1960 ல் வெளியான படங்கள்
இரும்புத்திரை
குறவஞ்சி
தெய்வப்பிறவி
ராஜபக்தி
படிக்காதமேதை
பாவை விளக்கு
பெற்றமனம்
விடிவெள்ளி
சென்ற ஆண்டு கட்டபொம்மன்,பாகப்பிரிவினை..வெள்ளிவிழாவை தொடர்ந்து.ஹேட்ரிக்காக இரும்புத்திரை வெள்ளிவிழா படம்.வைஜெயந்திமாலா கதாநாயகி. ஜெமினி தயாரிப்பு.
தெய்வப்பிறவி..கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் கதை வசனம்..சிவாஜி,பத்மினி..கமால் பிரதர்ஸ் உடன் ஏ.வி.எம்.,கூட்டு தயாரிப்பு.சிவாஜி,பத்மினி,எஸ்.எஸ்.ஆர்., நடித்த படம்.அருமையான பாடல்கள்.,
படிக்காத மேதை..சிவாஜி., சௌகார்..நடித்தது..சிவாஜியின் அற்புத படைப்பு.அனைத்து பாடல்களும் அருமை.
விடிவெள்ளி..ஸ்ரீதர் இயக்கத்தில் முதல் சிவாஜி நடித்த படம்.சரோஜா தேவி கதாநாயகி. ஏ.எம்.ராஜா வின் 'கொடுத்துபார் உண்மை அன்பை' என்ற அருமையான பாடல்.
தெய்வப்பிறவி,படிக்காதமேதை,விடிவெள்ளி மூன்றும் 100 நாட்கள் படம்.
குறவஞ்சி,ராஜபக்தி,பாவைவிளக்கு,பெற்றமனம் ஆகியவை தோல்வி படங்களாக அமைந்தன.
பாவைவிளக்கு...அகிலன் எழுதிய நாவல்..இப்படத்தில்..நடிகர்கள் முதலில் அவர்களாகவே வருவார்கள்...அதாவது சிவாஜி சிவாஜியாகவே..பின் நாவலை படிக்கையில் அந்தந்த கதா பாத்திரமாகவே மாறுவர். சிதம்பரம் ஜெயராமனின்..'வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி ' பாடல் இடம் பெற்ற படம்.
பெற்றமனம்..மு.வ.,வின் எழுத்தில் வந்த படம்.
அடுத்த பதிவில் 1961 படங்கள்.
4 comments:
சிவாஜி கணேசன் பழைய படங்களில்
குண்டு கன்னங்களுடன் ஜம்மென்று இருப்பார். நடிப்பும் ரொம்ப யதார்த்தம்.பாத்திரத்தோடு ஒன்றிய நடிப்பு.
மிகை நடிப்பு அவ்வளவாக இல்லை.
அவருக்கு bad time ஆரம்பித்தது 1978? உச்சக்கட்ட ஓவர் ஆக்டிங்.
பொருந்தாத வேடம்.16 வயசு பெண்கள் ஜோடி.விக்.(ய.யமன்
,சிரஞ்சீவி,லா.டிரை.ராஜா,வெ.ஒரு,
திரிசூலம்,மி.சக்கர...என்று பல)
வருகைக்கு நன்றி கே.ரவிஷங்கர்
ஐயா
இன்னும் கொஞ்சம் தகவல்கள் சேர்த்தால் நன்றாக இருக்கும்
70 களீல் வெளிவந்த பட்டாகத்தி பைரவன் படம் cd/dvd இருக்கிறதா?
எங்கெங்கோ செல்லும் என் எண்ணெண்ணங்கள் என்ற
அருமையான பாடல் இடம் பெற்ற படம்.
இந்த படத்தை பற்றீ எழுதுமாறு வேண்டுகிறேன்
வருகைக்கு நன்றி SANKAR
Post a Comment