Friday, September 18, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (18-9-09)

இந்த வாரம் சினிமா சுண்டல்

உன்னைப்போல் ஒருவன்..ரெட் ஒன் கேமிராவில் படமாக்கப்பட்டது.இயக்குநர் சக்ரிக்கு முதல் படம்.கமலின் மகள் ஸ்ருதி இசை அமைக்கும் முதல் படம்.இரா.முருகன் வசனம் எழுதியுள்ள முதல் படம்.மனுஷ்யபுத்திரன் திரைப்படத்திற்கான பாடல் எழுதிய முதல் படம்.மொத்தத்தில் முதல்தர படம்.

2.'இதனை இதனால் இவன் முடிக்கும்..' என்பதை நன்கு அறிந்துள்ளவர் கமல்.அவரது ஆஸ்தான சுஜாதா இல்லாத நிலையில்..கணிணி அறிவும்..ஐ.டி.பற்றி அறிந்தவருமான ஒருவர்தான் இப்படத்திற்கு திறம்பட வசனம் எழுத முடியும் என்பாதால்..சரியாக இரா.முருகனைத் தேர்ந்தெடுத்துள்ளார்..

3.கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம் ஆதவன். நாயகி நயன்தாரா

4.அமிதாப் பச்சனின் தந்தையாக அபிஷேக் பச்சன் நடிக்கிறார்.இயக்குநர் பால்கியின் இரண்டாவது படத்தில்.படத்தின் பெயர் பா (அப்பா).அபிஷேக்கின் மகனுக்கு ஒரு புது நோய்.இந்த நோய் உள்ளவர்கள்
முகத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி தெரியுமாம்.இப்படிப்பட்ட கதை அம்சம் கொண்ட படத்தில்..தந்தையை விட வயது முதிர்ந்த தோற்றத்தில் மகனாக அமிதாப் நடிக்கிறார்.(curious case of Benjamin button படத்தில் குழந்தை முதிய தோற்றத்தில் பிறக்கும்..வளர வளர இளமை ஆகும்..இந்த படத்தில் இப்படி) என்ன மாதிரி யோசிக்கிறாங்கடா அப்பா.

5.நடிகர் திலீப்குமாருக்கு பாரதரத்னா விருது வழங்க வேண்டும் என பாலிவுட் ஒரே குரலாக சப்தம் எழுப்பி வருகிறதாம்.இதற்காக ஸ்பெஷல் இணையதளமும் தொடங்கப் பட்டுள்ளதாம்.உலகில் ஒரே திலீப்குமார் என்ற வசனங்கள் வலம் வரத் தொடங்கிவிட்டனவாம்.பாவம் நடிகர்திலகம்..தமிழனாக பிறந்து..தமிழனாகவே இறந்த அப்பாவி.

6.ஒரு ஜோக்

நானே கதை வசனம் இயக்கம்,எடிட்டிங்,இசை,தயாரிப்பு,நடிப்பு எல்லாப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டு ஒரு படம் எடுக்கலாம்னு இருக்கிறேன்.
அப்படியே..ஒரு தியேட்டர் விற்பனைக்கு வருது..அதை வாங்கிட்டீங்கன்னா..நீங்களே அப்படத்தை வெளியிடலாம்.

12 comments:

கோவி.கண்ணன் said...

எல்லாம் சினிமா சுண்டலாக இருக்கிறது, தேங்காயும் மாங்காயும் காணும், வெறும் பட்டாணி தான் !
:)

க.பாலாசி said...

//பாவம் நடிகர்திலகம்..தமிழனாக பிறந்து..தமிழனாகவே இறந்த அப்பாவி.//

இது தெரிஞ்ச விஷயம்தான். ஆனாலும் ஒரு தமிழனுக்கு அவரைப்பற்றி தெரிந்தால் போதும்.

ஜோக் நல்லா இருக்கு. நல்ல ஐடியா..முடிஞ்சா ட்ரை பண்ணுங்க...

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// கோவி.கண்ணன் said...
எல்லாம் சினிமா சுண்டலாக இருக்கிறது, தேங்காயும் மாங்காயும் காணும், வெறும் பட்டாணி தான் !
:)//


சினிமாவிலேதான் மசாலா இருக்கும்

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி பாலாஜி

உண்மைத்தமிழன் said...

குட் ஜோக் ஐயா..!

அதுல நடிப்பும் நீங்கதானா..?

இது தெரிஞ்சாத்தான் தியேட்டரை வாங்குறதா வேண்டாமான்னு நான் முடிவு பண்ணணும்..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

என் படத்தை வெளியிட தயாராய் இருப்பதற்கு நன்றி உ.த.,

Anonymous said...

//சரியாக இரா.முருகனைத் தேர்ந்தெடுத்துள்ளார்..//

படம் பாத்தாச்சு. அருமை.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///சின்ன அம்மிணி said...
//சரியாக இரா.முருகனைத் தேர்ந்தெடுத்துள்ளார்..//////

படம் பாத்தாச்சு. அருமை.////

நன்றி சின்ன அம்மிணி

மங்களூர் சிவா said...

/
கோவி.கண்ணன் said...

எல்லாம் சினிமா சுண்டலாக இருக்கிறது, தேங்காயும் மாங்காயும் காணும், வெறும் பட்டாணி தான் !
:)
/

ரிப்பீட்டு!

மணிகண்டன் said...

***
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம் ஆதவன். நாயகி நயன்தாரா
***

என்னாதிது ?

T.V.ராதாகிருஷ்ணன் said...

/// மங்களூர் சிவா said...
/
கோவி.கண்ணன் said...

எல்லாம் சினிமா சுண்டலாக இருக்கிறது, தேங்காயும் மாங்காயும் காணும், வெறும் பட்டாணி தான் !
:)
/

ரிப்பீட்டு!///

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மணிகண்டன் said...
***
கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் முதல் படம் ஆதவன். நாயகி நயன்தாரா
***

என்னாதிது ?//

கோடம்பாக்கத்து சுண்டல்