Sunday, April 12, 2009

ஐயா..சாமிகளே..இனி இலங்கை தமிழர் பற்றி பேசாதீர்கள்...


சமீப காலமாக...இலங்கை தமிழர் பிரச்னைக்கான உருப்படியான காரியம் ஏதும் செய்யாமல்...அரசியல் கட்சிகள் ஒருவரை ஒருவர் இந்த விஷயத்தில் குறை சொல்வதையே காணமுடிகிறது.

தேர்தல் அறிவிப்பு வந்ததும்...இந்த செயல் அதிகமாகவே ஆகிவிட்டது..

ஒருவர்...அந்த கட்சியின் மீது பயங்கரமாக பாய்ந்ததுடன்..அவர்களது அலுவலகத்தையே சூறையாடிவிட்டு...இன்று அதே கட்சியினருடன் கூட்டணியில் சேர்ந்து..இரு தொகுதிகள் பெற்றுவிட்டு...40ம் எங்களுடையதே...அதிலும் என் வெற்றி முதல் வெற்றி என கொக்கரிக்கிறார்.

இன்னும் ஒருவர்...நேற்றுவரை அவர்களுடன் இருந்துவிட்டு...பதவி, சுகம் என அனுபவித்துவிட்டு..இன்று வெளியே வந்து...கலைஞர் மத்திய அரசை..இவ்விஷயமாக நிர்பந்திக்க வேண்டும் என வோட்டுக்காக நாடகம் போட்டுக்கொண்டிருக்கிறார்.

ரத்தஆறு ஒடும்..என சீறும்..இவரோ...போர் என்றால்..அப்பாவி மக்களும் உயிர் இழக்கத்தான் நேரிடும்..என்று..சொன்னவருடன்...நான்கு தொகுதி ஆசையில் பூனையாய் விட்டார்.மக்களிடம் புலி..போயஸ்ஸிலோ பூனை.

தேர்தல் அறிவிப்புக்கு முன் ஒரு மாதிரியும்...அறிவிக்குப் பின் ஒருமாதிரியும்..நடந்துக் கொண்ட இவர்..திடீரென அவர்களை ஆதரித்து 8 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து ஆதரவை தேடுகிறார்.

இது விஷயமாக வாயையே திறக்காத இந்திய புஷ்..திடீரென...தமிழருக்கென இலங்கையில் தனி ஒன்றிரெண்டு மாநிலம் வேண்டும் என்கிறார்.அதுவும் யாரிடம்..அவர் போட்டியிடப்போகும் தகுதி மக்களிடம்.உள்ளூரிலாவது விலை போக வேண்டிய ஆசையில்.

60 வருஷ பொது வாழ்க்கை என்றும்..இதற்காக பதவி துறந்தேன் என வாய்க்கு வாய் கூறும்...தமிழின தலைவரோ..'அம்மா தாயே..." என்கிறார்.

அகில இந்திய கட்சிகளான மற்ற இரு கட்சிகள் தொகுதிகளுக்காக தங்கள் கொள்கைகளை அடமானம் வைத்துவிட்டன.தேர்தலுக்குப் பின் கொள்கைகளை மீட்டுவிடும்.

இன்னொரு பிரதமர் ஆகும் ஆசையில் உள்ள கட்சி ராமர் நினைப்பிலேயே..ஆட்சி கனவு காணுகிறது.அதற்கு அதன் கவலை...

நாடாளுமன்ற தேர்தலில்...இலங்கை தமிழர் பிரச்னை..பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும்...இந்த தலைவர்கள் பேசும் வசனங்களும்...போடும் நாடகங்களும்..போறும்டா சாமி என்ற நிலை பொதுமக்களிடம் ஏற்படுத்தி விட்டது.

10 comments:

Rajaraman said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

தலைவர் said...

தல, உங்க வாக்கியம் ஒவ்ஒன்றும் முத்தான வாக்கியம், இதை தலைவர் வழி மொழிகிறார்.

கே.ரவிஷங்கர் said...

மன்னிக்கவும் இந்த பதிவில் போடுவதற்க்கு.

நான் ”கே.பாலசந்தர் மீண்டும் டிராமா”
என்ற பதிவு போட்டுள்ளேன்.நீங்கள்
இதில் அனுபவம் உள்ளவர்.உஙகள் கருத்து அறிய ஆவலாக உள்ளேன்.
கருத்துக் கூறவும்.

நன்றி.

மதிபாலா said...

சூப்பரான சூடு.

தேர்தலில் இலங்கைப் பிரச்சினை எதிரொலிக்கும். மிக வலுவாக.

ஆனால் அந்த எதிரொலிப்பு ஈழத்தமிழர்களுக்குத்தான் வேட்டு வைக்கப் போகிறது பாருங்கள்.!

ஆனால் அதற்குக் காரணமும் ஈழத்தமிழர்கள்தான்.

வேறென்ன சொல்ல.

T.V.Radhakrishnan said...

வாழ்த்துக்கள் Rajaraman

T.V.Radhakrishnan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தல

T.V.Radhakrishnan said...

தங்கள் பதிவு படித்தேன்..இது சம்பந்தமாக தனிப் பதிவு இட்டுள்ளேன்.நன்றி ரவி

T.V.Radhakrishnan said...

தலைவர்கள் அறிக்கைகளை படித்து படித்து வெறுப்பில் போட்ட பதிவு..
இதைத்தவிர நம்மால் என்ன செய்யமுடியும் மதி

Suresh said...

நல்ல பதிவு சுளிர் என்று இருந்தது தலைவா

T.V.Radhakrishnan said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி Suresh