1.தமிழ்மீது பற்றுக்கொண்ட சூரிய நாராயண சாஸ்திரியார் தன் பெயரை பரிதிமாற்கலைஞர் என மாற்றிக்கொண்டார்.அவர் ஒரு நாள் இலக்கணப்பாடம் நடத்திக்கொண்டிருந்தார்.அப்போது ஒரு மாணவன் எழுந்து 'ஐயா..நீங்கள் நடத்திய பாடத்தில் சீர் புரிகிறது.தளை புரிகிறது..தொடை புரிகிறது...அதற்கு மேல் ஒன்றும் புரியவில்லை...அதை சற்று விளக்கமாகக் கூறுங்கள் என்றான்.
அவனது கிண்டலைப் புரிந்துக் கொண்ட ஆசிரியர் 'தனியே என் அறைக்கு வா...விளக்குமாற்றால் விளக்குகிறேன்' என்றார்.வகுப்பு முழுதும் சிரித்தது.மாணவன் வெட்கி தலை குனிந்தான்.
(விளக்குமாற்றால்..இரு பொருள்..ஒன்று..துடைப்பத்தால்..மற்றும் ஒன்று..விளக்குமாற்றால்...விளக்கும் வழியில்)
2.ஆறறிவு என்கிறோமே..அப்படி என்றால்? உடல்,நாக்கு,மூக்கு,கண்,காது,இதயம் ஆகியவற்றால் அறிவதே ஆகும்.இது மனிதர்களுக்கு சரிதானே.
3.அம்மாவோ..அப்பாவோ..கட்டுப்பாடு என்ற பெயரில்..தங்கள் குழந்தைகளை அடித்து நொறுக்குவார்கள்.பெற்றோரை எதிர்த்து..பதில் தாக்குதல் நடத்த முடியாத குழந்தைகள் மனதில் ஆற்றாமை இருந்துக்கொண்டே இருக்கும்.அதனால் பெற்றோரை பழி வாங்குகிறேன் என நமக்கு விருப்பமில்லா காரியங்களை செய்துக்கொண்டிருப்பார்கள்.இப்படிப்பட்ட குழந்தைகள் வளர்ந்த பின்னும்..சட்டத்துக்கு புறம்பான காரியங்களை சர்வசாதாரணமாக செய்வார்கள்.
4.ஒரு கட்சியினுடைய வலிமை..அதனுடைய சுய பலத்தில் இல்லை.,அந்தக் கட்சியை எதிர்க்கிற எதிர்க்கட்சிகளின் வலிமையில்தான் இருக்கிறது. _ அண்ணா
5.எப்போதும் விருப்பத்திற்குரியதாக இருப்பது சமயத்தில் அதிக பட்ச வெறுப்புக்கு உள்ளாகும்.
6.தேர்தல் நடக்கிறது
நாடெங்கும் நடக்கிறது
பணபரிமாற்றங்கள்
கறுப்பு வெள்ளையாகிறது
களங்கமில்லா காந்தியின்
சிரிப்புடன்.
7.தலைவா...நம்ம கட்சியில கேடிகள் அதிகமாயிட்டாங்க..
அதனால் என்னா..அவர்களுக்கும் சில கோடிகளை தள்ளிவிடுவோம்.
8 comments:
Only yesterday, I had a post about Paridhimaal Kalaignar - http://koottanchoru.wordpress.com/2009/04/16/பரிதிமால்-கலைஞரின்-மதிவா/
Nice to see another one about him today!
வருகைக்கு நன்றி RV
ha ha nalla than iruku unga manga pattanai sundal
nice...
வருகைக்கு நன்றி Suresh
வருகைக்கு நன்றி லோகு
பின்னுறீங்க தலைவரே.
சரியான கலவை இந்த வாரம்.
தொடர்பதிவுன்னா , நீங்க நெம்ப நெம்ப மூத்த பதிவர் ஆயிட்டிங்க போங்க.
வருகைக்கும்..கருத்துக்கும்...பாராட்டுக்கும் நன்றி மதி...
Post a Comment