2 ஜி..3 ஜி ன்னு

6)தலைவர் ஏன் ரொம்பக் கோபமா இருக்கார்..
 யாரோ அவரை 'ராஜா' ப்போல வாழணும்னு வாழ்த்திட்டுப் போனாராம்

7)அதிகாரி- ஆஃபீஸிற்கு ஏன் மினி ஸ்கர்ட்டோட வர
  ஸ்டெனோ- இன்னிக்கு சனிக்கிழமை அரை நாளாச்சேன்னு தான்
 அதிகாரி- அப்போ..நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை..விடுமுறை..உன்னை வீட்டில வந்து பார்க்கிறேன்

8)அவர் ஒரு போலி டாக்டர்ன்னு எப்படி சொல்ற
 ஜலதோஷம்னு போனேன் உனக்கு எட்டாம் இடத்தில தோஷம்னு சொல்றார்.

9)என் பொண்ணு எதுக்கெடுத்தாலும் வெட்கப்படுவா
 அதனாலதான் shyலஜான்னு பெயர் வச்சியா

10)உங்கப் படத்தைப் பத்தி  இணையத்திலே நல்லா அடிச்சு துவைச்சுட்டாங்க
  அதனாலதான் படத்தில கலர் அங்கங்க திட்டுத் திட்டா தெரியுதா?

Sunday, December 4, 2011

பெற்றோர்களே..கொஞ்சம் மாறுங்களேன்..




இன்று தினசரி ஒன்றில் வந்துள்ள செய்தி....என்னை இப்பதிவிட வைத்தது..

அமெரிக்காவில் பிராஜெக்ட் மேலாளராய் வேலை செய்யும் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்து, ஒரு வயதில் ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.
கணவன்,மனைவி..தங்கள் குழந்தையுடன் நேற்று சென்னை வந்தனர்.

அவர்களை வரவேற்க வந்த இரு வீட்டாரும், குழந்தையை வாங்கி கொஞ்சினர்.பின்னர் மந்தைவெளியில் உள்ள தன் வீட்டிற்குச் செல்ல இஞ்சினீயர் கிளம்பினார்.ஆனால் மனைவியோ தனது வீட்டிற்கே முதலில் போக வேண்டும் என்றார்.இதில் இரு தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது.

உடன் பெண்ணின் தந்தை, 'மகளையும், பேரனையும் நான்தான் அழைத்துச் செல்வேன்..நீங்கள் எங்களுடன் வருவதானால் வாருங்கள் அல்லது நீங்கள் மட்டும் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்' என்று கூறி மகளையும், பேரனையும் காரில் அழைத்துச் சென்றார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கணவர், விமான நிலைய போலீசிற்குச் சென்று, 'மனைவியும், மகனும் மாயமாகி விட்டனர்.அவர்களை கண்டுபிடித்து தாருங்கள்' எனப் புகார் கொடுத்தார்.போலீஸ் விசாரணையில் பெண்ணின் தந்தையே பெண்ணை அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

இதை அடுத்து அவர்களை போலீசார் சமாதானப்படுத்தியதோடு, 'இரு வீட்டாரையும் ஈகோவை விட்டு அனுசரித்துச் செல்ல அறிவுறுத்தினர்.மனைவியின் விருப்பப்படி அவருடன் சேலம் சென்று இரு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் மனைவியை அழைத்துக் கொண்டு உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள்'என்றனர்.

இச் செய்தி ஒரு செய்தியா என்று சிலர் நினைக்கக் கூடும்..ஆனால் எனக்கு இது முக்கியச் செய்தி ஆகப் பட்டது.

பெண்கள் கணவன் வீட்டிற்குத்தான் முதலிடம் தர வேண்டும் என்று குறுகிய நோக்கம் இருந்த காலம் எல்லாம் போய் விட்டது.திருமணமானதும்..பெண்களின் பிறந்தவீடு உறவு முடிந்துவிட்டது..இனி புகுந்த வீடுதான் என்பதெல்லாம்..பழங்கதை.பிள்ளையைப் பெற்றோர்..தன் மகன் என எண்ணுவதைப்போல..பெண்ணைப் பெற்றோருக்கும்..அப்பெண் அவர்கள் வீட்டுக் குழந்தை..பெற்றோரால் பார்த்துப் பார்த்து வளர்க்கப்பட்டவள்..ஒவ்வொரு வயதிற்கும்..ஒவ்வொரு வித அலங்காரம் பண்ணி குழந்தை வளர்ச்சியை ரசித்தவர்கள்.அவளுக்கு பையனுக்கு இணையாகக் கல்வியறிவை ஊட்டியவர்கள்.எந்த அளவிலும்..பெண்ணைப் பெற்றோர்..பிள்ளையைப் பெற்றொரைவிடக் குறைந்தவர்கள் அல்ல..அதே போல பிள்ளையின் மீது நீங்கள் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்களோ..அதில் எள்ளளவு பாசமும் குறையாமல் பெண் மீது பாசம் வைத்துள்ளவர்கள் அவர்கள்.

ஆகவே..வயதில் பெரியவர்களான பெற்றோர்கள்..இன்றைய காலகட்டத்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல நடந்து கொள்ளுங்கள்.

நான் மேலே சொன்ன செய்தியில், கணவனும் சரி,பிள்ளையைப் பெற்றோரும் சரி...நீண்ட நாட்களுக்குப் பிறகு வருகிறாய்..முதலில் உன் வீட்டிற்குச் சென்று உன் பெற்றோருடன் சில நாட்கள் இருந்து விட்டு வா..என்று சொல்லியிருந்தால்..அந்தப் பெண்ணும் மகிழ்ந்திருப்பாள்..தனது மாமியார்,மாமனார் மீது நல்ல எண்ணமும் உருவாகி இருக்கும்...திட்டமிட்டப்படி இல்லாமல் விரைவில் தன் பெற்றோர் வீட்டிலிருந்து கிளம்பியிருப்பாள்.

மேலும் பெண்ணின் தந்தையும் சற்று விட்டுக் கொடுத்து தன் பெண்ணிடம்..'நீ அவர்கள் வீட்டில் இரண்டு நாள் இருந்துவிட்டு கணவன், குழந்தையை அழைத்துக் கொண்டு நம் வீட்டிற்கு வந்து சில நாள் தங்கலாம்' என்று அறிவுறுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் இப்போதைய தேவை..புரிந்துணர்வும்..விட்டுக் கொடுத்தலுமே...இதை அனைவரும் புரிந்து கொண்டால்..பிரச்னை இல்லை.


வயதானவர்கள் தங்கள் பிடிவாதத்தால்...ஒரு அருமையான உறவுகளிடையே கடைசிவரை ஒரு பிளவு ஏற்பட்டு விட்டதை ஏன் உணர மறுக்கிறார்கள்.

கணவனானாலும் சரி..மனைவியானாலும் சரி..அவர்களுக்கான முடிவுகளை அவர்களே எடுத்துக் கொள்ள வேண்டிய வயதை அடைந்து விட்டனர்..அவர்களுக்குள் பேசி முடிவெடுக்கட்டும்.இடையே ..இரு தரப்பு பெற்றோரும் தங்கள் எல்லையை உணர்ந்து..அத்துடன் நிற்க வேண்டும்.

இன்னமும் சென்ற நூற்றாண்டிலேயே இருப்பதில்  கேடுதான் விளையும்.


Saturday, December 3, 2011

எல்லாம் நம் கையில்..




                                          ( Photo..Thanks toSolomon Raja Durai )



எவ்வளவு

தடுமாற்றங்கள்....

அதது ..அதுஅதன்

போக்கில் எனில்

நேர்க்கோடும்

வளைந்து வளைந்தே செல்லும்

முயன்று பார்..

முகம் கூட மாறிடலாம்..


Friday, December 2, 2011

அ.தி.மு.க., வில் வடிவேலு!!!!???




சென்ற தேர்தலில் தி.மு.க., விற்கு வாக்களிக்கும் படி வடிவேலு பிரச்சாரம் செய்தாலும்...அவரது குறி விஜய்காந்தை தாக்குவதாகவே இருந்தது.

வடிவேலு பேசிய எந்த கூட்டத்திலும் மறந்தும் அ.தி.மு.க.,வை அவர் தாக்கவில்லை..ஜெ பற்றியும் விமரிசிக்கவில்லை.

கலைஞரின் மேலும் பற்று உள்ளவர் வடிவேலு.

இந்நிலையில் தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்தார்.உள்ளாட்சித் தேர்தலின் போது அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவில்லை.

விஜய்காந்த் தற்போது அ.தி.மு.க.,உடன் ஆன கூட்டணியிலிருந்து விலகி, ஜெ வையும் விமரிசித்து வருகிறார்.

அதனால் வடிவேலு இப்போது அ.தி.மு.க., வில் சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அவருடன்..விஜய்காந்தின் நெருங்கிய நண்பரும், அவரை வைத்து பல படங்கள் தயாரித்த இப்ரஹிம் ராவுத்தரும் அ.தி.மு.க., வில் சேரப்போவதாகக் கூறப்படுகிறது.

மதுரையைச் சேர்ந்த வடிவேலு, அழகிரி மூலம் தி.மு.க.விற்குக் கொண்டுவரப்பட்டவர்.

வெளியாகியுள்ள தகவல் உண்மையானால்..வடிவேலு, அழகிரி உறவு என்னவாகும் எனத் தெரியவில்லை.

விஷயம் என்னவாகயிருந்தாலும்..கோலிவுட்டில் இச் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




ஞாபகம் வந்ததே....





தேர்வுக்குப் போகுமுன்

செய்தித்தாள் படிக்கச்

சொன்னார் தந்தை

வேண்டா வெறுப்பாய்

படித்தான்...

வினாத் தாளில்

வேலியே பயிரை

மேய்ந்தது போல..

வாக்கியத்தில் அமை

எனக் கேட்கப்பட

காவல் நிலையத்தில்

புகார் அளிக்க வந்த

பெண்...செய்தி

ஞாபகம் வந்தது


Thursday, December 1, 2011

கிசு கிசு எழுதுபவர்களும்.. மன்மோகன் சிங்கும்




சாதாரணமாக பத்திரிகைகளில் வரும் கிசு கிசு பகுதிகள் உறுதி செய்யப்படாதவையாக இருக்கும்..ஆகவே..அதை எழுதுபவர்கள் கூடியவரை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க..செய்திகளை ஊர்ஜிதப்படுத்தாமல்..அப்படி சொல்லப்படுகிறது...நம்பப்படுகிறது என்ற வாசகங்களை அச் செய்திகளுடன் சேர்ப்பதுண்டு.

கிட்டத்தட்ட அதே வழியைத் தான் இன்றைய 'இன்வெஸ்டிகேடிவ் ஜர்னல்ஸ்' எனப்படுபவையும் பின்பற்றி வருகின்றன.

நமது பிரதமரும் கிட்டத்தட்ட அப்படியே அதை பின் பற்ற ஆரம்பித்து விட்டதாக இன்று வந்துள்ள செய்தி மூலம் தெரிகிறது.

அச் செய்தி....

முல்லைப்பெரியாறு அணை பிரச்னையில்..கேரள அரசு கண் மூடித்தனமாய் நடக்கவேண்டாம் என அறிவுறுத்தச் சொல்லி ஜெ பிரதமருக்கு எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதில் எழுதியுள்ளார்..

அதில்..

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் உச்ச நீதிமன்றம் அமைத்த குழுவின் ஆய்வில் உள்ளது.மக்களிடையே பீதி ஏற்படும் வகையில் எந்த செயலும் உருவாகாது என நம்புகிறேன்.(???!!!!)

இரு தரப்பிலும் சுமூகமான,இணக்கமான ஒத்துழைப்பு இருக்கும் என்றும் பேச்சு வார்த்தை மற்றும் தொடர்பு மூலம் நல்ல தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன்.(???!!!!)

பேச்சுவார்த்தைக்காக இரு மாநில அரசுகளின் கூட்டத்தை விரைவில் கூட்டி நியாயமான முறையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று நீர்வள அமைச்சகத்துக்கு அறிவுறுத்தி உள்ளேன்.இந்த விஷயத்தில் உங்களின் ஒத்துழைப்பு கிடைக்கும் என எதிர் பார்க்கிறேன்.(???!!!!)



Wednesday, November 30, 2011

சென்னையில் வாழ்வதே நிம்மதி...




மெர்சர் நிறுவனம்221 நகரங்களில் ஆய்வு நடத்தியது.மக்கள் பாதுகாப்பாக வாழும் நகரங்களில் பெல்ஜியம் நாட்டின் லக்சம்பர்க் நகரம் முதல் இடத்தில் உள்ளது.

உலக அளவில் சென்னை 108 ஆம் இடத்தில் இருந்தாலும் இந்தியாவில் சென்னை மாநகரமே பாதுகாப்பான நகரம் என முதலிடத்தைப் பெற்றுள்ளது.சென்னையில் மக்கள் பாதுகாப்பாக, நிம்மதியாக வாழ முடிகிறதாம்.

இதற்கு அடுத்த இடத்தில் பெங்களூரு உள்ளது அது 117 ஆம் இடத்தையும் டெல்லி, கொல்கத்தா ஆகியவை 127 ஆம் இடத்தையும் பெற்றுள்ளன.மும்பைக்கு 142 ஆம் இடம்.

இதே போல் அமைதியான சுற்றுச்சூழல், செலவு, கட்டமைப்பு, போக்குவரத்து வசதி, மருத்துவ வசதி கொண்ட வாழ்வதற்கு ஏற்ற நல்ல நகரங்கள் எது என்பது பற்றியும் மெர்சர் நிறுவனம் ஆய்வு நடத்தியது.

இதில் ஆஸ்திரியா நாட்டின் தலைநகரம் வியன்னா முதலிடத்தை பிடித்துள்ளது. 2-வது இடத்தை சுவிட்சர்லாந்தின் ஜூகுரிச் நகரம், 3-வது இடத்தை நியூசிலாந்தின்- ஆக்லாந்து நகரம் பெற்றுள்ளது. வழக்கமாக முதலிடத்தில் இருக்கும் சிங்கப்பூர் இந்த ஆண்டு 25-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. பெங்களூருக்கு 141-வது இடம் கிடைத்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் வாழ்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் பெங்களூர் முதலிடத்தை பிடித்துள்ளது. டெல்லி 2-வது இடத்தையும், மும்பை 3-வது இடத்தையும், சென்னை 4-வது இடத்தையும், கொல்கத்தா 5-வது இடத்தையும் பிடித்துள்ளது.

சர்சதேச அளவில் டெல்லி 143-வது இடம், மும்பை 144-வது இடம், சென்னை 150-வது இடம், கொல்கத்தா 151-வது இடத்தில் உள்ளது.


கனவுகளை நேசிக்கிறேன்...





கனவுகளை நான்

நேசிக்கிறேன்

அதிலாவது எனது

லட்சியங்கள் நிறைவேறுவதால்


2) கதாநாயகனாய்

 இருக்க ஆசைப்படுகிறேன்

 ஆனால் அடிகளை

 பலமாய் வாங்கிக் கொள்கிறேன்

 விலைவாசி எனும்

 வில்லனால்


Tuesday, November 29, 2011

பாக்கியராஜின் பதில்..




இந்த வார பாக்யாவில் பாக்கியராஜ் கேள்வி ஒன்றிற்கு அளித்த பதில்..எனக்குப் பிடித்திருந்தது..அதை பகிர்ந்து கொள்கிறேன்..

கேள்வி- சாத்தானின் சேஷ்டை என்பது..?

பதில்- ஒரு மனிதனை அற்பத் தனமா யோசிக்க வச்சு, கைக்கெட்டியது வாய்க்கெட்டாது செய்யறதுதான் சாத்தானின் மிக முக்கியமான சேஷ்டை.இதில பலரும் ஸ்லிப் ஆகறதுண்டு.

உதாரணத்திற்கு ...ஒரு பிச்சைக்காரன் விலை உயர்ந்த ஒரு வைரத்தை வழியிலே கண்டெடுத்தான்.அதன் மதிப்பு என்ன வென்று தெரியாம அதை தன் கூட இருந்த கழுதையோட காதிலே மாட்டிவிட்டான்.

அதைக் கண்காணிச்ச ஒரு வைர வியாபாரி அவனிடம் சென்று,,"இந்த கல்லை எனக்கு கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன்.எவ்வளவு வேண்டும் கேள்" என்றான்.

பிச்சைக்காரன், 'அப்படியானால் ஒரு ரூபாய் தந்துவிட்டு இந்தக் கல்லை வைத்துக் கொள்' என்றான்.

அதற்குள் வைரவியாபாரிக்குள்ள சாத்தான் பூந்துட்டு இன்னும் குறைவா வாங்குன்னு சொல்ல அவர்,'ஒரு ரூபாய் அதிகம்.நான் உனக்கு 50 பைசா தருகிறேன்.இல்லையென்றால் வேண்டாம்' என்று அற்ப புத்தியுடன் சொல்ல,

பிச்சைக்காரன் 'அப்படியானால் பரவாயில்லை! அது இந்த கழுதையின் காதிலேயே இருக்கட்டும்'னு சொல்லிட்டு நடந்தான்.வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை 50 காசிற்கு தந்து விடுவான்ற எண்ணத்தோட பின் தொடர்ந்து வந்துகிட்டிருந்தாரு.

அப்ப எதிர்ல வந்த இன்னொரு வியாபாரி கழுதை காதுல வைரத்தைப் பார்த்துட்டு அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் தந்து அந்த வைரத்தை வாங்கிட்டான்.

இதை சற்றும் எதிர்பாராத வைர வியாபாரி அதிர்ச்சியுடன் 'அட..அடி முட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்திற்கு கொடுத்துட்டு இவ்வளவு சந்தோசமா செல்கிறாயே! நன்றாக ஏமாந்து விட்டாய்'னு சிரிச்சு கிண்டலடிச்சாரு.

அதைக்கேட்ட பிச்சைக்காரன் பலத்த சிரிப்போடு..'யார் முட்டாள்? எனக்கு அதன் மதிப்புத் தெரியாது..அதனால் அதை இந்த விலைக்கு விற்று விட்டேன்.மேலும் எனக்கு இதுவே மிகப் பெரிய தொகை.எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன்.அதன் மதிப்பு தெரிந்தும் வெறும் 50 காசிற்காக கோடி ரூபாய் வைரத்தை இழந்து விட்டாயே? இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்"னு நடந்தானாம்...


Monday, November 28, 2011

ரூ.1,650 கோடி..இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ்





 தென் ஆப்பிரிக்காவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்காக இந்தியாவிலிருந்து உரிய அனுமதி பெறாமல் ரூ. 1,650 கோடியை எடுத்துச் சென்றது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு அமலாக்கப் பிரிவு (Enforcement Directorate-ED) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐபிஎல் 2 லீக் போட்டிகள் முதலில் இந்தியாவில் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், பாதுகாப்பு காரணங்களையொட்டி இந்தப் போட்டிகள் தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டன.

இதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ. 1,650 கோடியை தென் ஆப்பிரிக்காவுக்கு கொண்டு சென்றது. ஆனால், இதற்கு உரிய அனுமதியை கிரிக்கெட் வாரியம் பெறவில்லை.

இதையடுத்து அன்னிய செலாவணி சட்டத்தின் (Foreign Exchange Management Act-FEMA) கீழ் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு அமலாக்கப் பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

பிசிசிஐக்கு அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீசின் நகல் ஐபிஎல் கமிஷ்னர் லலித் மோடிக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர் ஷாருக் கான், பிசிசிஐ முன்னாள் தலைவர் சஷாங் மனோகர், ரவி சாஸ்திரி ஆகியோரிடமும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

(தகவல்- தட்ஸ்தமிழ்)

கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது..




 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகியுள்ள திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி, கலைஞர் டிவி நிர்வாகி சரத்குமார் ரெட்டி உள்ளிட்ட 5 பேருக்கு ஜாமீன் வழங்கி டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதையடுத்து திமுக தரப்பு பெரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளது.

 இன்று இந்த மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கனிமொழி, சரத்குமார், ஆசிப் பல்வா, ராஜீவ் அகர்வால், கரீம் மொரானி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இவர்கள் யாரும் நாட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் நீதிபதி நிபந்தனை விதித்தார்.

 டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, டெல்லி பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். அங்கு பார்மலிட்டீஸ் எல்லாம் முடிந்த பின்னர், திகார் சிறைக்கு உத்தரவு அனுப்பப்படும்.

இதன் பின்னரே கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்படுவர். இவை எல்லாம் இன்றே நடந்து முடிய வாய்ப்பில்லை என்பதால், நாளை தான் இவர்கள் சிறையிலிருந்து வெளியே வருவர் என்று தெரிகிறது.

இந்த 2ஜி வழக்கில் இவர்களையும் சேர்த்து மொத்தம் 10 பேர் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sunday, November 27, 2011

மாவீரர் தினம்




மாவீரர் தினமாம்

எஞ்சிய

போரிட்ட வீரர்கள்

கைகால்கள் மட்டுமல்ல

மனமும்

உட்கார்ந்து விட்டது..

விடியல் என்று வரும்

அவர்களுக்கு....


Saturday, November 26, 2011

2ஜி ராஜா..யார் மீது குற்றம் சுமத்துவார்..??!!!




2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி ராஜா கடந்த 10 மாதங்களாக திகார் சிறையில் உள்ளார்.

இந்நிலையில் அவர் வெள்ளியன்று நீதி மன்றத்திற்கு வந்த போது பத்திரிகையாளர்களிடம் பேசினார்..

அவர் கூறுகையில்..

திகார் சிறை வாழ்க்கை என்னை செம்மையாக்கியுள்ளது.

12 ஆண்டுகள் எம்.பி.ஆக இருந்து விட்டேன்.சிறை வாழ்க்கையும் அனுபவித்து விட்டேன்.இவற்றில் கற்றுக் கொள்ள வேண்டியவை நிறைய உள்ளன.

நான் தற்காலிக விடுதலையை விரும்பவில்லை.இவ்வழக்கிலிருந்து முழுமையாக வெளியேற வேண்டும்.ஆகவே நான் ஜாமீன் கெட்டு மனு தாக்கல் செய்யவில்லை.ஒவ்வொரு விஷயத்தையும் கூர்ந்து கவனித்து வருகிறேன்.நான் நிரந்தரமாக ஜெயிலில் இருந்து விடுவேன் என நினைக்கக் கூடாது.கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்த பின் நான் ஜாமீன் மனு தாக்குவது குறித்து யோசிப்பேன்..' என்றுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 'நான் வாயைத் திறக்கும் போது, பலர் ஜெயிலுக்கு போக வேண்டியிருக்கும்' என்றும் கூறியுள்ளார்.

அவர யாரை மனதில் நிறுத்தி..இதைக் கூறியுள்ளார் என்பது சம்பந்தப் பட்டவர்களுக்கு மட்டுமே தெரியும் எனத் தோன்றுகிறது.



அடப்பாவிகளா..இதிலுமா ஊழல்..




மகாராஷ்டிராவில் துலே மாதத்தில் நியாகலாட் என்னும் கிராமத்தில் 600 குடிம்பங்கள் வசித்து வருகின்றன.

அந்த கிராமத்தில் அக்டோபர் 3ஆம் நாள் , திடீரென 60 வெளியூர் மாணவர்கள்..காதில் உயரைச் சொருகி..ஐ பாட்டில் பாட்டைக் கேட்டபடி வந்தனர்.கேட்டால் அந்த கிராமத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் என்றனர்.அதாவது அங்குள்ள பள்ளிக்கு இன்ஸ்பெக்க்ஷன் வருவதால்...கணக்குக் காட்ட வெளி மாணவர்களை வரவழைத்துள்ளனர் என்று தெரிந்தது.

அம்மாநிலத்தில் அக்டோபர் 3,4,5 ஆகிய நாட்களில் பள்ளி இன்ஸ்பெக்க்ஷன் வந்த போது 2600000 மாணவர்கள் வரவில்லை என்று தெரிய வந்தது.ஆனால் அனைத்தும் போகஸ்..ஆம்..அவ்வளவு மாணவர்கள் கிடையவே கிடையாது.தவிர்த்து நூற்றுக் கணக்கான பள்ளிகள் வெறும் ஏட்டில் பெயரில் தான் உள்ளது.பெரும்பாலான பள்ளிகள் மந்திரிகளாலும், எம் எல் ஏ க்களாலும் நடத்தப் படுபவை.

இல்லாத மாணவர்களுக்கு (இருபத்தாறு லட்சம்) மதிய உணவிற்கு 30 கோடியே 42 லட்சம் பணம் பெறப்பட்டதாம்.ஒவ்வொருவருக்கும் 3 கிலோ அரிசி என 11 கோடி பணம் வாங்கப்பட்டது.தவிர்த்து இல்லாத ஆசிரியர்கள் 43775 பேர் இருப்பதாகக் காட்டி அவர்களுக்கான சம்பளமாக 60 கோடியே 66 லட்சத்து 90000 வாங்கப்பட்டது.

படிக்கப் படிக்க ரத்தம் கொதிக்கிறது.

இவ்வூழல் குறித்து முழுதும் படிக்க வேண்டுமா நவம்பர் 27 தேதியிட்ட தி வீக் ஆங்கிலப் பத்திரிகை வாங்கிப் படியுங்கள்.அப்பத்திரிகை இந்த ஊழலுக்குக் கொடுத்த தலைப்பு..

"bogus schools help politicians swindle thosands of crores"

Friday, November 25, 2011

மழையும்..மனிதனும்..




மழை

பெய்து கொண்டிருக்கிறது

ரசித்துக் கொண்டிருக்கிறேன்

நொறுக்குத் தீனியுடன்..

பாழாய்ப்போன மழை

வெளியே செல்ல இயலவில்லை

என்கின்றேன்..

தொலைபேசியில் அழைப்பவனிடம்..

நல்லது செய்யும்

மனிதன் மட்டுமல்ல

மழையும்

சபிக்கப்படும் போல...



மின் கட்டண உயர்வு மக்களைப் பாதிக்காது


வாய் விட்டு சிரிங்க...

1) பேருந்து பயண டிக்கெட் உயர்வு உன்னை பாதிக்கலையா..எப்படி?
  டிக்கெட் வாங்கறவங்களைத்தானே அது பாதிக்கும்..

2)கோடீஸ்வரனாய் இருந்த அவன் திடீர்னு லட்சாதிபதியாயிட்டானே எப்படி..
  அவன் வீட்டில் பால் உபயோகம் அதிகம்..அதனால்தான்

3)மின் கட்டண உயர்வு 100 விழுக்காடு உயர்ந்தாலும் அது மக்களைப் பாதிக்காதுன்னு முதல்வர் சொல்றாரே..எப்படி?
 ஒரு நாளைக்கு 12 மணி நேர மின்வெட்டு அமுலுக்கு வரப்போகுதாம்..அப்படின்னா ஒருத்தர் ஒரு நாளைக்கு பாதிதானே மின்சாரம் உயோகிக்க முடியும்..

4)லஞ்ச ஒழிப்புத் துறை அந்த அரசியல்வாதி வீட்ல சோதனையிட்டாங்களே..அப்புறம் என்ன ஆச்சு..
அரசியல்வாதி சேர்த்ததிலே பாதியை லஞ்சமா கொடுக்க வேண்டி இருந்ததாம்

5)அந்த வழக்கிலே அரசியல்வாதியை விசாரிச்சாங்களே..அப்புறம் ஏன் விட்டுடாங்க....
நீங்கதானே ****** ன்னு நீதிபதி கேட்டதற்கு தெரியாதுன்னு பதில் சொன்னாராம்

6)உடம்பு சரியில்லைன்னு மருத்துவமனைக்குப் போன தலைவர் அங்கே மருத்துவர்கள் கிட்ட ஏன் சண்டை போடறார்..
தினமும் அவர் பெயர் பத்திரிகைலே வரணுமாம்..மருத்துமனையிலே இருக்கறதாலே அறிக்கை வெளியிட முடியாதுன்னு..சண்டை போட்டாதா தன் பெயர் வரட்டும்னு  சண்டை போட்டாராம்.

7)அந்த குளோபல் மகப்பேறு மருத்துவ மனையில் வருமானவரித் துறை ஏன் சோதனைப் போட்டது.
 உலக ஜனத்தொகை 700 கோடிங்கறதை படிச்ச அதிகாரிங்க..உலகம் ங்கறதை குளோபலோடு குழப்பிட்டாங்களாம்..அதனால அவ்வளவு மருத்துவம் பார்த்த ஆஸ்பத்திரி அதற்கான வரியைக் கட்டவில்லைன்னு சந்தேகப்பட்டங்களாம்...அதுதான்

Thursday, November 24, 2011

வெள்ளைப் புள்ளி தெரிவதில்லை




வெள்ளாடுகள் இடையே

"பளீச்' எனத் தெரியுது

கருப்பு ஆடு..

வெள்ளைத் தாளின் நடுவே

சின்னக் கருப்பு புள்ளி

பெரிதாய் தெரியுது..

அரசியல்வாதிகளிடையே மறந்தும்

கருப்பில்

வெள்ளைப் புள்ளி தெரிவதில்லை .


வரவில்லை கவிதை





தவம் கிடக்கிறேன்

தாள்களின் முன்

வரவில்லை கவிதை

பேருந்து கூட்ட நெரிசலில்

 தீப் பொறியாய்

 வந்து அமர்கிறது

வானத்தில் நிலவை

ரசிக்கையில்

வரவில்லை கவிதை

சாலையோர சிறுமியின்

கையேந்தலைப் பார்த்ததும்

வந்து அமர்கிறது.

Wednesday, November 23, 2011

கொஞ்சி விளையாடும் தமிழ் - 26




நிலவை பெண்களுக்கு ஒப்பிட்டு எவ்வளவு கவிதைகள்...

வள்ளுவனும் அதற்கு விலக்கல்ல.

மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாது விண்மீன்கள் தவிக்கின்றனவாம்

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளி பொழியும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட இந்த மங்கை நல்லாள் முகத்தில் இல்லையாம்

முழு நிலவே..என் காதலுக்கு உரியவளாக நீயும் ஆக வேண்டுமாயின்..என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக

நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் நீ பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமானால் (அதில் நீ தோல்வியுறாமல் இருக்க) பலரும் கானும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.

(இன்பத்துப்பால்..குறள்கள்..1116,1117,1118,1119)

இப்போதைய கவி ஒருவன்...தன் காதலி இளமையானவள் என்பதை இப்படிச் சொல்கிறான் நிலவை அழைத்து...

'என் அருமைக் காதலிக்கு..நீ இளையவளா..அல்ல மூத்தவளா.." என.

மற்றவனோ..நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்றும், நிலவே என்னிடம் நெருங்காதே என்கிறான்.

இன்னொருவன்..நிலவைப் பெண்ணாகவும்..அப்பெண் பார்க்கும் கண்ணாடியாக நீல வானத்தையும் கூறுகிறான்.

பிறை நிலவை பெண்ணின் நெற்றிக்கு ஒப்பிட்டு பக கவிகள் 'பிறை நுதல்' என்கின்றனர்.

அனால் இந்த உவமைகள் எப்படியுள்ளன பாருங்கள்..

யானைத் தந்தம் போல
பிறை நிலா

வெட்டி எறிந்த நகம் போல
பிறை நிலா

அறுத்தெடுத்த பூசணிக்காய்
கீற்று போல
பிறை நிலா

இப்படி சொன்னதுடன் நிற்காவில்லை புத்துக்கவிதைகள்

ஒரு கவிஞர் சொல்கிறார்..

பிறை நிலவாய் இருந்தாலும் முழு நிலவின் உரு மங்கலாகத் தெரியும் அல்லவா? அந்நிலவை குழந்தையாகவும்..வானத்தை துணியாகவும்..குழந்தை வானத் துணியை ஈரம் பண்ணுகிறதாம்..

பெய்யும் ஒளி நீரால்
வானத் துணியில்
ஒரு வட்டமாய் ஈரம் பாயும்
                -என்கிறார்..

யார் நிலை என்ன சொன்னாலும்..எப்படி ஒப்பிட்டாலும்..தாய் மனமோ..

அந்நிலவை தன் உறவாய்..தம்பியாய் நினைக்கிறாள்..ஆகவே தான் தன் குழந்தைக்கு அந்த அம்புலிமாமாவைக் காட்டி அழைத்து சோறூட்டுகிறாள்.