Wednesday, April 1, 2009

ஹிந்தி தெரிந்தால்தான் பிரதமர் ஆகமுடியும்...- பிரணாப் முகர்ஜி

காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பிரணாப்..தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.அப்போது..பிரதமர் பதவி பற்றிக் கேட்ட போது..

தனக்கு போதுமான அளவு ஹிந்தி தெரியவில்லை என்பதாலும்...காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவன் இல்லை என்பதாலும்...தன்னால் பிரதமர் ஆக முடியவில்லை என்றார்.

மேலும் மன்மோகன் சிங் சோனியாவின் நம்பிக்கையைப் பெற்றவர் என்றார்.சிறந்த பொருளாதார நிபுணர்.இந்த நாட்டை வழி நடத்த பிரதமர் வட மாநிலத்தைச் சேர்ந்தவராய் இருக்க வேண்டும்..ஹிந்தி போதுமான அளவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்..

மேலும்...பிரதமர் பதவி சோனியாவிற்கு அளிக்கப்பட்ட போது, அவர் தனது நம்பிக்கைக்கு பாத்திரமானவர் யார்? தன்னுடன் முரண்பாடான போக்கை கடை பிடிக்காதவர் யார்? என்றெல்லாம் சிந்தித்து முடிவெடுத்தார் என்றும் கூறியுள்ளார்..

நமது சந்தேகம்...

1.பிரதமர்...பொம்மை பிரதமர் என்று சில பத்திரிகைகள் எழுதியது உண்மையா?

2.பிரதமராக..இந்தியன் அனைவருக்கும் உரிமை உண்டு என்பது பொய்யா?

3.தமிழனால் பிரதமரே ஆகமுடியாதா?

15 comments:

Raju said...

\\தமிழனால் பிரதமரே ஆகமுடியாதா?\\

அய்யய்யோ அப்ப நம்ம டன்மான டமிழன் "கேப்டன்" பிரதமராக முடியாதா?

"என்ன கொடுமை டி.வி.ஆர். அண்ணே..."?

கோவி.கண்ணன் said...

ஹிந்தி தெரிந்தால்தான் பிரதமர் ஆகமுடியும்...- பிரணாப் முகர்ஜி

அவரு எதோ எதிர்பார்ப்பில் இருந்திருப்பார் போல, அது நிறைவேறாமல் போனதில் கட்சியை குறைச் சொல்ல வழியின்று எதோ உளறுகிறார்.

தொந்தி (வெளியே) தெரிந்தால் தான் போலிஸில் சேரமுடியும் - டிஐஜி அறிவிப்பு :)))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//கோவி.கண்ணன் said...

ஹிந்தி தெரிந்தால்தான் பிரதமர் ஆகமுடியும்...- பிரணாப் முகர்ஜி

அவரு எதோ எதிர்பார்ப்பில் இருந்திருப்பார் போல, அது நிறைவேறாமல் போனதில் கட்சியை குறைச் சொல்ல வழியின்று எதோ உளறுகிறார்.

தொந்தி (வெளியே) தெரிந்தால் தான் போலிஸில் சேரமுடியும் - டிஐஜி அறிவிப்பு :)))))//



நான் நினைத்துக் கொண்டு வந்ததை (ஹிந்தி-தொந்தி மேட்டர்)அப்படியே கருத்தாக பதிந்திருக்கும் கோவியாருக்கு வன்மையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்!

Unknown said...

இந்தியபிரதமராக இந்தி தெரியவேண்டும் என்று நம் அரசியல் சட்டம் எந்த கண்டிஷனையும் வைக்கவில்லை. மெஜாரிட்டி எம்பிக்கள் ஆதரவை பெறுபவர் யாராக இருந்தாலும் அவர் பிரதமராகலாம்.

தேவேகவுடா பிரதமரானபோது அவருக்கு இந்தி தெரியாது.

அவ்வளவு ஏன்?ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக்க்குக்கு ஒரிய மொழி தெரியாது.முதல்வரானபிறகு தான் ஒரிய மொழியை கற்றார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
டக்ளஸ்
கோவி.
ஜோதிபாரதி
செல்வன்

மணிகண்டன் said...

3.தமிழனால் பிரதமரே ஆகமுடியாதா?

எந்த நாட்டுக்கு கேக்கறீங்க ?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

//மணிகண்டன் said...

3.தமிழனால் பிரதமரே ஆகமுடியாதா?

எந்த நாட்டுக்கு கேக்கறீங்க ?//

தமிழ்நாட்டுக்கு ஆனாதான் உண்டு!

ராஜ நடராஜன் said...

//3.தமிழனால் பிரதமரே ஆகமுடியாதா?//

காமராஜருக்கு ஆகும் தகுதி இருந்தது.இந்தி,ஆங்கிலம் சரசமாட முடியாததால் இயலாமல் போய் விட்டது.

மூப்பனாருக்கு வாய்ப்பு வரும் காலம் வந்தது.அரசியல் விளையாட்டிலும் வெத்தலை போட்டே வாயை மூடிக்கொண்டிருந்ததாலும் போய் சேர்ந்து விட்டார்.

சிதம்பரம் வருவதற்கான தகுதிகள் இருந்தன.நிதித்துறை மாறி உள்துறையும்,ஈழத்தில் தெரிந்த சுய முகமும் தகுதிக்கு தகுதியில்லாதவர் என்பதை நிரூபணம் செய்தது.

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி

மணிகண்டன்
ஜோதிபாரதி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//// ராஜ நடராஜன் said...
//3.தமிழனால் பிரதமரே ஆகமுடியாதா?//

காமராஜருக்கு ஆகும் தகுதி இருந்தது.இந்தி,ஆங்கிலம் சரசமாட முடியாததால் இயலாமல் போய் விட்டது.

மூப்பனாருக்கு வாய்ப்பு வரும் காலம் வந்தது.அரசியல் விளையாட்டிலும் வெத்தலை போட்டே வாயை மூடிக்கொண்டிருந்ததாலும் போய் சேர்ந்து விட்டார்.

சிதம்பரம் வருவதற்கான தகுதிகள் இருந்தன.நிதித்துறை மாறி உள்துறையும்,ஈழத்தில் தெரிந்த சுய முகமும் தகுதிக்கு தகுதியில்லாதவர் என்பதை நிரூபணம் செய்தது.//

ஆம்..சிதம்பரம் விஷயத்தில் ஏமாற்றம் தான்

நசரேயன் said...

அப்ப எனக்கு வாய்ப்பு இல்லையா

T.V.ராதாகிருஷ்ணன் said...

//நசரேயன் said...
அப்ப எனக்கு வாய்ப்பு இல்லையா//

இல்லை

குடுகுடுப்பை said...

i am foreign tamilan, hope i have a channe

சதுக்க பூதம் said...

சம்பல் பள்ளதாக்கு கொள்ளையராக இந்தி தெரிய வேண்டும். பிரதமர் பதவிக்கு கூடவா?

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
குடுகுடுப்பை
சதுக்க பூதம்