Tuesday, April 14, 2009

ஐ.டி. ஊழியர்கள் இனி டீ..காஃபி குடிக்கக்கூடாது

சர்வதேச பொருளாதார நெருக்கடி காரணமாக...ஐ.டி., நிறுவனங்கள் பல சிக்கன நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இது தொடர்பாக ஒரு பெரிய நிறுவனம்...தனது ஊழியர்களுக்கு ஒரு இ மெயில் அனுப்பியுள்ளதாம்.அதில்...அந்நிறுவனம் தற்போது சந்தித்து வரும் பிரச்னைகளையும்...அதனால் செலவுகளை குறைக்க எடுத்துள்ள சிக்கன நடவடிக்கைகளையும் பட்டியலிட்டுள்ளதாம்.அதன்படி...

மே மாதம் ஒன்றாம் தேதி முதல்...ஊழியர்களுக்கு பணியின் போது வழங்கி வரும் டீ, காஃபி போன்றவை நிறுத்தப்படுமாம்.

வீட்டில் இருந்து அலுவலக பணியில் ஈடுபடுவோர்க்கு..இன்டெர்னெட் கட்டணத்தை இதுவரை நிறுவனம் வழங்கி வந்ததாம்.அதுவும் இனி ரத்து செய்யப்படுமாம்.அக்கட்டணத்தை இனி ஊழியரே செலுத்த வேண்டுமாம்...

தவிர...இனி அவர்கள் பெற்றுவரும் பல் வேறு சலுகைகளும் ..பல கட்டங்களில் ...படிப்படியாக குறைக்கப்படுமாம்.

இப்படி தகவல்களை அனுப்பியுள்ளது...சாதாரண நிறுவனம் இல்லை...

மிகப்பெரும்..ஐபிஎம் நிறுவனமே..

அட தேவுடா......

35 comments:

கோவி.கண்ணன் said...

//தவிர...இனி அவர்கள் பெற்றுவரும் பல் வேறு சலுகைகளும் ..பல கட்டங்களில் ...படிப்படியாக குறைக்கப்படுமாம்.
//

எல்லோரும் கோவணம் அணிந்து வந்தால் அறையில் குளிரூட்டத்தைக் கூட நிறுத்துவிடலாம் என்று எவரும் பரிந்துரை செய்யாதிருந்தால் சரி.

சி.எஸ்.ஜெ ஒரு பாட்டு பாடுவார்.

கொடுத்தவனே பரித்துக் கொண்டாண்டி...
:)

தமிழினி said...

உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

பிரேம்குமார் said...

ரெசஷன் நேரத்தில் எல்லோருக்குமே கெடுபிடி இருக்கத்தான் செய்யும்.... என்ன செய்யுறது?

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
கோவி
தமிழினி
பிரேம்குமார்

Suresh said...

உன்மை இப்படியா அப்பட்டமா ஒத்துகிறது ஹா ஹ அருமை தலைவா ;)

தமிழ்நெஞ்சம் said...

வேலையை விட்டுத் தூக்காமல் இருந்தால் பெரிய விசயமாக்கும்.

எல்லோரும் வயித்துல ஈரத்துணியைக் கட்டிக்கினு கீறாங்க.

எப்போ என்ன நடக்குமோ.

தினமும் அலுவலகம் செல்வதையே ஒரு சவாலாகச் செய்கிறார்கள்.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
Suresh
தமிழ்நெஞ்சம்

வடகரை வேலன் said...

சார்,

இன்னைக்கு financila times பாருங்க

//Wipro had offered a monthly salary of Rs 24,000 to the 2007-08 campus recruits. These candidates will be put on a twomonth training and during this period they will be paid a stipend of Rs 15,000 a month. However, candidates who will not find projects to be deployed on soon after the training will be put on an extended training period for a monthly stipend of Rs 6,000. //

என்ன கொடுமை சார் இது.

ஒத்துக் கொண்ட சம்பளத்தில் நாலில் ஒரு பங்கு?

புன்னகை said...

மே மாதம் ஒன்றாம் தேதி முதல்...ஊழியர்களுக்கு பணியின் போது வழங்கி வரும் டீ, காஃபி போன்றவை நிறுத்தப்படுமாம்.


தேதி மே 1 தொழிலாளர்கள் தினம்
சலுகைகள் பறிக்கபடுகிற தினமா மாறுதா

Joe said...

உண்மையை சொல்ல போனால், இந்த நிறுவனுங்களுக்கேல்லாம் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.

பொருளாதார மந்தநிலையை ஒரு சாக்காக வைத்து அடிமைகளின் சலுகைகளை பறிக்கிறார்கள்.

குடுகுடுப்பை said...

இதில் தவறொன்றும் இல்லை, நாலு பேரின் சம்பளத்தை குறைத்து இன்னும் ஒருவர் வேலையை காப்பாற்றினால் கூட சரிதான்.

எல்லாமே தேவைக்கேற்றார்போலத்தானே.

உங்கள் நாடக கம்பெனியாக நினைத்து பாருங்கள் புரியும்.

அக்னி பார்வை said...

ஒரு ஏற்றம் இருந்தால் அதற்க்கு ஒரு இஅறக்கம் நிச்சயம், ஒரு இறக்கம் என்றால் ஒரு ஏற்றம் நிச்சயம் இது நாம் பயன் படுத்தும் பொருளாதார கொள்கையில் அடிப்படை தான்...

சீக்கிரம் இன்ந்த நிலமை மாறி மீண்டும் ஐடி துறையினர் முறையான சம்பளம் பெற்று மீண்டும் குறந்திருக்கும் விலைவாசிகளை ஏற்றிவிடுவார்கள்.....

Pasungili said...

Not only in IBM......everywhere same cross cutting..;(

T.V.Radhakrishnan said...

//புன்னகை said...
தேதி மே 1 தொழிலாளர்கள் தினம்
சலுகைகள் பறிக்கபடுகிற தினமா மாறுதா//

:-((((

T.V.Radhakrishnan said...

/// வடகரை வேலன் said...
சார்,

இன்னைக்கு financila times பாருங்க

//Wipro had offered a monthly salary of Rs 24,000 to the 2007-08 campus recruits. These candidates will be put on a twomonth training and during this period they will be paid a stipend of Rs 15,000 a month. However, candidates who will not find projects to be deployed on soon after the training will be put on an extended training period for a monthly stipend of Rs 6,000. //

என்ன கொடுமை சார் இது.

ஒத்துக் கொண்ட சம்பளத்தில் நாலில் ஒரு பங்கு?///

இதைவிட மோசமான விஷயம்..2007-08 ல் கேம்பஸ் இண்டர்வியூவில் தேர்ந்தெடுத்துவிட்டு...இன்னும் அவர்களுக்கு வேலை கொடுக்காமல் இருக்கின்றன சில நிறுவனங்கள்

T.V.Radhakrishnan said...

////Joe said...
உண்மையை சொல்ல போனால், இந்த நிறுவனுங்களுக்கேல்லாம் பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை.

பொருளாதார மந்தநிலையை ஒரு சாக்காக வைத்து அடிமைகளின் சலுகைகளை பறிக்கிறார்கள்.///

நீங்கள் சொல்வதுதான் உண்மை

T.V.Radhakrishnan said...

///குடுகுடுப்பை said...
உங்கள் நாடக கம்பெனியாக நினைத்து பாருங்கள் புரியும்.///

சாப்பாட்டிற்கு என் நாடகக் குழுவை நம்பி யாரும் இல்லை....ஆனால் சாப்பாட்டிற்கான தொழில் பற்றிதான் பதிவு.

T.V.Radhakrishnan said...

///அக்னி பார்வை said...
மீண்டும் குறந்திருக்கும் விலைவாசிகளை ஏற்றிவிடுவார்கள்///

விலைவாசி குறைந்திருக்கிறதா?

சிதம்பரத்தின் பணவீக்க புள்ளிவிவரத்தை நம்புபவரா நீங்கள்?

:-)))))

தலைவர் said...

தல, இனிமேல் குடிநீரை வீட்டிலிருந்தே எடுத்து வர வேண்டும், இனி பஸ், கேப் மெல்லாம் கிடையாது, வீட்டில் ஜாக்கிங் ஆரம்பித்து அலுவலகம் வரை ஓடி வர வேண்டும்... இப்படியான சட்டங்களை நாங்கள் போடுவோம்.

ராஜ நடராஜன் said...

எனக்கு காலையில இட்லி தோசை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கலன்னா உடம்புக்கு ஆகாது:)ஏதோ சுகாதாரக் காவலர் ஆயிட்டீங்களோன்னு பயந்துகிட்டே வந்தேன்!

முரளிகண்ணன் said...

பாவம்

T.V.Radhakrishnan said...

////தலைவர் said...
தல, இனிமேல் குடிநீரை வீட்டிலிருந்தே எடுத்து வர வேண்டும், இனி பஸ், கேப் மெல்லாம் கிடையாது, வீட்டில் ஜாக்கிங் ஆரம்பித்து அலுவலகம் வரை ஓடி வர வேண்டும்... இப்படியான சட்டங்களை நாங்கள் போடுவோம்.///

:-))))

T.V.Radhakrishnan said...

///ராஜ நடராஜன் said...
எனக்கு காலையில இட்லி தோசை சாப்பிட்டு விட்டு டீ குடிக்கலன்னா உடம்புக்கு ஆகாது:)ஏதோ சுகாதாரக் காவலர் ஆயிட்டீங்களோன்னு பயந்துகிட்டே வந்தேன்!///

ஆஹா...இட்லி...தோசையும் கூட சாப்பிடக்கூடாதுன்னு சொல்லலாம் இல்லை? நன்றி

T.V.Radhakrishnan said...

///முரளிகண்ணன் said...
பாவம்///

வருகைக்கு நன்றி முரளி

ச்சின்னப் பையன் said...

காபி, டீ குடிக்கலேன்னாகூட பரவாயில்லை. பீர் குடிக்கலாமா கூடாதா? அதை சொல்லுங்க.

T.V.Radhakrishnan said...

///ச்சின்னப் பையன் said...
காபி, டீ குடிக்கலேன்னாகூட பரவாயில்லை. பீர் குடிக்கலாமா கூடாதா? அதை சொல்லுங்க///


சத்யா...நல்லா தெம்புல இருக்காப் போல இருக்கு...

குடுகுடுப்பை said...

')) said...

///குடுகுடுப்பை said...
உங்கள் நாடக கம்பெனியாக நினைத்து பாருங்கள் புரியும்.///

சாப்பாட்டிற்கு என் நாடகக் குழுவை நம்பி யாரும் இல்லை....ஆனால் சாப்பாட்டிற்கான தொழில் பற்றிதான் பதிவு.
//

ஒரு தொழில் நடத்துபவன் தேவையிருந்தால் தானே ஆள் எடுப்பான்.நான் நாடகக் கம்பெனி பற்றி குறிப்பிட்டது, நடிகர் தேவையில்லை என்றால் தேவையில்லைதானே.

குடுகுடுப்பை said...

மிகப்பெரிய நிறுவனமான் பெல் லேப்ஸ் இன்றைக்கு இல்லவே இல்லை. காரணம் வியாபாரம் இல்லை , அவர்கள் லே ஆப் செய்யாமல் என்ன செய்ய முடியும்.

மங்களூர் சிவா said...

:((((((

அன்புடன் அருணா said...

:((
அன்புடன் அருணா

T.V.Radhakrishnan said...

//Pasungili said...
Not only in IBM......everywhere same cross cutting..;(//

வருகைக்கு நன்றி Pasungili

T.V.Radhakrishnan said...

குடுகுடுப்பை நீங்கள் சொல்வதை எல்லாம் ஒப்புக்கொள்கிறேன்...ஆனாலும் சில பெரிய நிறுவனங்கள் இந்த சந்தர்ப்பத்தை எக்ஸ்ப்லாய்ட் (சாதகமாக) செய்துக் கொள்கிறார்கள் என்பது நூறு சதவிகித உண்மை

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
மங்களூர் சிவா
அன்புடன் அருணா

புருனோ Bruno said...

என் மனதில் தோன்றியதை எழுதினால் உங்கள் பதிவு குருசேஷ்திரம் ஆகி விடும்.

அதனால் விடு ஜூட் :) :) :)

T.V.Radhakrishnan said...

அதனால் என்ன...நீங்கள் தனிப்பதிவு ஒன்று இடுங்கள்...ஆரோக்யமான விவாதம் நன்றுதானே டாக்டர்