Friday, April 24, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(24-4-09)

பேராசிரியர் ஆல்பர்ட் ஈன்ஸ்டீனிடம் 'வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி' ன்னு கேட்ட போது..அவர் கொடுத்த கணித சூத்திரம் A=X+Y+Z

A என்பது வாழ்க்கையில் வெற்றி
X என்பது கடின உழைப்பு
Y என்பது ஆரோக்யமான விளையாட்டு
Z என்பது என்ன தெரியுமா...
அதிகம் பேசாமல் வாயை மூடிக் கொண்டிருப்பது.

2.கால் தடுமாறினால் சமாளித்துக் கொண்டு விடலாம்.ஆனால் நாக்கு தவறினால் மீளவே முடியாது.

3.உடல் பருமனாய் இருப்பவர் இதயம் எவ்வளவு கஷ்டப்படுகிறது தெரியுமா? அநாவசியமாக அவர்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு பவுண்ட் சதைக்கும் ..அவர்கள் இதயம் 3 மைல் நீளமுள்ள இரத்தக் குழாய்களுக்கு இரத்தத்தை பாய்ச்ச வேண்டியிருக்கிறது. அதனால்தானோ என்னவோ பருமனாக உள்ளவர்களுக்கு அதிகமாக இதய நோய் வருகிறது.

4.நாம் சாதாரணமாக பேசும் வேகம் நிமிடத்திற்கு 125 வார்த்தைகள்.ஆனால் நாம் நினைக்கும் வேகம் நிமிடத்திற்கு 500 வார்த்தைகள்.அதாவது...நாம் பேசுவதைவிட நான்கு மடங்கு சிந்திக்கிறோம்.'வள வள' என பேசி நம்மை போரடிக்கும் நபர்...சிந்திக்கும் வேகத்தில் பேசவும் முடிந்தால்...நினைக்கவே பயமாய் இல்லை...

5.நாளும் பிரியாணி
நங்கைக்கு மூக்கூத்தி
சாராயத்திற்கு பணம்
ஏழை எதிர்ப்பார்க்கிறான்
மே 13வரை வரவை!!

6.தலைவா...புதுசா ஒரு லட்சம் பேரை சேர்த்துட்டோம்..வாக்காளர் பட்டியல்லே...ஆனா நீங்க 3 1/2 லட்சம் வித்தியாசத்திலே ஜெயிப்பேன்னு சொன்னீங்களே எப்படி...
அன்னிக்கு ஊருக்கு வரப்போகும் விருந்தாளிகளை வைச்சுதான்.

20 comments:

கோவி.கண்ணன் said...

//'வள வள' என பேசி நம்மை போரடிக்கும் நபர்...சிந்திக்கும் வேகத்தில் பேசவும் முடிந்தால்...நினைக்கவே பயமாய் இல்லை...
//

:)

இன்னிக்கு சுண்டல் கடையை மாலையில் சரியாக போட்டு இருக்கிங்க. விற்பனை களைகட்டட்டும்

அக்னி பார்வை said...

அந்த கடைசி ஜோக் சூப்பர்

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்லா இருக்கு...

//நாளும் பிரியாணி
நங்கைக்கு மூக்கூத்தி
சாராயத்திற்கு பணம்
ஏழை எதிர்ப்பார்க்கிறான்
மே 13வரை வரவை!!//

உண்மை நிலையை சொன்னால் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது..

Unknown said...

//சிந்திக்கும் வேகத்தில் பேசவும் முடிந்தால்...நினைக்கவே பயமாய் இல்லை...//

:)))))))))))Super..

T.V.ராதாகிருஷ்ணன் said...

///
கோவி.கண்ணன் said...
இன்னிக்கு சுண்டல் கடையை மாலையில் சரியாக போட்டு இருக்கிங்க. விற்பனை களைகட்டட்டும்///

போணி பண்ணியிருக்கீங்க..பார்ப்போம்

T.V.ராதாகிருஷ்ணன் said...

//அக்னி பார்வை said...
அந்த கடைசி ஜோக் சூப்பர்//
நன்றி அக்னிபார்வை

T.V.ராதாகிருஷ்ணன் said...

///கார்த்திகைப் பாண்டியன் said...
உண்மை நிலையை சொன்னால் மனதுக்கு சங்கடமாக இருக்கிறது..///

ஆம்..கார்த்தி..
வருகைக்கு நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//ஸ்ரீமதி said...
:)))))))))))Super..//
முதன் முதலா நம்ம கடைக்கு வந்து சரக்கு சூப்பர்னு சொன்னதற்கு நன்றி

நையாண்டி நைனா said...

/*T.V.Radhakrishnan said...
//ஸ்ரீமதி said...
:)))))))))))Super..//
முதன் முதலா நம்ம கடைக்கு வந்து சரக்கு சூப்பர்னு சொன்னதற்கு நன்றி*/

இது போங்கு ஆட்டம்.... போங்கு ஆட்டம்.... போங்கு ஆட்டம்....

நான் ஆட்டத்திற்கு வரலை....

முதன்முதலா வந்தது எங்க அண்ணன் 'கோவி' அவர்கள்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///நையாண்டி நைனா said...
/*T.V.Radhakrishnan said...
//ஸ்ரீமதி said...
:)))))))))))Super..//
முதன் முதலா நம்ம கடைக்கு வந்து சரக்கு சூப்பர்னு சொன்னதற்கு நன்றி*/

இது போங்கு ஆட்டம்.... போங்கு ஆட்டம்.... போங்கு ஆட்டம்....

நான் ஆட்டத்திற்கு வரலை....

முதன்முதலா வந்தது எங்க அண்ணன் 'கோவி' அவர்கள்.///

:-))))

மணிகண்டன் said...

sundal super.

*இயற்கை ராஜி* said...

//நாளும் பிரியாணி
நங்கைக்கு மூக்கூத்தி
சாராயத்திற்கு பணம்
ஏழை எதிர்ப்பார்க்கிறான்
மே 13வரை வரவை!!
//
ஏழைக்கு இப்ப‌டியாவ‌து ப‌ண‌முத‌லைக‌ளின் ப‌ண‌ம் கிடைக்கிறதே என ச‌ந்தோச‌ப்ப‌ட‌வேண்டிய‌துதான்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி மணிகண்டன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி இய‌ற்கை

முரளிகண்ணன் said...

சுவையான சுண்டல்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி முரளிகண்ணன்

மங்களூர் சிவா said...

அருமையான சுண்டல்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சிவா

பரிசல்காரன் said...

தேங்கா சூப்பர்
மாங்கா கொஞ்சம் புளிப்பு
பட்டாணி.. ஒக்கே..
சுண்டல் சூப்பர்

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி பரிசல்