ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Sunday, September 20, 2009
என்னைக் கவர்ந்த பதிவர்...
இணையதளத்தில்..என்னைக் கவர்ந்த பதிவர்களில் முதல் சில இடங்களில் இருப்பவர் கோவையைச் சேர்ந்த வாத்தியார் என அனைவராலும் அழைக்கப்படும் SP.VR.சுப்பையா ஆகும்.
இவர் வலைப்பூ..வகுப்பறை..
ஒவ்வொருவரும்...எனக்கு நூறு ஃபாலோயர்ஸ்..இருநூறு ஃபாலோயர்ஸ் என்றெல்லாம் பதிவிடுகையில்..அமைதியாக 806 பின்தொடர்பவர்களுடன் .வருகை புருந்தோர் ஐந்து லட்சம் பேர்களுடன் இவர் வகுப்பறை அமைதியாய் நடந்துக் கொண்டிருக்கிறது.
எனக்கு..ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்பதால்..இவர் வலைப்பூ பக்கம் போகாமலேயே இருந்தேன்.தற்செயலாய் ஒருமுறை நுழைந்த போதுதான்..அதில் கொட்டிக் கிடக்கும் மாணிக்கங்களைப் பார்த்தேன்.எவ்வளவு சின்ன..சின்ன..நீதிக் கதைகள்..கவிதைகள்..சிறுகதைகள்..கேலிச் சித்திரங்கள்..நகைச்ச்வை துணுக்குகள்..
ஜாதகம்..என்ற பன்னிரெண்டு கட்டங்களை வைத்துக் கொண்டு..எவ்வளவு சாதனைகள்..ஆங்காங்கே ஆங்கிலப் புலமையையும் காட்டி.. அமர்க்களமே இல்லாமல்..
சுப்பையா சார்..ஹேட்ஸ் ஆஃப்
இவரது சிறுகதை நூல்கள் இரண்டு வந்துள்ளது.செட்டி நாட்டு மண் வாசனைக் கதைகள்..பகுதி ஒன்று,பகுதி இரண்டு.முதல் பகுதி 20 கதைகள்.இரண்டாம் பகுதி 20 கதைகள்.இதைத் தவிர நவம்பர் முதல் வாரத்தில்..ஜோதிட நூல்கள் வருகின்றன.நாலு பாகங்கள்..
ஆம்..இதுதான் இவர் தொழிலா...
இல்லை..
செயற்கை இழைகளை சந்தைப் படுத்தும் முகவர் தொழில்(Textile marketing)...எழுத்து இவருக்கு கை வந்த கலையாய் இருப்பதால்..அதை 'சிக்' என பிடித்துக் கொண்டார்.
சூரியனுக்கு..டார்ச் அடிக்கிறேன்..என்றாலும்..ஒரு முக்கிய விஷயத்தை இங்கே கூறியே ஆக வேண்டும்..
இதுவரை இவர் இட்டுள்ள பதிவுகள் 379..அதற்கு வந்துள்ள கமெண்ட்ஸ் 14653...அடேங்கப்பா....
வாத்தியார் ..விரைவில் வகுப்பறை மாணவர்கள் 1000த்தை கடக்க வாழ்த்துகிறேன்.
Labels:
பதிவர்
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
me the first to wish him !!!
////செயற்கை இழைகளை சந்தைப் படுத்தும் முகவர் தொழில்(Textile marketing)...எழுத்து இவருக்கு கை வந்த கலையாய் இருப்பதால்..அதை 'சிக்' என பிடித்துக் கொண்டார்//////
நான் தீவிரவாசகன். அவ்வளவுதான். எழுத வந்ததெல்லாம் தற்செயலாக நடந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய பாராட்டிற்கும், பேரன்பிற்கும், அதைவிட முக்கியமாக நல்லாசிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி சார்!
நான் சூரியனும் அல்ல; உங்களுடைய பாராட்டு டார்ச் லைட்டும் அல்ல!
நான் குடத்தில் உள்ள விளக்கு. உங்களைப் போன்றவர்களால்தான் அந்த விளக்கைத்தூக்கி வெளியே வைக்க முடியும். மீண்டும் ஒருமுறை நன்றி
806 எனும் எண்ணிக்கை எனக்கு மகிழ்ச்சி அளிப்பதைவிட, எனது பொறுப்புணர்வையும், அத்தனை பேர்களும் விரும்பும்படி எழுத வேண்டுமே எனும் கவலையையும் மட்டுமே கூட்டி உள்ளது!
அதுதான் உண்மை!
அன்புடன்,
SP.VR.சுப்பையா
//செந்தழல் ரவி said...
me the first to wish him !!!//
நன்றி ரவி
வாழ்த்துக்கள் ! இது ஒரு மிகப்பெரும் சாதனை!
வாவ்!வாழ்ததுக்கள் வாததியாருக்கு...
"அமைதியாக 806 பின்தொடர்பவர்களுடன் வருகை புருந்தோர் ஐந்து லட்சம் பேர்களுடன்"..பாராட்டுக்கள்.
அவரின் தொடர் பதிவுக்கும் வெளிவந்த சிறுகதை நூல்களுக்கும்.வாழ்த்துக்கள்.
எனக்கும் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்பது வேறுவிடயம்.
naanum வகுப்பறை sentru parthen arumai.. :)
/////
SP.VR. SUBBIAH said...
////செயற்கை இழைகளை சந்தைப் படுத்தும் முகவர் தொழில்(Textile marketing)...எழுத்து இவருக்கு கை வந்த கலையாய் இருப்பதால்..அதை 'சிக்' என பிடித்துக் கொண்டார்//////
நான் தீவிரவாசகன். அவ்வளவுதான். எழுத வந்ததெல்லாம் தற்செயலாக நடந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
உங்களுடைய பாராட்டிற்கும், பேரன்பிற்கும், அதைவிட முக்கியமாக நல்லாசிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றி சார்!
நான் சூரியனும் அல்ல; உங்களுடைய பாராட்டு டார்ச் லைட்டும் அல்ல!
நான் குடத்தில் உள்ள விளக்கு. உங்களைப் போன்றவர்களால்தான் அந்த விளக்கைத்தூக்கி வெளியே வைக்க முடியும். மீண்டும் ஒருமுறை நன்றி
806 எனும் எண்ணிக்கை எனக்கு மகிழ்ச்சி அளிப்பதைவிட, எனது பொறுப்புணர்வையும், அத்தனை பேர்களும் விரும்பும்படி எழுத வேண்டுமே எனும் கவலையையும் மட்டுமே கூட்டி உள்ளது!
அதுதான் உண்மை!/////
நீங்கள் குடத்தில் இட்ட விளக்கு...ஒப்புக்கொள்கிறேன்
அன்புடன்,
SP.VR.சுப்பையா
//தேவன் மாயம் said...
வாழ்த்துக்கள் ! இது ஒரு மிகப்பெரும் சாதனை!//
வருகைக்கு நன்றி டாக்டர்
//அன்புடன் அருணா said...
வாவ்!வாழ்ததுக்கள் வாததியாருக்கு...//
வருகைக்கு நன்றி அருணா
///மாதேவி said...
"அமைதியாக 806 பின்தொடர்பவர்களுடன் வருகை புருந்தோர் ஐந்து லட்சம் பேர்களுடன்"..பாராட்டுக்கள்.
அவரின் தொடர் பதிவுக்கும் வெளிவந்த சிறுகதை நூல்களுக்கும்.வாழ்த்துக்கள்.
எனக்கும் ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை என்பது வேறுவிடயம்.///
நன்றி மாதேவி
//Sivaji Sankar said...
naanum வகுப்பறை sentru parthen arumai.. :)//
நன்றி Sivaji Sankar
’என்னைக்கவர்ந்த பதிவர்’ என்பதைவிட,
’பொதுவாக அனைவரும் நாடிச்செல்லும் பதிவர்’
என்பதே சரி.
மற்ற பதிவர்களுக்குச் செல்லாக்கூட்டம் இவருக்கு வருகிறதென்றால், அது எதைக்காட்டுகிறது ?
பொதுவாக இன்றைய தலைமுறைத் தமிழர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இதில் எந்தவித ஐய்முமில்லை.
எவனொருவன் எல்லாருக்கும் பிடித்தவைகள அவர்களுக்குப் புரியும் வகையில் சொல்கிறானோ அவன் வெற்றியடைவான். கண்ணதாசன் ஒரு எடுத்துக்காட்டு.
நான் சுப்பையாவின் வெற்றி இரகசிய்ம் என்ன எனப்பார்க்க அவர் பதிவில் நுழைந்து பார்த்தேன். பலபதிவுகள், அவர் ஜோதிடக்கலை நுட்பம், இவை அவர் வெற்றியின் இரகசியம் எனத்தெளிவு.
Congrats, Subbiah.
Thanks Raadhaakrishnan.
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
சிந்திக்க விரும்பும் சிலருக்காக...!
Post a Comment