Saturday, April 25, 2009

தேர்தல் சிப்ஸ்...

ஜெ யின் உடன் பிறவா சகோதரி சசிகலாவின் கணவர் நடராஜன் வீட்டில்...நேற்று போலீஸார் திடீர் சோதனை நடத்தினார்கள்.இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும்...காங்கிரஸிற்கு ஓட்டளிக்கக்கூடாது
என்றும் பெரியார் தி.க.வினர் சி.டி.க்களை வினியோகிக்கின்றனர். அதை தடை செய்ய வேண்டும் என காங்கிரஸ் போலீஸில் புகார் செய்யப்பட்டது.அதனால்..விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள்
வீடுகளில் சோதனை செய்யப்பட்டது.நடராஜனின் வீட்டிலும் நடந்ததாம்.

2.இலங்கை பிரச்னை காரணமாக..தனது பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்புவதாக பாரதிராஜா கூறினார்.அதுபற்றி கேட்டபோது ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்...'அவர் யார் என சொல்லுங்கள்.ஒருகாலத்தில் இயக்குனராக இருந்தார்..அவ்வளவுதான்...' என்றார்.(நீங்கள் யார் என கேட்கும் காலம் வந்துவிட்டது)

3.இரண்டு மாதங்களாக சிறையில் இருந்த சீமானை...தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததை சென்னை உயர் நீதி மன்றம்..ரத்து செய்ததால்..சீமான் நாளை விடுதலை செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

4.பா.ம.க., போட்டியிடும் ஏழு தொகுதிகளில் ஒன்றில் கூட வெற்றி பெறக்கூடாது என கலைஞர்..அமைச்சர்களுக்கு..கட்டளை இட்டுள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

5.ராமதாஸ் தனியே வந்து தனி அணி அமைத்தால் ..தான் அவர் பின்னால் வரத்தயார் என திருமா தெரிவித்துள்ளார்.

6.டி.ஆர்.பாலுவை ஆதரித்து பேசிய வாசன்..'டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டால்...தொகுதி வளர்ச்சி பெறும் (??!!)...ஒட்டு மொத்த இந்தியாவே வளர்ச்சி பெறும் என்றார்.தேர்தலுக்கு தேர்தல் பச்சோந்தியாய் அணி மாறும் பா.ம.க., விற்கு பாடம் புகட்டுங்கள்..என்றார்.(முன்னர் மூப்பனார் கலைஞருடன் கூட்டணி,பின் ஜெ யுடன் கூட்டணி..அதனால் ப.சி., விலகல்...இதை எல்லாம் வாசன் மறந்திருப்பாறோ?!)

7.கடைசி நேரம் வரை பதவி சுகத்தை அனுபவித்து விட்டு...அணி மாறுபவர்களை தேர்தலில் தண்டியுங்கள் என்கிறார் தயாநிடி மாறன்...(குடும்பத்திற்குள் சமரசம் ஏற்படாவிட்டால்...இவர் என்ன செய்திருப்பார்?!)

4 comments:

சதுக்க பூதம் said...

//தொகுதி வளர்ச்சி பெறும் (??!!)...//
T.R.பாலு தமிழகத்திற்கு உண்மையிலேயே வரலாறு காண முடியாத அளவு திட்டங்களை கொண்டு வந்துள்ளார்.கிட்ட திட்ட 40900 கோடி மதிப்புள்ள திட்டங்கள் தமிழகத்துக்கு வந்துள்ளன.இந்த பதிவை (http://tamilfuser.blogspot.com/2008/12/tr.html)படித்து பாருங்கள்.அவர் தோல்வி அடைந்தால் இனி வரும் காலங்களில் எந்த மத்திய அமைச்சர்களும் தமிழகத்துக்கு திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று நினைக்க தேவையே இல்லை

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி சதுக்க பூதம்

கோவி.கண்ணன் said...

//கடைசி நேரம் வரை பதவி சுகத்தை அனுபவித்து விட்டு...//

ஒரு காலத்தில் பதவி என்றால் முள் கிரீடம் என்று இவர் பேசியதாக நினைவு. இப்போதாவது அது சுகம் என்பதை ஒப்புக் கொள்கிறாரே !

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி கோவி.