Monday, April 6, 2009

கழகக் கண்மணிகளுக்கு கலைஞர் கடிதம்....


உடன்பிறப்பே...

தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் இவ்வளவு நேரம் உன்னை வந்து அடைந்திருக்கும்.

என் உடல்நிலையையும் பொருட்படுத்தாது...உன் நலனே என் நலன் என எண்ணி..என் உடல்நிலை இடம் தராவிடினும்..3 நாட்கள் அமர்ந்த நிலையில் 540 பேரை நேர்காணலில் சந்தித்து...முத்துக்கள் 21ஐ தேர்ந்தெடுத்துள்ளேன்.

தம்பி...இவர்கள் வெற்றிக்கு..ஊண் உறக்கமின்றி..பசி தாகம் பாராமல் மாற்று கட்சியினரின் சூழ்ச்சிக்கு பலியாகாமல் உழைத்திடு.உழைப்பிற்கேற்ற கூலியை பெற்றிடுவோம்.

உடன்பிறப்பே..இச்சமயத்தில்...தமிழன் இல்லாத சிலர்..ஈழத்தமிழர் நிலை குறித்து நீலிக்கண்ணீர் வடித்திடுவார்...என்னவோ இவர்கள்தான் அவர்கள் நிலைக்கு உருகுவது போல.கண்மணி..நீ அறிவாய்..நானும், பேராசிரியரும் எங்கள் பதவியை இதற்காக துறந்தவர்கள்...கின்னஸ் புத்தகத்தில் அதிக முறை நான் இதைச் சொன்னதற்கான சாதனை பொறிக்கப்பட்டால்...அதற்கான முழு புகழையும் நீயே அடைவாய்.கழக அரசு இருமுறை தமிழருக்காக கவிழ்க்கப்பட்டது என்பதையும் மறந்துவிடாதே.இவற்றை பொதுமக்களிடையே எடுத்து செல்ல வேண்டிய பணி உனதென்பதை மறந்துவிடாதே.

இப்போதும்...இலங்கையில் போர் நிறுத்தம் கோரி..இரண்டுமுறை மனிதச் சங்கிலியும், எம்.பி.க்கள் ராஜினாமாவும், எனது உண்ணாவிரதமும் கழக ஆட்சியில் இன்றி வேறு யார் ஆட்சியில் நடந்திருக்கிறது?.நான்குமுறை பிரதமருக்கும்..சொக்கத்தங்கம் சோனியாவிற்கும் இது குறித்து கடிதம் எழுதி உள்ளேன்..இது யார் ஆட்சியில் நடந்துள்ளது? தில்லிக்கே ..அரசியல் தலைவருக்கு தலைதாங்கி சென்றுள்ளேன்..இதை மற்றவர் மறந்தாலும்...கண்மணி என்னாலும்..உன்னாலும் மறக்கமுடியாது.

அண்ணா நேற்று என் கனவில் வந்து..'தம்பி கருணாநிதி கலங்கிடாதே..போற்றுவார்..போற்றட்டும்..வசைச்சொற்களால் உன்னை தூண்டுவார் தூற்றட்டும்...நம் தொண்டர்கள் வெற்றிக்கனியை பறித்து உனக்கு காணிக்கை ஆக்குவார்கள் என்றார்..' 'அண்ணாவின் கனவை..நனவாக்க வேண்டியது உன் கையில்தான் உள்ளது உடன்பிறப்பே'

இன்று முதல்...மே 13 வரை உன் நினைப்பு நம் வெற்றி ஒன்றதாகவே இருக்கவேண்டும்.வெற்றி நமதே!! 40 ம் நமதே!!!

மற்ற கட்சித்தலைவர்கள் முகத்தில் கரியை பூசிடுவாய்.

21 comments:

டக்ளஸ்....... said...

\\அண்ணாவின் கனவை..நனவாக்க வேண்டியது உன் கையில்தான் உள்ளது உடன்பிறப்பே'\\

பேரனும் மகனும் எம்.பி ஆகனுமுனு அண்ணா சொன்னாரா?

கோவி.கண்ணன் said...

:)))

பெசண்ட் நகர் பக்கம் ஆட்டோ வரவச்சிடுவிங்கப் போல

ttpian said...

இந்திய அரசந்கத்தில் சேருவது வரை தமிழன்...பிறகு இந்தியன்....
இந்தியன் என்பது புனித காலை....யாரை வேன்டுமானாலும் முட்டலாம்

T.V.Radhakrishnan said...

//டக்ளஸ்....... said...
\\அண்ணாவின் கனவை..நனவாக்க வேண்டியது உன் கையில்தான் உள்ளது உடன்பிறப்பே'\\

பேரனும் மகனும் எம்.பி ஆகனுமுனு அண்ணா சொன்னாரா?//


அண்ணா அவர் கனவில் என்ன என்ன கூறினார் என தெரியாது

T.V.Radhakrishnan said...

//கோவி.கண்ணன் said...
:)))

பெசண்ட் நகர் பக்கம் ஆட்டோ வரவச்சிடுவிங்கப் போல//


தஞ்சம் புக சிங்கையிலொரு இடம் இருக்கும் தைரியம்தான்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ttpian

வருண் said...
This comment has been removed by a blog administrator.
நசரேயன் said...

வாழ்க கலைஞர்

T.V.Radhakrishnan said...

// நசரேயன் said...
வாழ்க கலைஞர்//

வளர்க அவர் தொண்டு

T.V.Radhakrishnan said...
This comment has been removed by the author.
T.V.Radhakrishnan said...

வருண்,டவுசர் பாண்டி நீங்க் சொன்னாற்போல ttpianin
பின்னூட்டத்தை நீக்கிவிட்டேன்.உங்க பின்னூட்டத்தில் அதை எடுத்தி எழுதி இருந்ததால் அதையும் எடுத்து விட்டே.தவறாக எண்ண வேண்டாம்.

ஆகாயமனிதன்.. said...

வளர்க அவர் மஞ்சள் துண்டு (சாரி: தொண்டு) !

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி ஆகாயமனிதன்..

தத்துபித்து said...

///அண்ணா நேற்று என் கனவில் வந்து..'தம்பி கருணாநிதி கலங்கிடாதே..போற்றுவார்..போற்றட்டும்..வசைச்சொற்களால் உன்னை தூண்டுவார் தூற்றட்டும்...நம் தொண்டர்கள் வெற்றிக்கனியை பறித்து உனக்கு காணிக்கை ஆக்குவார்கள் என்றார்..' ////


'அண்ணாவின் கனவை..நனவாக்க வேண்டியது உன் கையில்தான் உள்ளது உடன்பிறப்பே'///

அண்ணாவின் கனவினை நிறைவேற்றலாம்.ஆனால் இது கருணாநிதியின் கனவு.நிறைவேறாது.
.

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி தத்துபித்து

tamil said...

கருணாநிதி ஒரு உருபிடாத ஜென்மம். தண்ணி தெளிச்சி விட வேண்டியதுதான்.

வருண் said...

நன்றி, திரு. டி வி ஆர் அவர்களே!:-)

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி
tamil
வருண்

இளைய கரிகாலன் said...

//தமிழன் இல்லாத சிலர்..ஈழத்தமிழர் நிலை குறித்து நீலிக்கண்ணீர் வடித்திடுவார்\\

இது என்னா பெரிய விஷயம்.

தமிழனா இருக்கிறவங்களே, அதுவும் அந்த இனத்திற்கே தலைவன்னு சொல்லிக் கொள்பவர்களே, நீலிக் கண்ணீர் வடிக்கிறார்களே!!!

இளைய கரிகாலன் said...

//அண்ணா நேற்று என் கனவில் வந்து...\\

இது என்ன மேஜிக்னே தெரியலே.

கலைஞர் நினைச்சா, உடனே விட்டலாச்சாரியா படத்தில வருவதை போல அண்ணா இவர் கனவுல வந்திட்டு போய்டுவாரு
;-)

இளைய கரிகாலன் said...

//...இலங்கையில் போர் நிறுத்தம் கோரி..இரண்டுமுறை மனிதச் சங்கிலியும், எம்.பி.க்கள் ராஜினாமாவும், எனது உண்ணாவிரதமும் கழக ஆட்சியில் இன்றி வேறு யார் ஆட்சியில் நடந்திருக்கிறது?.\\

அதெல்லாம் நடந்தது சரி. போர் நிறுத்தம் நடந்ததா ? அதை சொல்லுங்க???