ஒன்று எங்கள் ஜாதியே.....ஒன்று எங்கள் நீதியே.... நம்மால் முடியாதது....யாராலும் முடியாது.. யாராலும் முடியாதது....நம்மால் முடியும்
Wednesday, September 23, 2009
காமன்மேன் என்பவன் யார்..
உன்னைப்போல் ஒருவன் ..வந்தாலும் வந்தது.வழக்கம் போல அதிக எண்ணிக்கையில் இணையத்தில் விமரிசனங்களும் வந்து விட்டது.
கமல் தாடி,உடை,பூணூல்,செருப்பு,சாண்ட்விச் என அனைத்துப் பற்றியும் எழுதியாய் விட்டது.
கமல் ரசிகர்கள் விமரிசனம்,கமல் மேல் (குறிப்பாக சாதியிடம்) காழ்ப்புணர்ச்சி கொண்டவர் விமரிசனம்,நடுநிலை விமரிசனம் என..அடடா..எவ்வளவு ரகங்கள் .
பிரமிட் சாய்மீராவே பரவாயில்லை என்று ஆகிவிட்டது.
சரி தலைப்புக்கு வருவோம்..
நம்மில் பலருக்கு காமன்மேன் என்றால்..
கார்ட்டூன்களில் வரும் உருவம் போல் இருக்க வேண்டும்..ஆர்.கே.லக்ஷ்மண் கார்ட்டூனில் வரும் பொதுஜனம் போல் இருக்க வேண்டும்..அதை விடுத்து பேண்ட்,ஷர்ட் போட்டுக் கொண்டு...கொஞ்சமாவது ஒத்துப்போக வெண்டாம்.
நமக்குத் தெரிந்த காமன்மேன்..காய்கறி விலையைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்...விலைவாசி உயர்வு பற்றி பேச வேண்டும்..குண்டுவெடிப்புக் குறித்து..நாலு பேருடன்..விவாதிக்க வேண்டும்..நாடு கெட்டுப் போயிற்று என அங்கலாய்க்க வெண்டும்..
அதைவிடுத்து கட்டடத்தின் மொட்டை மாடியில் நிற்கிறாராம்..தீவிரவாதிகளை விடுவிக்க சொல்கிறாராம்..அவர்களுக்கு தண்டனை கொடுக்கிறாராம்...இதையெல்லாம் காமன்மேன் செய்தான் என்பதை எந்த **யனும் ஒப்புக்கொள்ளமாட்டான்..இது கமலுக்கு ஏன் தெரியாமல் போயிற்று.
ஹிந்தி படங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்களை தீவிரவாதிகள் என்றால்.. ஒப்புக் கொள்வோம்..மலையாளப் படத்தில் சொன்னால் ஒப்புக் கொள்வோம்.அந்தந்த மாநிலத்தவர் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்கள்.
ஆனால்..தமிழன்..தன்னைத் தவிர மற்றவர்களை மதிப்பான்..ஆகவேதான் கச்சையைக் கட்டிக் கொண்டு கிளம்பிவிட்டான்.
கடைசியாக கமலுக்கு ஒரு வார்த்தை...
நீங்கள் ஏன் சார்..பரிட்சார்த்த முயற்சிகள் செய்து..அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களை எடுக்க வேண்டும்.
எங்களைப் பொறுத்தவரை..கதாநாயகன் சோனியாய் இருந்தாலும்..வில்லனுடன் இரண்டு சண்டை, ஒரு குத்துப்பாட்டு, அம்மா அப்பா சென்டிமென்ட் இப்படி படம் கொடுத்தால் போதும்.
எங்கள் கலைத்தாகத்தை மற்ற மலையாளம், வங்காளப் படங்களைப் பார்த்து தீர்த்துக் கொள்கிறோம்.ஆனால்..அவ்வப்போது..தமிழில் ஏன் வித்தியாசமாக முயற்சி செய்வதில்லை என அங்கலாய்ப்போம்.அதை உண்மை என்று எண்ணாதீர்கள்.
இப்பதிவை படித்து விட்டு..என்னைக் காய்ச்ச நினைப்பவர்கள்..எனது இந்த பதிவையும் படித்து விட்டு வாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
20 comments:
//நீங்கள் ஏன் சார்..பரிட்சார்த்த முயற்சிகள் செய்து..அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களை எடுக்க வேண்டும்//
கமலுக்கு சரியான கேள்வி....
ada poonga sir eetho naalu hits paarkka appdiyellaam ezuthaaraangak atha pooi siiriyasa etuththukkittu
நளதமயந்தி, ஆவ நாழியைத் தமிழில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று சொந்தமாகப் படம் எடுத்தபோதெல்லாம், கமலுக்குக் கொஞ்சம் காமன் சென்ஸ் இருந்தது. இவைகளில் தான் நடிப்பதைவிட, அதற்குப் பொருத்தமானவர்களை வைத்து நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என்பதும் தெரிந்திருந்தது. படங்கள், நன்றாகவே வந்திருந்தன.
இதிலும், தனக்குக் கொஞ்சமும் பொருந்தாத பாமரனின் பக்கத்தை எடுத்துக் கொண்டதில் தான் இவ்வளவு கேலியும் கல்லடியும்!
நஸ்ருதீன் ஷா ஏற்று நடித்திருந்ததில் எந்த போலித்தனத்தையும் படம் பார்க்க வந்தவர்கள் உணரவில்லை. இங்கே கமல், லோகளைஸ் பண்ணுகிறேன் என்ற பெயரில் செய்திருக்கும் கொஞ்சம் இடைச்செருகல்கள் தான் பிரச்சினையே!
கல்யாண ஆசை அல்லது 'அந்த' ஆசை உள்ள வயதுவந்தவர்கள் அனைவருமே
'காமன்'மேன்.
:)
//'காமன்'மேன்.//
இதுலும் ஏன் பெண்ணடிமைத்தனம்? காமன் யுமன் இருக்கக்கூடாதா? பெண்களின் உணர்ச்சிகளை அழிக்க நினைக்கு கோவி. கண்ணன் ஒரு MCP
// ILA said...
//'காமன்'மேன்.//
இதுலும் ஏன் பெண்ணடிமைத்தனம்? காமன் யுமன் இருக்கக்கூடாதா? பெண்களின் உணர்ச்சிகளை அழிக்க நினைக்கு கோவி. கண்ணன் ஒரு MCP
//
Man என்கிற சொல் மனிதன் என்ற பொருளில் ஆண் பெண் இருபாலருக்கும் பொது. நான் சொல்லும் காமன்மேனும் அப்படித்தான் :)
///அமுதா கிருஷ்ணா said...
//நீங்கள் ஏன் சார்..பரிட்சார்த்த முயற்சிகள் செய்து..அன்பே சிவம், உன்னைப் போல் ஒருவன் போன்ற படங்களை எடுக்க வேண்டும்//
கமலுக்கு சரியான கேள்வி....///
நன்றி அமுதா கிருஷ்ணா
//அக்னி பார்வை said...
ada poonga sir eetho naalu hits paarkka appdiyellaam ezuthaaraangak atha pooi siiriyasa etuththukkittu//
நன்றி அக்னி
:))
வருகைக்கும்..கருத்துக்கும் நன்றி கிருஷ்ணமூர்த்தி
/// கோவி.கண்ணன் said...
கல்யாண ஆசை அல்லது 'அந்த' ஆசை உள்ள வயதுவந்தவர்கள் அனைவருமே
'காமன்'மேன்.
:)///
:-)))
//ILA said...
கோவி. கண்ணன் ஒரு MCP//
அப்படியா?
யாரு யாரு யாரு அந்த காமன் மேன் ?
5 பாட்டு உள்ள ஆல்பம் ரிலீஸ் பண்ணிட்டு ஒரு பாட்டு கூட படத்துல இல்ல. நானே அந்த கடுப்புல இருக்கேன். நீங்க என்னடானா !
பிரேம் பை பிரேம் ரீமேக். இதை வச்சி எப்படி தமிழ்சினிமா அடுத்த நிலைக்கு போகும் ?
///
கோவி.கண்ணன் said...
Man என்கிற சொல் மனிதன் என்ற பொருளில் ஆண் பெண் இருபாலருக்கும் பொது. நான் சொல்லும் காமன்மேனும் அப்படித்தான் :)//
ச---பு கோவியாரின் தனித்திறமை
//ஜோ/Joe said...
:))//
நன்றி ஜோ
//மணிகண்டன் said...
பிரேம் பை பிரேம் ரீமேக். இதை வச்சி எப்படி தமிழ்சினிமா அடுத்த நிலைக்கு போகும் ?//
ஒப்புக்கொள்கிறேன்..பின்..கமலை ஏன் நோண்டிக்கொண்டிருக்கிறார்கள்?
//நஸ்ருதீன் ஷா ஏற்று நடித்திருந்ததில் எந்த போலித்தனத்தையும் படம் பார்க்க வந்தவர்கள் உணரவில்லை. இங்கே கமல், லோகளைஸ் பண்ணுகிறேன் என்ற பெயரில் செய்திருக்கும் கொஞ்சம் இடைச்செருகல்கள் தான் பிரச்சினையே!/
நஸ்ருதீன் சிவாஜி காலத்தில் வந்திருக்கவேண்டிய நடிகர். பொதுவாக இந்தி நடிகர்கள் அனைவருமே ஓவர் ஆக்டிங் செய்வார்கள். இதில் நஸ்ருதீன் கொஞ்சம் அதிகமாகவே செய்வார். கமல் அதை தவிர்த்துள்ளதால், சரியாக நடிக்கவில்லை அல்லது அவர் அளவுக்கு இல்லை என நம் புத்திசாலிகள் கதறுகிறார்கள்.
***
கமலை ஏன் நோண்டிக்கொண்டிருக்கிறார்கள்?
***
(என்னோட தமிழ் vocabulary மாதிரி ஆகிக்கிட்டு இருக்கு உங்களோடதும்.)
பொதுமைப்படுத்தும் பிரச்சனைகள் படத்துல இருக்கு சார். ஹிந்தி படம் வந்தபோதும் விவாதங்கள் இருந்தன. தமிழ்நாடு தள்ளி இருப்பதால் தெரியவில்லை.
ஆனா பிரச்சனையே கமல் பார்ப்பான் - அதனால் கொழுப்பெடுத்து செய்தார் என்று கூறுவதில் தான்.(கருத்து என்ற அடிப்படையில் வேறு)
ஒருசில பதிவுகளை தவிர அனைத்திலும் இதுவே காரணமாக இருந்தது எனபது என் யூகம்.
நீங்கள் கூறிய மூன்று படங்களில் மும்பை மேரி ஜான் பார்த்துவிட்டு wednesday பார்த்து இருந்தால் உங்களுக்கு அது பாதிப்பை ஏற்படுத்தி இருக்குமா என்றே எனக்கு சந்தேகம்.
பாடல்கள், காமெடி இல்லாத ஒரு மிக சாதாரணமான படம். மோகன்லால் / அனுபம் கேர் வசனங்கள் - ஒரு எளிய பார்வையில் சொல்லவேண்டியதை பழையகால நாடகபாணியில் முழ நீளத்திற்கு இழுத்து இருப்பார்கள்.
அதுவே கமல் / நஸ்ருதின் வசனங்கள் ஷார்ப்.
ஹிந்தியை விட தமிழ் வெர்ஷன் எனக்கு பிடித்து இருந்ததிற்கு காரணம் அனுபம் கேர் இல்லாதது தான்.
நஸ்ருதின் ஷா அளவிற்காவது நிச்சயமாக கமல் செய்து இருக்கிறார்.
//.ஜெயக்குமார் said...
கமல் அதை தவிர்த்துள்ளதால், சரியாக நடிக்கவில்லை அல்லது அவர் அளவுக்கு இல்லை என நம் புத்திசாலிகள் கதறுகிறார்கள்.//
:-)))
//மணிகண்டன் said...
என்னோட தமிழ் vocabulary மாதிரி ஆகிக்கிட்டு இருக்கு உங்களோடதும்.///
என்னுடைய கோபத்தின் வெளிப்பாடு மணி..நான் என்ன செய்வது)
Post a Comment