Friday, September 18, 2009

சிவாஜி ஒரு சகாப்தம் _ 27

1988ல் வந்த படங்கள்
என் தமிழ் என் மக்கள்
புதிய வானம்

1987ல் எம்.ஜி.ஆர்., மறைவு,

காங்கிரஸிலிருந்து சிவாஜி விலகல், புதுகட்சி தொடக்கம் என தீவிர அரசியலில் ஈடுபட்டிருந்ததால் 1988 முதல் படங்களைக் குறைத்துக் கொண்டார்.

என் தமிழ்..என் மக்கள் சிவாஜி ஃபிலிம்ஸ் தயாரிப்பு.சிவாஜி, வடிவுக்கரசி நடிக்க சந்தான பாரதி இயக்கம்.கங்கை அமரன் இசை


புதியவானம்..எம்.ஜி.ஆர்.,படங்களையே எடுத்து வந்த சத்யா மூவிஸ் படம்.ஆர்.வி.உதயகுமார் இயக்கம்.இது 100 நாள் படம்.இது சிவாஜியின் 275 ஆவது படம்.சிவாஜியுடன் சத்யராஜ்,ரூபினி, கௌதமி நடிக்க ஹம்சலேகா இசையமைத்தார்


1991 - ஞானப்பறவை..மனோரமா ஜோடி.வியட்நாம் வீடு சுந்தரம் கதை, வசனம், இயக்கம்.எம் எஸ் விஸ்வநாதன் இசை


1992 ல் வந்த படங்கள்
நாங்கள்
சின்ன மருமகள்
முதல் குரல்
தேவர் மகன்.

நாங்கள் - சிவாஜியுடன் பிரபு, ஜீவிதா,ஸ்ரீவித்யா நடிக்க ஹசன் இயக்கினார்.இளையராஜா இசை

சின்ன மருமகள் - கே ஆர் தயாரிப்பு.பிரசாந்த் குமார் இயக்கம்.சிவாஜியுடன் சிவா, மோகினி நடித்திருந்தனர்.

முதல் குரல்- வி சி குகநாதன் இயக்கம்.சிவாஜி, கனகா நடிக்க சந்திர போஸ் இசை

கமலுடன் நீண்ட காலம் கழித்து சிவாஜி இணைந்த படம் தேவர்மகன்.வெள்ளிவிழா படம்.பரதன் இயக்கம்.ரேவதி, கௌதமி ஆகியோரும் நடித்திருந்தனர்.1992 தீபாவளி வெளீயீடான இப்படம் 200 நாட்கள் ஓடியது.தெலுங்கில் க்ஷேத்ரிய புத்ரூடு என மொழிமாற்றம் செய்யப்பட்டது.நடிகர் திலகத்திற்கு ஸ்பெஷல் ஜூரி  தேசிய விருது வழங்கப்பட்டது

1993 - பாரம்பரியம்...மனோபாலா இயக்கம். சிவாஜியுடன் சரோஜா தெவி,நிரோஷா நடித்தனர்.இளையராஜா இசை

1995- பசும்பொன்...பாரதிராஜாவுடன் மீண்டும் இணைந்த படம்.சிவாஜி, சிவகுமார்,பிரபு, சரண்யா ஆகியோர் நடிக்க வித்யாசாகர் இசை

1997 ல் படங்கள்
ஒரு யாத்ரா மொழி (மலையாளம்) - மோகன்லாலுடன் இணைந்த படம்.
பிரியதர்ஷன் கதை.பிரதாப் போத்தன் இயக்கம்.இசை இளையராஜா.வெற்றி படம்

ஒன்ஸ்மோர் - விஜயுடன் இணைந்த படம்.சிவாஜி,சரோஜாதேவி நடித்த இருவர் உள்ளம் காட்சிகளின் தொடர்ச்சியாக ஒரு கிளைக்கதையைக் கொண்ட படம்.100 நாள் படம்..எஸ் ஏ சந்திர சேகர் இயக்கம்.தேவா இசை

1998- என் ஆசை  ராசாவே- ஃபேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட நிலையில்..தான் ஏற்காத கரகாட்டக்கார பாத்திரம் என்பதால் நடித்த படம்.கஸ்தூரிராஜா இயக்கம்.தேவா இசை



1999-மன்னவரு சின்னவரு

சிவாஜி, கே ஆர் விஜயா,சௌந்தர்யா, அர்ஜுன் நடித்திருந்தனர்.பி என் ராக் குமார் இயக்கம்.கீதாபிரியன் இசை.கலைப்புலி இன்டெர்னேஷனல் தயாரிப்பு

படையப்பா..ரஜினியுடன் நடித்த படம்..கேஎஸ்.ரவிகுமார் இயக்கம்..வெள்ளிவிழா படம். ரம்யா கிருஷ்ணன், சௌந்தர்யா,லட்சுமி என நட்சத்திர பட்டாளமே இருந்தது.வசூலில் சாதனை.உலகம் முழுதும் ஒரே நாளில் வெளியான முதல் படம்.தெலுங்கில் நரசிம்மா எம மொழி மாற்றம் செய்யப்பட்டு 49 அரங்குகளில் 50 நாட்களுக்கு மேல் ஓடியது.ஏ ஆர் ரஹ்மான் இசை.

பூ பறிக்க வருகிறோம் - வெங்கடேஷ் இயக்கத்தில்..திரையுலக காமெரா சிவாஜியின் நடிப்பை கடைசியாய் வாங்கிக் கொண்ட படம்.மாளவிகா உடன் நடித்தார்.வித்யாசாகர் இசை

கௌரவ நடிகராக சிவாஜி நடித்த படங்கள்
மர்மவீரன்
தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை
குழந்தைகள் கண்ட குடியரசு
தாயே உனக்காக
சினிமா பைத்தியம்
நட்சத்திரம்
உருவங்கள் மாறலாம்

1999க்கு பிறகு அவர் படங்கள் வரவில்லை என்றாலும்...அவர் படங்கள் எல்லாம் சாகா வரம் பெற்றவை.நடிப்புக் கல்லூரிகளில்..பயிலுபவர்கள் பார்க்க வேண்டியவை.

அடுத்து இரு பதிவுகளில் சிவாஜி பெற்ற விருதுகள்..விருது பெற்ற படங்கள் ஆகியவை வெளிவரும்

4 comments:

NO said...

அன்பான நண்பர் திரு இராதகிருஷ்ணன்,

சிவாஜி பற்றி நீங்கள் எழுதியது, எழுதிவருவது, அருமை!!! Really good, eventhough some of the episodes look like just a paper filled only with statistics.

சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் தனது உடல்நிலையை இன்னும் கொஞ்சம் சரியாக பராமரித்திருந்தால், இன்னும் நீண்ட நாட்கள் வாழ்ந்து இன்னும் பல வேடங்களில் மின்னியிருப்பார்! I personally feel he should have lived some more years which would have enabled this great star to do more films like Devar Magan etc.

அவர் ஒரு சரித்திரம்!

இன்று இருக்கின்ற கலைஞர்களைப்போல அந்த நாள் நடிகர்களுக்கு உடலமைப்பைப்பற்றிய முக்கியத்துவம் இல்லையென்று நினைக்கத்தோன்றுகின்றது!

Compared to a Vijay, Suriya or Vishal all in their thirty's, நடிகர் திலகம், மக்கள் திலகம் மற்றும் காதல் மானன் அவர்களின் தோற்றம் கண்டிப்பாக ஒரு முதுமையுடன், பருமனாக இருந்தது என்பது உண்மை!

நடிகர் திலகத்தின் மறைவு 2001 இல்தான் என்றாலும், 1990 முதலே அவரின் உடல்நிலை அவ்வளவாக நன்றாக இல்லை! Infact அவரின் கடைசி மூன்று வருடங்கள் மிகவும் கடினமனாவை என்று படித்ததாக ஞாபகம்! மக்கள் திலகத்தின் கடை காலமும் இதே போலத்தான் என்பது நம்ம எலோருக்கும் தெரிந்த செய்தி!

அவர் மட்டும் Clint Eastwood ஐப்போல தன் உடலை பரமரித்திருப்பாரானால் தமிழ் பேசும் மக்கள் என்னும் பல பல நல்ல, வித்தியாசமான பாத்திரங்களை பார்த்து மகிழ்ந்திருப்பார்கள்! No doubts. Imagine நடிகர் திலகம் in a suit (like Clint Eastwood) and doing cop roles. It would have been a knock out as Sivaji was absolutely capable of doing such roles. Its just that the seventees Tamil cinema or for that matter Indian cinema were not geared up for such stories and morover Indian audience would probably would not have accepted such story lines!

இதை நடிகர் திலகம் செய்யாததால் இழப்பு நம்போன்ற கோடிக்கணக்கான ரசிகர்களுக்குதான்!!!

நீங்கள் சொன்னதுபோல, அவர் படங்கள் ஒரு காலகட்டத்திற்கு பின் வராமல் இருந்தாலும் அவரின் சாதனைகள் தமிழர்களின் மனதில் அழியா இடம் பெற்றவை!

மற்றுமொரு விடயம்!

உங்களின் அறிஞர் அண்ணாவைப்பற்றிய ஒரு பதிவு. நன்றாக இருந்தது!

ஆயிரம் வேற்று கருத்துகள் இருந்தாலும், அவர் ஒரு நாணையமான, அரசியல் தலைவர்! Out and out democrat! அவரின் கட்சியில் இருந்த மற்ற திறமையாளர்கள் தமக்கு போட்டியாகிவிடுவாரோ என்று சற்றும் கலங்காமல் எல்லோரையும் பேசவிட்டு, வளர்த்துவிட்ட ஒரு மிக சிறந்த ஜனநாயகவாதி! அவர் மறைந்த போது அவரின் சொத்துக்களே (அல்லது இல்லாத சொத்துக்களே) அவரின் ஜனநாயகத்தன்மைக்கும் நாணயத்திற்கும் சாட்சி!

நடிகர் திலகம் இன்னும் சில காலம் இருந்திருந்தால் நல்ல பல படங்கள் தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் என்று சொன்னேன். அண்ணா அவர்கள் இருந்திருந்தால்?????

இப்படி நாம் எழுதிக்கொண்டிருக்கையில் ஒரு சிலர் அறிஞர் அண்ணாவைப்பற்றி கேவலமாக, கீழ்த்தரமாக பதிவு எழுதி உள்ளார்கள்! அண்ணாவின் கருத்துக்களையும் சிந்தனைகளையும் ஆட்சியையும் விமர்சிப்பது என்பது வேறு. அவரைப்பற்றி personal attackஆக கீழ்த்தரமான முறையில் பதிவெழுதுவது என்பது வேறு!
வினவு கோஷ்டியினர் அதை செய்திருக்கிறார்கள்!

தீவிர திராவிடம் பேசும் பதிவர்கள் யாரும் அதை எதிர்த்து கேட்பதாக தெரியவில்லை. வினவைக்கண்டால் பயந்து ஓடுகிறார்கள் போலும்!
எனக்கு மறுபடியும் கடல் கடக்க கொஞ்சம் நாட்கள் உள்ளது! இந்த விடயத்திர்க்காகவே முடிந்தால் வினவு இரண்டாவது ரவுண்டு ஆடலாம் என்று இருக்கிறேன்! டைம் இருந்தால் கண்டு களியுங்கள், இன்னும் சில நாட்க்களில், சில நாட்கள், இது நடக்கும்!

Finally, your postings are interesting. Keep it up.

நன்றி

T.V.ராதாகிருஷ்ணன் said...

என்னைப் பற்றி நீங்கள் வேறு ஒருவர் வலைப்பூவில் பின்னூட்டம் இட்டிருந்தாலும்..தங்களின் முதல் வருகை என் வலைப்பூவிற்கு.அதற்கு நன்றி.னிங்கள் சொல்லி இருப்பது போல ,சிவாஜி பற்றி சில புள்ளிவிவரங்களே இத் தொடரில் கொடுத்திருந்தேன்.ஒரு மலையை எலி யால் கிள்ளமுடிந்த அளவில்.
மீண்டும் நன்றி

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//புதியவானம்..எம்.ஜி.ஆர்.,படங்களையே எடுத்து வந்த சத்யா மூவிஸ் படம்.//

இதில் சத்யராஜின் பெயர் எம்.ஜி.ராஜரத்தினம் சுருக்கமாக எம்.ஜியார்.

பிரச்சனை நடக்கும் நகரம் சாந்தி நகர்.

வில்லன்பெயர் கோச்சா

இப்படி வித்தியாசமான சிந்தனைகளுடன் உதயகுமார் பளிச்சிடுவார்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//ஒன்ஸ்மோர் - விஜயுடன் இணைந்த படம்.சிவாஜி,சரோஜாதேவி நடித்த இருவர் உள்ளம் காட்சிகளின் தொடர்ச்சியாக ஒரு கிளைக்கதையைக் கொண்ட படம்.100 நாள் படம்.//

வெளியான அன்று சிவாஜிக்கு தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப் பட்டது