Monday, April 20, 2009

கருணாநிதியின் பல்டி...

என்டிடிவிக்கு கலைஞர் பேட்டி கொடுத்துவிட்டு...பின்னர்...அவர் பேட்டி திரித்துக் கூறப்பட்டது..என்று பல்டி அடித்தாரே அதைப்பற்றிய பதிவு அல்ல இது.உடன் NDTV யே..தி.மு.க.விற்கு எதிரானது என்றும் கூறினார்.அப்படியென்றால் அவர் ஏன் பேட்டி கொடுக்க வேண்டும்.

இருப்பினும்..அப்பேட்டி பற்றி..எனது சிறு கருத்து...பேட்டியாளர் தமிழில் கேள்வி கேட்டிருக்கலாம்.அவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்கப்போக..கலைஞரும் ஆர்வத்தில்..ஒரிரெண்டு ஆங்கிலத்தில் பேசினார்.பின் கேள்வியை சரியாக புரிந்துக்கொள்ளாமல் பதிலளித்து ம் விட்டார் என்றே எண்ணுகிறேன்..ஏனெனில்..கனிமொழியின் முகத்தில் அப்போது கவலை ரேகைகள் படிந்ததைப் பார்க்கமுடிகிறது.உடன் பேரன் இருந்திருந்தால்,
வயதான காலத்தில் பல்டி அடிக்கும் நிலை ஏற்பட்டிருக்காது என்றே எண்ணுகிறேன்.

சரி..தலைப்புக்கு வருவோம்...

ஆரம்பத்திலிருந்தே..வெற்றி நமதே...40ம் நமதே என்றவர்..இப்போது 30 இடங்களில் நாங்கள் வெல்வோம்..என்கிறார்.சுருதி சற்று குறைந்து விட்டது.

மேலும் ..கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதுபோல...காங்கிரஸ்காரர்களுக்கு செல்லும் இடமெல்லாம்...எதிர்ப்பு வலுக்கிறது.

இனிவரும் காலங்களில் கலைஞர் மீண்டும் ஒரு பல்டி அடித்து..தன் வேட்பாளர்களைப்பற்றி மட்டுமே கவலைப்பட ஆரம்பிப்பார் எனத் தெரிகிறது.

10 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

கலைஞர் என்றாலே அத்தர் பல்டி;கூக்குரல் இதில் என்ன? புதினத்தைக் கண்டீர்கள்.
நம் ஈழத்தில் ஒரு சொல்வடை "தனக்குத் தெரியாச் சிங்களம்-தன் பிறடிக்குச் சேதம்"
இங்கே இந்த சொல்வடை கலைஞரின் ஆங்கிலத்துக்குப் பொருந்தும்.
ஆங்கிலம் தெரியாதது தவறல்ல,கேட்டது புரியவில்லை என்ற போதும் பதிலிறுக்க முற்பட்டது
அவர் வயதுக்கும்;அனுபவத்துக்கும் அழகல்ல. தவறும் கூட..
இனியா?? இவர் திருந்தப் போகிறார்..
காடு வா வா என்குது...வீடு போ போ என்குது...
எதோ கூத்தடிக்கட்டும்...விட்டுத் தொலையுங்கள்.
மானாட மயி(ரா)லாட பார்த்து ரசிப்பதை விட்டுவிட்டு; கமராவைக் கண்டதும் ஏன் பேட்டிகளுக்கு
கொடுக்குக் கட்டிக் கொண்டு புறப்படுகிறாரோ?? தெரியவில்லை.

லோயர் said...

காமெடி கலை மாமணி பட்டம் நம்ம 'கொலை'ஞ்சருக்கு நல்ல மனோநல மருத்துவரின் ஆலோசனை மிகவும் அவசியம்....தேர்தல் நேரம் நெருங்க நெருங்க என்ன பேசுறாருன்னு புரியவே மாட்டேன்குது

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
யோகன் பாரிஸ்
லோயர்

குடுகுடுப்பை said...

மேலும் ..கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதுபோல...காங்கிரஸ்காரர்களுக்கு செல்லும் இடமெல்லாம்...எதிர்ப்பு வலுக்கிறது.//

:)))))))))

அக்னி பார்வை said...

இதெல்லாம் அரசியல்ல சகஜம்ப்பா

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
குடுகுடுப்பை
அக்னி பார்வை

ராஜ நடராஜன் said...

கலைஞரின் நா அசைவு,உடல் அசைவு அனைத்தும் அனைவரால் கவனிக்கப் படுவதும் அவர் மீதான நல்லெண்ணங்கள் எல்லாம் கோபங்களாய் மாறுவதும் அவருக்கு சரியாகப் புரிந்துணராத வண்ணம் பார்த்துக்கொள்ளும் படி கூட இருக்கும் கூட்டாளிகள் சரியில்லையோ?அல்லது தள்ளாத வயதின் அறிகுறிகளாய் செயல்படும் விதம் இருக்கிறதோ?

T.V.Radhakrishnan said...

//ராஜ நடராஜன் said...
கலைஞரின் நா அசைவு,உடல் அசைவு அனைத்தும் அனைவரால் கவனிக்கப் படுவதும் அவர் மீதான நல்லெண்ணங்கள் எல்லாம் கோபங்களாய் மாறுவதும் அவருக்கு சரியாகப் புரிந்துணராத வண்ணம் பார்த்துக்கொள்ளும் படி கூட இருக்கும் கூட்டாளிகள் சரியில்லையோ?அல்லது தள்ளாத வயதின் அறிகுறிகளாய் செயல்படும் விதம் இருக்கிறதோ?//

கலைஞர் என்றாலே பல்டி

கலைக்கோவன் said...

//மேலும் ..கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதுபோல...காங்கிரஸ்காரர்களுக்கு செல்லும் இடமெல்லாம்...எதிர்ப்பு வலுக்கிறது.//

நான் அவசரத்தில
//காங்கிரஸ்காரர்களுக்கு செல்லும் இடமெல்லாம்...செருப்பு //
படிச்சிட்டேன்

T.V.Radhakrishnan said...

///// கலைக்கோவன் said...
//மேலும் ..கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதுபோல...காங்கிரஸ்காரர்களுக்கு செல்லும் இடமெல்லாம்...எதிர்ப்பு வலுக்கிறது.//

நான் அவசரத்தில
//காங்கிரஸ்காரர்களுக்கு செல்லும் இடமெல்லாம்...செருப்பு //
படிச்சிட்டேன்/////

:-))))))