1.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.
2.உங்க கோபம்..எல்லோரையும் ..உங்க கிட்டே இருந்து அந்நியப்படுத்தி விடும்.
3.எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.
4.தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.
5.வளைஞ்ச மூங்கில் பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில் பாடையாகும்.
6.நமக்கு தேவையில்லாததை வாங்க ஆரம்பிச்சா..நம்ம கிட்டே இருக்கிற தேவையானதை விற்க வேண்டி இருக்கும்
7.வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..செலவுக்கு ஏத்த வரவுன்னு அலையக் கூடாது.
8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டு பிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிடுங்கள்.
9.லட்சியத்தை மறந்துட்டு..மனுஷ உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
10.எல்லாம் உனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்...ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.
இவற்றை எழுதியவர்களுக்கு நன்றி...
12 comments:
இவற்றை எடுத்து எழுதியவருக்கும் நன்றி...
அனைத்தும் நன்றாக உள்ளது!
super appu...
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி
கோவி.கண்ணன்
யாழினி
kadavul
வாய்விட்டு சிரிக்க மட்டும் இல்லை,
மனம் விட்டு சிந்திக்கவும் பதிவு.
கலக்குங்க
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி venkat
//எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.//
அருமையான அறிவுரை.
பகிர்தலுக்கு நன்றி.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி வாசு.
தங்கள் இலக்கிய இதழுக்கு வாழ்த்துகள்.உங்கள் பதிவுகள் என்னால் திறக்கமுடியவில்லையே! ஏன்
நன்றாக இருந்தது.. நன்றி நண்பரே
// jackiesekar said...
நன்றாக இருந்தது.. நன்றி நண்பரே//
வருகைக்கு நன்றி jackie
அனைத்தும் மிக அருமை. வாழ்க்கைக்கு மிக தேவையான பொன்மொழிகள்.
நன்றி சிவா
Post a Comment