ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Sunday, September 27, 2009
கலைஞர் என்னும் கலைஞன் - 1
தமிழ்த்திரையில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக் கொண்டிருப்பவர்கள் ஒரு சிலரே!
அவர்களில் கலைஞரும் ஒருவர்.கிட்டத்தட்ட 70 படங்களில் அவர் பணியாற்றியிருக்கிறார்.கதை,திரைக்கதை,வசனம் இருபது படங்களுக்கு எழுதி இருக்கிறார்.கதை,திரைக்கதை இரு படங்களுக்கு எழுதி இருக்கிறார். திரைக்கதை,வசனம் முப்பத்தி மூன்று படங்களுக்கு எழுதி இருக்கிறார்.நான்கு படங்களுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்.பதினெட்டு படங்களில் பாடல் எழுதியுள்ளார்.
எனக்குத் தெரிந்த அளவில்..அப்படங்கள் பற்றி எழுத உள்ளேன்.இது ஒரு திரைக்கலஞன் பற்றிய பதிவு.அதனால்..அரசியல் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களை தவிர்க்கவும்..அப்படியே வந்தாலும்..மன்னிக்கவும்..அவை பிரசுரிக்கப் படமாட்டாது.1924ல் பிறந்த கலைஞர் வசனத்தில் வந்த முதல் படம் 1947ல்..அதாவது அவரின் 23ஆம் வயதில் வந்த படம் ராஜகுமாரி.1948ல் அபிமன்யூ படம்.
பதிவில்..சில படங்கள் விட்டுப் போயிருக்கலாம்.. பிழைகள் சில இருக்கலாம்..அவற்றை சுட்டிக்காட்டினால்..பதிவு திருத்தப்படும்.
ராஜகுமாரி ஜூபிடெர் பிக்சர்ஸ் எடுத்தபடம்..எம்.ஜி.ஆர்., நடித்துள்ளார்.
1948ல் வந்த அபிமன்யூவில் அவர் பெயர் டைடில் கார்டில் போடவில்லை..என்பது கலைஞருக்கு வருத்தம் ஏற்படுத்திய நிகழ்ச்சி.
1950ல் மருத நாட்டு இளவரசி..எம்.ஜி.ஆர்., ஜானகி நடித்தது..
1950ல் வந்த இன்னொரு படம் மந்திரிகுமாரி..இப்படத்தில்..'என் எருமைக் கன்னுக்குட்டி'என்ற பாடலும் எழுதி..பாடலாசிரியர் ஆனார் கருணாநிதி
1951ல் தேவகி..கலைஞரின் அருமையான வசனங்கள்..எம்.ஜி.ஆர்., பத்மினி நடித்த படம் இப்படத்தில் டி.எம்.சௌந்தரராஜன் பிச்சைக்காரனாக சிறு வேடத்தில் நடித்திருப்பார்.
இப்படத்தில் வரும் ஒரு வசனம்
பெரியம்மா குத்துவிளக்கு
சின்னம்மா எலெக்டிரிக் விளக்கு
இப்படத்திற்கு ஜி.ராமநாதன் இசை அமைத்துள்ளார்
1951 மணமகள் இப்படத் தயாரிப்பாளர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆவார்.திரைக்கதை கலைஞர்.எஸ்.வி.சகஸ்ரநாமம்,என்.எஸ்.கே.,லலிதா,பத்மினி ஆகியோர் நடித்துள்ளனர்.
இனி அடுத்த பதிவில்..
Subscribe to:
Post Comments (Atom)
23 comments:
அடுத்தப் பகுதிகளாக
'கருணாநிதி என்னும் நடிகன்' எப்போது வரும் ?
:)
கலைஞர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என எண்ணுகிறேன்.
:-) nice collections :-)
நன்றி இயற்கை
அரசியல்வாதி என்ற முகவரியினைத்தாண்டி கலைஞர் எனும் கலைஞனை எனக்கு மிகவும் பிடிக்கும். அதை தாங்கள் உங்களின் பதிவுகள் மூலம் பகிர்ந்துகொண்டமைக்கு வாழ்த்துக்கள். மேலும் உங்களது இந்த முயற்சியினை பாராட்டுகிறேன்...
//க.பாலாஜி said
கலைஞர் எனும் கலைஞனை எனக்கு மிகவும் பிடிக்கும்//
அதுதான் என்னையும் எழுதவைத்தது பாலாஜி
அடுத்த பகுதைகளை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறது
கோவியார் இதுவரை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட நடிக்காத மகான் என்று நினைக்கும் போது புல்லரிக்கிறது
ஓ! அடுத்த தொடர் கலைஞரா! கலக்குங்கள்.
கொசுத் தொல்லைகள் அதிகம் இருக்குமே ? சமாளிப்பீர்களா?
//உடன்பிறப்பு said...
அடுத்த பகுதைகளை படிக்க மிகவும் ஆவலாக இருக்கிறது
கோவியார் இதுவரை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட நடிக்காத மகான் என்று நினைக்கும் போது புல்லரிக்கிறது//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி உடன்பிறப்பு
//ஜோ/Joe said...
ஓ! அடுத்த தொடர் கலைஞரா! கலக்குங்கள்.
கொசுத் தொல்லைகள் அதிகம் இருக்குமே ? சமாளிப்பீர்களா?//
நன்றி ஜோ..சென்னையிலேயே வசித்துவரும் நமக்கு கொசுத்தொல்லை சாதாரணம்
அடுத்த அதிரடி கலைஞரா ... நடக்கட்டும் நடக்கட்டும் ...
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அடுத்த அதிரடி கலைஞரா ... நடக்கட்டும் நடக்கட்டும் ...//
நன்றி starjan
//T.V.Radhakrishnan said...
கலைஞர் எந்த படத்திலும் நடிக்கவில்லை என எண்ணுகிறேன்.
//
முன்னாள் நாடக நடிகர், மனோரமாவுடன் சேர்ந்து நடித்தவர்.
மேடை நாடகங்கள் நிறைய நடித்திருக்கிறார். அண்மையில் கூட அண்ணா சமாதி அருகே...உண்ணாவிரதம் என்னும் ஓரங்க நாடகம் சுமார் 3 மணி நேரம் நடந்தது.
:)
//கோவியார் இதுவரை தன் வாழ்நாளில் ஒருமுறை கூட நடிக்காத மகான் என்று நினைக்கும் போது புல்லரிக்கிறது
September 28, 2009 7:24:00 AM PDT
//
நான் நடிச்சா அதனால் யாருக்கும் லாபமோ நட்டமோ இல்லை, நானென்னன நாடாளும் முதல்வனா ?
:)
//கோவி.கண்ணன்
முன்னாள் நாடக நடிகர், மனோரமாவுடன் சேர்ந்து நடித்தவர்.//
பதிவு திரைப்படங்களைப் பற்றி..நாடகங்களைப் பற்றி அல்ல
//
எனக்குத் தெரிந்த அளவில்..அப்படங்கள் பற்றி எழுத உள்ளேன்.இது ஒரு திரைக்கலஞன் பற்றிய பதிவு.அதனால்..அரசியல் சம்பந்தப்பட்ட பின்னூட்டங்களை தவிர்க்கவும்..அப்படியே வந்தாலும்..மன்னிக்கவும்..அவை பிரசுரிக்கப் படமாட்டாது
//
நல்லது.....
கோவியாரின் முதல் பின்னூட்டத்திலும் அவரது சமாளிபிகேசனிலும் எந்த அரசியல்/நுண்ணரசியலும் இல்லை என நம்புகிறேன்!
//ஜெகதீசன் said...
நல்லது.....
கோவியாரின் முதல் பின்னூட்டத்திலும் அவரது சமாளிபிகேசனிலும் எந்த அரசியல்/நுண்ணரசியலும் இல்லை என நம்புகிறேன்!//
கலைஞர் பற்றிய என் அரசியல் பதிவுகளில் வந்திருந்த பின்னூட்டங்களைப் பார்த்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீங்களோ
//
கலைஞர் பற்றிய என் அரசியல் பதிவுகளில் வந்திருந்த பின்னூட்டங்களைப் பார்த்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீங்களோ
//
ஒன்னும் சொல்லீருக்கமாட்டேன்.....
அவருக்கு ஆதரவா யாருடனும் சண்டை போடுற அளவு அவரது தற்கால செயல்பாடுகள் இல்லை...
ஆனாலும் அரசியல் தொடர்பில்லாத பதிவில் "ஓரங்கநாடகம்"ன்னெல்லாம் சொன்னால்... பதில் சொல்வேன்...
அது நாடகமாகவே இருந்தாலும் சொல்லப்பட வேண்டிய / விவாதிக்கப்பட வேண்டிய பதிவு இதுவல்ல...
:)
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஜெகதீசன்
//கலைஞர் பற்றிய என் அரசியல் பதிவுகளில் வந்திருந்த பின்னூட்டங்களைப் பார்த்தால் நீங்கள் என்ன சொல்லியிருப்பீங்களோ//
கலைஞர் பற்றிய அரசியல் பதிவில் கலைஞரின் அரசியலை விமர்சிக்கடும் ..திட்டட்டும் ..தவறில்லை ..இங்கே கலைஞர் என்னும் கலைஞனைப் பற்றி மட்டுமே இந்த பதிவு என சொன்ன பிறகு கலைஞர் என்ற கலைஞனை பற்றி விமர்சிக்க திராணியிருந்தால் விமர்சிக்கட்டும் ..அதை விட்டு 'கலைஞர்' என்று பார்த்த உடனேயே ஓடி வந்து சம்பந்தமே இல்லாமல் உளறுவதும் ,பின்னர் கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை ரீதியில் ஒரு மொக்கை விளக்கம் கொடுப்பதும் எந்த வகையில் சேர்த்தி ? குறைந்த பட்ச பகுத்துப் பார்க்கும் தன்மை வேண்டாமா?
என் அரசியல் பதிவில் கோவி எழுதிய பின்னூட்டங்களை சொல்லவில்லை.பொதுவாக பலரிடமிருந்து..தரக்குறைவான பின்னூட்டங்கள் வந்துள்ளன என்பதைத்தான் சொன்னேன்..
இப்பதிவில்..அரசியல் பின்னூட்டம் வேண்டாம் என்று கேட்டுக்கொண்டும்..அவர் ..நாடகம்,நடிகன் என்றெல்லாம்..பின்னூ
ட்டம் இடுவதைத் தவிர்த்திருக்கலாம்.அவர் மிது நான் மதிப்பு வைத்திருப்பதால்..இப் பின்னூட்டங்களை நீக்கவில்லை.
நன்றி ஜகதீசன், ஜோ
TVR ஐயா,
அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம் ..என்ன தான் நீங்கள் கலைஞரின் கலையுலகம் பற்றி தான் இந்த தொடர் என குட்டிக்கரணம் போட்டாலும் ,கொசுத் தொல்லை மிக அதிகமாக இருக்கும் ..திடீர் நடுநிலையாளர்கள் ,நேர்மைத் திலகங்கள் திரண்டு வருவார்கள் வசை பாட .
///ஜோ/Joe said...
TVR ஐயா,
அதிகப்பிரசங்கித்தனமாக பேசுவதாக நினைக்க வேண்டாம் ..என்ன தான் நீங்கள் கலைஞரின் கலையுலகம் பற்றி தான் இந்த தொடர் என குட்டிக்கரணம் போட்டாலும் ,கொசுத் தொல்லை மிக அதிகமாக இருக்கும் ..திடீர் நடுநிலையாளர்கள் ,நேர்மைத் திலகங்கள் திரண்டு வருவார்கள் வசை பாட ///
வரட்டும் ஜோ..அதியும் வேடிக்கை பார்ப்போமே
Post a Comment