நாம் நகரத்தில் இருக்கிறோம்...சரளமாக ஆங்கிலம் பேசுகிறோம்.கணிணி இயக்கும் அறிவைப் பெற்றுள்ளோம்.இதனால் எல்லாம் நாம் புத்திசாலி ஆகிவிட முடியுமா?
இந்த விஷயங்கள்..கிராமவாசிகளுக்கு..இன்னும் எட்டவில்லை என்பதால் அவர்கள் முட்டாள்களா? உண்மைமைச் சொன்னால்...அவர்களுக்குத் தெரிந்தது நமக்குத் தெரியாது.
உதாரணத்திற்கு ...காலில் காயம் பட்டுக்கொள்ளாமல்...கலப்பையை ஒரு அடியாவது..நம்மால் ஓட்டமுடியுமா?(கலப்பை என்றால் என்ன என்கிறீர்களா)
அளவுகோல் இல்லாமல்...நாற்றுகளை வரிசையாக நடமுடியுமா?
கையை..வீசி உரத்தை..பரவலாக..அனைத்து பயிருக்கும்..வீசி தெளிக்க முடியுமா?
நாம்..விவசாயம் பற்றி..ஏட்டில் படித்து தெரிந்துக் கொண்டவர்கள்.அவர்கள் நிலத்தில் படித்தார்கள்.ஆகவே அவர்கள் அனுபவம்..நேரடியானது...ஆழமானது.
நாம் பள்ளியில் படித்து..புத்திசாலி என சொல்லிக் கொள்கிறோம் (???!!!!)
ஆனால் அவர்கள் வாழ்க்கையில் கற்றதை வைத்து..புத்திசாலி ஆகி இருக்கிறார்கள்.
தங்கள் வாரிசுகளை மேல்நிலைக்கு கொண்டுவர...நமக்கு நகரத்து கல்வியையும்,வசதியையும் வழங்கிய அவர்கள்..புத்திசாலிகளா..நாம் புத்திசாலிகளா?
அவர்கள் வறுமையில் வாடினாலும் பரவாயில்லை என..மண்ணிலே நெல் முத்து எடுத்து...நம் பசி தீர்க்கும்...அவர்கள் மேலானவர்களா? நாம் மேலானவர்களா?
அவர்களை மதிப்போம்...அவர்கள் வறுமையை விரட்ட அரசு ஆவன செய்யுமா?.
சுவர் இருந்தாலே...சித்திரம் எழுத முடியும்.
(ஒரு செய்தி- சென்ற ஆண்டு மட்டும்...வறுமை காரணமாக தற்கொலை செய்துக்கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 1,65,000 க்கு மேல் )
9 comments:
நன்றி seidhivalaiyam
ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க...பூங்கொத்து.!உருப்படியான பதிவுன்னா யாருமே வர மாட்டாங்களே!
நல்லா இருக்கு சூப்பர்
//அன்புடன் அருணா said...
ரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க...பூங்கொத்து.!உருப்படியான பதிவுன்னா யாருமே வர மாட்டாங்களே!//
வருகைக்கும்..பூங்கொத்திற்கும் நன்றி அருணா..
என்ன செய்வது..கடை விரித்தேன்..கொள்வார் இல்லை
//Starjan ( ஸ்டார்ஜன் ) said...
நல்லா இருக்கு சூப்பர்//
நன்றி ஸ்டார்ஜன்
mm..manathai thodum unmai
//இயற்கை said...
mm..manathai thodum unmai//
நன்றி இயற்கை
//வருகைக்கும்..பூங்கொத்திற்கும் நன்றி அருணா..
என்ன செய்வது..கடை விரித்தேன்..கொள்வார் இல்லை//
கொள்வார் இல்லாமல் இருந்தால் என்ன
கடையின் பொருள் நன்றாக இருக்கு
நன்றி,
ஜோசப்
http://www.sirippuulagam.com
நன்றி JesusJoseph
Post a Comment