ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Monday, September 14, 2009
தமிழர் தலைவர் அண்ணா....
பல குடித்தனங்கள் நிறைந்த வீட்டில் படிப்பதற்கேற்ற சூழ்நிலை இல்லாத நிலையில் அண்ணா படித்தார்.கல்லூரியில் இன்டர் வகுப்பு முடிந்து..வறுமை காரணமாக படிப்பை நிறுத்த முடிவு செய்தார்.
அப்போது... பச்சையப்பன் கல்லூரி முதல்வர், அண்ணாவை அழைத்து..'முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ள நீ படிப்பை தொடர வேண்டும்' என்று கூறி..அவரை பி.ஏ.,(Hons) சேரச் சொன்னார்.அந்த மூன்றாண்டுக்கான முழு புத்தகச் செலவையும் அவரே ஏற்றார்.
படிக்கும் போதே ராணி அம்மையாரை, சம்பிரதாயப்படி மணந்தார்.பின்னரே சுமமரியாதை இயக்கத் தளபதி ஆனார் எனலாம்.
படிப்பு முடிந்ததும், காஞ்சீபுரம் நகராட்சியில் எழுத்தர் வேலை.பின் ஆசிரியர் வேலை..என சில காலம் இருந்தார்.
எப்படியேனும்..அண்ணாவை தன்னிடம் சேர்த்துக் கொள்ள நினைத்த பெரியார்..'விடுதலை'யில் பணியாற்றக் கூப்பிட்டார்.விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்.அவை பல இளைஞர்களை அவரிடம் வசீகரித்தன.
சந்திரமோகன்,நீதிதேவன் மயக்கம்,சந்திரோதயம்,ஓர் இரவு,காதல் ஜோதி,வேலைக்காரி போன்ற பல நாடகங்களை எழுதி நடித்தார்.
இடையில் எம்.ஏ.,படித்தார்.ஒரு இயக்கத்தை சேர்ந்தவர் மேக்கப் போட்டு நடிப்பதைக் கண்டதும்தான்..கலைஞர்கள் பற்றி..மக்களிடையே ஏற்பட்டிருந்த எண்ணங்கள் மாறின எனலாம்.
1949 ஜூன்...முக்கிய மாதம்..பெரியார் மணியம்மையை மணக்க..அண்ணா போன்றோர்..வெளியே வந்து..புதிய கழகம் ஆரம்பிப்பது என தீர்மானித்தனர்.
17-9-49 அன்று திராவிட முன்னேற்ற கழகம் விதைக்கப்பட்டது.
நாம் திராவிட கழகத்துடன் மோதுவதோ..சாடுவதோ கூடாது.இரண்டு கழகங்களும் இரட்டைக் குழல் துப்பாக்கிகள் என்றார் அண்ணா.
அண்ணாவின்..அரசியல் முக்கியத்துவம்..அவரது எழுத்துலகத்தை முடக்கி விட்டது எனலாம்.அவரது பேச்சும்...எழுத்தும் தான் தமிழ் நெஞ்சங்களில் அவருக்கு நீங்கா இடத்தை அமைத்துக் கொடுத்தது.
அண்ணாவின் 'ஓர் இரவு' நாடகத்தைப் பார்த்த கல்கி அவரை 'தமிழ் நாடக உலகின் பெர்னாட்ஷா' என்றார்.
எதையும்..தாங்கும் இதயம்..
ஒன்றே குலம் ஒருவனே தேவன்
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!
ஆகிய வாசகங்கள் அண்ணா தந்த மறக்கமுடியாத வாசகங்கள்.
Labels:
அண்ணா
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
//விடுதலையில் அண்ணா,பரதன்,வீரன்,சௌமியன் என்ற புனைப்பெயர்களில் கட்டுரைகள் எழுதினார்//
நாமும் இத்தனைப் பெயர்களில் முயற்சித்துப் பார்க்கலாமா தல
காசா..பணமா..பெயர்தானே..தாராளமாக செய்யலாம்
தமிழர் தலைவர் அண்ணா.... //
அப்படியா? இப்ப யார் சொல்கிறார்கள்!?
இப்ப பிழைப்பு வாதி மணிதான் தமிழர் தலைவர்!
வருகைக்கு நன்றி ஜோதிபாரதி..ஆனால் பின்னூட்டம் மாரி வந்துவிட்டதோ?
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
தமிழர் தலைவர் அண்ணா.... //
அப்படியா? இப்ப யார் சொல்கிறார்கள்!?
இப்ப பிழைப்பு வாதி மணிதான் தமிழர் தலைவர்!//
மணி மணியாய் தமிழகத் தலைவர்கள்
;-))
பதிவுக்கு நன்றி!
அண்ணா திமுகவைத் தொடங்கும் போது உறுதுனையாக இருந்த தலைவர்களைப் பற்றிப் பகிரலாமே!
:)
ஹேப்பி அண்ணா anniversary
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் சித்தம் நிறைந்தான்
அண்ணா என்றெல்லோரும் அழைக்க வந்தான்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தான்!
//அத்திவெட்டி ஜோதிபாரதி said...
பதிவுக்கு நன்றி!
அண்ணா திமுகவைத் தொடங்கும் போது உறுதுனையாக இருந்த தலைவர்களைப் பற்றிப் பகிரலாமே!
:)//
பெரிய தல எல்லாம் இருக்கறப்போ..நான் ..எப்படி..
//உடன்பிறப்பு said...
ஹேப்பி அண்ணா anniversary//
நன்றி உடன்பிறப்பு..எனது வாழ்த்துக்களும் உங்களுக்கு
//ஜோ/Joe said...
காஞ்சியிலே ஒரு புத்தன் பிறந்தான்
கொண்ட கருணையினால் எங்கள் சித்தம் நிறைந்தான்
அண்ணா என்றெல்லோரும் அழைக்க வந்தான்
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தான்!//
ஆயிரம் தலைமுறை தழைக்க வந்தான்
நன்றி! ஜோ
அண்ணா வழியில் அயராது உழைப்போம் ....
இந்த பாடல் புரட்சித் தலைவரின் பிரச்சார பாடல்
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
அண்ணா வழியில் அயராது உழைப்போம் ....
இந்த பாடல் புரட்சித் தலைவரின் பிரச்சார பாடல்//
வருகைக்கு நன்றி Starjan
//அண்ணா வழியில் அயராது உழைப்போம் ....
இந்த பாடல் புரட்சித் தலைவரின் பிரச்சார பாடல்
//
அண்ணா வழியில் அயராதுழைப்போம் .கண்ணியமாய் அண்ணன் சொன்னதை செய்வோம் -ங்குறது திமுக பிரச்சார பாடல் ..இதைத் தான் சொல்லுகிறீர்களா ? இல்லை அதிமுகவிலும் இப்படி தொடங்கும் பிரச்சர பாடல் இருக்கிறதா?
கழக பாடல்களை இங்கே கேட்டு மகிழலாம் http://www.mkalagiri.com/
//ஜோ/Joe said...
//அண்ணா வழியில் அயராது உழைப்போம் ....
இந்த பாடல் புரட்சித் தலைவரின் பிரச்சார பாடல்
//
அண்ணா வழியில் அயராதுழைப்போம் .கண்ணியமாய் அண்ணன் சொன்னதை செய்வோம் -ங்குறது திமுக பிரச்சார பாடல் ..இதைத் தான் சொல்லுகிறீர்களா ? இல்லை அதிமுகவிலும் இப்படி தொடங்கும் பிரச்சர பாடல் இருக்கிறதா?//
அ.தி.மு.க., பிரச்சாரப் பாடல்கள் பற்றி யாம் ஒன்றும் அறியோம் பராபரமே!
//உடன்பிறப்பு said...
கழக பாடல்களை இங்கே கேட்டு மகிழலாம் http://www.mkalagiri.com////
நன்றி உடன்பிறப்பு
வாழ்க அண்ணா புகழ்
//நசரேயன் said...
வாழ்க அண்ணா புகழ்//
வருகைக்கு நன்றி நசரேயன்
Post a Comment