வணக்கம்.
தங்கள் மேடைப் பேச்சில் மயங்குபவர்களில் நானும் ஒருவன்.
தி.மு.க.வின் போர்ப்படைத் தளபதி!யாய் இருந்த நீங்கள்...வெளியேற்றப்பட்ட போது கூடமனம் வருந்தியவர்களில் நானும் ஒருவன்.தாய்க்கழகத்திலிருந்து..தங்களது விலக்கம் குறித்து இப்பதிவில்
எதுவும் எழுதப்போவதில்லை.ஏனெனில் தாய்வீட்டில் உள்ள உங்கள் மனதிற்கு எல்லாமே தெரியும் என்பதால்.
அப்படியெனில் இப்பதிவின் நோக்கம்...?
தேவையில்லாமல் POTA வில் கைதாகி இருந்த போது..கலைஞர் பட்ட வேதனையும்..அவர் அப்போது உங்களைப் பார்க்க பட்ட கஷ்டங்களையும்..எல்லோருமே அறிவர். பின்னர் மாறனின் மறைவிற்கு நீங்கள் வந்திருந்த போது..கலைஞரும்,நீங்களும்..மாறனின் இழப்பில் அழுதது...அதை தொலைக்காட்சியில் பார்த்த என்னைப்போன்றோர் ,மீண்டும் தாய்க்கழகத்தில் நீங்கள் இணைய வேண்டும் என்று விரும்பினோம்.
கடந்த சட்டசபை தேர்தலில் அதற்கான காலம் கனிந்து வருவது போல இருந்தது.ஆனால் தொகுதி ஒதுக்கீட்டில்..தங்கள் கட்சிக்கு ஒதுக்கிய தொகுதிகள் போதாது என்று..கடைசி நிமிடம்
நீங்கள் அணி மாறினீர்கள்.
ஆனால் இப்போது நடப்பது என்ன?
தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்ற போது கூட ஜெ கண்டனம் தெரிவிக்காதவர்.
அந்த கூட்டணியில் உள்ள நீங்கள்..உங்களுக்கு ஒதுக்கிய தொகுதி எம்.எல்.ஏ., மறைவிற்கு பின் நடக்கும் அத்தொகுதி இடைத் தேர்தலில்..போட்டியிட அ.தி.மு.க.விற்கு விட்டுக்கொடுத்துள்ளதாக செய்திகள் படித்தோம்.(ஒருவேளை அது காலத்தின் கட்டாயமோ!!!)
இந்த விட்டுக்கொடுத்தலை..முன்னரே கலைஞருக்கு செய்திருந்தால் ..மீண்டும் தாய்வீடு வந்த உற்சாகம் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும்.
தன்மானம் காத்த தானைதலைவனாய் இருந்திருப்பீர்கள்.
இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை...
Better Late than Never
என்றும் அன்புடன்
ஒரு தமிழன்
(இது ஒரு மீள்பதிவு)
21 comments:
//தி.மு.க.வின் தானைத்தலைவனாய் இருந்த நீங்கள்...//
அது கலைஞர்!
இவர் போர்ப்படைத் தளபதி!
//தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்ற போது கூட ஜெ கண்டனம் தெரிவிக்காதவர்.//
அந்தம்மாவிற்கு, அவரைத் தவிர மத்தவங்கெல்லாம் கோமாளின்னு நினைப்பு!
கட்டுரை எழதப் பட்ட காலத்திற்கு ஏற்புடையதாக இருந்திருக்கலாம்!! ஆனால் இன்று வைகோ "வெளியேறினால்" "தனித்திருந்தால்" உலகப் புகழ் பெறுவார்!!
தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ஜோதிபாரதி..தவறு திருத்தப்பட்டது
வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி
greatlover
///ஜோதிபாரதி said...
//தமிழக அரசியல்வாதிகள் கோமாளிகள் என்ற போது கூட ஜெ கண்டனம் தெரிவிக்காதவர்.//
அந்தம்மாவிற்கு, அவரைத் தவிர மத்தவங்கெல்லாம் கோமாளின்னு நினைப்பு!///
:-))))
thaai கழகத்துல தான வைகோ இருக்காரு ! அவர thaniyaa விடமாட்டீங்களா ?
///மணிகண்டன் said...
thaai கழகத்துல தான வைகோ இருக்காரு ! அவர thaniyaa விடமாட்டீங்களா ?///
:-))))
//இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை...//
கெடுவதற்கு இன்னும் பாக்கி இருக்குங்கிறிங்களா ?
:)
///கோவி.கண்ணன் said...
//இப்பவும் ஒன்றும் கெட்டுப்போய் விடவில்லை...//
கெடுவதற்கு இன்னும் பாக்கி இருக்குங்கிறிங்களா ?
:)////
இது ஒரு மீள்பதிவு கோவி
//அந்த கூட்டணியில் உள்ள நீங்கள்..உங்களுக்கு ஒதுக்கிய தொகுதி எம்.எல்.ஏ., மறைவிற்கு பின் நடக்கும் அத்தொகுதி இடைத் தேர்தலில்..//
இப்பக் கூட அம்மா வைகோ விற்கு 40 தொகுதிகள் ஒதுக்குறதா முடிவு செய்து இருக்காங்களாம் !
:)
அன்னிக்கு தி.மு.க கூட்டணியிலே இருந்து வெளியே வரலைன்னா தலைவர் குடும்பம் வைகோவ (கூட இருந்து) குழிப்பறிச்சி இருந்திருப்பாங்க. அவங்களுக்கு உள்ளூர பயம் தலைமைய கைப்பற்றிடுவார்னு - வைகோவால முடிஞ்சிருக்காதுங்க்றது வேற விஷயம். இன்னைக்கும் அவர் தி.மு.க அணியில் சேர்ந்தால், அந்தக் குடும்பம் அலறும்.
வைகோ ரெண்டு சீட்டு ஜெயிக்கட்டும்,விட்டிருங்க பாவம்
கண்டிப்பா பதில் சொல்லுவாரு
//ஒரு காசு said...
அன்னிக்கு தி.மு.க கூட்டணியிலே இருந்து வெளியே வரலைன்னா தலைவர் குடும்பம் வைகோவ (கூட இருந்து) குழிப்பறிச்சி இருந்திருப்பாங்க. அவங்களுக்கு உள்ளூர பயம் தலைமைய கைப்பற்றிடுவார்னு - வைகோவால முடிஞ்சிருக்காதுங்க்றது வேற விஷயம். இன்னைக்கும் அவர் தி.மு.க அணியில் சேர்ந்தால், அந்தக் குடும்பம் அலறும்.//
அவரோட இப்ப நிலைமை பரவாயில்லை என்கிறீர்களா?
//குடுகுடுப்பை said...
வைகோ ரெண்டு சீட்டு ஜெயிக்கட்டும்,விட்டிருங்க பாவம்//
வைகோ விற்கு அவசரத்தேவை வேட்பாளர்கள்...
//நசரேயன் said...
கண்டிப்பா பதில் சொல்லுவாரு//
சொல்லவேண்டும்
வைகோ அம்மாவை விட்டு வெளியே வரமுடியாது
///krishnaaleelai said...
வைகோ அம்மாவை விட்டு வெளியே வரமுடியாது///
:-))))
idhai paarungal
http://tinyurl.com/cn49km
வருகைக்கு நன்றி graphpapersurvey
Post a Comment