கந்தசாமிக்கு ஆளாளுக்கு விமரிசனம் எழுதியாச்சு.அதைப்பார்த்து தமிழ்சினிமா.காம் ஒரு கருத்தையும் தலையங்கமா வெளியிட்டாச்சு.
ஊரோடு ஒத்து வாழணும்..அதனாலே நாமும் கந்தசாமி பற்றி ஏதாவது எழுதியே ஆகணும்.
கொஞ்சம் யோசனை செய்து பார்த்ததில்..இப்படத்தை இந்தியன்,ஜென்டில் மேன், சிவாஜி என ஒப்பிட்ட விமரிசனக்காரர்கள் கூட ஒன்றை மறந்து விட்டார்கள்..அல்லது..அது பற்றி தெரியாது இருப்பார்கள் என்றே தோன்றுகிறது.இப்படங்களுக்கு முன்னோடி..கண்ணதாசன் நடித்து..அவர் திரைக்கதை,வசனத்தில்,அவர் தயாரிப்பிலே வந்த 'கறுப்பு பணம்' படம்.
இப்படத்தில்..ஊர் பெரிய மனிதர் ஒருவர்.. கறுப்பு பண முதலைகளை கொள்ளையிட்டு..அந்த பணத்தை ஏழைகளுக்கு அளிப்பார்.அந்த பாத்திரத்தில் கண்ணதாசன் நடித்திருந்தார்.இனி அப்படத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்வரிகள்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் - நாட்டில்
இல்லாமை இல்லாத நிலை வெண்டும்
பல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை நீங்கி-நாட்டில்
எல்லோர்க்கும் வரவேண்டும் பொது உடமை (எல்லோரும்)
பாலென அழுவோர்க்கு பால் கொடுப்போம்
குடித்திட கூழென கேட்போர்க்கு சோறிடுவோம்
தாயகம் காப்போரின் தாள் பணிவோம் - எதுவும்
தனக்கெனக் கொள்வாரை சிறையெடுப்போம்.
கறுப்பு பணம் படம் எடுத்து தன் வெள்ளை பணத்தை இழந்த வெள்ளந்தி மனிதர் கண்ணதாசன்.
12 comments:
கண்ணதாசனும் கந்தசாமியும் அட அட ................
ரொம்ப நல்லா இருக்கு
ஆகா...கந்தசாமி இயக்குநர் பல இடங்களில் இருந்து கதையை உருவி இருப்பார் போலிருக்கே
நல்ல நினைவூட்டல்!
//உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
கண்ணதாசனும் கந்தசாமியும் அட அட ................
ரொம்ப நல்லா இருக்கு//
நன்றி உலவு.காம்
//உடன்பிறப்பு said...
ஆகா...கந்தசாமி இயக்குநர் பல இடங்களில் இருந்து கதையை உருவி இருப்பார் போலிருக்கே//
:-)))
வருகைக்கு நன்றி உடன்பிறப்பு
//ஜெகநாதன் said...
நல்ல நினைவூட்டல்!//
நன்றி ஜெகநாதன்
மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா.
சமூக அக்கறை கொண்ட அந்த கவிஞரின் வாழ்க்கை மிகவும் பெரும்பாலும் சோகமயமானதுதான்.
//கறுப்பு பணம் படம் எடுத்து தன் வெள்ளை பணத்தை இழந்த வெள்ளந்தி மனிதர் கண்ணதாசன்//
உண்மை ,அவரே ஒப்புதல் வாக்கு அர்த்தமுள்ள இந்து மதத்தில் கொடுத்துள்ளார்.
கருப்புப் பணமெடுத்து வெள்ளைப் பணமும் இழந்தேன்.
கவலை இல்லாத மனிதன் எடுத்து கவலை உள்ள மனிதனானேன்.
//வெ.இராதாகிருஷ்ணன் said...
மிகச் சரியாகச் சொன்னீர்கள் ஐயா.
சமூக அக்கறை கொண்ட அந்த கவிஞரின் வாழ்க்கை மிகவும் பெரும்பாலும் சோகமயமானதுதான்//
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி சார்
/// யோகன் பாரிஸ்(Johan-Paris) said...
//கறுப்பு பணம் படம் எடுத்து தன் வெள்ளை பணத்தை இழந்த வெள்ளந்தி மனிதர் கண்ணதாசன்//
உண்மை ,அவரே ஒப்புதல் வாக்கு அர்த்தமுள்ள இந்து மதத்தில் கொடுத்துள்ளார்.
கருப்புப் பணமெடுத்து வெள்ளைப் பணமும் இழந்தேன்.
கவலை இல்லாத மனிதன் எடுத்து கவலை உள்ள மனிதனானேன்.///
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி Johan-Paris)
'கண்ணதாசனும் கந்தசாமியும் '
புது தகவல்.
//மங்களூர் சிவா said...
'கண்ணதாசனும் கந்தசாமியும் '
புது தகவல்.//
வருகைக்கு நன்றி சிவா
Post a Comment