Sunday, September 27, 2009

தமிழ் சினிமா சென்ற ஆண்டும்..இந்த ஆண்டும்..

தமிழ்த் திரையுலகில் இன்று பல இளம் இயக்குநர்களும்..நடிகர்களும் வந்து கலக்கிக் கொண்டிருக்க்கிறார்கள்.ஆனால் வெளிவரும் பட வெற்றிகள் கவலையை தருவதாகவே உள்ளது.

சென்ற ஆண்டு வெளிவந்த படங்கள் 84..ஆனால் அவற்றில் ஏழு படங்களே வணிக அளவில் வெற்றி பெற்றுள்ளன.அதாவது கிட்டத்தட்ட 8 சதவிகிதம் வெற்றி.மிகவும் எதிப்பார்க்கப்பட்ட குசேலன்,பீமா,குருவி.ஏகன்,சத்யம் என மெகா பட்ஜெட் படங்கள் தோல்வியடைந்தன.ஆனால் புதியவர்களின் சுப்ரமணியபுரம்,அஞ்சாதே,சரோஜா ஆகிய மினிமம் பட்ஜெட் படங்கள் வெற்றி பெற்றன.

குசேலர் தோல்வியால்..தொடர்ந்து பத்து படங்களுக்கு பூஜை போட்ட கார்ப்பரேட் நிறுவனம் நிலை இன்று கவலையைத் தருவதாகவே உள்ளது.

இன்று நல்ல கதை,சிறந்த திரைக்கதை,யதார்த்தம் நிறைந்த படங்களே வெற்றி பெற்று வருகின்றன.

இந்த ஆண்டு முதல் ஆறு மாதங்களில் வந்த 51 படங்களில் ஒன்பது படங்கள் மட்டுமே லாபத்தைப் பெற்று தந்திருக்கின்றன.

வில்லு,தோரணை,மரியாதை ஆகிய ஸ்டார் வேல்யூ படங்கள் தோல்வியடைந்துள்ளன.

ஆனால்..வெண்ணிலா கபடிக் குழு,யாவரும் நலம்,பசங்க ஆகிய படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் தேறின.இவற்றில் யாவரும் நலம்..மாதவன் நடித்தபடம்.தமிழ்..ஹிந்தி இரண்டிலும் எடுக்கப்பட்ட படம்.

மாயாண்டி குடும்பத்தார்..பி,சி சென்டரில் ஓரளவு வெற்றி பெற்றது எனலாம்.நாடோடிகள் பரவாயில்லை.

வழக்கமான ஃபார்முலா படங்கள் படிக்காதவன்,சிவா மனசில சக்தி,மாசிலாமணி ஆகியவை வெற்றிக்கு சன் டீ.வி.,யின் விளம்பரம் காரணமாய் சொல்லலாம்.அயன் படம் மட்டுமே பிளாக் பஸ்டர்.

இனியாவது படம் வெற்றியடைய ..நல்ல கதையமைப்பு முக்கியம் என்று பட அதிபர்களும்..இயக்குநர்களும் உணர்வார்களாக.

14 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

//நல்ல கதை,சிறந்த திரைக்கதை,யதார்த்தம் நிறைந்த படங்களே வெற்றி பெற்று வருகின்றன.//

இவை அனைத்தும் நிறைந்த படம்தான் ரஜினி படம். கவனித்தீர்களா? ஆனால் படுதோல்வி.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

நல்ல தகவல்கள்

T.V.Radhakrishnan said...

ரஜினி படம்... யதார்த்தம்
???!!!

வருகைக்கு நன்றி சுரேஷ்

T.V.Radhakrishnan said...

வருகைக்கு நன்றி Starjan

SUREஷ் (பழனியிலிருந்து) said...

அந்தப் படம் யதார்த்தப் படம்தான்.., பெரும்பாலான காட்சிகள் எதார்த்தமாகத்தான் இருந்தன..,

குறிப்பாக ரஜினியின் பேட்டி

Cable Sankar said...

/இவை அனைத்தும் நிறைந்த படம்தான் ரஜினி படம். கவனித்தீர்களா?//

என்ன தலிவரே.. ஏதாவது காமெடி பின்னூட்டமா இது..? நிச்ச்யமாய் இவையனைத்தும் இருந்தால் மிகப்பெரிய வெற்றிப்படம்..

Cable Sankar said...

யாவரும் நலம் தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் சார்.

T.V.Radhakrishnan said...

//SUREஷ் (பழனியிலிருந்து) said...
அந்தப் படம் யதார்த்தப் படம்தான்.., பெரும்பாலான காட்சிகள் எதார்த்தமாகத்தான் இருந்தன..,

குறிப்பாக ரஜினியின் பேட்டி//

குசேலன் படத்தில் கடைசி ஐந்து நிமிடம்தான் படமே!..அதற்காக மக்கள் இரண்டு மணிநேரம் உட்காரவைக்க முடியுமா?இப்படத்திற்கான திரைக்கதை சரியில்லை என்பதே என் எண்ணம்

T.V.Radhakrishnan said...

// Cable Sankar said...
/இவை அனைத்தும் நிறைந்த படம்தான் ரஜினி படம். கவனித்தீர்களா?//

என்ன தலிவரே.. ஏதாவது காமெடி பின்னூட்டமா இது..? நிச்ச்யமாய் இவையனைத்தும் இருந்தால் மிகப்பெரிய வெற்றிப்படம்..//


வருகைக்கு நன்றி Sankar

T.V.Radhakrishnan said...

//Cable Sankar said...
யாவரும் நலம் தமிழ், ஹிந்தி இரண்டு மொழிகளில் எடுக்கப்பட்ட படம் சார்.//
தவறு திருத்தப்பட்டது..நன்றி

பீர் | Peer said...

சரோஜா வெற்றிப்படமா? தெளிவுபடுத்தவே கேட்கிறேன்.

T.V.Radhakrishnan said...

சரோஜா ஓடிய நாட்களைக் கொண்டு வெற்றியா..தோல்வியா என்பதில்லை..மினிமம் பட்ஜெட் படம்..லாபம் ஈட்டிய படம்

SUREஷ் (பழனியிலிருந்து) said...

அந்தப் படத்தில் எல்லாம் இருந்ததால்தான் மலையாளத்தில் வெற்றிபெற முடிந்தது. தமிழில் சரிவிகித கலவை இல்லை. அதனால் தோல்வி அடைந்தது என்று நினைக்கிறேன்.

T.V.Radhakrishnan said...

///SUREஷ் (பழனியிலிருந்து) said...
அந்தப் படத்தில் எல்லாம் இருந்ததால்தான் மலையாளத்தில் வெற்றிபெற முடிந்தது. தமிழில் சரிவிகித கலவை இல்லை. அதனால் தோல்வி அடைந்தது என்று நினைக்கிறேன்.///

அந்த படம் தோல்வியடைந்ததற்கான காரணம்

அதீத எதிர்ப்பார்ப்பை மக்களிடம் கார்ப்பரேட் கம்பெனி ஏற்படுத்தி விட்டது.

சந்திரமுகி குழுவினர் என்பதால் மக்களிடமும் எதிர்ப்பார்ப்பு

கடைசியில் ரஜினி சிறு பாத்திரத்தில் வருவது மக்களுக்கு ஏமாற்றம் தந்தது.

வடிவேலு காமெடி..மலையாளத்தில் அக்காட்சிகள் ரசிக்கப்பட்டிருக்கலாம்..தமிழ் ரசிகன்..அக்காமெடியை ரசிக்கவில்லை.

பசுபதி,ரஜினி ஆரம்பகால நட்பை விஷுவலாக காட்டியிருக்கலாம்(இதைத்தான் திரைக்கதை அமைப்பு என்றேன்)

மீனா அக் கதாபாத்திரத்தில் ஒட்டவில்லை.