Friday, September 11, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(11-9-09)

அமெரிக்காவில்..வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு விஜயம் செய்த அமெரிக்க அதிபர் ஒபாமாவிடம் நேர்காணலில் ஒரு மாணவன்..'உயிருடனோ,அல்லது மறைந்தவர்களோ..யாரிடமாவது விருந்துண்ண வேண்டுமாயின்..யாருடன் அருந்த விருப்பம் என்று கேட்டான்.அதற்கு ஒபாமா..மஹாத்மா காந்தியுடன் என்பதுடன் நில்லாது..அவர் அதிகம் உண்ண மாட்டார்..ஆகவே அது எளிய உணவாகவே இருக்கும் என்றார்.மேலும் காந்தி தனது ஆதர்ஷ தலைவர் என்றும் கூறினார்.

2.)நடிகர் சிவகுமார்..இலக்கிய பேருரை ஆற்றி வரும் சன்மானங்களை சேர்த்து தான் படித்த பள்ளிக்கு வழங்கப் போகிறாராம்.வருடம் முழுதும் இவர் பேசி சேர்த்த 18 லட்சத்தை தன்னுடைய பள்ளிக்கு கொடுத்திருப்பதாக தகவல்.

3).9-9-9 செப்டம்பர் 9ம் நாள்..ஆயிரம் வருடம் கழித்தே மீண்டும் வரும்.சீனர்கள் இதை விமரிசையாக கொண்டாடினார்களாம்.அன்று சீனாவில் மட்டும் 20000 ஜோடிகள் திருமணம் நடந்ததாம்.
உலகில் ஆஸ்திரேலியாவில் காலை 9 மணி 9 மணித்துளிக்கு 9-9-9- அன்று இந்திய வம்சாவளியினர் ஒருவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததாம்

4)..சமிபத்தில் 370 வயது நிரம்பிய சென்னையின் இன்றைய பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர்.மக்கள் தொகை 70 லட்சம்.அதிகம் பேசப்படும் மொழிகள் தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி,உருது,ஆங்கிலம்.

5)பார்வையற்றோர்க்கு உதவும் வகையில் பேசும் இணையதளங்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன.இணையதளங்களை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான ...இந்த திட்டத்திற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அனுமதி வழங்கியதும்..இந்தியாவில் உள்ள 5000 அரசு இணையதளங்கள் உட்பட அனைத்தும்..பேசும் இணையதளங்களாக மாறிவிடும்.இத்திட்டம் பார்வையற்றவர்களுக்கு மட்டுமல்லாது..வயதானவர்கள்..மற்றும் கல்வியறிவு அற்ற வர்களுக்கும் பயன்படுமாம்.

6)மாற்றி..மாற்றி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி என தமிழக மக்கள் சலிப்படைந்து விட்டனர்..._ ராகுல் காந்தி பேச்சு..
அவர் சொல்ல மறந்தது..
அதைவிட..தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசலில் மக்கள் சலிப்பு அதிகம் என்பதை.

7) கொசுறு - ஒரு ஜோக்
டாக்டர்- நான் ஆபரேஷன் பண்ணி பிழைச்சுக்கிட்ட முதல் கேஸ் நீங்க தான்
நோயாளி- (ஆச்சர்யத்துடன்) அப்படியா?
டாக்டர்- இதைக் கேட்கிற உங்களுக்கே இவ்வளவு ஆச்சர்யம்னா..எனக்கு எப்படியிருக்கும்

18 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

I am first & second

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல தகவல்கள்

மணிகண்டன் said...

***
பார்வையற்றோர்க்கு உதவும் வகையில் பேசும் இணையதளங்கள் விரைவில் அறிமுகமாக உள்ளன.இணையதளங்களை அனைவரும் பயன்படுத்தும் வகையிலான ...இந்த திட்டத்திற்கு மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அனுமதி வழங்கியதும்..இந்தியாவில் உள்ள 5000 அரசு இணையதளங்கள் உட்பட அனைத்தும்..பேசும் இணையதளங்களாக மாறிவிடும்.இத்திட்டம் பார்வையற்றவர்களுக்கு மட்டுமல்லாது..வயதானவர்கள்..மற்றும் கல்வியறிவு அற்ற வர்களுக்கும் பயன்படுமாம்
***

குட் நியூஸ். சென்றமுறை ஒலிம்பிக் தளம் இவ்வாறாக இல்லாமல் இருந்ததற்காக ஒருவர் கேஸ் போட்டதாக படித்துள்ளேன்.

****
6)மாற்றி..மாற்றி தி.மு.க., அ.தி.மு.க., ஆட்சி என தமிழக மக்கள் சலிப்படைந்து விட்டனர்..._ ராகுல் காந்தி பேச்சு..
அவர் சொல்ல மறந்தது..
அதைவிட..தமிழக காங்கிரஸில் உள்ள கோஷ்டி பூசலில் மக்கள் சலிப்பு அதிகம் என்பதை.
****

தமிழ்நாட்டு மக்கள் கழக ஆட்சிகள் மீது சலிப்படைந்து இருக்கலாம். ஆனால் கோஷ்டி பூசலை ஒரு ஜாலியான நிகழ்வாகவே பார்க்கிறார்கள். திமுக காரர்கள் தேவையில்லாமல் டென்ஷன் ஆக வேண்டாம். தேவையில்லாமல் தேர்தல் வந்துவிடும்.

மணிகண்டன் said...

i am 3rd and 4th ! ha ha ha

துபாய் ராஜா said...

//டாக்டர்- நான் ஆபரேஷன் பண்ணி பிழைச்சுக்கிட்ட முதல் கேஸ் நீங்க தான்
நோயாளி- (ஆச்சர்யத்துடன்) அப்படியா?
டாக்டர்- இதைக் கேட்கிற உங்களுக்கே இவ்வளவு ஆச்சர்யம்னா..எனக்கு எப்படியிருக்கும்//

:))))

பீர் | Peer said...

:)

dondu(#11168674346665545885) said...

//9-9-9 செப்டம்பர் 9ம் நாள்..ஆயிரம் வருடம் கழித்தே மீண்டும் வரும்.//

ஆயிரம் ஆண்டுகள் கழித்தே வரக்கூடிய தேதிகள்
1-1-1, 2-2-2, 3-3-3, ......12-12-12

இன்றைய தேதியான 12.09.2009 கூடத்தான் திரும்பவரவே வராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

@ 7 ஜோக்

:)

பேஷண்ட் கேட்டது அதிர்ச்சில போயே போயிட்டாரா

Several tips said...

நல்ல ப்ளாக்

T.V.ராதாகிருஷ்ணன் said...

முதல் வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி ஸ்டார்ஜன்

T.V.ராதாகிருஷ்ணன் said...

///மணிகண்டன் said...
திமுக காரர்கள் தேவையில்லாமல் டென்ஷன் ஆக வேண்டாம். தேவையில்லாமல் தேர்தல் வந்துவிடும்.//

:-)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி மணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி
துபாய் ராஜா
Peer

T.V.ராதாகிருஷ்ணன் said...

///dondu(#11168674346665545885) said...
//9-9-9 செப்டம்பர் 9ம் நாள்..ஆயிரம் வருடம் கழித்தே மீண்டும் வரும்.//

ஆயிரம் ஆண்டுகள் கழித்தே வரக்கூடிய தேதிகள்
1-1-1, 2-2-2, 3-3-3, ......12-12-12

இன்றைய தேதியான 12.09.2009 கூடத்தான் திரும்பவரவே வராது.

அன்புடன்,
டோண்டு ராகவன்///



வருகைக்கும்..அரிய பல தகவல்கள் தந்தமைக்கும் நன்றி டோண்டு சார்..
ஆனால் நான் சொல்வது 9..இதை அதிர்ஷ்ட எண் என அவர்கள் கொண்டாடுகிறார்கள் என்பதே.

T.V.ராதாகிருஷ்ணன் said...

///சின்ன அம்மிணி said...
@ 7 ஜோக்

:)

பேஷண்ட் கேட்டது அதிர்ச்சில போயே போயிட்டாரா//

டாக்டர் தான் நோயாளி பிழச்சுக்கிட்டார்னு அதிர்ச்சிலே போயிட்டதாகக் கேள்வி
வருகைக்கு நன்றி சின்ன அம்மிணி

T.V.ராதாகிருஷ்ணன் said...

//Several tips said...
நல்ல ப்ளாக்//


நன்றி Several tips

மங்களூர் சிவா said...

/
சமிபத்தில் 370 வயது நிரம்பிய சென்னையின் இன்றைய பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர்
/

இதுல காஞ்சிபுரம் சேத்தா???

டாக்டர் ஜோக் சூப்பர்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

//மங்களூர் சிவா said...
/
சமிபத்தில் 370 வயது நிரம்பிய சென்னையின் இன்றைய பரப்பளவு 174 சதுர கிலோமீட்டர்
/

இதுல காஞ்சிபுரம் சேத்தா???

டாக்டர் ஜோக் சூப்பர்!//

வருகைக்கு நன்றி சிவா..காஞ்சிபுரம் சேராது.