பாரதிராஜாவின் 'பொம்மலாட்டம்' படம் வந்த போது...நான் சென்னையில் இல்லை..ஆனால்..படத்திற்கான விமரிசனங்கள் கண்டு..அப்படம் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என எண்ணியிருந்தேன்.
சென்னைக்கு நான் வந்ததும்...விசாரித்ததில்..படம் தோல்வி...தியேட்டர்களில் இருந்து படத்தை எடுத்துவிட்டார்கள் என்றனர்.
செகண்ட் ரன் ..வருமா..என பார்த்தேன் அதுவும் இல்லை..
நேற்றுதான் பார்த்தேன்..ஆச்சர்யம் அடைந்தேன்...
என்னவொரு அருமையான கதை அமைப்பு, திறமையான எடிட்டிங், நானாபடேகரின் மிகையில்லா அற்புத நடிப்பு, எதிர்பாரா முடிவு...
பாரதிராஜா...சார்...உங்களுக்கு என் சல்யூட்..
படிக்காதவங்களும்...வில்லுகளும்..நிறைந்துள்ள இந்நாளில் உங்கள் பொம்மை விலைபோவது சிரமம்தான்..யாவரும்நலம் என்பார்கள்..ஆனால் நலம் இல்லை.
பணநெருக்கடியிருந்தும்...படம் முடிந்தும்...வெளியிட சிரமப்பட்டீர்கள் என படித்தேன்...
உங்கள் திறமையை புரிந்துக்கொள்ளா..ரசனை...இதில் தரமான உங்கள் படம் ஓடாதது ஆச்சர்யம் தரவில்லை.
மீண்டும் ஒரு அருமையான படத்தை செதுக்கி...செதுக்கி தந்ததற்கு நன்றி.
படம் பார்க்காதவர்கள்...திரைக்கு வந்து சில மாதங்களே ஆன...என்று சூரிய,கலைஞ தொலைக்காட்சியில் விரைவில் வரும்...
தவறாமல் பாருங்கள்...அதுதான் அந்த படைப்பாளிக்கு நம்மால் தர முடிந்த மரியாதை.
10 comments:
பாரதிராஜாவே விலை போகவில்லையா?ஆச்சரியம்தான்!!!
நல்ல படம் நானும் விமர்சனம் எழுதவேண்டும் என நினைத்தேன்.
பாரதிராஜா என்ற கலைஞனின் அற்புத படைப்பு விலைபோகவில்லை
வருகைக்கு நன்றி குடுகுடுப்பை
தமிழ் சினிமாவில் பல குருவிகளும் அதை சுட்டுவிழுத்த வில்லுகளும் இருக்கும் போது எவன் பொம்மை வாங்ப் போறாங்க....
கவலையான விடையம்
வருகைக்கு நன்றி Mayooresan
Very good movie, but paarkkumpothu ithu tamil padama illai vera language movieyaannu yosikka vaikkara alavukku lip sink aagalai. Etho telegu padamo illai Hindi padamonnu yosichutte pathu mudichen. But very good and content filled move. no doubt about it.
வருகைக்கு நன்றி தோழி
இந்தப் பதிவுக்கு வந்து போனதன் விளைவாக ஒரு பதிவு போட்டிருக்கிறேன்.வீட்டாண்ட வந்துட்டுப் போங்க:)
வருகைக்கு நன்றி ராஜ நடராஜன்
Post a Comment