இந்தியா முழுதும் ஒரு ரூபாயில் ஃபோனில் பேச வசதி செய்தவர் தயாநிதி மாறன் என மாறன் புகழ் பாடுகிறார் வீராசாமி.
அவருக்கும்...மாறன் பிரதர்ஸிற்கும் ஏழாம் பொருத்தம் என நாம் அறிவோம்.கலைஞருடன் மாறனை ஒட்டவிடாமல் தடுத்ததில் அவருக்கும் பங்கு உண்டு.
இந்நிலையில்...நேற்று அண்ணாநகரில் தேர்தல் அலுவலகம் திறந்த ஆற்காட்டார் பேசுகையில்...'தகவல் தொடர்புத்துறைக்கு எத்தனையோ அமைச்சர்கள் இருந்திருக்கின்றனர்.ஆனால் அனைத்திலும் முதன்மையாக திகழ்ந்தவர் மாறன்.அவரது திறமையால் இப்பொது 40 கோடி பேர் செல்ஃபோன் வைத்திருக்கிறார்கள்.கிராமங்கள்தோறும் டெலிஃபோன் வசதி உள்ளது..என மாறன் புகழ் பாடினார்...
இதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் ஏன் கீழ்க்கண்டவற்றை கேட்கவில்லை...
அவர் திறமையானவர் என தெரிந்தும்...அவர் பதவியை ஏன் பறித்தீர்கள்?
தினகரன் சர்வேயாலா...அப்படியெனில்...திறமையைவிட குடும்ப நலன் முக்கியமா?
அவர் தி.மு.க.வில் இருந்தபோதே...அவரை விலக்கிவிட்டு அவரைவிட திறமை குறைந்த (??!!)வரை அவர் பதவிக்கு ஏன் நியமிக்க வேண்டும்..
திறமையானவர்களுக்கு...மக்களுக்கு நன்மை செய்தவர்க்கு...இப்படிப்பட்ட பரிசைதான் கட்சி வழங்குமா?
இல்லை...ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு துணைபோக மாறன் மறுத்தாரா?
குடும்ப சர்ச்சை தீர்ந்ததும்தான்...மீண்டும் திறமை கண்களில் பட்டதா?
இப்பதிவு திரித்துக் கூறப்பட்டது என சொல்லமுடியாது என எண்ணுகிறேன்.
2 comments:
me the first/எப்பிடி இப்படி dmk க்கு எதிர்ப்பு மாதிரி பதிவு உங்களிடமிருட்ந்து
மாறன் மீது கலைஞருக்கு வெறுப்பை ஏற்படுத்தியவருள் ஆற்காட்டாருக்கே முதல் இடம்..அதனால்தான் இப்பதிவு.
என்னை புரிந்துக் கொண்டமைக்கு நன்றி
Post a Comment