Saturday, April 4, 2009

கம்பரும்..இம்சை அரசன் புலிகேசியும்...

இம்சை அரசன் படத்தில் அரசன் மீது ஒரு புலவர் பாட்டு எழுதி வருவார்..'கன்னா பின்னா மன்னா' என்று..இந்த காட்சியை சமீபத்தில் பார்த்த போது கம்பர் ஞாபகம் வந்தது.

தன்னை புகழ்ந்து பாடுபவருக்கு பரிசு என மன்னன் அறிவித்தான்.தருமி போல பணத்துக்கு ஆசைப்பட்ட ஒருவன் பாடலை எடுத்துக் கொண்டு சென்றான்.

அவன்முறை வந்ததும்..அரசரிடம் தன் பாடலை படிக்கத் தொடங்கினான்.

'கன்னா பின்னா மன்னா தென்னா'

அவையோர் சிரிக்க...மன்னனும் கோபத்துடன் பாடலை நிறுத்து என்றான்.

ஆனால்..கம்பரோ..அவரின் ஏழ்மை நிலையைக் கண்டு அவரைக் காப்பாற்ற எண்ணினார்....உடன் 'அடடா..என்ன அருமையான வரிகள்..' என்றார்..'அரசரை இவ்வளவு புகழ்ந்தவர் யாருமில்லை' என்றார்.

அவையில் இருந்த புலவர்கள்..'இதில் என்ன அழகு இருக்கிறது?' என்றனர்.

கம்பர் கூறினார்..'கன்னா..என்றால் கர்ணன் என்றும்..பின்னா என்றால் பின்னவனே என்றும்..மன்னா என்றால் அரசனே என்றும் தென்னா என்றால் தென்னாட்டின் தலைவனே என்றும் பொருளாகும்.

அதாவது..கர்ணனுக்குப் பிறகு எல்லோராலும் வள்ளல் என்று போற்றிப் புகழ்ப் பெறுபவர் தென்னாட்டை ஆளும் நம் மன்னரே என்பதே பாடலின் பொருள் என்றார்.

இதைக் கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர்..அரசனும்..புலவனுக்கு நிறைய பரிசளித்தான்.

3 comments:

dondu(#11168674346665545885) said...

எனது இப்பதிவைப் பாருங்கள்.
http://dondu.blogspot.com/2008/07/blog-post.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

படித்தேன் டோண்டுசார்..
கம்பரைப் பற்றி இப்படி நிறைய சுவாரசியமான தகவல்கள் உண்டு.
கம்பரும்...சோழ மன்னரும்..ஆற்று நீர் காலில் படும்படியாக நடந்து சென்று கொண்டிருந்தனர். தாகத்தால் கம்பர் ஆற்று நீரை அள்ளிப் பருகினார்.
உடன் மன்னன்..'கம்பரே! என் காலில் விழுந்த நீரைத்தானே பருகினீர்' என கிண்டலாகக் கேட்க , கம்பரும்..'நீரே காலில் விழும்போது நான் என்ன செய்வது?' என்றாராம்.

மங்களூர் சிவா said...

/
'கன்னா பின்னா மன்னா தென்னா'
/

அருமை!